PDA

View Full Version : அறிவுமதி கவிதைகள்



umakarthick
21-01-2009, 10:14 AM
அணு அணுவாய்ச் சாவதென
முடிவெடுத்தப் பிறகு
காதல் சரியான வழிதான்



பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்நாம் அன்பே!அன்பே!


சுவற்றில் எழுதப்படும்
புரட்சி வாசகங்களுக்கு
முன்னால்
எமது
சீர்
தளை
அடி
தொடையெல்லாம் மண்டியிடுகின்றன

எனவே
வாருங்கள் கவிஞர்களே
தெருவுக்குப் போவோம்.



படிக்காத பெரியாரை
நம்பினோம்.
நமக்கு பல்கலைக்கழகங்கள்
கிடைத்தன.

பல்கலைக்கழகங்களில் படித்த
இவர்களை நம்பினோம்.
நமது அரிச்சுவடிகளும்
தொலைந்து போயின.



இருந்தான் பாரதி
கர்ப்பப்பைக்குள்
ஒரு
கர்ப்பிணிப்பெண் போல்...




நடு பகல்
சுடு மணல்
பாவம்,என் பாதச்சுவடுகள்.


உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வரிகள் தேடித்தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என் கவிதை


நீ வயசுக்கு
வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்க்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள் நீ




உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான் சாலயோர
மரங்களிலிருந்து உதிரும்
பூக்களின் மௌனத்திலும்
இசை கேட்க ஆரம்பித்தேன்
நான்


கண்களை
வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்



கண்களை வாங்கிக்கொன்டு
உன்னைப் போல்
கண்கள் தருகிறவள் தான்
தோழியாகிறாள்




பிரிவொன்றை சந்தித்தேன் முதல்முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று..

நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை தூறாதோ உந்தன் மழை..

உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என்சட்டை..