PDA

View Full Version : எல்லாம் காரணமாய் தான்:umakarthick
21-01-2009, 11:19 AM
தாம்பரம் செங்கல்பட்டு பேருந்து கூட்டத்தில் திணறிக் கொண்டே நகர்ந்தது.
என் பக்கத்தில் நின்றிருந்தவருக்கு போன் வந்தது,போனை எடுத்தவர் 'ஹலோ ஹலோ நான் காஞ்சிப்புரத்தில் இருக்கிறேன்!' என்றார் எதிர்முனையிடம்.எனக்கு ஆச்சர்யமாகியது.


நானும் பல முறை கவனித்திருக்கிறேன் , தாம்பரத்தில் இருந்து கொண்டு நான் திருப்பதியில் இருக்கிறேன்,திருத்தணியில் இருக்கிறேன் என்று மொபைலில் பேசுபவர்களை, ஏன் தான் இவர்கள் இப்படி இருக்கிறார்களோ சே என நினைத்துக் கொண்டே கிடைத்த இருக்கையில் அமர்ந்தேன்.


அமர்ந்தவுடன் என் மொபைல் அலறியது, பிரசாத் கூப்பிடுறான்,கடந்த வாரம் என்னிடம் கடன் கேட்டிருந்தவனிடம் ,இன்று வீட்டிற்கு வா பணம் தருகிறேன் என்று சொல்லி இருந்தது நியாபகத்திற்கு வந்தது.ஆனால் திடீரென்று வீட்டில் டிவி ரிப்பேராகி விட அவனுக்கு வைத்த பணம் செலவாகிவிட்டது.

போனை எடுத்தேன், ஹலோ சொல்லு பிரசாத் ,
அவன்: எப்படி இருக்க ..
நான்:ஆங் நான் நல்லா இருக்கேன்
அவன் :: எங்கடா இருக்க இப்போ
நான்:நான் இப்போ பங்களூரில் இருக்கேண்டா !!!!

அமரன்
23-01-2009, 04:20 PM
சமாளிப்புக்காக அப்படி இப்படிச் சொல்வது பலரது வழக்கம்.
சில இடங்களில் இல்லை என்று உண்மைச் சொல்லிப் பாருங்கள். உறவுகள் நிலைக்கும்.

இளசு
23-01-2009, 08:49 PM
தலைவலியும் காய்ச்சலும்
தனக்கு வந்தால்(தான்) தெரியுமாம்..!

சுவையான கதை..

பாராட்டுகள் கார்த்திக் அவர்களே!

இளசு
23-01-2009, 08:50 PM
சமாளிப்புக்காக அப்படி இப்படிச் சொல்வது பலரது வழக்கம்.
சில இடங்களில் இல்லை என்று உண்மைச் சொல்லிப் பாருங்கள். உறவுகள் நிலைக்கும்.

நன்று சொன்னாய் அமரா..:icon_b:

புரை தீர்ந்த நன்மை பயக்குமெனச் சொல்லியே
பொய்கள் புரையோடிவிட்டன என்னில்...:icon_p:

ஓவியன்
24-01-2009, 07:30 AM
அது என்னவோ தெரியலை, மற்றவர்களில் இலகுவாக தப்புக் கண்டு கொள்ளும் நம்மால் நம்மால் நம் தப்புக்களை இனம் கண்டு நம்மை நாமே நல் வழிப் படுத்த முடிவதில்லை...

சிந்திக்க வைத்த கதை படைத்த கார்த்திக்குக்கு மனதார்ந்த வாழ்த்துகள்..!!

இளசு
24-01-2009, 07:38 AM
மற்றவர்களில் இலகுவாக தப்புக் கண்டு கொள்ளும் நம்மால் நம்மால் நம் தப்புக்களை இனம் கண்டு நம்மை நாமே நல் வழிப் படுத்த முடிவதில்லை...
இயேசு சொன்னார்:

மற்றவர் தவறு நம் கண் அருகில் வைத்த துரும்பு..
நம் தவறு நம் முதுகில் ஏற்றிய மரத்தூண் ( உத்தரம்)..

கவியரசு சொன்னார்:

சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா..!

அறிஞர்கள் சொல்வது -
முதலில் உன்னால் மாற்ற வல்லது - உன்னையே..
உறவு -நட்பு வட்டம், உலகவழக்கம் என இரண்டாவது, மூன்றாவது
அடுக்குகளைச் சுத்திகரிக்க எண்ணிச் சீறுமுன்
உன்னால் இயன்றதான உள்ளடுக்கை சுத்திகரி..

Personal Victory must precede Public Victory!

ஓவியன்
24-01-2009, 07:55 AM
சத்தியமான வார்த்தைகள் அண்ணா,
நம்மால் மற்றவர்களைத் திருத்த முயல்வதிலும்
நம்மை நாமே திருத்திக் கொள்வதும்,
வேண்டாத இடங்களில் விலகி இருத்தலும்,
சாலச் சிறந்தவை...!!

என்னுடைய ஆரம்ப நாட்களில்
விளங்காத பல விடயங்கள், இப்போது புரிகின்றன..!!

அமரன்
24-01-2009, 08:09 AM
பயன்மிகு கருத்துப்பகிர்வுகள் அண்ணா.

மனமார்ந்த நன்றிகள்.

umakarthick
25-01-2009, 06:58 AM
எல்லாருக்கும் நன்றிகள் பல...இந்த மாதிரி அன்றாடும் பார்க்கும் சில நிகழ்வுகளை கதையாக சொல்லமுயல்கிறேன்..