PDA

View Full Version : இலங்கை வெற்றி. முரளி 500



அன்புரசிகன்
24-01-2009, 11:38 AM
இன்று நடந்த இலங்கை பாக்கிஸ்தான் துடுப்பாட்ட போட்டியில் இலங்கையின் அபார ஆட்டத்தினால் (309) இலங்கை 234 ஓட்டங்களால் வென்று இந்த தொடரினை தனதாக்கியது.

இந்த போட்டியில் சொஹைல் கான் இன் விக்கட் உடன் முரளி 500 ஒருநாள் சர்வதேச போட்டிக்கான விக்கட்டுக்களை கைப்பற்றியிருக்கிறார். முதலாவதாக இருக்கும் வாசிம் 502 விக்கட்டுக்களை கைப்பற்றி முன்னிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆநேகமாக இந்தியாவுடனான போட்டியில் முரளி அந்த சாதனையையும் தகர்க்கலாம்.

இலங்கையுடனான மிகக்குறைந்த ஓட்டத்தினை (75) இன்று பாக்கிஸ்தான் பெற்றுள்ளது.

இலங்கை அணி + முரளிக்கு வாழ்த்துக்கள்.

தீபா
24-01-2009, 02:10 PM
முரளி இன்னும் பல தூரம் செல்வார்... தமிழராயிற்றே!!!

இந்திய இலங்கைப் போட்டிகள் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புரசிகன்
24-01-2009, 02:44 PM
அதிலும் ஒரு நகைச்சுவை... இந்த போட்டியின் பரிசளிப்பு வைபவத்திற்கு பாக்கி பிரதமர் வந்திருந்தார். ஜாடைமாடையாக இந்தியாவை நக்கலடித்தபோது அரங்கமே கரகோஷத்தினால் அமர்க்களமானது. இவ்வகையான தருணத்தில் வந்த இலங்கை அணிக்கு மட்டுமல்லாது இலங்கை அரசுக்கும் நன்றிதெரிவித்ததிலிருந்து இதை அரசியலாக்க முயன்றது தெரிந்தது...

எதுவோ......... நமக்கு முரளி சாதிப்பது தான் பெருமை..... அவ்வளவே....

டில்ஷான் தான் ஆட்ட மற்றும் தொடர் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பாரதி
24-01-2009, 04:40 PM
இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்துவீசி இரண்டு ஓட்டங்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார் முரளி. சில வருடங்களுக்கு முன் அவருடைய நேர்காணலில் கூறி இருந்ததை சாதித்துக்காட்டி இருக்கிறார். அவர் சாதிக்கப்பிறந்தவர்! முரளிக்கு என்னுடைய பாராட்டினையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமரன்
24-01-2009, 05:19 PM
சாதனை நாயகனுக்கு வாழ்த்துகள்.

நிகழ்த்தப் போகும் சாதனைக்கு முற்கூட்டிய வாழ்த்துகள்.

இலங்கை அணிக்கும் வாழ்த்துகள்.

சிவா.ஜி
24-01-2009, 09:43 PM
சாதனை புரிந்த முரளிக்கு வாழ்த்துகள். இந்தியா இவரின் பந்துகளில் திணற வேண்டியிருக்கும்.

அக்னி
25-01-2009, 10:36 AM
தடைகளைத் தாண்டிச் சாதிக்கும் முரளி அவர்கள்,
இன்னுமின்னும் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.

arun
26-01-2009, 02:36 AM
முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்துக்கள் கூடிய விரைவில் அவர் வாசிம் அக்ரமின் சாதனையையும் முறியடிக்கட்டும்

அறிஞர்
26-01-2009, 04:16 PM
சாதனை தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல....