PDA

View Full Version : எம்மா ஸ்மித் - வித்தியாசமான ஒரு சிறுகதை



umakarthick
19-01-2009, 10:04 AM
இந்த கதை என்னுடைய 4 ஆம் முயற்சி :)



'எம்மா' எங்கள் தெருவுக்கு வந்த நாள் எங்களால் மறக்க முடியாதது(நாங்கள் என்றால் என் வயது சிறுவர்கள், ஒன்றாக ஆற்றுக்கு போவோம், கேசரி செய்து சாபிடுவோம்,கிரிக்கெட்,கோல்,ஓணான் அடிப்பது என எல்லாமே செய்வோம்)இங்கிலாந்திலிருந்து வந்திருந்தாள், வெள்ளைக்கார பெண் என்றவுடனே எல்லாரும் வேடிக்கை பார்க்க வந்தார்கள், பொட்டல் புதூர் யானை போனலே வேடிக்கை பார்ப்பவர்கள் , வெள்ளைத் தோல் என்றால் கேட்க வேண்டுமா?. அவள் எல்லாரையும் பார்த்து மையமாய் சிரித்தாள்.




பக்கத்து வீட்டு பொன்னுத்தாயி அக்கா, காளியக்கா எல்லாரும் அவ கையை தடவி பார்த்து 'தாயி தாயின்னு ' பேசினாங்க. இளவட்ட பசங்கள் அவளை தவறாக பார்த்தார்கள், எம்மா எதையும் கண்டுகொள்ள வில்லை, ஸ்டைலாக சிகரெட் பிடித்தாள்,வேலண்ணாவுடன் சகஜமாக பேசினாள்.



எங்கள் தெரு என்பது மொத்தம் 8 வீடுகள் ,வரிசையாக இருக்காது, என் அப்பா மானேஜர் என்பதால் கொஞ்சம் மரியாதை கொடுப்பார்கள், எங்கள் வீட்டில் தான் டாய்லெட் இருந்தது, எம்மா எங்கள் வீட்டுக்கு தான் வருவாள் அந்த சமாச்சாரங்களுக்கு எல்லாம்.



'எம்மா' ஆதர்ஸ் வித்யாலயா பள்ளிக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருந்தாள், ஏதோ புராஜக்ட் மாதிரியாம்.வேல் அண்ணா வீட்டில் தான் தங்கியிருந்தாள், வேல் அண்ணா பற்றி சொல்லியாக வேண்டும் இங்கே, பாபநாசம் கல்லூரியில் பி.ஏ படித்துக் கொண்டிருந்தார்,எம்.ஜி.ஆர் என்றால் உயிரை விடுவார், ஆனால் எங்களுடம் ஓணான் வேட்டைக்கு வருவார்.சனி ஞாயிறுகளி அவர்கள் தோட்டத்திற்கு போவோம் ,சாப்பாடு செய்து சாப்பிடுவோம், டேம் போவோம் புரோட்டாவுடன், நன்கு குளித்து ஆட்டம் போட்டு வீட்டுக்கு வருவோம்.அவரின் சைக்கிளில் ஹேண்டி பாரில் 2 பேர், பின்னாடி 2 பேர் என தொத்திக் கொண்டு எம்.ஜி.ஆர் படம் போவோம்.





வேல் அண்ணா வீட்டில் எம்மா தங்கிய அன்றிலிருந்து அவள் வேலண்ணாவுடன் நல்ல பழக ஆரம்பித்தால்,வேலண்ணா எங்களுக்கு நேரம் ஒதுக்குவது கம்மியானது,விளங்காட்டின் மொட்டைக் கிணற்றுப்பக்கத்தில் இருந்த மஞ்சநத்தி மரத்தில் நாங்கள் ரொம்ப நாள் தேடிக்கொண்டிந்த மொக்கான்(ஓணானுக்கு மற்றொரு பெயர் ,உருவம், வடிவம் பொறுத்து நாங்கள் பேர் வைப்போம்) நிற்க கண்டு வேலண்ணா வீட்டுக்கு போனோம், வேலண்ணா 'நான் வரல நீங்க போங்கடா வேலை இருக்கு என்றார்' , எம்மாக்கு மெகந்தி போட்டுக் கொண்டிருந்தார்.'கமான் கிட்ஸ்' என்றாள் எங்களை பார்த்து எம்மா.



எங்கள் அழுகை முட்டிக் கொண்டு வந்தது, அதே சமயம் கோபமும்!. மொட்டைக்கிணற்றடியில் எம்மாவை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது வேலண்ணாவும் , எம்மாவும் எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்

ஓவியன்
19-01-2009, 01:01 PM
வித்தியாசமாகவே இருக்கிறது கார்த்திக் வட்டார வழக்குகளில் சிறுகதைகளைப் படிப்பதே அலாதி சுகம் தானே...

தொடர்ந்து மீதமான அத்தியாயங்களை விரைந்து தாருங்கள், அப்படியே கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் கவனித்துக் களையுங்களேன், கதை இன்னும் அழகாக சோபிக்கும்..!! :)


பிகு - என் அலுவலகத்தில் இந்தக் கதை நாயகியின் பெயருடன் அதே நாட்டினைச் சேர்ந்த ஒருவர் பணிபுரிகிறார், அவர்தான் இந்தக் கதையின் நாயகியோ தெரியலையே...!! :D:D:D

செல்வா
19-01-2009, 02:35 PM
ஓவியனின் கூற்றே என்னுடையதும். (அந்த அலுவலகச் சமாச்சாரம் தவிர ). தொடருங்கள் தொடர்ந்து வாசித்து விமர்சிக்கிறேன்.

umakarthick
20-01-2009, 05:14 AM
என் வீட்டிற்கு வரும் போது எம்மா , 'ஹவுர் யு' என்பாள் தினமும்,
நான் 'பைன்' என்பேன் தினமும்,வேறு எதுவும் கேட்டிறக் கூடாது என அந்த இடத்தில் இருந்து விலகிவிடுவேன்,

என் அம்மாவிடம் புரூ காப்பி குடிப்பாள், அப்பாவிடம் உங்க 'கணேஷ் பீடி' எங்களூரிலும் கிடக்கிறது என்றாள், எங்கள் வீட்டு நாய் அவளை கண்டால் 'வூஊஊ என்று ஒரு மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு அவளை அழைத்து கழுத்தை தடவிக் கொடுக்க சொல்லும்'

பாபுவும் அந்தோனியும் எம்மாவை ஏதாவது செய்யனும் என்றார்கள் சினிமாவில் காட்டுகிற மாதிரி சாப்பாட்டில் பேதி மாத்திரை கலக்கலாம் என பேசி கொண்டிருந்தார்கள், நான் தீவிர யோசனையில் இருந்தேன்.'என்னடா நீ எதுவும் பேச மாட்டிக்குற செல்வா கேட்டான் , நான் மறுப்பது போல தலையசைத்தேன் , உன் வீட்டுக்கு கக்கூசு வராங்குகிறதக்காக அவளுக்கு சப்போட் பண்றியா??' இது பாபு.

இந்த சமயத்தில் தான் எம்மாவும்,வேலண்ணாவும் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.எங்களுக்கு ஆச்சர்யமாகியது, வேலண்ணாவும் நாங்களும் எம்மாவும் மஞ்சநத்தி மரத்தை நோக்கி சென்றோம்,இன்னும் கருப்பன் தலையை + சிவப்பு நிறமாக இருக்கும் ஆட்டிக்கொண்டிருந்தான் .ஓணானுக்கு எங்கள் ஊரில் பல பெயர்கள் உண்டு,தெண்டில் என்போம் குட்டிகளை , மொக்கான் என்பது மஞ்சள் ,பச்சோந்தி என்பது நிறம்மாறிக்கொண்டே இருக்கும், கருப்பனை சுத்தி வளைத்தோம் , வேலண்ணாவின் குறியிலிருந்து எந்த ஓணானும் தப்ப முடியாது

ஆனால் கருப்பன் ஒவ்வொரு முறையும் பக்கத்திலிருக்கும் வேலிக்கு பாய்ந்து பொந்திற்குள் புகுந்து கொள்வான் , ஆனால் இன்று எங்கள் சதியில் கருப்பன் வீழ்ந்தான் , எம்மாவும் தன் பங்குக்கு ஒரு கல் எடுத்து வீசினான் அது கருப்பனை எல்லாம் விட்டு விட்டு பாபுவின் தலையை நோக்கி வந்தது , மயிரிழையில் பாபு தப்பித்தான்.


அதன் பின் எம்மா எங்களில் ஒருத்தியானாள், ஜம்பு நதிக்கு குளிக்க வந்தாள்,வேலண்ணா எப்போதாவது சிகரெட் குடிப்பார், அவருடன் சேர்ந்து அவள் கொண்டு வந்திருந்த ஒல்லியான சிகரெட் குடிப்பாள்

எங்களுடன் டீக்கடைக்கு வந்து கண்ணாடி கிளாசில் டீ குடித்தாள், ராம நதி டேமுக்கு வந்து குளித்து புரோட்டா சால்னா சாப்பிட்டாள், ஒரு முறை புட் பாய்சனாகி டாக்டர் நிம்ராடிடம் அழைத்து போனோம், அவர் 'யூ லைக் பென்சிலின்?...என அவள் ஜீன்ஸ் பேண்ட்டை இறக்கி விடச் சொல்லி

பின்னால் ஊசி போட்டார், 'திஸ் டாப்லெட் ஒன் டைம், தேட் டாப்லெட் 2 டைம்ஸ் , ஹவ் மெனி டாப்லட்ஸ் பார் அ டே என்றார்..எம்மா மிரண்டு போயிருந்தாள்.கோலி,கில்லி ,கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த எங்களை ஷட்டில் ஆட வைத்தாள், 'வி டோண்ட் பிளே கிரிக்கெட் 'என்பாள்.


எல்லாக்குழந்தைகளையும் கொஞ்சுவாள்,வாசகிரி மலை முருகர் கோவிலுக்கு தாவணி கட்டிக்கொண்டு வந்தாள்..எல்லாரிடமும் மிகவும் நெருங்கியிருந்தாள், 4 மாதம் ஓடியதே தெரியவில்லை, எம்மா ஊருக்கு கிளம்பும் நேரம் வந்தது, நாங்கள் ரொம்பவே வருத்தப்பட்டோம், காளியக்கா 'அடுத்த லீவுக்க்கும் வா தாயி' என்றார்.

அவள் கிளம்பிய பின் நாங்கள் அவள் சொல்லிக்கொடுத்த ரைம்ஸ்,விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தோம் சில நாட்கள்,வேலண்ணா கூட கொஞ்சம் கலங்கியிருந்தார்...


சரியாக இரண்டு வருடம் கழித்து எம்மா மறுபடி வந்தாள், இந்த முறை ஒரு பையனோடு வந்திருந்தாள்,தோற்றத்திலும் வயதிலும் அவளை விட சின்னவனாய் இருந்தான், பூனைக்கண்ணன்,எங்களுக்கு அவனை பிடிக்க வில்லை..

எலாருக்கும் பரிசுகள் வாங்கி வந்திருந்தாள், பொன்னுத்தாயி அக்கா பெண் மகா பெரியவளாகி இருந்தாள் , அவளுக்கு ஏதோ பொட்டலம் மாதிரி பரிசு கொடுத்தாள்,நாங்கள் அது என்ன் என்பதை தெரிந்து கொள்ள மிக பாடு பட்டோம்..

பின்னாளில் தான் அது நாப்கின் என தெரிந்தது,இப்போது அவளுக்கு நம்ம ஊர் சாப்பாடு பிடித்திருந்தது, எங்களூர் தியேட்டரில் அந்த சமயம் வெளியாகி இருந்த அஜித் படத்தை எங்களுடம் பெஞ்சு டிக்கெட்டில் (தரை டிக்கெட் - 3 ரூ, பென்சு-4 ரூ, சேர்-5 ரூ), அதன் பின் அஜித்தை பிடித்து போய் சில சிடிக்கள் எல்லாம் வாங்கிக்கொண்டாள், பூனைக்கண்ணனும் எங்களுடன் கல்யாணி அம்மன் கோவிலுக்கு வந்தான்அவர்க ஏதோ சிரித்து பேசிக்கொண்டே இருப்பார்கள், சுவர்களிலும், தூண்களிலும் செதுக்கி இருக்கும் சிற்பங்களை அப்படி உட்கார்ந்து அலசி ஆராய்வார்கள்,வேலண்ணா இம்முறை கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.

பூனையிடன் எங்கள் ஓணான் வேட்டை பற்றி சொல்லிருக்க வேண்டும், அவன் அதை அடிப்பதை பார்க்க வேண்டும் என்றான், ஆனால் நான் ,செல்வா எல்லாரும் அப்போது அந்த நிலையைகடந்திருந்தோம், ஓணான் அடிப்பது எங்களுக்கு அவமானகப்பட்டது. எம்மாவின் உடைகள் விலகியிருக்கும் போது, எங்களுக்குள் கிளர்ச்சி உண்டாகியது, ஆனால் யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் அதை எம்மா ஊருக்கு போன ஒரு நாளில் பேசி பெருமூச்சு விட்டு உடனே

வெட்கபட்டும் கொண்டோம்.அவர்கள் இருவரையும் சேர்த்து நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்தும், ஆசிர்வதித்தும் அனுப்பினார்கள் எல்லாரும் அவர்கள் கிளம்பும் போது,பூனை அவளை தோளுட அணைத்து அழைத்து செல்லும் போது எங்கள் பொறாமையாக வந்தது. எம்மாவுக்கு எங்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடம் இருந்தது.

அதன் பின் நான் கல்லூரி இரண்டாம் வருடம் விடுமுறையில் அவள் ஊருக்கு வந்திருந்தாள் , தன் கணவனுட்ன் ஊர் உலகம் சுற்றுவதாகவும் அப்படியே இங்கும் வந்து எல்லாரையும் பார்த்து விட்டு செல்வதாகவும் சொன்னார்கள்.ஆனால் யாரும் அவளை பற்றி கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாத்தது வினோதமாக இருந்தது, வேலண்ணா தினத்தந்தியில் வேலைக் கிடைத்து வேலூரில் செட்டில் ஆகி விட்டார், நான் கோவையில்,செல்வா அவன் அப்பா தியேட்டரில்,அந்தோணி சென்னையில் மெக்கானி என ஒவ்வொரு புறம் சிதறியிருந்தோம்.அவளை ஆவலுடன் பூனைக்கண்ணனை கல்யாணம் செய்திருப்பாளா என எதிர்பார்ப்புடன் போன எனக்கு பேரதிர்ச்சி..அவள் கணவன் ஒரு பெண்..


ஆம் அவள் பெண்ணை திருமணம் செய்திருந்தாள்( ஓரினச்சேர்க்கையாளர்கள் ) அவள் ஒல்லியாக வெட வெட என இருந்தாள், என்னை அவளுக்கு அறிமுக படுத்தி வைத்தாள், தருமசங்கடமாக கைக்குலுக்கினேன். எம்மா கூட ஒரு மாதிரி சோர்ந்திருந்தாள், இதற்கு முன்பு வந்த பூனைக்கண்ணன் அவன் வயது ஒத்த ஒரு பெண்ணை திருமணம்

செய்து விட்டதாகவும் , இவள் மிகவும் மனமொடிந்த சூழ்நிலையில் இவளை சந்தித்தாகவும் சொன்னாள், அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு அவள் சொல்வது

நன்றாகவே புரிந்தது, பொன்னுத்தாயி அக்கா, காளியக்க ,மகா உட்பட சுற்றுவட்ட எல்லாரும் அவளிடம் முகம் கொடுத்து பேச வில்லை என என்னிடம் சொல்லும் போது

அவன் கண் கலங்கி அழுதே விட்டாள்,அவள் (ம)க(னை)ண(வி)வன்,அவளை முதுகில் தேய்த்து சமாதான படுத்தினாள்..இவர்கள் எலாம் ஏன் என்னிடம் பேச மாட்டிக்கிறார்கள்,ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றாள் அழுதுகொண்டே..

அந்த இளம் வயதில் ,எண்ணங்கள் சீரில்லா வயதில் ,அவளுக்கு என்ன பதில் சொல்ல என எனக்கு தெரிய வில்லை..





ஆனால் இப்போது நான் இருக்கும் பக்குவ நிலையில் அன்று இருந்திருந்தாள் அவளுக்கு என் பதில் இதுவாகத் தான் இருந்திருக்கும்

'இவர்கள் மாற இன்னும் நூறு யுகம் ஆகும்'





பின்குறிப்பு:



மேற்குறிப்பிட்ட இந்த போஸ்டில் வந்த, இருக்கும் பாத்திரங்கள் எலாம் கற்பனை அல்ல, அவர்கள் பெயர்களும் மாற்ற பட வில்லை என தாழ்மையுன் தெரிவித்துக்

கொள்கிறேன்

umakarthick
20-01-2009, 05:16 AM
வித்தியாசமாகவே இருக்கிறது கார்த்திக் வட்டார வழக்குகளில் சிறுகதைகளைப் படிப்பதே அலாதி சுகம் தானே...

தொடர்ந்து மீதமான அத்தியாயங்களை விரைந்து தாருங்கள், அப்படியே கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் கவனித்துக் களையுங்களேன், கதை இன்னும் அழகாக சோபிக்கும்..!! :)


பிகு - என் அலுவலகத்தில் இந்தக் கதை நாயகியின் பெயருடன் அதே நாட்டினைச் சேர்ந்த ஒருவர் பணிபுரிகிறார், அவர்தான் இந்தக் கதையின் நாயகியோ தெரியலையே...!! :D:D:D



எழுத்து பிழைகள் என் கூடவே பிறந்த ஒன்று ஹி ஹி ..இனிமேல் வராமல் பார்த்துக்கொள்கிறேன்..

எம்மா ஸ்மித் உங்க ஆபிசிலுமா :) ஆனா இவங்க அவங்க இல்ல

SivaS
27-01-2009, 07:39 AM
'இவர்கள் மாற இன்னும் நூறு யுகம் ஆகும்'


உண்மை.



அருமையான கதை

umakarthick
27-01-2009, 09:21 AM
நன்றி சிவா :)