PDA

View Full Version : செல்போன்களும் கடிதங்களும்



umakarthick
19-01-2009, 09:59 AM
" சில சமயங்களில் உன் கடிதமும்
பல சமயங்களில் காய்ந்து உதிர்ந்த பூவும் இருக்கும்

தினமும் வீடு திரும்பும்பொழுதில்
தபால் பெட்டியில் உன் கடிதம்
எதிர்பார்த்து திறக்கையில்""

- கார்த்திக்


தூரத்தில் இருக்கும் இருவர் தங்கள் பறிமாறிக்கொள்ளும் கடிதங்களில் தான் பரஸ்பரம் முகம் பார்த்துக் கொள்கிறார்கள், கடிதங்கள் வழக்கொழிந்து விட்டது இப்போது , முன்னெல்லாம் எப்போதும் காதல் கடிதங்களும் ,பண்டிகை சமயங்களில் வாழ்த்து அட்டைகளும் கட்டு கட்டாய் மாநிலங்கள் கடந்து ரயில்களில் பயணப்படும் ..இப்போது??

எனக்கு தெரிந்த வரை இமெயில்களும் , செல்போன்களும் வந்த பின் கடிதங்கள் மெதுவாக நிறமிழக்க ஆரம்பித்தன, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி என்ன தான் விரைவில் நாம் ஒரு செய்தியை கடத்த உதவினாலும் , அந்த இன்லேன்ட் லெட்டர்களும்( நீலக் கலர்) , அந்த கடிதங்கள் நம்ம விருப்பமானவரிடம் வரும் வரை நகம் கடித்து கொண்டு காத்திருந்த அருமையான கணங்களையும் நாம் இழந்து விட்டோம்.

நான் கல்லூரி 4 ஆம் ஆண்டு படிக்கும் வரை கடிதங்களை பயன்படுத்தினேன்,சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரே நாளில் எனக்கு 5 அல்லது 6 கடிதங்கள் ஹாஸ்டல் அட்ரஸ்க்கு வரும்



'இந்த கடித்ததை கார்த்திக்கை தவிர யாரும் படிக்க கூடாது என முன்குறிப்புடன்' என் பத்தினியிடமிருந்து வரும் கடிதம்

'கடந்த வருடம் என் வாழ்வில் நடந்த நல்லவை ,கெட்டவை பற்றி டாப் 10 வரிசையில் சொல்லும்' சுந்தர்ராமனின் கடிதம்

'உடம்பை பார்த்துக்கோ, இத்துடன் 1500 ரூ உள்ளது ,கடவுள் இருக்கிறார்' என வரும் அப்பாவின் கடிதமும்

'மாப்பி போன வாரம் இங்க ஒரு தியேட்டர்ல மால் பட பார்த்தேண்டா, செம பிட்டு ..படம் பேரு கூட' என கேரளாவிலிருந்து வரும் ஊர் நண்பன் நிதிவாணனின் கடிதம்

'அவர் அப்பா மாதிரி இல்லைடா , எல்லா இடத்துக்கும் அவசர படாம பதவிசா கூட்டிட்டு போறாருடா' என அப்பாவை வருங்கால கணவருடன் ஒப்பிட்டு வரும் அக்காவின் கடிதமும் வரும்

நண்பர்கள் எல்லாரும் என்னை கிண்டடித்தார்கள் ,அவனவன் இமெயில் சாட்டிங்ன்னு அலையுறான் , நீ என்னடா இன்னும் லெட்டர்லயே லவ் பண்ணிட்டிருக்க ? ..அவர்களுக்கு பதில் என் சிரிப்பு மட்டுமே.

2003 ல் எல்லாம் செல்போன்கள் மெதுவாக தலைக்காட்ட ஆரம்பித்தன, எல்லாரும் செங்கல் கட்டி சைஸில் ஒரு செல்லுலார்போன் வைத்திருப்பார்கள்(அப்போது மொபைல் ,செல் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்), நீட்டமாக ஒரு ஆட்டனா கூட இருக்கும்,பின்னர் மெதுவாக எலாரும் 1100 வாங்க ஆரம்பித்தார்கள், இந்தியர்களுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டாதாம் அந்த மாடல்.

செல்போன் நம்மை எந்த அளவு ஆக்கிரமித்த விட்டது என்பதற்க்கு ஒரு உதாரணம்(என்னளவில்) சொல்கிறேன். நான் கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது ஒரு முறை என் மனைவியை சந்திக்க சென்றிருந்தேன், அதற்கு பத்துநாள் முன்பு அவள் என் ஹாஸ்டலுக்கு போன் பண்ணிய போது நாங்கள் இந்த் தேதியில் திருநெல்வேலியில் சந்திக்கலாம் என பிளான் பண்ணியிருந்தோம், அதற்கு பிறகு பேச வாய்ப்பு கிடைக்கலை, அந்தக்குறிப்பிட்ட தேதியில் என் ஊரிலிருந்து பஸ் ஏறி திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் வெயிட் பண்ணினேன்(அப்போது சில பிரச்சினைகள் நடந்து கொண்டிந்ததால் கடிதமும் பறிமாறிக்கொள்ளவில்லை).கிட்டத்தட்ட 30 நிமிடம் ஆகிவிட்டது வெயிட் பண்ண ஆரம்பித்து , எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது , என்னடா ஒரு வேளை மறந்து விட்டாளா இன்று வருவேன் என்று சொன்னதை என்றெல்லா மனது யோசிக்க ஆரம்பித்து விட்டது , 1 மணி நேரம் ஆகிற்று, மனைவி படித்தது சரியான சாமியார் கல்லூரி , அங்கே சீருடை பச்சை கலர் புடவை தான் , நிறைய பச்சைக் கலர் புடவை தெரிய ஆரம்பிக்க நம்பிக்கையோடு போய் அங்கே நின்றேன், கொஞ்ச நேரம் கழித்து மனைவி வர , பார்த்து சிரித்தேன், அவள் கண்டுகொள்ளவே இல்லை, என்னடா இது ஒரு வேளை ஆளையே மறந்து விட்டாளா என அவள் பின்னே நடக்க ஆரம்பித்தேன் ஒரு பொட்டுக் கடைக்குள் நுழைந்து அவள் ஏதோ விலைக்கேட்டுக் கொண்டிருந்தாள் , நானும் உள்ளே சென்ற பின் தான் பேச ஆரம்பித்தாள், ஆம் எங்களூரில் சென்னை போலல்ல , ஒரு பெண்ணும் பையனும் சாலையில் நின்று பேசினாளே உடனே வீட்டிற்க்கு நியூஸ் போய் விடும் (ஆனால் இந்த முறையும் யாரோ போட்டுக் கொடுக்க நாங்கள் மாட்டிக்கொண்டது வேறு விஷயம்).

இதை எதற்கு சொன்னேன் என்றால் இதே சம்பவம் இப்போது நடந்திருந்தால் இருவரிடமும் செல்போன் இருந்திருக்கும் , நான் இங்கே நிற்கிறேன் நீ எங்கே இருக்கிறாய் என பேசிக் கொண்டு எளிதாக சந்திக்க வேண்டிய நபரை சந்திக்கலாம், ஒருவேளை நாம் பார்க்க வேண்டிய நபரிடம் மொபைல் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் எவ்வளவு கஷ்டம்,எவ்வளவு எரிச்சல் வரும் இன்றைய காலக்கட்டத்தில்...

நம்முடைய ஆதார ஆசைகளையும் , திறமையையும், பொறுமையையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்ட இந்த பழக்கத்தை நாகரிக வளர்ச்சி என நீங்கள் கூறினால் என்னால் கட்டாயாமாக ஏற்ற்க் கொள்ள முடியாது!!!

ஆதவா
19-01-2009, 10:13 AM
" சில சமயங்களில் உன் கடிதமும்
பல சமயங்களில் காய்ந்து உதிர்ந்த பூவும் இருக்கும்

தினமும் வீடு திரும்பும்பொழுதில்
தபால் பெட்டியில் உன் கடிதம்
எதிர்பார்த்து திறக்கையில்""


நம்முடைய ஆதார ஆசைகளையும் , திறமையையும், பொறுமையையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்ட இந்த பழக்கத்தை நாகரிக வளர்ச்சி என நீங்கள் கூறினால் என்னால் கட்டாயாமாக ஏற்ற்க் கொள்ள முடியாது!!!

கடிதப்போக்குவரது நின்று
வெகுநாட்களாகின்றது

இப்பொழுதெல்லாம்
உதிர்ந்த சிறகுகள்தான்
கடிதம் பரிமாறிக் கொள்கின்றன.


உங்கள் இறுதி வரிகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை.. தவிர்க்கமுடியாத சூழலில்தான் நானும் மொபைல் உபயோகிக்க ஆரம்பித்தேன்.. இன்று அத்தியாவசியமாக அது மா(ற்)றிவிட்டது..

ஆனால் நன்கு கவனித்துப்பாருங்கள்,,

உலகம் நன்கு சுருங்கிவிட்டது, காலம் விரைவாக கடந்து செல்கிறது ; இன்னும் கடிதப்போக்குவரத்து உண்டு... நீங்க்ள் பயன்படுத்தலாம்.. முற்றிலும் அழியும் காலத்தை எதிர்நோக்கி உள்ளோம்... அவ்வளவே!!

செல்வா
19-01-2009, 10:15 AM
உண்மைதான் கார்த்திக் எப்போதுமே நமது கைப்பட எழுதி அனுப்பப் படும் கடிதங்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். ஒருச் சுட்டுதலில் குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் மனம் கடிதங்களை வாசிக்கும் போது வராது.
பகிர்தலுக்கு நன்றி...
இந்தப் படைப்புத் தங்களது என்றால் இதைக் கட்டுரைகள் அல்லது வேறு பகுதிக்கு நகர்த்திவிடலாமே?

umakarthick
19-01-2009, 11:32 AM
இதை எங்கே பதிவிடுவது என தெரியல எப்படி நகர்த்துவது

umakarthick
19-01-2009, 11:33 AM
இப்பொழுதெல்லாம்
உதிர்ந்த சிறகுகள்தான்
கடிதம் பரிமாறிக் கொள்கின்றன.//

அப்ப்டின்னா???

ஆதவா
19-01-2009, 01:22 PM
இப்பொழுதெல்லாம்
உதிர்ந்த சிறகுகள்தான்
கடிதம் பரிமாறிக் கொள்கின்றன.//

அப்ப்டின்னா???

நீங்க தெரிஞ்சுகிட்டேதான் கேட்கிறீங்களா?

ஏதோ ஒரு பறவையின் உதிர்ந்து போன சிறகுகள்தான், கடிதத்திற்குப் பதிலாக பரிமாற்றத்தில் இருக்கின்றன என்று சொல்லவந்தேன்...

செல்வா
19-01-2009, 02:26 PM
இதை எங்கே பதிவிடுவது என தெரியல எப்படி நகர்த்துவது
உங்களது அனுபவங்கள் வாயிலாக நீங்கள் எழுதியிருப்பதால் நீதிக்கதைகள் சுவையானச் சம்பவங்கள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

arun
19-01-2009, 04:34 PM
இது வரை எனக்கு யாரும் கடிதங்கள் எழுதியதில்லை அதனால் கடிதங்களின் சுகமான அனுபவங்களை பற்றி தெரியவில்லை

தொடர்ந்து தங்களது அனுபவங்களை சொல்லுங்கள்

umakarthick
20-01-2009, 05:18 AM
இது வரை எனக்கு யாரும் கடிதங்கள் எழுதியதில்லை அதனால் கடிதங்களின் சுகமான அனுபவங்களை பற்றி தெரியவில்லை

தொடர்ந்து தங்களது அனுபவங்களை சொல்லுங்கள்

அப்படியா? ஏன் அப்படி? கடித போக்குவரத்தின் சுகங்கள் நீங்க கண்டிப்பா இழந்துட்டீங்க அருண் ..ஆச்சர்யமான விஷயம் உங்களுக்கு யாரும் கடிதமே எழுதவதில்லை என்பது

umakarthick
20-01-2009, 05:19 AM
நீங்க தெரிஞ்சுகிட்டேதான் கேட்கிறீங்களா?

ஏதோ ஒரு பறவையின் உதிர்ந்து போன சிறகுகள்தான், கடிதத்திற்குப் பதிலாக பரிமாற்றத்தில் இருக்கின்றன என்று சொல்லவந்தேன்...


சத்தியாம இல்லை :)

இப்போது புரிந்தது

arun
21-01-2009, 06:00 PM
அப்படியா? ஏன் அப்படி? கடித போக்குவரத்தின் சுகங்கள் நீங்க கண்டிப்பா இழந்துட்டீங்க அருண் ..ஆச்சர்யமான விஷயம் உங்களுக்கு யாரும் கடிதமே எழுதவதில்லை என்பது

கடிதம் எழுதும் அளவுக்கு யாரும் இல்லை என்பதே உண்மை மேலும் நான் படித்தது எல்லாம் வீட்டில் இருந்து தான்

அதனால் தான் அந்த அனுபவம் இல்லை

ஓவியன்
24-01-2009, 10:35 AM
2000 ஆம் ஆண்டில் நான் முதல் முதலாக என் வீட்டினை விட்டு விட்டு மேற்படிப்பு நிமித்தமாக வேறு ஊர் வந்த ஆரம்ப கால கட்டங்களில், ஒவ்வொரு இரவும் விளித்திருந்து அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பல கடிதங்கள் வரைந்ததுண்டு...

அம்மா இப்போதும் சொல்லுவா, தம்பி அந்தக் கடிதங்களை இப்போதும் படிக்கையில் கிடைக்கும் சுகம் எத்தனை மணி நேரம் அலைபேசியில் அலசினாலும் கிடைக்குதில்லையென்று...

உண்மைதான், நாம் நாமாக*
பற்றிப் பிடித்த வசதிகளால்
விட்டுப் போன சுகங்களிலொன்று
இந்தக் கடிதங்கள்...!!

நல்லதோர் பதிவுக்கு மனதார்ந்த பாராட்டுக்கள் கார்த்திக்..!!

Keelai Naadaan
24-01-2009, 03:59 PM
நீங்கள் சொல்வது உண்மை கார்த்திக்.
கடிதங்களை, வாழ்த்து அட்டைகளை பல வருடங்கள் பாதுகாத்து ரசிக்க முடியும்.
செல்போன் வாழ்த்து எல்லாம் ஒரிரு நிமிடங்கள் குரல் கேட்டு ரசிப்பதோடு சரி.

umakarthick
06-02-2009, 09:43 AM
ஆமா நண்பரே

தங்கவேல்
11-02-2009, 02:25 AM
கார்த்திக், இது காலத்தின் கட்டாயம். மாட்டு வண்டியில் பயணிப்பது கூட இன்பமானதாக இருக்கும். ஆனால் இன்று அது சாத்தியப்படுமா? உலகம் வேகத்தை முன்னிறுத்தி வாழ்க்கையை அமைத்துச் செல்கிறது. நாமும் அதனுடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மனித உறவுகள், பாசங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன. அதை வெளிக்காட்டக்கூடிய தருணங்கள் நமக்கு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. அத் தருணங்கள் நமது தேவையென்னும் தேடலிக் மறைந்து போய் விடுகின்றன.