PDA

View Full Version : எமக்கான மழை



ப்ரியன்
19-01-2009, 08:22 AM
எமக்கான மழை
--------------
நிகழப் போகிறது
மழை!
பிள்ளை வரைந்த
எளிய கோடாய்!

மின்னல்
இடியோடு
எம் மண்ணின்
வாசம் கொணரக்கூடும்
அது எம் நினைவாக!

யாரும் மழை வேண்டாவென
வேண்டி
கெடுத்திட வேண்டாம்!

எமக்காக அழ
யாருமற்ற இந்நிலத்தில்
எம்மோடு
அழுது அரற்றி
அரூபம் கொள்ளும்
அதில் கரையலாம்
கண்ணீர் துளிகள்
சில!

நின்று
நிகழட்டும் மழை!

- ப்ரியன்.
நன்றி : 'தை' கவிதையிதழ் - 2009

ஆதவா
20-01-2009, 06:54 AM
நல்ல வரிகள் ப்ரியன்.

இதை நீங்கள் ஈழமக்களுக்கென எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நிரம்ப வித்தியாசமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

ஓவியன்
21-01-2009, 06:18 AM
கைகளை விரித்து
ஏதிலிகளாக இரஞ்சுகையில்
எம்மைக் கட்டியணைத்து
கதை சொல்கிறது மழை..

அது கொண்டு வந்த
நீர்த் துளிகளில் நம்
உறவுகளின் கண்ணீரும்
செந்நீரும் கலந்தேயிருக்கும்...

அதன் உணர்வுகளும்,
உரமும், தேவைகளும்
நாமறிவோமென, மீளப் போய்
உரக்க சொல்லும் இந்த மழை...

இக்கட்டில் விட்டு வந்தது
உமை மட்டுமில்லை,
இந்த வக்கற்றவர்களின்
உள்ளங்களையும்தானென
எடுத்துச் சொல்லும் இந்த மழை...

நம் பயணங்களில் தெம்பூட்டி
வலுவூட்டவாவெனும்,
நின்று
நிகழட்டும் மழை..!!

ஓவியன்
21-01-2009, 07:14 AM
அழகான வரிகள் ப்ரியன்,
சில நாட்களாகத்
தொடர்ச்சியான மழை இங்கே...

அந்த மழை, இப்போது
என் உள்ளத்திலும்-காரணம்
உங்கள் கவி மழை,
மனதார்ந்த வாழ்த்துக்கள் ப்ரியன்..!!

ப்ரியன்
21-01-2009, 02:03 PM
நல்ல வரிகள் ப்ரியன்.

இதை நீங்கள் ஈழமக்களுக்கென எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நிரம்ப வித்தியாசமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி ஆதவா.ஆமாம் , ஈழ மக்களின் வலிகளை உணர்த்த வெளிவந்த 'தை' கவிதையிதழுக்காக எழுதப்பட்ட கவிதைதான் இது

kulirthazhal
21-01-2009, 02:19 PM
சிறந்த வரிவடிவம்.
வாசிக்க எளிமை, சிறப்பு.

தூறலில் தோய்ந்து சோகங்கள் கரையட்டும், அடுத்த மழை மகிழ்ச்சியை தூவும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்...

ப்ரியன்
21-01-2009, 02:29 PM
அழகான வரிகள் ப்ரியன்,
சில நாட்களாகத்
தொடர்ச்சியான மழை இங்கே...

அந்த மழை, இப்போது
என் உள்ளத்திலும்-காரணம்
உங்கள் கவி மழை,
மனதார்ந்த வாழ்த்துக்கள் ப்ரியன்..!!

நன்றி ஓவியன்

அக்னி
25-01-2009, 11:03 AM
துன்பச் சகதி,
கழுவப் பொழியட்டும்,
மழை...

பாராட்டுகள் ப்ரியன் அவர்களே...
கவிதையை வாசிக்கும் போது, மன வெம்மை குளிர்வடைகின்றது.