PDA

View Full Version : வன்னியில் மக்களின் அவலநிலை...அக்னி
19-01-2009, 12:42 PM
நண்பர்களே...

இன்றைய காலகட்டத்தில் வன்னியில் பெரும் மனித அவலம் நிகழ்ந்தேறுகின்றது.

இந்த அவலங்கள் தொடர்பாகப் பல்வேறு திரிகளும் மன்றத்தில், ஆரம்பிகப்பட்டுள்ளன. ஆரம்பிக்கப்படுகின்றன.
அவற்றில் தொடர்பான திரிகளை ஒன்றிணைத்து,
வன்னியின் இன்றைய அவலத்தைக்,
காலப்பதிவாக்கும் பொருட்டு இத்திரி ஏற்படுத்தப்படுகின்றது.
இலகுவான பார்வைக்காக, இத்திரி ஒட்டியும் வைக்கப்படுகின்றது.

உங்கள் பார்வைக்குக் கிடைக்கும் செய்திகள், படங்கள், ஒளிப்படங்கள் அனைத்தையும் இங்கேயே பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

எச்சரிக்கை:
இதயம் பலவீனமானவர்களுக்கு இங்குள்ள சேதிகளும் காட்சிகளும் அதிர்ச்சியைத் தரலாம்.

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி

நிரன்
19-01-2009, 12:42 PM
இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையில் அல்லல் படும் வன்னி மக்கள். இச்செய்தியை வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பு. வெளியிட்டுள்ளது. இச்செய்திகளை நாம் இணைத்திலுாடகக் காணும் பெழுதே வருத்தமாகவுள்ளது.. இதை நேரில் அணுபவித்துக் கொண்டிருப்போர் நிலை!!!!http://farm4.static.flickr.com/3467/3209804478_85118f38a6_o.jpg

நிலவர அறிக்கை தை 17,2009
வன்னி மக்களின் இடப்பெயர்வும் தற்போதய நிலையும்.
வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பு
விசுவமடு

வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையில் இதுவரை 352 பேர் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளடங்குவர். கடந்த நான்கு வாரங்களிற்கு முன் பாடசாலைகள், அகதிமுகாம்கள், வைத்தியசாலைகள் மீது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமான (மகசை) மற்றும் ஆட்லறித் தாக்குதல்களில் 82 இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களிற்காக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் உணவு விநியோகம் அடிக்கடி படைத்தரப்பின் தாக்குதல்களால் தடைப்படுகின்றன. இதனால் போதிய நிவாரணம் கிடைப்பதில்லை. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் 15.01.2009 அறிக்கையின்படி கடந்த ஒரு வாரகாலமாக உணவு விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறுகின்றனர்.
தற்போது 3-4 இலட்சம் மக்கள் இலங்கைப்படையினரின்
வல் வளைப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். இவர்களிற்குத் தேவையான உணவு இருப்புக்கள் யாவும் தீர்ந்து விட்டன. உணவு கெண்டு செல்லும் பாதையினை அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.


நிலவர அறிக்கை
வன்னி (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்)
15.01.2009
போர் நிலவரம்ஃஅரச படைகளின் தாக்குதல்; நடவடிக்கைகள்
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இலங்கை அரசாங்கத்தின் விமானப்படை, கடற்படை, தரைப்படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த படை நடவடிக்கைகள் காரணமாக வன்னியின் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின்); இயல்பு நிலை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 400,000 இற்கும் அதிகமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டுப் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலேயான சமாதான உடன்படிக்கையினை இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்ட பின்னர் படை நடவடிக்கையினை இலங்கை அரசு ஆரம்பித்தது. இதன்போது பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். இதனால் 2632 பேர் அரச படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதுடன், 6700 பேர் காயப்பட்டுள்ளனர்.
வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையில் இதுவரை 352 பேர் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளடங்குவர். கடந்த நான்கு வாரங்களிற்கு முன் பாடசாலைகள், அகதிமுகாம்கள், வைத்தியசாலைகள் மீது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமான (மகசை) மற்றும் ஆட்லறித் தாக்குதல்களில் 82 இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இடப்பெயர்வும், மக்கள் நிலைமையும்
அட்டவணை – 01
பிரதேசம் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம்)
முஅ2
புதுக்குடியிருப்பு, விசுவமடு, தர்மபரம், முல்லைத்தீவு
400 முஅ2
மொத்த சனத்தொகை
386,000
இடம்பெயர்ந்த மொத்த சனத்தாhகை
362,000

தொடர்ந்து இலங்கைப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களினால் 4 மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் முழுமையாக இடம்பெயர்ந்து விடுதலைப்புலிகளின் ஓர் குறுகிய நிலப்பரப்பிற்குள் சென்றுள்ளனர். 400 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் 400,000 மக்கள் பலதடவை இடம்பெயர்ந்து வீதியோரங்கள், மரநிழல்கள், காடுகள், வயல்நிலங்களில் வசித்து வருகின்றனர். இவர்களிற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிகக் குடிசை வசதிகள் எதுவும் இல்லை. காரணம் அரசாங்கம்
அனைத்தையும் தடை செய்தது மட்டுமன்றி விநியோகப் பாதைகளையும் மூடியுள்ளது. மக்கள் கூடியிருக்கும் இடங்கள், பாடசாலைகள், கோயில்கள் ஆகியவற்றை இலக்குவைத்து இலங்கை
விமானப்படை தாக்குதல் நடாத்துவதால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலானோர் காடுகளிலேயே தமது வாழ்க்கையை நடாத்துகின்றனர். ஏற்கனவே இப்பிரதேசங்கள் மழை வெள்ளம், மலேரியா நுளம்பு, கொடிய பாம்புகள் ஆகியவற்றினால் ஓர் அபாயகரமான இடப்பகுதியாகவே காணப்படுகிறது.
உணவு விநியோக நிலவரம்
வன்னியின் அனைத்து விவசாய நிலங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாய உற்பத்திகள், கால்நடைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்பிடியும் கடற்படையினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களிற்காக உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் உணவு விநியோகம் அடிக்கடி படைத்தரப்பின் தாக்குதல்களால் தடைப்படுகின்றன. இதனால் போதிய நிவாரணம் கிடைப்பதில்லை. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் 15.01.2009 அறிக்கையின்படி கடந்த ஒரு வாரகாலமாக உணவு விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறுகின்றனர். தற்போது 3-4 இலட்சம் மக்கள் இலங்கைப்படையினரின் வல் வளைப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். இவர்களிற்குத் தேவையான உணவு இருப்புக்கள் யாவும் தீர்ந்து விட்டன. உணவு கெண்டு செல்லும் பாதையினை அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.
சுகாதார மருத்துவ சேவை
வன்னியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் செயற்பாடும் விமானத்தாக்குதல், எறிகணைத்தாக்குதல், இடம்பெயர்வு காரணமாக தமது சேவையினை நிறுத்தியுள்ளன. 10 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. வன்னியின் மிகப் பெரிய வைத்தியசாலைகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து தற்போது விசுவமடு மற்றும் உடையார்கட்டுப் பாடசாலைகளில் இயங்குகின்றன. .புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மற்றும் விசுவமடு வைத்தியசாலை விமான மற்றும் எறிகணைத் தாக்கதல்களிற்கு உள்ளாகியுள்ளதால் நோயாளர் அங்கு செல்லப் பயப்படுகின்றனர்.
வன்னி மொத்தச் சனத்தொகை
386,000
வைத்தியசாலைகள் (தற்காலிகமாக இயங்குவது)
02
வைத்தியசாலைகள் (நிரந்தரமாக இயங்குவது)
01
மொத்த வைத்தியர்கள்
10
தாதியர்கள்
30 - 40
மொத்தப் படுக்கைகள்
250 - 300
அவசர சத்திர சிகிச்சை பிரிவு
01

தற்போது காயப்படுகின்ற மக்கள் அதிகரித்துச் செல்வதனால் வைத்தியசேவை முற்று முழுதாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 400,000 மக்களிற்கு 10 வைத்தியர்கள், 40 தாதியர்களுடன், 400
தற்காலிகப் படுக்கை வசதிகளுடன் தான் வைத்திய சேவை நடைபெறுகின்றது. அரசாங்கத்தினால் கடந்த 06 மாதத்திற்கான மருந்துகள் போதியளவு அனுப்பி வைக்கப்படவில்லை.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் மாதம் ஒன்றிற்கு 200 தடவைகள் நோயாளர் காவு வண்டி வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டிற்கு நோயாளரை எடுத்துச் செல்வது வழமை.
தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதால், போதிய மருத்துவ வசதி இன்றி நோயாளர்கள் இறக்கும் தருவாயில் உள்ளனர்.
அரச படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் நோயாளர் மற்றும் காயப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
எல்லைகளிற்கு இடையேயான போக்குவரத்து
அரசாங்கத்தினதும், விடுதலைப்புலிகளினதும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இடையில் இடையில் ஒவ்வொருநாளும் 4000 – 5000 மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வர். தினமும் 20 - 30 நோயாளர்கள் அவசர சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்படுவர். 300 வாகனங்கள் சராசரி தமது பயணங்களை மேற்கொண்டன. தற்போது அனைத்தும் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுச்சேவைகள்
வன்னியில் 400,000 மக்களிற்கான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கிச்சேவை, பாடசாலைகள், உணவு விநியோக மையங்கள், வியாபார நிலையங்கள் அனைத்தும் இராணுவ நடவடிக்கையினால் மூடப்பட்டுள்ளன அல்லது நிறுத்தப்பட்டுள்ளன.
நிவாரண வேலைத்திட்டங்கள்
இலங்கை அரசாங்கம் 09 செப்ரெம்பர் 2008 அன்று அனைத்து நிவாரணப் பணிகளையும், சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தையும் வன்னியிலிருந்து வெளியேற்றி உள்ளது. அதன் பின்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடம்பெயர்ந்த மக்களிற்கான நலன்களைக் கவனித்து வந்த 15 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணி மூடப்பட்டது. ருniஉநகஇ ருnhஉசஇ ஊயசநஇ ழுஒகயஅஇ ளுயஎந வாந உhடைனசநn போன்ற அமைப்புக்களும் வெளியேறிய நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சிறுவர்களின் கல்வி, சுகாதார, போசாக்கு வேலைத்திட்டங்கள் பாதிக்கப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் பதிவு செய்யப்பட்ட 60,056 குடும்பங்கள் உணவு அல்லா நிவாரணத்தினை (தமிழ்நாட்டு மக்களின் நிவாரணப் பொருட்கள்) ஒரு தடவை பெற்றுள்ளார்கள்.
அதன்பின்பு எதுவும் வழங்கப்படவில்லை. இதுவரை 5600 தற்காலிகக் கூடாரங்களே இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது மொத்தத் தேவையின் 10 சதவீதமே ஆகும். அவ்வாறே மலசல கூடங்களும்.
உள்ளுர் நிறுவனங்களின் செயற்பாடு
வுசுழுஇ மற்றும் தமிழர் சமூக பொருளாதார அமைப்பு, அத்துடன் சில மத அமைப்புக்கள், 20 இற்கும் மேற்பட்ட உள்ளுர் நிறுவனங்கள் தமது வளங்களைக் கொண்டு இடம்பெயர்ந்த மக்களின் வேலைத்திட்டத்தினைக் கவனித்து வருகின்றன.
எமது வேண்டுகைகள்
தினம்தோறும் இலங்கை அரசின் இனஅழிப்பு நடவடிக்கையினால் வன்னியில் செத்துக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் காயப்பட்டவர்களை சிகிச்சைக்குட்படுத்துவதற்கும் ஒட்டுமொத்தமாக நான்கு இலட்சம் மக்களை பட்டிணி மற்றும் உயிர் ஆபத்துக்களில் இருந்து மீட்டிட புலம்பெயர்ந்த மக்களே புறப்படுங்கள்.
1.
பொதுமக்களின் குடியிருப்புகள்இ மருத்துவமனைகள்இ பாடசாலைகளஇ; வழிபாட்டுத் தலங்கள்இ பொதுநிர்வாக அலகுகள் மீதான வான்வழித் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துதல்.
2.
ஐ.நா மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட அனுமதித்தல்.
3.
சோதனைச் சாவடிகளைத் திறப்பதன் மூலம் காயப்பட்ட பொதுமக்களை வெளி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதித்தல்.
4.
உணவு மருந்து தற்காலிக குடில்கள் அமைப்பதற்கான தரப்பாழ்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் போன்றவை வன்னிப் பிரதேசத்தை ஓழுங்காக சென்றடைய அனுமதித்தல்.
5.
இலங்கை படைகளின் தமிழர் மீதான இனப்படுகொலைகளிற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அடிப்படையில் உலக நாடுகள் செய்யும் உதவியினை நிறுத்த வற்புறுத்துங்கள்.
6.
போர் நிறுத்தம் செய்து விடுதலைப்புலிகளுடன் பேச இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.http://farm4.static.flickr.com/3503/3208958283_bd3e7a84c0_o.jpg
http://farm4.static.flickr.com/3130/3208958421_8f1115b8a4_o.jpg
http://farm4.static.flickr.com/3442/3208958619_de298b0345_o.jpg

நன்றி
வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பு.
யுனிக்கோட்டாக்கம் நிரன்

என்னவன் விஜய்
19-01-2009, 07:20 PM
நன்றி நிரன்.

இவைகளை படிக்கும்பொழுது இன்னும் எம்மினத்திற்க்கு ரத்தக்கண்ணீர்தான் மிச்சமுண்டு.

அக்னி
20-01-2009, 10:12 PM
இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கெதிரான தாக்குதல்களில்,
20.01.2009 இல் சிதைக்கப்பட்டவர்கள்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_1.jpg http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_2.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_3.jpg http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_4.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_5.jpg http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_6.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_7.jpg http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_12.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_9.jpg http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_10.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_8.jpg http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_13.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/vanni_20109_11.jpg

நன்றி: தமிழ்வின் இணையம்

அறிஞர்
20-01-2009, 10:26 PM
இராணுவத்தின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. இதற்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

சுகந்தப்ரீதன்
21-01-2009, 10:47 AM
மனிதநேயமுள்ள மனிதர்களே இதை பார்த்துவிட்டு நீங்களே கூறுங்கள் இது உண்மையிலேயே பயங்கரவாதத்திற்க்கு எதிரான யுத்தம்தானா என்று..??

http://www.rwohomeland.com/public/situation/180109_shell_attack_vdo.zip
http://www.rwohomeland.com/public/situation/170109_Munkilaaru_displacement_vdo.zip

சூரியன்
21-01-2009, 11:26 AM
உள்ளம் துடிக்கின்றது,
உலக நாடுகள் எல்லாம் இதைப்பார்த்துக்கொண்டு ஏன் அமைதியாய் இருக்கின்றன?

ஆதவா
21-01-2009, 12:55 PM
ஒரு கணம் யோசித்து, மனதில் அழுதேன்...


இது இனியெப்போது தீரும்??

அக்னி
21-01-2009, 01:16 PM
ஒரு கிறிஸ்தவப் பாடலின் வரிகள் நிழலாடுகின்றன...

“வேதனை கண்டும் நீ காட்டிடும் மௌனம்,
விளங்கவில்லை அது ஏன் இறைவா..?”

நிரன்
21-01-2009, 01:43 PM
சிலவற்றைப் பார்க்கும் போது கண்ணீர் மட்டுந்தான் விடையாகிறது.. இது மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நம் மன்றம் வராத.. உண்மைகள் பற்பல நண்பர்களே!


காசா அழிவுகள் கவலையளிப்பதாக கூறுகிறார் ஐ நா பொதுச் செயலர் அப்படியென்றால் ஈழமக்களின் இவ் அழிவுகள் மட்டும் இன்னும் ஐ நா கண்களில் தென்படவில்லையா!!! இல்லை கண்டும் காணமல் செயற்படுகிறார்களா காசா மக்களில் ஓடும் இரத்தம்தான் ஈழ மக்களிலும் ஓடுகிறது. அவர்களும் மனிதர்கள்தான் ஈழத்திலும் வாழ்வது மனிதரே என்று ஒரு கனம் ஐ நா திரும்பிப் பார்க்காதா!!!!!!!
இஸ்ரேலியப் பிரதமர் எகுத் ஒல்மார்டுடன் ஐ நா பொதுச் செயலர் பான் கீ மூன்

காசாவுக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், அங்கு தான் கண்ட அழிவுகளையிட்டு மிகுந்த கவலை கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

அங்கு தான் கண்ட காட்சிகள் அதிர்ச்சியாகவும், நெஞ்சை பிளக்கச் செய்வதாகவும் இருந்ததாகக் கூறிய அவர், இஸ்ரேலின் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் என்று தான் கூறும் நடவடிக்கை குறித்து கடுமையான கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான பாலத்தீனர்களின் ராக்கட் தாக்குதல்களும் ஏற்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஷெல்களால் நிர்மூலமாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பண்டகசாலையின் முன்பாக அவர் உரையாற்றினார்.

இந்தத் தாக்குதல்களால் தான் வேதனையடைந்துள்ளதாகக் கூறிய அவர், இதற்கு காரணமானவர்கள், அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

காசா மக்கள் தமது வாழ்க்கையை மறுசீரமைத்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

நன்றி பிபிசி தமிழ்

சுட்டிபையன்
22-01-2009, 09:11 AM
http://www.youtube.com/watch?v=7T6DX4BXHuo&feature=related

http://www.youtube.com/watch?v=KMqlepUg3GQ

kampan
22-01-2009, 08:08 PM
http://www.ireport.com/docs/DOC-169114

kampan
25-01-2009, 01:01 PM
http://www.yarl.com/forum3/index.php?showtopic=50953

நிரன்
25-01-2009, 01:21 PM
நன்றி கம்பன் அவர்களே!

நீங்கள் கொடுத்த சுட்டியிலிருந்து நேரடித் தொடர்பை இங்கே கொடுக்கிறேன். மற்ற உறவுகளும் பார்ப்பதற்கு வசதியாகவிருக்கும்

சா என்ன அவலமிது :traurig001: உயிரைக் கையில் பிடித்துக்கொண்டோடும் நம்முறவுகள்

http://eurotvlive.com/download/20090124/20090124_UDAYAR_KATTU_SUTHENDRA_PURAM_SHELL_ATTACK.wmv


http://eurotvlive.com/download/20090124/20090124_shell_attack_02.wmv

நன்றி யாழ்களம்

ஓவியன்
25-01-2009, 02:02 PM
கண் கொண்டு பார்க்க முடியாத அவலம்....

ஹூம், இதுதான் இலங்கை அரசாங்கத்தின் zero-civilian-casualty doctrine (http://www.lankamission.org/content/view/996/49/) போல....

உலக நாடுகளுக்கு இலங்கை அரசு, இதனைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது...
உலக நாடுகளும் ஆமாமென கேட்டு ஆயுதங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன...

அய்யா
26-01-2009, 12:02 PM
4 இலட்சம் மக்களுக்கு 10 மருத்துவர்கள்தானா? என்ன கொடுமை இது?

செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா?

இந்த அவலங்கள் உலகநாடுகளின் கண்களுக்கு அகப்படவில்லையோ?

தூயவன்
26-01-2009, 05:30 PM
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வள்ளிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு இலட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 மணி முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந்திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலானோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகளை தமிழ்நெட்" இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜா அவர்கள் சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.சபை, சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு காயமடைந்த பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற மருந்துப் பொருட்களையும், மருத்துவ பணியாளர்களையும் அவசரமாக வினியோகிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அனுப்பிய செய்தியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 1000 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவையான மருந்துப் பொருட்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் தயாரித்து அனுப்பியுள்ளார்.

http://www.limitkiller.com/surf.php?q=aHR0cDovL3d3dy50YW1pbHdpbi5jb20vcGhvdG9zL2Z1bGwvMjAwOS8wMS8yNl8wMV8wOV9yZGhzXzAxLmpwZw%3D%3D
நன்றி : தமிழ்வின்

நிரன்
26-01-2009, 06:10 PM
4 இலட்சம் மக்களுக்கு 10 மருத்துவர்கள்தானா? என்ன கொடுமை இது?

செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா?

இந்த அவலங்கள் உலகநாடுகளின் கண்களுக்கு அகப்படவில்லையோ?

வன்னியிலிருந்த பல தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றிவிட்டது. மிக மிக அரிதானவைகளே தற்பொழுது வன்னி மக்களுக்குக் கிடைக்கறது. காரணம் இலங்கை அரசு பல தொண்டு நிறுவனங்களை வன்னிப் பகுதியிலிருந்து வெளியேற்றியமையே. அவர்கள் இருக்கையில் வெறித்தனமான தாக்குதல்களை மக்கள் மீது கட்டவிழ்த்து விட முடியாதல்லவா.


கண்ணும் வாயும் காதும் மூடிக் கொண்டிருந்து நவீன ரக ஆயுதங்களை வாரி இறைக்கும் நாடுகளிற்கு இதைப்பற்றிக் கவலை என்ன. வியாபார நோக்குகள் ஒரு பக்கமும் அரசியல லாபம் மறுபக்கமும் பேனுவோர் மத்தியில் இருக்கும் சில நல்ல அதிகாரிகளைக் கூட இருள் மறைக்கிறது. ஐ.நா கண்டணம் தெரிவித்துக்கொண்டிருக்கிறது மக்கள் படுகொலைக்கல்ல மகிந்த அரசுக்கு ஈழம் வேண்டுமாம் கொடுத்து விடும் படி.. :lachen001: இது போன்ற சில அரசியல்வாதிகளால் மக்கள் பிரச்சினைகள் பல நாட்டு அதிபர்களின் காதுகளில் விழுவதில்லை. காரணம் இவர்கள் போன்று இரண்டு பக்கம் சம்பளம் பெருவோர்

தமிழ்தாசன்
26-01-2009, 08:49 PM
விடுதலை இயக்கங்கள் இது போன்று பின் வாங்கிச் செல்வதும்- பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர் விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றனர்.


விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர் அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.


பா.நடேசன் அவர்களின் செவ்வி நன்றி.பிபிசி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=404058)நன்றி etv
http://i381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/th_20090124_shell_attack_03.jpg (http://s381.photobucket.com/albums/oo252/thamizhthaassan/?action=view&current=20090124_shell_attack_03.flv)

அக்னி
28-01-2009, 05:07 PM
இந்திய வெளியுறவு அமைச்சர், இலங்கை சென்று, வாக்குறுதி பெற்று, இந்தியா திரும்பியதன் பின்னரான 12 மணிநேரத்திற்குள், பிரகடனப்படுத்த மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள், அகோர குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
23 பொதுமக்கள் பலியானதுடன், 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

மேலதிக தகவலுக்கு... (http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dPj0K0ecQG7h3b4F9EM4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e)

நன்றி: தமிழ்வின்

அக்னி
29-01-2009, 08:42 AM
ஜனவரி 25 அவலம்...

எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தோர், பார்ப்பதையும் கேட்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

http://it.youtube.com/watch?v=7y0_e1fhKaM&eurl=http://www.kalakam.com/forum/viewtopic.php?p=7977

ஓவியன்
29-01-2009, 03:56 PM
இலங்கையில் நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிபிசி உலக செய்தி சேவையின் தகவல்கள்...

http://news.bbc.co.uk/2/hi/7858065.stm

நிரன்
04-02-2009, 02:11 PM
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை (எரிகுண்டுகளை) பீரங்கிகள் மூலம் ஏவி வருகின்றது போல அப்பிரதேசங்களை அவதானிக்கும் போது தெரிவதாக அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இச் செய்தியை மேலும் படிக்க (http://puthinam.com/full.php?2b07D6MCb0acYAmSI30ecaAYcm40cc3Q0Mtb24d2c5Vo6d4b334OO4m4d4ecOA4ced0e3We1f7de)


இந்தக் குண்டு தொடர்பான விபரங்கள் விக்கிப்பீடியா தளத்திலிருந்து

http://en.wikipedia.org/wiki/White_phosphorus_(weapon)


முன்னர், வியட்நாம் போரின் போது அமெரிக்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்தவகை எறிகணைகள், அண்மையில் இஸ்ரேலிய இராணுவத்தினரினால் காசா பகுதியிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது இலங்கையில் ராணுவம் ஈழமக்களைக் கொல்லப் பயன்படுகிறது.

jk12
05-02-2009, 05:19 PM
மனதை உறையவைக்கும் பதிவுகள்...

- 25 வருடங்களாக (என்னுடைய கல்லூரி காலம் முதல் ) பல வேறு விதமாக மனிதர்களும் பல காட்ச்சிகளும் மாறி மாறி எது உண்மை ?... எது சரி ?... என்ன செய்வது ?.... என்று புரியாமல் காலத்தின் ஓட்டத்தில் சிக்கிகொண்டு போய்கொண்டிருக்கும் இயல்பான தமிழனில் ஒருவன்

ஓவியன்
07-02-2009, 01:15 PM
இலங்கை விமானப் படையினரின் நேற்றைய தாக்குதலில் வன்னியின் புதுக்குடியிருப்புப் பகுதியிலமைந்திருந்த டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை நேற்றுத் தாக்கப் பட்டுளது, இந்தத் தாக்குதலில் சுமார் 60 நோயாளர்கள் கொல்லப் பட்டிருக்கலாமென ஐயப்படுகிறது....

மேலதிக தகவல்களுக்கு.... (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28334)

இந்தத் தாக்குதலை இன்று இலங்கை பாதுகாப்பு ஊடகம், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் கடற்புலிகளின் பிரதான தளபதியுமான சூசை மீதான தாக்குதலாக வர்ணித்துளது.....! :frown:

டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை வன்னியிலிருந்த மிகப் பெரிய தனியார் வைத்தியசாலையென்பது குறிப்பிடத்தக்கது...


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/Puthu1015_01.jpg

தாக்குதலுக்கு இலக்காக முன்னரான இந்த வைத்தியசாலையின் ஒரு பகுதித் தோற்றமிது...

நிரன்
10-03-2009, 01:09 PM
தமிழினப் படுகொலையின் தொகுப்புக் காட்சியொன்று.

http://www.youtube.com/watch?v=WvBNY57D0l8

http://www.youtube.com/watch?v=1Ma7qLXfDq4