PDA

View Full Version : முதல் கறுப்பின அமெரிக்க அதிபதி



அறிஞர்
20-01-2009, 06:22 PM
இன்று (ஜனவர் 20, 2009), அமெரிக்க நேரம் பகல் 12.00 மணிக்கு அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபதியாக பராக் ஹூசைன் ஒபாமா பதவியேற்றார்.

கிட்டத்தட்ட 14 இலட்சம் மக்கள் வருகை தந்ததாக செய்திகள் கூறுகின்றன... இது ஒரு சாதனையாகும்.

அக்னி
20-01-2009, 09:57 PM
புதிய அதிபருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

பதவியேற்பே சாதனையானதுபோல,
பதவிக்காலம் முழுமையும் சாதனையாளராகத் திகழ,
சிறப்பு வாழ்த்துகள்.

aren
21-01-2009, 01:17 AM
அவரும் ஒரு அமெரிக்கர்தானே. ஏன் தனியாக பிரித்து கருப்பினம் என்று சொல்லவேண்டும்.

கிளிண்டன் ஐரிஷ்காரர் என்று ஏன் சொல்லவில்லை.

இதுவே ஒரு இனப்பிரிவுக்கு காரணமாகும்.

ஆதவா
21-01-2009, 01:31 AM
ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்...

அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் நேரில் சென்றீர்களா அறிஞரே!!??

ஆரென் அண்ணா கூறுவதும் ஏற்கத்தகுந்ததே!

அன்புரசிகன்
21-01-2009, 02:28 AM
வாழ்த்துக்கள் அமெரிக்க அதிபருக்கு... உலகுக்கு இவராலும் ஏதாச்சும் நன்மை நடக்கும் என்று எதிர்பார்ப்போம்...

ஆதி
21-01-2009, 12:18 PM
அவரும் ஒரு அமெரிக்கர்தானே. ஏன் தனியாக பிரித்து கருப்பினம் என்று சொல்லவேண்டும்.

கிளிண்டன் ஐரிஷ்காரர் என்று ஏன் சொல்லவில்லை.

இதுவே ஒரு இனப்பிரிவுக்கு காரணமாகும்.

இது வெகு நாட்களாக என் மனதில் இருந்த நெருடல், நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள் ஆரென் அண்ணா..

அமரன்
21-01-2009, 02:08 PM
வாழ்த்துகள் ஒபேமாவுக்கு..

முதலுரையிலேயே பாகிஸ்தானுக்கு பூச்சாண்டி காட்டியது போல இருந்துச்சே.

நிரன்
21-01-2009, 02:21 PM
புதிய அமெர்க்க அதிபர் ஒபாமாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

நிகழ்வை நேற்றைய தினம் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில்
2மணி நேரத்திற்கு மேலாகக் கண்டு களித்தேன்

அன்பு வெள்ளத்தில் ஒபாமாவை வரவேற்ற மக்கள் ஆயிரக்கணக்கில்

arun
21-01-2009, 04:58 PM
புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள் அவரது ஆளுமை திறன் எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்

சிவா.ஜி
21-01-2009, 05:46 PM
இவரின் காலத்திலாவது போர்களில் அதிகமாக கவனம் செலுத்தாமல், நட்புக்கரங்கள் உலகெங்கும் நீளட்டும். புதிய அமெரிக்க அதிபருக்கு வாழ்த்துகள்.