PDA

View Full Version : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு -2009



arun
18-01-2009, 07:46 PM
இலங்கை செல்ல இருக்கும் இந்திய அணியை அறிவித்துள்ளார்கள்

இலங்கை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:

ஷேவக், காம்பீர், சச்சின், டோணி (கேப்டன்), யுவராஜ், ரோகித் சர்மா, யூசுப் பதான், ஜாகிர், இஷாந்த் சர்மா, ஓஜா, முனாப் படேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீண் குமார்.

இலங்கையில் 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 20 போட்டியில் இந்திய அணி ஆட உள்ளது

தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீ காந்த் ஆனால் ஒரு தமிழரின் பெயர் கூட இல்லை
போட்டிக்கான அட்டவணை

January 28 1st ODI - Sri Lanka v India
Rangiri Dambulla International Stadium

jan 30 2nd ODI - Sri Lanka v India
Rangiri Dambulla International Stadium

February 2 3rd ODI - Sri Lanka v India
R Premadasa Stadium, Colombo

february 5 4th ODI - Sri Lanka v India
R Premadasa Stadium, Colombo

February 8 5th ODI - Sri Lanka v India
Sinhalese Sports Club Ground, Colombo

February 10 Twenty20 International - Sri Lanka v India
R Premadasa Stadium, Colombo

aren
19-01-2009, 12:38 AM
இந்த அணியிலும் ஒரு தமிழர்கூட இல்லை. நம் தமிழர்கள் இன்னும் சிறப்பாக ஆடவேண்டுமா? எத்தனை சதம் அடித்தாலும் பத்ரிநாத்தை இப்படி நட்டாற்றில் விட்டு விடுகிறார்களே.

மெண்டிஸை எப்படி நம் வீரர்கள் சமாளிக்கப்போகிறார்கள். முரளி பிரச்சனை வேறி தனியே இருக்கிறது.

இந்திய அணி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

arun
20-01-2009, 05:43 PM
மற்றவர்கள் எல்லாம் அப்படி என்ன தான் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று தெரியவில்லை

அறிஞர்
21-01-2009, 01:06 PM
இலங்கை சுழல் இந்தியாவுக்கு பெரிய சவால் தான்... முதலையை தண்ணீரில் சந்திக்க போகிறார்கள்.

யூசுப் பதான் எப்படி விளையாட போகிறார் என பார்க்கவேண்டும்.

ஓவியன்
22-01-2009, 04:35 AM
இலங்கை அணி தொடர் போட்டிகளால் களைப்படைந்து இருக்கலாம், அவர்களின் துடுப்பாட்ட வீரர்கள் பலர் ஃபோர்மில் இல்லை, திலகரட்ண டில்ஷான் மாத்திரமே தொடர்ந்தும் ஃபோர்மில் இருக்கிறார். அதனாலேயே இப்போது அவரை ஜெயசூர்யாவுடன் இணைந்து ஆரம்ப ஆட்டக் காரராகக் களமிறக்குகிறார்கள்...

அதனால் பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணி முரளி மற்றும் மெண்டிஸ் பந்துவீச்சை கொஞ்சம் நிதானத்துடன் எதிர்கொண்டால் பெரிய ஓட்ட இலக்குகளை இலங்கைக்கு நிர்ணயித்து இலங்கை அணியை இலகுவில் வெற்றி கொள்ள முடியுமென நினைக்கிறேன்..