PDA

View Full Version : அணையா தீ...

சசிதரன்
21-01-2009, 04:57 PM
தீயில் எரிந்து கொண்டிருக்கிறது என் உலகம்...
எந்த திரியிலிருந்து பற்றியிருக்கும் என தெரியவில்லை.
நேற்று கூட பசுமையாய் பார்த்த ஞாபகம்..
பின் எப்படி இப்படி நடந்திருக்கும்...

தீயை அணைக்காமல் ஏன் யோசிக்கிறேன்...
உலகமே எரியும்போதும் என்ன செய்து கொண்டிருக்கிறேன்..
ஏன் அணைக்கும் வழியை யோசிக்காமல்...
எரியும் காரணத்தை யோசிக்கிறேன்?...

ஏதாவது செய்ய வேண்டும்....
முழுவதும் எரிவதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும்.
தண்ணீர் கொண்டு அணைக்க தோன்ற...
கடல் தேடி ஓடுகிறேன்...

போகும் பாதை முழுவதும் நெருப்பு...
தண்ணீர் தேடி ஓடும்போதும்...
மனதின் மூலையில் இன்னும் தேடுகிறேன்...
பற்றி எரியும் காரணத்தை...

தேடி தேடி களைத்துவிட்டேன்..
மெல்ல சோர்ந்து அமர்ந்துவிட்டேன்.
நான்கு பக்கமும் நெருப்பு சூழ...
இனி தண்ணீர் தேடி பயனில்லை.

என்னவாயிற்று ஏன் உலகத்திற்கு...
ஏன் மனிதர்கள் யாருமே காணவில்லை...
பற்றி எரியும் நெருப்பின் நடுவே...
தனியே என்னை விட்டு விட்டு...
எப்படி போக மனம் வந்தது.

என் நினைவு பக்கங்களை புரட்டி பார்த்தும்..
ஏதும் புரிபட மறுக்கிறதே...
நந்தவனம் போல் இருந்த உலகம்...
எரியும் காரணம் புரியாமல் தவிக்கிறேன்.

தீயின் நாக்குகள் பூக்களை நோக்கியும் பாய்கிறது...
கண்கள் இரண்டிலும் வழியும் கண்ணீருடன்..
ஓலமிட்டபடி தீயில் பாய்கிறேன்...
பற்றியதன் காரணம் தெரியாமலே நானும் எரிகிறேன்...

காலை எழுந்ததும் அம்மா கேட்கிறாள்...
தூக்கத்தில் அலறியதின் காரணம் என்னவென்று...
கனவு என்கிறேன்... விளக்கம் கேட்பவளிடம் என்ன சொல்ல...

கனவின் மிச்சமாய்...
கன்னத்தில் இன்னும் மீதமிருக்கிறது...
பூக்களுக்காய் விட்ட கண்ணீரின் தடம்...

இளசு
21-01-2009, 09:41 PM
மொட்டைப்பாறை
உச்சி வெயில்
வெண்ணெய் உருண்டை பாறைமேல்..
முடமான காவலன் தரையில்..

கையறுநிலைக்கு சங்கப்பாடல் காட்டும் உவமை!

சசியின் கனவு - இதன் இன்னொரு பரிமாணம் சொல்கிறது..
விம்மி, நெஞ்சு வெடித்து கதறிச் சிதறுவோமே அப்படி ஒரு கனவு மூலம்..

தீவிரவாதம், சூழல் கேடு, மேதைகள் செய்யும் இமாலயத் தவறுகள்..
பொருளாதார உருகல்... சிறார் பணி... பெண்களைச் சுரண்டுதல்
அரசியல் குரங்காட்டம்...

இப்படி எத்தனை நெருப்புகள் - நம் நந்தவனத்தில்..

கையறுநிலையில் சுழலும் தனிமனிதக் கோபம் -
இப்படிக் கனல் கனவாய் அனலடித்ததோ!

பாராட்டுகள் சசி!

kulirthazhal
22-01-2009, 06:10 AM
கனவில் துடித்த நெஞ்சத்தின் ஏக்கம் மனிதத்தின் போராட்டம்,
கன்னத்தில் மிச்சமிருக்கும் கண்ணீர் எல்லாபுறமும் இயல்பைக்கொல்லும் வாழ்க்கைக்கு.
விட்டுவிடுங்கள், கனவை நோக்கி பயணிக்க கவிதை இருக்கிறது, மீண்டும் மனிதம் கைக்கெட்டும்...

சிறந்த கவிதை...
ஏக்கம் தரும் தளம்...
ரசனைக்கேற்ற வார்த்தைகள்...

ஆதவா
22-01-2009, 07:00 AM
பாராட்டுக்கள் சசிதரன்.. நான் முன்பே சொன்னதைப் போல... கைக்குள்ளே ஒரு தொகுப்பை வைத்துக்கொண்டுதான் அலைந்திருக்கிறீர்கள் போலும்.

எனக்குப் உலகம் அழிவதைப் போன்ற கனவுகள் பலமுறை வந்ததுண்டு.. இதை எங்கேயோ மன்றத்தில் சொன்னதாக ஞாபகம். அந்த வரிசையில் இப்பொழுது நீங்களுமா???

எத்தனையோ கனவுகள் நம் கண்களுக்குள் திரையிடப்பட்டுவிட்டன. ஆனால் பாதிப்பு ஏற்படுத்தியவைகளை மட்டும் நம்மால் மறக்க முடிவதில்லை. நான் எழும் நேரங்களில் என் கனவு ஒளிந்துகொள்கிறது. அதைத் தேடித்தேடி களைப்பாகி அமர்வதற்குள் அடுத்த கனவுக்கான நேரம் வந்துவிடுகிறது.. என்னால் ஒத்துக்கொள்ளமுடியாத ஒரு விஷயம் கனவுகள் களவாடிப்போவது அல்லது காணாமல் போவது.. நினைக்க இயலாத செயல்களின் முடிச்சுதான் கனவுகள். மிகச்சில ஒத்துக்கொள்ள இயலாமல் பதறவைப்பவை... இதோ.. நீங்கள் பதறி எழுந்தீர்களே, அதைப் போன்று.

நன்கு சுற்றி பிணையப்பட்ட கயிறு, இறுதி முனையில் முடிச்சவிழ்ந்து நிற்பதைப் போன்று... உங்கள் கவிதை, ஏதேதோ பாதைக்குக் நன்கு பிணைத்து, கொண்டு சென்று, சூக்குமத்தை இறுதியில் உடைத்தெறிகிறது.

அர்த்தமிகுந்த இளசு அண்ணாவின் பாராட்டொன்றே இக்கவிதைக்கான வெற்றித் துளிகள்...

பாராட்டுக்கள் சசி...

சசிதரன்
22-01-2009, 04:40 PM
மொட்டைப்பாறை
உச்சி வெயில்
வெண்ணெய் உருண்டை பாறைமேல்..
முடமான காவலன் தரையில்..

கையறுநிலைக்கு சங்கப்பாடல் காட்டும் உவமை!

சசியின் கனவு - இதன் இன்னொரு பரிமாணம் சொல்கிறது..
விம்மி, நெஞ்சு வெடித்து கதறிச் சிதறுவோமே அப்படி ஒரு கனவு மூலம்..

தீவிரவாதம், சூழல் கேடு, மேதைகள் செய்யும் இமாலயத் தவறுகள்..
பொருளாதார உருகல்... சிறார் பணி... பெண்களைச் சுரண்டுதல்
அரசியல் குரங்காட்டம்...

இப்படி எத்தனை நெருப்புகள் - நம் நந்தவனத்தில்..

கையறுநிலையில் சுழலும் தனிமனிதக் கோபம் -
இப்படிக் கனல் கனவாய் அனலடித்ததோ!

பாராட்டுகள் சசி!

மிகவும் தெளிவான பின்னூட்டம் இளசு அண்ணா... உங்கள் வரிகளால் உயிர்பெறுகிறது கவிதை வரிகள்... மிக்க நன்றி...:)

சசிதரன்
22-01-2009, 04:42 PM
கனவில் துடித்த நெஞ்சத்தின் ஏக்கம் மனிதத்தின் போராட்டம்,
கன்னத்தில் மிச்சமிருக்கும் கண்ணீர் எல்லாபுறமும் இயல்பைக்கொல்லும் வாழ்க்கைக்கு.
விட்டுவிடுங்கள், கனவை நோக்கி பயணிக்க கவிதை இருக்கிறது, மீண்டும் மனிதம் கைக்கெட்டும்...

சிறந்த கவிதை...
ஏக்கம் தரும் தளம்...
ரசனைக்கேற்ற வார்த்தைகள்...

பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே...:)

சசிதரன்
22-01-2009, 04:44 PM
பாராட்டுக்கள் சசிதரன்.. நான் முன்பே சொன்னதைப் போல... கைக்குள்ளே ஒரு தொகுப்பை வைத்துக்கொண்டுதான் அலைந்திருக்கிறீர்கள் போலும்.

எனக்குப் உலகம் அழிவதைப் போன்ற கனவுகள் பலமுறை வந்ததுண்டு.. இதை எங்கேயோ மன்றத்தில் சொன்னதாக ஞாபகம். அந்த வரிசையில் இப்பொழுது நீங்களுமா???

எத்தனையோ கனவுகள் நம் கண்களுக்குள் திரையிடப்பட்டுவிட்டன. ஆனால் பாதிப்பு ஏற்படுத்தியவைகளை மட்டும் நம்மால் மறக்க முடிவதில்லை. நான் எழும் நேரங்களில் என் கனவு ஒளிந்துகொள்கிறது. அதைத் தேடித்தேடி களைப்பாகி அமர்வதற்குள் அடுத்த கனவுக்கான நேரம் வந்துவிடுகிறது.. என்னால் ஒத்துக்கொள்ளமுடியாத ஒரு விஷயம் கனவுகள் களவாடிப்போவது அல்லது காணாமல் போவது.. நினைக்க இயலாத செயல்களின் முடிச்சுதான் கனவுகள். மிகச்சில ஒத்துக்கொள்ள இயலாமல் பதறவைப்பவை... இதோ.. நீங்கள் பதறி எழுந்தீர்களே, அதைப் போன்று.

நன்கு சுற்றி பிணையப்பட்ட கயிறு, இறுதி முனையில் முடிச்சவிழ்ந்து நிற்பதைப் போன்று... உங்கள் கவிதை, ஏதேதோ பாதைக்குக் நன்கு பிணைத்து, கொண்டு சென்று, சூக்குமத்தை இறுதியில் உடைத்தெறிகிறது.
அர்த்தமிகுந்த இளசு அண்ணாவின் பாராட்டொன்றே இக்கவிதைக்கான வெற்றித் துளிகள்...

பாராட்டுக்கள் சசி...

என் கவிதைகளுக்கு நான் எதிர்பார்க்கும் விமர்சனம் உங்களுடையது ஆதவா. அதனை பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.... அருமையானதொரு பின்னூட்டம் தந்து வாழ்த்தியமைக்கு நன்றி...:)

அக்னி
23-01-2009, 12:08 PM
தனிமனித உலகம்,
எப்போதும் எரிந்து கொண்டுதான்
இருக்கின்றது...

எரியும் தீயில்,
வெளிச்சம் பரவினால்,
உலகம் முழுவதுமே
மனிதர்கள் தெரிவார்கள்...

எரியும் தீ,
தீய்த்துப் போகுமானால்,
உலகில் நான் மட்டுமே
தனித்திருப்பேன்...

இன்று தனியே எரியும் நான்..,
நாளை இன்னுமொரு மனிதன்
எரிவதைத் தடுக்க முடிந்தால்,
அதுமுதல்,
தீ வெளிச்சத்தை மட்டுமே
தந்துகொண்டிருக்கும்...

பாராட்டுக்கள் பல சசிதரன் அவர்களே...
மற்றும் சிறப்புப் பின்னூட்டங்கள் தந்த அனைவருக்கும் சிறப்புப் பாராட்டுக்கள்...

சசிதரன்
26-01-2009, 02:00 PM
கவி வரிகளால் அமைந்த உங்கள் அற்புதமான பின்னூட்டத்திற்கு நன்றிகள் கோடி நண்பரே...:)

சிவா.ஜி
26-01-2009, 02:23 PM
நந்தவனத்தையும் கருக்கத் துடித்து கொழுந்துவிட்டு எரியும் தீயில் எல்லாமே எரிகிறது. வெறும் சாட்சியாய் நிறக்கத்தான் இயலுகிறதே தவிர அணைக்க முடிவதில்லை. முயற்சித்தாலும் அது நம்மையும் எரிக்கத்தான் செய்கிறது.

இளசு, ஆதவா, மற்றும் அக்னியின் பின்னூட்டங்கள் மிக அருமையாய் கவிதையின் சாரத்தை சொல்கிறது. வாழ்த்துகள் சசி.

கா.ரமேஷ்
27-01-2009, 09:42 AM
அருமையான கவிதை... வாழ்த்துகள் சசி.

சசிதரன்
28-01-2009, 04:22 PM
நந்தவனத்தையும் கருக்கத் துடித்து கொழுந்துவிட்டு எரியும் தீயில் எல்லாமே எரிகிறது. வெறும் சாட்சியாய் நிறக்கத்தான் இயலுகிறதே தவிர அணைக்க முடிவதில்லை. முயற்சித்தாலும் அது நம்மையும் எரிக்கத்தான் செய்கிறது.

இளசு, ஆதவா, மற்றும் அக்னியின் பின்னூட்டங்கள் மிக அருமையாய் கவிதையின் சாரத்தை சொல்கிறது. வாழ்த்துகள் சசி.

மிக்க நன்றி சிவா அண்ணா...:)

சசிதரன்
28-01-2009, 04:23 PM
அருமையான கவிதை... வாழ்த்துகள் சசி.

நன்றி ரமேஷ்...:)