PDA

View Full Version : புத்தக சந்தை



umakarthick
20-01-2009, 05:36 AM
சனிக்கிழமை புத்தக சந்தை போயிருந்தேன்

ஒவ்வொரு வருடமும் சோம்பேறித்தனமாய் போகாமாலிருப்பேன் இந்த வருடம் நல்ல வேளை போய்ட்டு வந்தாச்சு. பச்சையப்பா காலேஜ் எதிரில் புத்தக சந்தை நடக்கிறது என தெரியும் ஆனால் அங்கே எப்படி போகனும் என தெரியல..நான் வேற தாம்பரத்தில் இருப்பதால் சிட்டிக்குள் போவதே கிடையாது உலகம் தெரியாத அப்பாவியாகவே வளர்ந்து விட்டேன்..


தாம்பரத்திலிருந்து புத்தகசந்தைக்கு எப்படி போவது என ஆப்டிமம் ரூட்டெல்லாம் அனாலிஸ் பண்ணி எக்மோர் போய் அங்கிருந்து பஸ்ஸில் 2 ரூ டிக்கெட்டில் இடத்தை அடைந்து விட்டேன்..கூட்டம் கம்மியாக தான் இருந்தது..


சுயமுன்னேற்ற நூல்கள் தான் குவிந்திருந்தன..அடுத்தவன் வரலாற்றை படித்து நாம் முன்னேற முடியாது என்பதில் தீராத நம்பிக்கை எனக்கு..அதையெலாம் கடந்து கிட்டதட்ட 450 கடைகள் இந்த மாதிரி புத்தகங்கள் தான் நிரம்பியிருந்தன..


தலைவர் சுஜாதா புத்தகம் 2 , எஸ் ரா வோட புத்தகம் 8 அப்புறம் ஒரு கவிதை தொகுப்பு விக்டன் தீபாவளி மலர் ,டைம்ஸ் இந்தியா தீபாவளி மலர் என 13 புத்தகம்ஸ் வாங்கினோம்

இடையிடையே கேண்டீனில் போய் ஏதாவது சாப்பிட்டேன்.எதையெடுத்தால் 25 ரூ என்றார்கள் கேண்டீனில்..கொடுமை...

படித்த புத்தகம்ஸ் எல்லாம் பற்றி விரிவாக இங்கே எழுதுகிறேன்..

நீங்க யாராவது போனீங்களா?? நீங்க வாங்கிய புத்தகங்கள் பற்றி எழுதலாமே

தமிழ்தாசன்
21-01-2009, 08:59 AM
நல்ல விடயம்.
நண்பரே!
படித்ததை பகிருங்கள்.
வாசிக்க காத்திருக்கிறோம்.

இளசு
21-01-2009, 10:56 PM
நம் தக்ஸ் போய்வந்தாரே..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19093

படித்தவற்றை பகிருங்கள் கார்த்திக்..

காத்திருக்கிறோம்..

umakarthick
22-01-2009, 08:32 AM
பார்த்தேன் படித்தேன்