PDA

View Full Version : முட்டாள் அமைச்சரே

loshan
22-01-2009, 06:21 AM
இது அண்மையில் நான் வானொலியில் சொன்ன நகைச்சுவை.. சும்மா ஒரு பதிவாகப் போடலாம்னு போட்டேன்.. வேறு எந்த உள் குத்து,உடன் குத்தும் இல்லை.

முட்டாள் அமைச்சரே (http://loshan-loshan.blogspot.com/2009/01/blog-post_22.html)

http://4.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SXgaM1SCP2I/AAAAAAAABX8/WxW4EUlwkrI/s320/arasan+vadi.jpg

அமைச்சர் : மன்னா, கல்விச்சாலைகளுக்கு போதிய வசதிகள் இல்லையென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்! வெகுவிரைவில் வேலை நிறுத்தத்திலும் இறங்கலாமாம்!

மன்னர் : சமாளித்து விடும் அமைச்சரே! இப்போதிருக்கும் நிதி நெருக்கடியில் ஒன்றுமே செய்ய இயலாது!

அமைச்சர் : மன்னா, போக்குவரத்தப் பாதைகள் நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லையென்று மக்கள் குறைப்படுகிறார்கள. எல்லாப் பாதையுமே குன்றும் குழியுமாம் என்று பரவலான அதிருப்திப் பேச்சுக்கள்!

மன்னர் : முடியாது அமைச்சரே - வீதி அபிவிருத்திக்கென்று வாங்கிய வரிகளையும் கடன்களையும் தானே பல்வேறு விதமாக அமுக்கிவிட்டோமே! புரட்சி செய்வோரை நசுக்கிவிடலாம்!

தளபதி : மன்னரே சிறைச்சாலைகளில் இடவசதிஇ ஏனைய வசதிகள் போதவில்லையென்று ஆர்ப்பாட்டம் நடத்தகிறார்கள்.

மன்னர் : அப்படியா?
அமைச்சரே , உடன் நடவடிக்கை எடும்! அவர்கள் கேட்கும் எல்லா வசதியும் உடனே செய்து கொடுக்கப்படவேண்டும்!
எல்லா சிறை அறையிலும் ஏ சி பூட்டி விடும்!
விரும்பினால் கைதிகளுக்கு வாரத்தில ஒருநாள் விடுமுறையும் கொடுக்க உத்தரவிடுவோம்!

அமைச்சர் : (ஆச்சரியத்துடன்) என்ன மன்னரே இது..அத்தியாவசிய தேவைகளான கல்வி வீதிகளை விட்டுவிட்டுப் போயும் போயும் சிறைகளுக்கா..

மன்னர் : முட்டாள் அமைச்சரே – புரியாமல் பேசுகிறீர்...நாளையே தமது பதவி பறிபோனால், பதவிக்காலம் முடிந்த பிறகு பள்ளிக்கூடம் போகப் போகிறோமா ? இல்லையென்றால் வீதியில் பயணிக்கப் போகிறோமா...
சொன்னதைச் செய்யும்..

அன்புரசிகன்
22-01-2009, 06:34 AM
நகைச்சுவையானது. உண்மையாகவும் நடந்திருக்கும் போலக்கிடக்கு...

arun
22-01-2009, 05:52 PM
என்னால் பார்க்க முடியவில்லையே?

நண்பரே ஒரு வேண்டுகோள் கூடிய வரை லிங்க் கொடுப்பதை தவிர்க்கவும் நேரடியாக இங்கு பதித்தால் நலமாக இருக்கும்

ஆதவா
23-01-2009, 01:31 AM
எனக்கு இணைப்பு வேலை செய்யவில்லை (அ) நேரமெடுக்கிறது..

இங்கேயே கொடுத்தால் பலர் படித்து பின்னூட்டம் இடுவார்கள்...

அன்புடன்
ஆதவன்

loshan
23-01-2009, 07:08 AM
நன்றி நண்பர்களே, இனிமேலும் என் பதிவுகள் தரும்போது முடியுமானவரை முழுக்க இங்கேயே பதிந்திட முயல்கிறேன்..

நிரன்
23-01-2009, 10:36 AM
ஹிம்...... மன்னருக்கு நல்ல படைபலம் இருக்கு :) இதை நினைக்கும் பொழுது ஒன்று ஞாபகம் வருகிறது ஆனால் உள்க்குத்து ஏதும் இல்லையென்றமையால் அதை நான் மறந்துட்டேன்:D

கைதிகளுக்கு கிழமைல ஒரு நாள் சிக்கன் புரியாணி இல்லியா:food-smiley-002: மன்னருக்கு அறிவிக்கனும் ஏசி , விடுமுறை + சிக்கன் பிரியாணி;)

நன்றாக உள்ளது வானொலியில் ஒலிபரப்பான நகைச்சுவை பகிர்ந்தமைக்கு நன்றி லோஷன் அண்ணா!

மற்றும் ஒரு சந்தேகம், வெற்றி fm இணையத்தினுாடாக ஒலிபரப்பாகுவதில்லையா?

அன்புரசிகன்
23-01-2009, 10:42 AM
இது தான் அங்கே இருக்கிறது...

http://4.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SXgaM1SCP2I/AAAAAAAABX8/WxW4EUlwkrI/s320/arasan+vadi.jpg

அமைச்சர் : மன்னா, கல்விச்சாலைகளுக்கு போதிய வசதிகள் இல்லையென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்! வெகுவிரைவில் வேலை நிறுத்தத்திலும் இறங்கலாமாம்!

மன்னர் : சமாளித்து விடும் அமைச்சரே! இப்போதிருக்கும் நிதி நெருக்கடியில் ஒன்றுமே செய்ய இயலாது!

அமைச்சர் : மன்னா, போக்குவரத்தப் பாதைகள் நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லையென்று மக்கள் குறைப்படுகிறார்கள. எல்லாப் பாதையுமே குன்றும் குழியுமாம் என்று பரவலான அதிருப்திப் பேச்சுக்கள்!

மன்னர் : முடியாது அமைச்சரே - வீதி அபிவிருத்திக்கென்று வாங்கிய வரிகளையும் கடன்களையும் தானே பல்வேறு விதமாக அமுக்கிவிட்டோமே! புரட்சி செய்வோரை நசுக்கிவிடலாம்!

தளபதி : மன்னரே சிறைச்சாலைகளில் இடவசதிஇ ஏனைய வசதிகள் போதவில்லையென்று ஆர்ப்பாட்டம் நடத்தகிறார்கள்.

மன்னர் : அப்படியா?
அமைச்சரே , உடன் நடவடிக்கை எடும்! அவர்கள் கேட்கும் எல்லா வசதியும் உடனே செய்து கொடுக்கப்படவேண்டும்!
எல்லா சிறை அறையிலும் ஏ சி பூட்டி விடும்!
விரும்பினால் கைதிகளுக்கு வாரத்தில ஒருநாள் விடுமுறையும் கொடுக்க உத்தரவிடுவோம்!

அமைச்சர் : (ஆச்சரியத்துடன்) என்ன மன்னரே இது..அத்தியாவசிய தேவைகளான கல்வி வீதிகளை விட்டுவிட்டுப் போயும் போயும் சிறைகளுக்கா..

மன்னர் : முட்டாள் அமைச்சரே – புரியாமல் பேசுகிறீர்...நாளையே தமது பதவி பறிபோனால், பதவிக்காலம் முடிந்த பிறகு பள்ளிக்கூடம் போகப் போகிறோமா ? இல்லையென்றால் வீதியில் பயணிக்கப் போகிறோமா...
சொன்னதைச் செய்யும்..

loshan
23-01-2009, 10:47 AM
நிரன், நீங்களாகவே நிறைய விஷயங்களில் புதிய'சிந்தனைகள்' கொடுப்பீர்கள் போல இருக்கே.. ;)

வெற்றி இணையத்திலும் ஒலிக்கிறதே,,
www.vettri.lk

நன்றி அன்புரசிகன்.. :)

நிரன்
23-01-2009, 10:53 AM
நன்றி நன்றி நன்றி

என்னத்தச் செய்யிறது கூடவே பிறக்கல்ல அதுதான் முயற்சிக்கிறம்:D:D

அறிஞர்
23-01-2009, 02:24 PM
அரசியல் முட்டாள்களின்... சிந்தனை வியக்க வைக்கிறது....
பதவி இருக்கிற காலத்தில் இன்பமாக இருக்கும் இவர்கள்...
பதவி சென்றபின்னும் இன்பத்திற்காக முன்னேற்பாடுகள்.

அருமை லோஷன்...
-------
தங்கள் பதிவை எடிட் செய்து.. இங்கு அந்த பதிப்பை கொடுத்துள்ளேன்.

அமரன்
23-01-2009, 02:30 PM
மக்களே சற்று மன்னர் காலத்துக்கு கண்களை மூடிப்போங்கள். காலியான கஜானாவுடன் எந்த அரசு நிலைக்கும். மக்கள் புரட்சி வெடிக்கும். விளைவு மன்னனும் உடந்தையானவர்களும் உடன் சிறையில். தீர்க்க தரிசனம் உள்ள மன்னன். அவனுக்கு ஏற்றவாறில்லாத மந்திரி. நடப்புக்காலத்திலும் சில நேரங்களில் நடந்துவிடுவது பழைமையே புதுமை பூசி வந்துள்ளது என்பதுக்கு சான்று. கலக்கிடீங்க லோஷன்.

தூயவன்
23-01-2009, 02:32 PM
பகிர்தமைக்கு நன்றி லோஷன் அண்ணா

erode
30-01-2009, 09:08 AM
கண்டிப்பாக இது நடக்கும் நாட்டில்

pathman
02-02-2009, 04:51 AM
உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே.......

aren
09-02-2009, 04:53 AM
நல்லாத்தான் இருக்கு. எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ. ரூம் போட்டு யோசிப்பீர்கள் போலிருக்கிறது

அன்புரசிகன்
09-02-2009, 04:58 AM
நல்லாத்தான் இருக்கு. எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ. ரூம் போட்டு யோசிப்பீர்கள் போலிருக்கிறது

அதுதான் அவரோட பார்ட் டைம் வேலையே... இல்லியா லோஷன் அண்ணா.... :D????

loshan
10-02-2009, 04:05 AM
யோசிக்கிறது தானே??? ;)
சில நேரம் அதையே புல் டைமாகவும் செய்ய வேண்டி இருக்கு..

மன்மதன்
25-02-2009, 11:29 AM
நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க லோஷன்..!!

samuthraselvam
26-02-2009, 06:41 AM
எதையும் பிளான் பண்ணிதான் பண்ணனும். பிளான் பண்ணலையின்னா ஜெயிலுக்குபோகும்போது கஷ்டப் படணும்.

வரும் முன் காக்கும் திட்டம் இதுதானோ...

lolluvathiyar
27-02-2009, 09:26 AM
நம்ம அமைச்சர்களை பற்றி மிக சரியாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பதவி பறிபோனால் அடுத்த ஆள்பவர்களிடம் பேரம் பேசி சிரைக்கு போக மாட்டார்கள். கூட்டு திருடர்கள்

anishmelbin
01-03-2009, 02:33 PM
இது அருமையான உண்மைக்கதை .