PDA

View Full Version : அது ஒரு அழகிய கல்லூரிக் காலம்



umakarthick
21-01-2009, 10:20 AM
முதல் நாள் வகுப்பில் அறைகுறை ஆங்கில அறிமுகம்

வீட்டிலிருந்து தடபுடலாய் வந்து
ஹாஸ்டலில் சேர்த்து விட்ட சோகமான நாள்

ஒன்பதரை மணிக்கு வரவேண்டிய
அம்மாவின் தொலைபேசிக்கு
பதினோரு மணி வரை காத்திருந்த இரவுகள்

வரிசையாக தட்டேந்தி சாப்பிட போகும் போது
அம்மாவின் சாப்பாட்டை குறைச் சொன்னது
நினைவிலாடும்

காப்பி செய்ய நோட்ஸ் தந்த நண்பிக்கு
பதிலுக்கு வாங்கிக் கொடுத்த மெழுகுபொம்மை

பெண்களுடன் பேசினாலே காதலென
கலாக்கும் நண்பர்களின் கேலிப் பேச்சுகள்

சனிக் கிழமை இரவு சினிமாக்கள்
ஞாயிற்று கிழமை மதியம் வரை தூக்கம்

பெட்டு கட்டி ஆடிய 'பைவ் கார்ட்ஸ்'
அடிக்கடி சண்டையில் முடியும் கிரிக்கெட்

வகுப்பறைகளில் நண்பிகளுடன்
பகிர்ந்துண்ட தயிர்சாதம்


தேதிக் கடந்து கட்டிய தேர்வுக் கட்டணம்
காப்பியடித்து மாட்டிய அவமான நிமிடங்கள்

லிப்ட் கேட்டு வழிந்த
அவசரக் காலைகள்

கூட்டமாக அமர்ந்து கணிப்பொறியில்
பார்த்த நீலப் படம்

அக்கவுண்ட் பாக்கியில் அடிக்கடி மாற்றிய மெஸ்கள்
அடித்து பிடித்து குடிக்கும் எச்சி சிகரெட்

வாடைகை பகிர்தலில் வரும் மனஸ்தாபங்கள்
சுற்றலாவில் அலைந்து திரிந்த மலைகள் ஆறுகள்

தேர்வு விடுமுறையில் தெர்ந்தெடுத்து
சென்ற நண்பர்களின் ஊர்கள்

ஒரு தலை காதல்கள்..
வளாகத்திலேயே காதல் புரிந்த
பிரபல ஜோடிகள்

எல்லாருடம் அன்புடன் பேசும்
பூனைக் கண் மேடம்

வாட்ச் மேனுக்கு வாங்கிக் கொடுத்த
பீடிகள்,சிகரெட்டுகள்

பிறந்த நாள் கலாட்டாக்கள்
விடுதிக் குளியறையில் பிறந்த நாளுக்கடித்த
முட்டைகளில் வாடை,தக்காளிக் கறை

காதலியிடமிருந்து வரும் லெட்டர்களை
யாருக்கும் தெரியாமல் படிக்கும் ரகசிய கணங்கள்

நோட்ஸ் என்ற பெயரில் வகுப்பு நேரங்களில்
எழுதிய காதல் கவிதைகள்

இப்படி சொல்லிட்டே போகலாம்ங்க , எங்கே முதல் நாளில் ஆரம்பித்து ,பேர்வெல் டே வரை எழுதிடுவேனோ னு எனக்கும் பயம் இருந்தது உங்களை போல நல்ல வேளை நானே நிறுத்திட்டேன்

குறிப்பு :

இது கவிதையா என்னனு எனக்கே தெரியாது, பேர்வல் டே வரை இழுத்து வழக்கம் போல முடிக்க இஷ்டமில்லை..கல்லூரி நினைவுகளை இந்த வடிவத்தில் தந்திருக்கிறேன் , இதை படித்து உங்களுக்கு உங்கள் கல்லூரி நாட்கள் நினைவு வந்து நைட் பீர் அடித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல