PDA

View Full Version : பட்டம்

ஆதவா
19-01-2009, 09:30 AM
பார்வைக்குச் சிக்காத
தொலைதூரத்தில்
நிரம்பி வழியும் காகிதங்களினூடே
பாதைக்குறுக்கீடுகள்
வலுவற்ற தொடர்புகள்
சுழன்றோடும் இசைவு
என
எத்தனையோ அபாயங்களைத் தாண்டி
என் பட்டம் பறந்துகொண்டிருந்தது

ஒரு புள்ளியாய்
மேகம் தொடும் பறவையாய்
வானில் நெளியும் பாம்பாய்
பின்வாங்கும் மீனாய்
அங்கங்கே கவிதை எழுதிக் கொண்டிருந்தது

அருகருகே தழுவும் பட்டங்களால்
பார்வை படபடக்க
நூல் சுண்டியிழுத்தேன்
மோதலுக்குத் தாளாத காகிதம்
சிறகறுந்த பறவைபோல்
வீழ்ந்துகொண்டிருந்தது

நூலோடு அறுந்த
பட்டத்தின் வலியை
கண்களில் மறைத்தபடி,
அதன் வீழ்ச்சியை
ரசிப்பதா அழுவதா எனத் தெரியாமல்
திக்கற்று நின்றுகொண்டிருந்தேன்

அது இந்நேரம் யாருடைய
காலடியிலோ விழுந்திருக்கக் கூடும்

இப்பொழுது
என்னுடைய அடுத்த குறியெல்லாம்
வேறொரு பட்டம்
செய்வதிலேதான் இருந்தது
அறுந்த பட்டத்தின் மீதல்ல.

சிவா.ஜி
19-01-2009, 02:18 PM
விழுவதும், பின் எழுவதும் வெற்றியாளனின் அடையாளம். அறுந்த பட்டத்தினூடே அதை சொன்னக் கவி வரிகள் பிரமாதம்.

முதல் பத்தியில் வாழ போராடிக்கொண்டிருக்கும் ஆரம்ப நிலையாளனை ஒவ்வொரு வரியும் கண்முன்னே காட்டுகிறது.

போராட்டத்தில் தன்னோடு இணைந்து எத்தனையோ பேர். ஆனால் அவர்களுக்கிடையில், சரியான ஆதரவுமில்லாமல், நல்ல தொடர்புகளும் இல்லாமல், அவ்வப்போது எதிர்ப்படும் எதிர்ப்புகளையும் சமாளித்து, இத்தனை தூரம் வந்ததே ஒரு போராட்டத்தின் வெற்றிதான்.

அறுபட்டு விழுவதையும், சவாலாய் எடுத்துக்கொண்டு, அடுத்த உயரத்துக்கு எட்ட எத்தனிக்கும் வீரனை இந்தக் கவிதையில் காண்கிறேன்.

ஊக்கமளிக்கும் வரிகளுடைய உற்சாகக் கவிதையாகத்தானிதை பார்க்கிறேன். வாழ்த்துகள் ஆதவா.

இளசு
19-01-2009, 05:54 PM
ஆதவா

ராம்பால், நண்பன், பூ போன்றவர்களின் கவிதைகள் படித்து
அக்காலத்தில் நான் நிறை....ய்ய யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்..

அதனால், பின்னூட்டம் இடவும் தா....மதம் ஆகிவிடும்..

அத்தகைய உணர்வுகள் உன் படைப்புகளிலும் ...

இந்தப் பட்டப்பெயர் எத்தனை எத்தனைக்காய் என் மனதில்...

கல்வி
பணி
காதல்
படைப்பு
பாசம்...

இத்தனைக் களங்களில் பயணப்பட்ட நம் இதயத்துணுக்கு ஒவ்வொன்றுமே ஒரு பட்டம்..

நிகழ்தலே முதல் இலக்கு.....
எல்லைகள் பிறகே!

வெற்றிகளால் பட்டங்கள் முடிந்துவிடுவதில்லை!
அறுதல்களால் பட்டமுயற்சி இறுதியாவதுமில்லை!!

பறக்கும்வரை இருப்போம்..
இருக்கும்வரை பறப்போம்!

மனம் நிறைய வாழ்த்துகிறேன் உன்னை....

ஆதவா
20-01-2009, 12:42 AM

பல கவிதைகளுக்கு விமர்சனம் எழுதும்பொழுது நான் யோசித்ததுண்டு. ஏன், கவிதையின் பத்தியை மட்டும் வாசகன் உபயோகித்துக் கொள்ளக் கூடாது என்று.

நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை விட்டுவிடுவதும் நுகர்வோனின் உரிமைதானே. உங்களின் ஒப்பீடு உங்கள் மனத்திலிருந்து வந்தது கண்டு மகிழ்ந்தேன். அதை நான் அறிவேன்.

பல அடுக்குகளில் ஒரு கவிதை பயணிக்கவேண்டும் என்பது ஒவ்வொரு படைப்பாளியின் பேராசை... அது எனக்கும் நிகழவேண்டும்..

நன்றி அண்ணா

ஆதவா
20-01-2009, 12:46 AM
ஆதவா

ராம்பால், நண்பன், பூ போன்றவர்களின் கவிதைகள் படித்து
அக்காலத்தில் நான் நிறை....ய்ய யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்..

அதனால், பின்னூட்டம் இடவும் தா....மதம் ஆகிவிடும்..

அத்தகைய உணர்வுகள் உன் படைப்புகளிலும் ...

இந்தப் பட்டப்பெயர் எத்தனை எத்தனைக்காய் என் மனதில்...

கல்வி
பணி
காதல்
படைப்பு
பாசம்...

இத்தனைக் களங்களில் பயணப்பட்ட நம் இதயத்துணுக்கு ஒவ்வொன்றுமே ஒரு பட்டம்..

நிகழ்தலே முதல் இலக்கு.....
எல்லைகள் பிறகே!

வெற்றிகளால் பட்டங்கள் முடிந்துவிடுவதில்லை!
அறுதல்களால் பட்டமுயற்சி இறுதியாவதுமில்லை!!

பறக்கும்வரை இருப்போம்..
இருக்கும்வரை பறப்போம்!

மனம் நிறைய வாழ்த்துகிறேன் உன்னை....

எப்பொழுதுமே, ஒரு சாதாரண மனிதனை ஒரு நல்ல திறமைமிகுந்தவரோடு ஒப்பிடும்பொழுது எத்தனை சந்தோஷம்!!! அந்த மகிழ்ச்சி எனக்குள்ளும்..

எழுதும்பொழுது இல்லாத நிறைவு,,, உங்கள் பின்னூட்டத்தில் நிறைந்து நிற்கிறது. அதிலும், அந்த களங்கள்...

எனது வளர்ச்சியில் உங்களைப் போன்றோரின் பங்கும் உண்டு என்பது இன்றுவரையிலும் நிகழ்கிறது....

மிக்க நன்றி அண்ணா

சசிதரன்
20-01-2009, 03:21 AM
மிக அருமையான வரிகள் நண்பா... நான் இந்த மன்றம் வந்த பின் காணும் உன் முதல் கவிதை நண்பா. மிக நன்று... :)

நாகரா
20-01-2009, 04:24 AM
மரணம் அறுத்துப் போடும்
மனிதப் பட்டம் நான்
அறுபடாது மேலேறும்
அமரப் பட்டமாகும்
அதிசயப் பரிமாற்றம் ஒன்றே
என் அடுத்த குறியாய்
கவனம் சிதறாமல்
ஏறுகிறேன்!

வீழ்ச்சியிலும்
எழுச்சியில் குறியாய் இருக்கும்
உம் கண்ணோட்டம் சொல்லும்
பட்டம் அருமை

வாழ்த்துக்கள் ஆதவரே!

ஆதவா
20-01-2009, 05:19 AM
மிக அருமையான வரிகள் நண்பா... நான் இந்த மன்றம் வந்த பின் காணும் உன் முதல் கவிதை நண்பா. மிக நன்று... :)

மரணம் அறுத்துப் போடும்
மனிதப் பட்டம் நான்
அறுபடாது மேலேறும்
அமரப் பட்டமாகும்
அதிசயப் பரிமாற்றம் ஒன்றே
என் அடுத்த குறியாய்
கவனம் சிதறாமல்
ஏறுகிறேன்!

வீழ்ச்சியிலும்
எழுச்சியில் குறியாய் இருக்கும்
உம் கண்ணோட்டம் சொல்லும்
பட்டம் அருமை

வாழ்த்துக்கள் ஆதவரே!

இருவருக்கும்ம் என் மனம்நெகிழ்ந்த நன்றிகள்....

umakarthick
20-01-2009, 05:41 AM
பெசண்ட் நகரில் பட்டங்களை பார்க்கும் போது எனக்கு இந்த மாதிரி தான் தோணும்..எல்லாரும் போய் விட்ட இரவிலும் இந்த பட்டங்கள் தனியே பறந்து கொண்டிருக்கும்

அருமையா கரு ..நச் வரிகள்

அக்னி
20-01-2009, 11:54 AM
பெரும்பாலான கவிதைகள் ஓர் தலைப்பிற்குட்தான் அடங்கும்.
ஆனால், இந்தக் கவிதைக்குள்ளோ பல தலைப்புக்கள்...
பாராட்டுக்கள் ஆதவா...

என்னையும் பட்டத்தையும்
இணைத்து வைத்திருப்பது
ஓர் மெல்லிய நூல்...

நூலின் நீட்சியும் வன்மையும்
எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
எப்போதும் நினைவிலிருக்க வேண்டும்.
மறந்துவிட்டாலோ,
தொலைத்துவிட வேண்டியதுதான்.

அறுந்த பின்னர் தவிப்பதை விடுத்து,
அறும் நிலையறிந்து தவிர்த்திட வேண்டும்.

தருணம் பார்த்துத் தாழ்ந்து போவது,
வீழ்ச்சியல்ல.
தருணம் பாராது உயர்ந்தே போவது,
எழுச்சியுமல்ல.

தருணமறிந்து செயற்பட்டாலே,
நாமும் பட்டமும் இணைந்தே இருக்கலாம்.
என்றும் மகிழ்ந்தே இருக்கலாம்.

பன்முகம் காட்டும் கவிதைக்கு, மீண்டும் பாராட்டுக்கள் ஆதவா...
சிவா.ஜி, இளசு, நாகரா அண்ணல்களின் பின்னூட்டங்கள் அதிசிறப்பு...

ஆதவா
20-01-2009, 12:46 PM
மிக்க நன்றி உமாகார்த்திக்,,

டிசம்பர் பாதியிலிருந்து, ஜனவரி மாதங்கள் எல்லாம் எங்கள் வீதியெல்லாம் பட்டங்களால் நிரம்பி வழியும்.

மின்சாரக்கம்பிகளில் அறுந்து நாக்கு தொங்கியவாறு சிக்கியிருக்கும் பட்டங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் சிறுவர்களின் கண்களில் தேங்கியிருக்கும் வலியை நேரில் கண்டிருக்கிறேன்..

எனது நான்கு பட்டங்கள், என்னைவிட்டு நழுவும் பொழுது ஏற்பட்ட வெறுமைகூட இன்னும் மறையவில்லை...

---------------------------------------------

நன்றி அக்னி..

உண்மையைச் சொல்லப்போனால், பன்முகத்தன்மையைப் பற்றி இக்கவிதை எழுதும் பொழுது யோசிக்கவேயில்லை.. கவிஞருக்கே தெரியாத கருவைச் சொல்லும் பாங்குதானே தமிழ்மன்றத்தின் சிறப்பு!!

உங்கள் பின்னூட்டம் மனமகிழ்ச்சியைத் தருகிறது.......

ஓவியன்
21-01-2009, 05:40 AM
வீழ்ந்த பட்டங்கள்தான்
இனி வீழாதிருக்கும்
பட்டங்களைத் தீர்மானிக்கின்றன..

இது வாழ்வியலின் பல்வேறு
பரிணாமங்களுக்கும்
கன கச்சிதப் பொருத்தம்...

இன்றைய எழுச்சிகளின்
முதல் படி
நேற்றைய வீழ்ச்சிகள்தானே...

அழகான பின்னூட்டங்கள் கிடைத்திட்டால்
அது ஒரு அற்புதமான கவிதை ஆதவா,
இங்கே சிந்தியிருப்பவை அனைத்தும்
அழகான, அற்புதப் பின்னூட்டங்கள் ஆதவா..!!

ஆதவா
21-01-2009, 07:13 AM
மிக்க நன்றி ஓவியன்..

இன்றைய எழுச்சிகளின்
முதல் படி
நேற்றைய வீழ்ச்சிகள்தானே...

உண்மைதான் ஓவியன்.. இவையிரண்டும் மாறி மாறி இருப்பதுதான் நல்லது...

அமரன்
21-01-2009, 07:28 PM
இலக்கை இயம்புவது இலக்கியம் (நன்றி:சொல்லின் செல்வர்). இலக்கணத்துடன் இலக்கை இயம்பிய காலம் போய் எந்த வித இலக்கணம் இல்லாமல் இலக்கை இயம்பும் காலம் மலர்ந்து அதுவே இலக்கணமாகி இப்போது பல்முனை இலக்கைக் கொண்ட படைப்புகள் வந்து நிற்பதாகக் கொண்டாலும் பிரம்மனின் பார்வை ஒன்றுதான்.

அப்பார்வையைப் பார்ப்பவர் பார்வையில் அர்த்தம் வேறுபடுகிறது. ஆனாலும் வேர் வேறுபடுவதில்லை. அந்த வேரை அனைவரும் சரியாகப் பிடித்து கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மிகச்சரியாக நாடி பிடித்து கவிதையப் படித்தவர் யாரென்பது கவிஞருக்கே வெளிச்சம். இவ்வகை கவிதைகளை கவிஞர் படிக்கும் தட்டில் நின்று படிக்க ஏதுவாக வார்த்தைப் பிணைப்புகளில் வாக்கிய ஒழுங்குகளில் எதையாவது ஒளித்து வைத்திருப்பார்கள். அத்தைகைய ஒளிவெதுவும் எனக்கு எத்துப்படவில்லை.

வாலிடம் கொஞ்சம் தலையிடம் கொஞ்சமாக கடிவாளம். பக்கத்துப் பட்டங்களின் கொஞ்சல். உயரக் காரணாமாக இருந்த காற்று. உருவான பொருட்களின் வலிமை. இயற்கை.. இப்படி பறக்கும் பட்டம் எத்தனை தளைகளுடன்.. ஆனாலும் அத்தியாவசியமான தளைகளுடன். இந்தக்கடிவாளங்களின் அதீத கவனமே பட்டத்தை சாகடிக்கும் நூதனமும் நிகழும் சாத்தியம் உண்டு. ஆதவாவின் கவிதையில் அது உண்டு என்று எண்ணத் தோன்றுகிறது.

தழுவும் பக்கத்துப் பட்டம் - துரோகம்.
அதைப்பார்த்து நூல்சுண்டி இழுக்கும் கரங்கள் - கவனம்
சுண்டி இழுப்பில் பட்டம் கீழிறங்க பதைக்கும் காற்று உதைத்து பட்டத்தை நிமிர்த்த நினைப்பது - அக்கறை..
இப்படிப் பல்வகை முட்டுக்கட்டைகளை காட்டுவதில் பிரமிப்பை தரத்துவங்கும் கவிதை பிரமிட் போலவே கவர்கிறது.

சாகும் போதும் அனுபவம் தந்து மறைந்த பட்டத்தை மறக்காமல் கவியாக்கியதில் புரிகிறது இன்னும் பல பட்டங்கள் வானில் பறந்து ஆனந்திக்க வைக்கப்போகிறது.

அதுல சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கு. சூப்பர் ஸ்டாருக்கு..
பாராட்டுகள் அனைவருக்கும்.

செல்வா
21-01-2009, 09:28 PM
அடுத்தப் பட்டம் செய்வதில் குறியாயிருக்கும் நீங்கள்....
அறுந்த பட்டத்தைப் பற்றிய கவிதை எழுதியது ஏனோ?
அறுந்த பட்டத்தை விடுத்து அடுத்த பட்டத்தில் கவனமிருப்பதாகத் தெரியவில்லையே..

நான் பட்டத்தை தாங்க சொல்றேன்.... :D

ஆதவா
22-01-2009, 01:10 AM
அமரன்.. உங்களது பின்னூட்டத்தைப் பெருமையாக நினைக்கிறேன். சாதாரண இக்கவிதைக்கு பெரும்பலத்துடன் பின்னூட்டமிட்ட சிவா அண்ணா முதல் நீங்கள் வரை இம்மன்றத்தில் நான் பெற்ற செல்வங்கள்...

வேரும் வேறுபட எழுதுபவர் நம் தாமரை அண்ணா.. அது படிப்பவர்களுக்கு முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தைத் தரக்கூடியது அல்லவா!!! அப்படிப்பட்ட கவிதைகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.. நல்லவேளையாக... இங்கே எந்த வாக்கியங்களிலும் எதையும் ஒளித்து வைக்கவில்லை.... :D :D

அறுந்த வலி என்பது, பட்டத்தை இழைத்து செய்து பறக்க விட்டவனுக்குத் தெரியும்... அது ஒரு சிறு வலிதான்... ஆனால் அடுத்த பட்டட்திற்கு ஆயத்தம் ஆகாவிடில், உயரப்பறக்க முடியாதல்லவா????

நன்றி அமரன்....

ஆதவா
22-01-2009, 01:17 AM
அடுத்தப் பட்டம் செய்வதில் குறியாயிருக்கும் நீங்கள்....
அறுந்த பட்டத்தைப் பற்றிய கவிதை எழுதியது ஏனோ?
அறுந்த பட்டத்தை விடுத்து அடுத்த பட்டத்தில் கவனமிருப்பதாகத் தெரியவில்லையே..

நான் பட்டத்தை தாங்க சொல்றேன்.... :D

இது பட்டம் பற்றிய கவிதை.... அது அறுந்தோ அறுபடாமலோ இருப்பது பட்டம் விடுபவன் சாமர்த்தியம்... :)

ஆமா.... நீங்க வேற ஏதும் குறிவெச்சு சொல்லலியே??? (எதுக்கும் ஜாக்கிரதையா இருப்போம்.)

நன்றி செல்வா..

அமரன்
22-01-2009, 09:44 AM
அறுந்த வலி என்பது, பட்டத்தை இழைத்து செய்து பறக்க விட்டவனுக்குத் தெரியும்... அது ஒரு சிறு வலிதான்... ஆனால் அடுத்த பட்டட்திற்கு ஆயத்தம் ஆகாவிடில், உயரப்பறக்க முடியாதல்லவா????

நன்றி அமரன்....
அதே அதே ஆத*வா....

அடுத்தப் பட்டம் செய்வதில் குறியாயிருக்கும் நீங்கள்....
அறுந்த பட்டத்தைப் பற்றிய கவிதை எழுதியது ஏனோ?
அறுந்த பட்டத்தை விடுத்து அடுத்த பட்டத்தில் கவனமிருப்பதாகத் தெரியவில்லையே..

நான் பட்டத்தை தாங்க சொல்றேன்.... :D

அறுந்தாலும் பட்டம் அனுபவத்தை தராமல் அறவில்லையே செல்வா.

செல்வா
22-01-2009, 12:38 PM
அறுந்தாலும் பட்டம் அனுபவத்தை தராமல் அறவில்லையே செல்வா.

அறுந்த பட்டம் - தானாகவே அறுபட்டும் போகலாம்
அறுத்த பட்டம் - நீ அறுத்திருக்கலாம், பிறர் அறுத்திருக்கலாம், சமயங்களில் பட்டம் உன்னைக் கூட அறுக்கலாம்.

சரி எதுவாக இருந்தாலும் அறுதல் அனுபவம் தான் அதற்கு ஆறுதலும் தேவைதான் (அடுத்தப் பட்டம் கொடுப்பது) கழுத்து அறுபடாதவரை :D:D.
:eek::eek::eek:

செல்வா
22-01-2009, 12:40 PM
ஆமா.... நீங்க வேற ஏதும் குறிவெச்சு சொல்லலியே???

குறி வச்சு அறுக்கிற அளவுக்கு உசரத்தில பறக்கலீங்க..... கையாலே அறுக்கிற உசரம்தான்.... :):)
இப்பவும் நான் பட்டத்தை தாங்க சொல்றேன் :icon_ush:

அமரன்
22-01-2009, 08:36 PM
அறுந்த பட்டம் - தானாகவே அறுபட்டும் போகலாம்
அறுத்த பட்டம் - நீ அறுத்திருக்கலாம், பிறர் அறுத்திருக்கலாம், சமயங்களில் பட்டம் உன்னைக் கூட அறுக்கலாம்.

சரி எதுவாக இருந்தாலும் அறுதல் அனுபவம் தான் அதற்கு ஆறுதலும் தேவைதான் (அடுத்தப் பட்டம் கொடுப்பது) கழுத்து அறுபடாதவரை :D:D.
:eek::eek::eek:

கல்லுக்கு நாம அடித்து விட்டு கல்லு அடித்து விட்டது என்று சொல்றோம். கால நாம் உடைத்து விட்டு காலுடைந்து விட்டது என்கிறோம். பட்டத்தை எது கிழித்தாலும் பட்டம் கிழித்து விட்டது என்றும் சொல்கிறோம். இயல்பான வார்தையாடல் கவிதைக்கு சிறப்புத்தானே செல்வா.