PDA

View Full Version : கதைகள் உருவான கதைரங்கராஜன்
18-01-2009, 09:52 AM
வணக்கம் நண்பர்களே
நம் மன்றத்தில் என்னுடைய மன்ற அக்கவுண்டு பக்கம் சும்மா போனேன், இதுவரை எத்தனை கதைகள் நான் எழுதி இருக்கிறேன் என்று சும்மா பாக்கப்போனேன், அப்படி இப்படி என்று 25 கதையை எழுதி ஒப்பேத்தி விட்டேன். நான் பகிர்ந்து கொள்ள வந்த விஷயம் இதுவல்ல,

நான் மற்றவருடைய சிறுகதைகளை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றும் முதல் சிந்தனை இந்த கருவை எப்படி யோசித்து இருப்பார்கள், இந்த கரு உதிக்க காரணமாக இருந்த நிகழ்ச்சி எதுவாக இருக்கும்? எப்பது தான்.

எப்பொழுதுமே ஒரு சிறுகதையோ, கவிதையோ, திரைப்படமோ அல்லது நாவலோ எதுவாக இருந்தாலும், இவை அனைத்து அந்த படைப்பாளியின் மூளையில் ஒரு சின்ன பொறியாக தான் உதிக்கும். ஆனால் அவை டேவலப் ஆனப்பின் தான் முழு வடிவம் பெரும். அப்படி பெற்றவுடன் அதற்கு காரணமான அந்த சின்ன பொறியை நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

நான் எழுதிய கதைகளின் கருக்களும் அப்படி தான் உதித்தவை அவைகளை இங்கு நான் பகிர்ந்துக் கொள்ள உள்ளேன். அதே போல நம் மன்றத்தில் அருமையான எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் பல இருக்கின்றன, அவைகள் சம்பந்தப்பட்டவர்களின் மூளையில் எப்படி உதித்தது என்ற கதையை இந்த திரியில் பகிர்ந்தால் சுவையாகவும், அதேப்போல கதைகள் எப்படி வடிவம் பெறுகிறது என்ற ஒரு பாடமாகவும் இருக்கும். அதனால் நண்பர்களே உங்களின் கதைகள் உருவான கதையை சொல்லுங்கள்.

நன்றி

முயற்சியின் முதல்படியாக நானே என்னுடைய ஒரு கதையின் கதையை துவங்குகிறேன்.

அன்புரசிகன்
18-01-2009, 10:01 AM
ஒரு படம் பார்ப்பதிலும் அவை உருவான விதம் பார்ப்பதில் உள்ள சுவையே தனி... ஜக்கிசான் படத்தின் இறுதியில் அவற்றை காட்டுவார்கள். (அது தவறுகள் பற்றி)

சிவாஜி உருவான விதம் என்று ஒரு ஒளித்தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். அந்த அனுபவத்தினை தரப்போகிறது உங்கள் பகிர்வு. பகிருங்கள். வேடிக்கை பார்க்க நான் ரெடி.............. :D

ரங்கராஜன்
18-01-2009, 10:29 AM
தீயில் ஒரு பனித்துளி

எப்பொழுதும் நான் கதைகளை எழுதுவதற்கு முன்பு முதலில் யோசித்துக் கொள்வது, என்ன கதையில் சொல்லப் போறோம், அப்புறம் அதில் வரும் கதாபாத்திரங்கள்.
ஆனால் இந்த கதை எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காரணம் இதில் நான் முதலில் யோசித்து வைத்தது இதில் வரும் முடிவு.

அதற்க்கு காரணம் இந்த கதையின் கருவை நான் யோசிக்க துவங்கியதே அந்த முடிவில் இருந்து தான்

“தந்தையும் மகனும் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நடந்தனர்”.

நான் வசிப்பது அடுக்கு மாடி குடியிருப்பில், அப்பொழுது இரவு நேரங்களில் சில சமயம் வாக்கிங் போவதுண்டு. ஒரு நாள் அந்த மாதிரி போகும் பொழுது நான் ஒரு காட்சியை பார்த்தேன். ஒரு வயதானவர் (வயது 65) ஸ்டையில கண்ணாடி போட்டுக் கொண்டு, அவரின் தோள் மீது கையைப் போட்ட படி ஒரு வாலிபன் (வயது 27) இருவரும் நடந்து சென்றனர். நான் அதை பார்த்தவுடன் ”என்ன தான் அப்பாவை நண்பனாக நினைத்தாலும், நடுதெருவில் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு போவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்” என்று நினைத்தேன். அதில் மகன் அடிக்கடி அப்பாவின் காதில் எதோ சொல்லிக் கொண்டே சென்றான். சிறிது தூரம் போனவர்கள் நின்றார்கள், பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை மகன் எடுத்து அப்பாவின் வாயில் வைத்து பற்ற வைத்தான், அவனும் அதேப் போல ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான். இருவரும் எதோ சிரித்துக் கொண்டார்கள். வந்த வேலை முடித்தவுடன் மறுபடியும் தோள் மீது கையை போட்டபடி மகன் அழைத்து வந்தான். நான் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். என்னை கடந்து போகும் பொழுது அந்த மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா கீழே ஒரு கல் இருக்கு பார்த்து வாங்க”

அப்போ தோன்றியது தான் இந்த கதை, இந்த கதையின் போக்கு வேறு மாதிரியாக சென்றாலும், இந்த முடிவை வைக்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18077

இனி நம் உறவுகள் தொடரலாம்.

சிவா.ஜி
18-01-2009, 02:21 PM
தக்ஸின் மனதில் உதித்த புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள். கதை உருவான கதையை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவலாகவே இருக்கும். உங்கள் தீயில் ஒரு பனித்துளி உருவான கதையைப் படித்து நீங்கள் சுற்றியுள்ளோரை எத்தனை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

இது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிக அவசியமான ஒன்று. தொடருங்கள் தக்ஸ். நானும் கலந்துகொள்கிறேன்.

Keelai Naadaan
18-01-2009, 02:38 PM
25 கதைகளா..? வாழ்த்துக்கள் மூர்த்தி.

தங்கள் கதை புனையும் திறனையும் கடின உழைப்பையும் எண்ணி வியக்கிறேன்.

இந்த கதைகள் எல்லாமே ஏற்கனவே யோசித்து தயாரித்திருந்த கதைகளா? அல்லது சமீபத்தில்தான் யோசித்து எழுதினீர்களா?

அநேகமாய் நம் மன்றத்தில் மிக குறைந்த கால கட்டத்துக்குள் அதிகமான கதைகளை பதித்தவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.:icon_b:

ரங்கராஜன்
18-01-2009, 03:30 PM
தக்ஸின் மனதில் உதித்த புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள். கதை உருவான கதையை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவலாகவே இருக்கும். உங்கள் தீயில் ஒரு பனித்துளி உருவான கதையைப் படித்து நீங்கள் சுற்றியுள்ளோரை எத்தனை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

இது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிக அவசியமான ஒன்று. தொடருங்கள் தக்ஸ். நானும் கலந்துகொள்கிறேன்.

நன்றி சிவாஜி அண்ணா
நானும் உங்களின் கதைகளின் கதையை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

ரங்கராஜன்
18-01-2009, 03:41 PM
25 கதைகளா..? வாழ்த்துக்கள் மூர்த்தி.

தங்கள் கதை புனையும் திறனையும் கடின உழைப்பையும் எண்ணி வியக்கிறேன்.

இந்த கதைகள் எல்லாமே ஏற்கனவே யோசித்து தயாரித்திருந்த கதைகளா? அல்லது சமீபத்தில்தான் யோசித்து எழுதினீர்களா?

அநேகமாய் நம் மன்றத்தில் மிக குறைந்த கால கட்டத்துக்குள் அதிகமான கதைகளை பதித்தவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.:icon_b:

நன்றி கீழை
நான் கதை எழுத ஆரம்பித்ததே மன்றம் சேர்ந்த பின் தான், அதாவது oct 22 / 2008. எழுதிய அத்தனை கதைகளும் இங்கு வந்து தான் எழுதினேன். நான் என்றும் கதை எழுத வேண்டும் என்று உக்கார்ந்தது இல்லை, அப்படி உக்கார்ந்தால் ஒரு வார்த்தை கூட எனக்கு வராது. ஆனால் மனதை பாதித்த ஒரு காட்சி, (அல்லது) செய்தி (அல்லது) நிகழ்ச்சி நடந்த அடுத்த வினாடி கதை தயாராகி விடும். அநேகமாக மன்ற படைப்பாளிகள் அனைவருக்கும் இந்த நிலை தான் என்று நினைகிறேன். எந்த படைப்பையும் நாம் படைப்பது கிடையாது, அவை தான் நம்மை படைக்க வைக்கின்றன.

நன்றி.

ரங்கராஜன்
18-01-2009, 04:12 PM
விதைகள்

என்னுடைய சமீபத்திய சிறுகதை இது. இந்த கதையின் கரு எனக்கு கிடைத்த கதை இது.

ஒரு நாள் பத்திரிக்கையை பார்த்துக் கொண்டு இருந்தேன், அதில் இஸ்ரேலில் மனித வெடிகுண்டால் பலர் காயம் அடைந்தார்கள் என்று போட்டு இருந்தார்கள். எனக்கு பல நாட்களாக இந்த மனித வெடிகுண்டு நபர்களை பற்றி பல சிந்தனைகள் இருந்தது. மனிதர்களுக்கு அவர்கள் மரணம் எப்பொழுது என்று தெரியாததினால் தான் வாழ்க்கை சந்தோஷமாக போகிறது, ஆனால் மனித வெடிகுண்டாக மாறுபவர்கள் மட்டும் விதி விலக்கு, அவர்களின் சாவை அவர்களே தீர்மானிக்கீறார்கள் (கடவுளைப் போல). அவர்களின் மனதில் கடைசி நிமிடத்தில் என்ன எண்ணங்கள் ஓடும், யாரைப்பற்றி ஓடும், குடும்பமா? குழந்தைகளா?, இயக்கமா? நாடா? எது?. புரியாத புதிராக இருக்கிறது. அப்படி குழம்பி நான் யூ டியுபில் (youtube) மனித வெடி குண்டுகளின் வீடியோகளை பார்த்துக் கொண்டு இருந்தேன், அவர்களின் கடைசி நிமிட முகபாவம் என்ன என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு வீடியோ சிக்கியது.

ஒரு பெண் அதாவது 15 வயது இருக்கும், அவள் ஒரு மனித வெடிகுண்டு உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் வந்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றி விட்டாள், சாக பிடிக்கவில்லையா?, அல்லது உயிர்களை கொல்லவதை பாவம் என்று நினைத்தாளோ. ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டாள். அந்த காட்சி தான் இருந்தது. எனக்கு அதை பார்த்ததும் அன்பே சிவம் படத்தின் கடைசி காட்சியில் கமல்ஹாசன் பேசிய வசனம் தான் ஞாபகம் வந்தது.

“ஒருத்தனை கொல்ல வந்துட்டு, அப்புறம் முடிவை மாத்திகிட்டு மன்னிப்பு கேட்கற மனசு இருக்கே அது தான் கடவுள்”

அப்படி தான் இருந்தது அந்த பெண்ணின் நடவடிக்கை, அவளை ஏமாற்றி வெடிகுண்டு கட்டினார்களா? என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அந்த பெண் நினைத்து இருந்தால் அன்று பல உயிர்கள் போய் இருக்கும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19025

ஆக அந்த காட்சி தான் விதைகள் கதையின் கரு, கதைக்கு தகுந்தார் போல மாற்றி அமைத்து இருந்தேன்.
அந்த வீடியோ
http://in.youtube.com/watch?v=_Fw1x1p_kfM

ஆதவா
19-01-2009, 03:30 AM
ஒருவேளை நீ இருந்திருந்தா, அவ பண்ணியிருப்பா..... தற்கொலை... :D

ரங்கராஜன்
19-01-2009, 03:41 AM
ஒருவேளை நீ இருந்திருந்தா, அவ பண்ணியிருப்பா..... தற்கொலை... :D

புரியவில்லை

ஆதவா
19-01-2009, 04:06 AM
புரியவில்லை

ஒருவேளை நீ இஸ்ரேல்ல இருந்திருந்தா, உன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் தற்கொலையே செய்திருப்பா.... அப்படின்னு சொல்லவந்தேன்...

இப்பவாச்சும் புரிஞ்சதா?

ரங்கராஜன்
19-01-2009, 05:15 AM
ஒருவேளை நீ இஸ்ரேல்ல இருந்திருந்தா, உன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் தற்கொலையே செய்திருப்பா.... அப்படின்னு சொல்லவந்தேன்...

இப்பவாச்சும் புரிஞ்சதா?

புரிஞ்சிதுங்க அரவிந்தசாமி

umakarthick
19-01-2009, 06:18 AM
25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா?? :)

நல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க ?

ரங்கராஜன்
19-01-2009, 07:06 AM
25 கதைகளா தொடர்கதையா இல்லை சிறுகதைகளா இல்லை சற்றே பெரிய சிறுகதைகளா?? :)

நல்ல திரி நீங்கள் சொன்னது போல ஏதாவது ஒரு சின்ன விஷயம் ,காட்சி,படித்த துணுக்கு ஒரு சிறுகதைக்கு காரணமாயிருக்கும் என்னை கேட்டால் கற்பனை கதைகளை விட இந்த மாதிரி எழுத படும் கதைகள் சிறப்பாக இருக்கும் என்ன சொல்றீங்க ?

நன்றி கார்த்திக்
எல்லாமே சிறுகதைகள் தான், நீங்கள் கூறுவது போல 100% கற்பனை கதைகளையும் எழுத முடியாது ,அதே போல 100 % உண்மை கதைகளையும் எழுத முடியாது. கொஞ்சம் கலவையுடன் தான் எழுத முடியும், அந்த கலவையின் விழுக்காடு (%) தான் கதையின் வெற்றியை தீர்மானிக்கின்றன. நன்றி

ரங்கராஜன்
22-01-2009, 03:14 AM
சக்களத்தி

இந்த கதை எழுத காரணமாக இருந்தது அந்த கதையின் நாயகியே தான். எனக்கு தெரிந்த ஒரு அக்கா அவள், ஏழை அக்கா. எங்க ஊரில் தான் இருக்காங்க (தெரிந்த குடும்ப). அவங்க கதை தான் இது. ஒரு முறை அவங்களை நான் கடற்கரையில் பார்த்தேன் வேறு ஆளுடன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, காரணம் கதையில் வருவது போல ஒரு பணக்கார முதியவருக்கு கட்டாய திருமணம் முடிக்கப்பட்டவள் அவள். என்னை பார்த்தவுடன் அவளுக்கு இன்னும் அதிர்ச்சி, இருவரும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன், சிறிது நேரம் நான் கடல் அலைகளை பார்த்த படி அமர்ந்து இருந்தேன். அந்த அக்கா என்னை நோக்கி வந்தாள், நான் அவளை பார்த்து சிநேகமாக புன்னகித்தேன், அதை எதிர்பார்க்காத அவள், என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். இருவரும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தோம். (நான் தனியாக தான் கடற்கரை சென்று இருந்தேன், நான் எங்கு போனாலும் தனியாக தான் போவேன் கூட்டத்துடன் சென்றாலே எனக்கு அலர்ஜீ). கொஞ்ச நேரம்
பிறகு அவளே பேச ஆரம்பித்தாள். (எங்களுக்குள் 100% உண்மையாக நடந்த உரையாடல் இது, என்னால் மறக்கவே முடியாது)

“தச்சன் (என் பெயரை அப்படி தான் அழைப்பாள்), அது யாரு கேட்கவே இல்லையே”

“(நான் சிரித்துக் கொண்டு) ஃப்ரண்டு-னு சொல்வீங்க”

“அவள் இல்லை அவர் என்னுடைய காதலர்”

“..........”

“நாங்க எப்பவுமே இங்க தான் வாரத்தில் ஒரு நாள் சந்திப்போம்”

“.........”

“இதை எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க”

“நீ போய் என்ன நடந்தது-னு உங்க வீட்டுல சரியா சொல்லனும் இல்ல”

“எனக்கு வேறு வேலை இல்லையா”

“..........”

சிறிது நேரம் கழித்து அவளே “எனக்கு அந்த ஆளுடன் வாழவே பிடிக்கலை, 65 வயசு கிழவன், இரண்டாந்தாரம்”

“இப்ப வருத்தப்பட்டு என்னக்கா செய்றது, எல்லாம் முடிஞ்சி போச்சு”

“என்னால அப்படி விட முடியாது, என்னுடைய வாழ்க்கையை நான் தான் வாழனும். உங்களுக்கு எல்லாம் இது ஒரு சுவாரஸ்யமான கதை அவ்வளவு தான், எனக்கு தான் இது வாழ்க்கை”

“என்னக்கா இப்ப நான் என்ன சொன்னேன்னு நீ கோபப்படுற, சரி நான் வரேன் (என்று எழுந்தேன்)”

“சாரிடா எதோ நியாபகத்தில் பேசிவிட்டேன், கொஞ்ச நேரம் இருடா”

சிறிது நேரம் மெளனம்.

“(நான் தயக்கத்துடன்) அக்கா இது எல்லாம் தப்பு இல்லையா”

”புரியல”

“இல்ல கல்யாணம் ஆகிட்டு இப்படி செய்ற......”

“அப்ப இரண்டாம் கல்யாணம் மட்டும் சரியா, என் வாழ்க்கையை அழிச்சது சரியா, என் அப்பாவை விட வயசானவருக்கு என்னை கட்டி வச்சது சரியா”

சிறிது மெளனம், அவளே தொடந்தாள் ”நீ இப்ப பார்த்தியே அவர் தான் என்னுடைய காதலர், கல்யாணதிற்கு முன்பே நாங்கள் காதலித்தோம்”

“ஆனா இப்ப அதன் பேரே வேறனு சொல்லுவாங்கக்கா”

சட் என்று என்னை முறைத்தாள். நான் மெளனமாக மண்னை விரலால் கிளறிக் கொண்டு இருந்தேன். நானே ஆரம்பித்தேன்

“உன்னுடைய புருஷனுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆயிடும் க்கா”

“(அவள் சிரித்துக் கொண்டு) அந்தாளுக்கு தெரியும், சீக்கிரம் இருட்டுரதுக்குள் திரும்ப வந்துடுனு சொல்லி அனுப்பினார்”

நான் திகைத்து நின்றேன்.

யாரை குறை சொல்வது, உண்மையில் ethical life, moral life என்பதெல்லாம் என்ன?, யாருக்கு எத்தீக்கலா? மாரலா? இருக்கனும். நமக்கா? இல்ல ஊருக்கா?. ஒன்றுக்கு இருந்தால் இன்னொன்றுக்கு குறை வரும். வாழ்க்கையின் சூச்சமங்கள் நிறைய இருக்கிறது. இந்த அக்காவை போல எத்தனையோ பெண்களின் வாழ்க்கைகள் கேள்விக்குறியாக இருக்கிறது?. மனத்துக்குள் தினமும் எவ்வளவு புழுங்குவாள் அவள், விருப்பம் இல்லாத ஒருவன் அவளை தொடும் பொழுது அவளின் உடல் எப்படி கூசி போய் இருக்கும், அவளின் மனநிலை எப்படி இருக்கும்.

ஆண்கள் தடுமாறினால் அது அவனின் உரிமையாக்கப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு பெண் செய்தாள் அவள் வேசியாக்கப்படுகிறாள். ஓரவஞ்சனையான உலகம் இது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18186

நன்றி

ஐரேனிபுரம் பால்ராசய்யா
23-01-2009, 10:51 AM
இனிய தக்ஸ் அவர்களுக்கு, உங்களின் கதைக்கான கரு உருவாகும் கதை என்ற புதிய சிந்தனை என்னை லெகுவாய் ஈர்த்தது.
நேரில் பார்க்கும் சிறு சம்பவங்களுடன் கொஞ்சம் கற்பனையை கலந்து எழுதினால் கதை தயாராகி விடுகிறது. எனது கதைகளின் ஆரம்பமும் அதுதான். ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத தெருவழியாக இருசக்கரவாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன், ஒரு முதியவர் தெருவில் விழுந்து எழுந்திருக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் எனக்கு அவரை கடந்து போக மனமின்றி வண்டியை நிறுத்திவிட்டு அவரை தூக்கி அமர வைத்து பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைத்தேன். அவரகள் வந்து கேட்டார்கள் '' உன் வண்டியல தான் பெரியவர் அடிபட்டு விழுந்தாரா’’ எனக்கு பகீரென்றிருந்தது. உதவி செய்யப்போய் என்னை சந்தேகப்பட்டார்களே என்று வருத்தத்தோடு அலுவலகம் சென்றேன். இரண்டு நாள் கழித்து நடந்த சம்பவத்தை கொஞ்சம் கற்பனையை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதம் வார இதழுக்கு அனுப்ப அப்படி போடு என்ற தலைப்பில் கதை வெளிவந்தது. அந்த கதை இதோ உங்களின் பார்வைக்கு.
அப்படி போடு

அந்த தெருவின் குறுக்குச் சந்து வழியாக நானும் நண்பர் குமாரும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தோம்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குறுக்குச் சந்துக்குள் நுழைந்த போது எண்பது வயது முதியவர் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

தூரத்தில் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு ’’ யாராச்சும் ஓடி வாங்களேன், பெரியவர் கீழே விழுந்துட்டாரு!’’ என்று உரக்க சத்தமிட்டான் குமர்ர். அவனின் சத்தம் கேட்டு சிலர் வேகமாய் சென்று அந்த முதியவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெழித்து ஆசுவாசப்படுத்தினார்கள். நண்பன் குமார் மீது கடுப்பாகிப்போனது எனக்கு.

‘’ அந்த பெரியவர நாம ரெண்டு பேரும் நெனச்சா தூக்கி உதவி பண்ணியிருக்க முடியாதா? மனிதாபிமானமே இல்லாம நடந்துகிட்டியே!’’ என்றேன்.

குமார் மெல்லியதாய் புன்னகைத்துவிட்டுச் சொன்னான்.

’’ நாம டூவீலர அவர் பக்கத்துல நிறுத்தி அந்த முதியவர தூக்கி உதவி பண்ணியிருந்தா அத பார்க்கிறவங்க நாம தான் அவர்மேல வண்டிய மோத விட்டோமோன்னு சந்தேகமா பார்ப்பாங்க, மனிதாபிமானத்துல உதவி பண்ணப்போயி பழி நம்ம மேல விழுந்திடக்கூடாதுன்னுதான் அப்படி கூப்பிட்டேன்.

ரங்கராஜன்
23-01-2009, 11:33 AM
நன்றி ராசய்யா
உங்களின் பதிப்புக்கு மிக்க நன்றி, இன்னும் உங்கள் கதையின் கதைகளை இங்கு நீங்கள் பதியுங்கள், தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

அப்புறம் ரொம்ப நாளாய் உங்களிடம் ஒண்ணு கேட்கனும்-னு இருந்தேன். அதெப்படி உங்கள் கதைகள் எல்லாம் தொடர்ச்சியாக பிரபல வார இதழ்களில் வருது, எனக்கு மிகுந்த ஆச்சர்யம் தரும் விஷயம் இது, அதிர்ஷ்டகாரர் தான் நீங்கள், வாழ்த்துக்கள்..........

ஐரேனிபுரம் பால்ராசய்யா
23-01-2009, 12:42 PM
இனிய நண்பருக்கு
வாரம்தோறும் குமுதம், குங்குமம், ஆகிய இதழ்களுக்கு தலா மூன்று கதைகள் எழுதி அனுப்புகிறேன், மெசேஜ் மற்றும் தரம் இருப்பவை மட்டுமே பிரசுரிக்கப்படுகின்றன. இதற்கு அதிர்ஷ்டம் எதுவுமில்லை.குமுதத்தில் மூன்று மாதங்களுக்குப்பிறகு இந்த வாரம் ஒரு கதை வெளிவந்துள்ளது. எழுதிய கதைகள் வெளிவரவில்லையே என்று எழுதுவதை நிறுத்தவில்லை அது தான் காரணமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம். நன்றி. எனது தனி பிளாக் பார்க்கவும்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
idaivelikal.blogspot.com

அமரன்
23-01-2009, 02:24 PM
ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.
அசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.
அந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.
அர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.
படைப்பாளிகளும் ஒருவகையில் குழந்தைகளே!
வியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.

ரங்கராஜன்
23-01-2009, 03:35 PM
ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரமும் அர்த்தம் இருக்கும்.
அசைவே இல்லா விட்டாலும் அதிலாயிரம் அர்த்தம் இருக்கும்.
அந்த அர்த்தங்கள் கூர்மையான பார்வைக்கே எத்துப்படும்.
அர்த்தங்களால் வியக்கத் தெரிந்தவர்கள் கர்த்தாக்கள் ஆகிறார்கள்.
படைப்பாளிகளும் ஒருவகையில் குழந்தைகளே!
வியக்க மட்டுமன்றி இப்படி உண்மையைச் சொல்லவும் தயங்குவதில்லையே.


அன்பு அமரன்
முன்பெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் கொஞ்சமாவது புரியும், ஆனால் வர வர கொஞ்சம் கூட புரிவதில்லை. எனக்கு இந்த அளவுக்கு தமிழ் தெரியாது, நீங்கள் திட்டுகிறீர்களா?, புகழ்கிறீர்களா?, கிண்டல் பண்ணிறீங்களா? இல்லை தப்பை சுட்டிகாட்டிறீங்களா? சத்தியமா ஒண்ணுமே எனக்கு புரிவதில்லை. தேங்காயை உடைப்பது போல உடையுங்கள் கருத்தை அப்பொழுது தான் தவறு இருந்தால் என்னால் திருத்திக் கொள்ள முடியும்.

இளசு
23-01-2009, 08:04 PM
தக்ஸ்

அமரன் சொன்னது வியப்பான புகழ்ச்சியே..
அதில் நானும் கலக்கிறேன்..

இத்திரியின் நோக்கமே அலாதி... கவர்ச்சி....
அதற்கு முதல் பாராட்டுகள்..

பொறிகள் அறிந்ததும் கதைகள் மேல் ஈர்ப்பு இன்னும் கூடுகிறது... நன்றி..

ஐபாரா - சேர்ந்து சொல்வதுபோல், இன்னும் சிவா, கீழைநாடான், கார்த்திக்
எல்லாம் வருவார்கள். அதற்கு வாழ்த்துகள்..

கடற்கரை உரையாடலே ஒரு கதைக்கான தரத்துடன் ..
சுஜாதாவை மீறி, அங்கே ஜெயகாந்தனையே கண்டேன்!

ஆதவா
24-01-2009, 12:58 AM
கடற்கரை உரையாடலும் அதன் முடிவும்...... என்னை வியக்க வைத்தன....

தஷ்ணாமூர்த்தி... உனக்கு மிகப்பெரும் எதிர்காலம் காத்திருக்கிறது.. (அண்ணாத்தையை மறந்துடாத கண்ணு)
நீ, ஆவி, குமுதம் போன்ற இதழ்களுக்கு அனுப்பு.. அது பலரைச் சென்றடையும்... உன் கதைகளை நிச்சயம் பிரசுரிப்பார்கள்.. தயக்கம் வேண்டாம்.

அமரனுடைய பின்னூட்டத்தை ஆழ்ந்து படித்தாலே போதும்... விளங்கிவிடும்.. (என்னைக் கேட்டால், எளிமையாகத்தானே எழுதியிருக்கிறார்...)

வாழ்த்துக்கள் பையா....

கூடவே எந்தக் கதையைப் பற்றி சொல்கிறாயோ, அதன் இணைப்பை (Link) கொடுத்துவிடு...

ரங்கராஜன்
24-01-2009, 02:23 AM
நன்றி அமரன் & இளசு அண்ணா
உங்களின் வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி, நான் அமரன் விமர்சனங்களின் ரசிகன், இதை நான் ஏற்கனவே ஒரு திரியில் சொல்லி இருக்கிறேன், அவரிடமும் சொல்லி இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய முதல் விமர்சகர்கள் மதியும், அமரனும். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்கள் இருவரையும் நான் மறக்க மாட்டேன். அவரிடம் சும்மா வம்பு பண்ண தான் அப்படி போட்டேன். கொஞ்ச நாளாய் இருவரின் வேலை காரணமாய் நெருக்கம் குறைந்து விட்டது அதனால் அதை அடைக்க தான், அவரை வம்புக்கு இழுத்தேன்.
இன்னும் இழுப்பேன். (ஹா ஹா ஹா)

ஓவியன்
24-01-2009, 04:49 AM
நல்ல ஒரு படைப்பாளி,
பல நல்ல படைப்பாளிகளை
உருவாக்க முடியும்...

தன் படைப்புக்கள்
உருவான விதத்தினைப்
எல்லோருடனும் பகிர்வதனால்...

மனதாரப் பாராட்டுகிறேன்..!!

மதி
24-01-2009, 05:25 AM
பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.

மதி
24-01-2009, 05:29 AM
அருமையான முயற்சி தக்ஸ்.
Making of the movie பார்ப்பது போல் தான் இதுவும். கதைக்கான காரணம் அறிய பலரும் ஆவலுடன் இருப்பார்கள். உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.. மெச்சத்தக்கது.

நான் எழுதியது சொற்பக்கதைகளே... இருப்பினும் அவற்றின் கதைகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன் :icon_b:

இளசு
24-01-2009, 05:33 AM
பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.

தக்க செயல். சபாஷ் மதி!

சிறப்பு வாழ்த்துகள் தக்ஸ்..

திரி வளரட்டும் -- தக்ஸ் -அமரன் அன்பான வம்பாடல் போலவே!:icon_b:

ரங்கராஜன்
24-01-2009, 05:41 AM
பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.

நன்றி மதி
ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?

மதி
24-01-2009, 05:42 AM
கதை உருவான கதை - மதிய உலா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14203)...

இந்தக் கதையில் முக்கால்வாசி விஷயங்கள் உண்மையில் நடந்தவை. சிற்சில தவிர. அதை கதை எழுதுபவருக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டேன். ஹிஹி.. கதையின் ஆரம்பமே மொக்கை. போன வருட ஆரம்பத்தில் இந்தச் சின்ன வயசிலேயே முதுகுவலி வந்தது.:icon_ush: சரி. அதிகமா கம்ப்யூட்டர் முன் உட்காருவதாலும் வண்டியோட்டுவதாலும் வருது போல.. சரியாயிடும்னு விட்டுட்டேன். ஒரு வாரம்..பத்து நாள் ஆச்சு. வலி போன மாதிரி தெரியவில்லை. புகழ்பெற்ற ஒரு மருத்துவமனைக்கு சென்றேன். எங்க வேலை செய்றீங்கன்னார். நிற்க வச்சு ரெண்டு தட்டு தட்டினார். அப்புறம் உங்களுக்கு டிஸ்க் ஸ்லிப்பாயிடுச்சு. இனி நீங்க இப்படியே தான் இருக்கணும். நடக்கும் போது பார்த்து நடக்கணும். வண்டி அலுங்காம குலுங்காம ஓட்டணும். அப்படி இப்படின்னு பயமுறுத்திட்டார். வலி குறைய மாத்திரையும் குடுத்தார்.

ஒரு மாதிரி ஷாக்காகி வீட்டுக்கு வந்துட்டேன். அந்த வாரயிறுதியில் வீட்டில் நண்பர்கள் எல்லோரும் இருக்கையில் தூங்கிட்டு இருக்கும் போது என் நண்பன் என் மேலே உட்கார்ந்துட்டான். இருந்த வலி, டாக்டர் ஏற்படுத்தின குழப்பம்... எல்லாமா சேர்ந்து வெறியாகி வெளியே போயிட்டேன். அப்படியே உச்சி வெயில்ல அந்த ஏரியாவ சுத்திட்டு பசிக்கவும் வீட்டுக்குத் திரும்பினேன். மனசு கொஞ்சம் தெளிஞ்சிருந்தது.

என்னமோ தெரியல.. இது புது அனுபவமா இருந்தது... சரி எழுதிப்பார்க்கலாம்னு மடிக்கணினியை எடுத்து வச்சிக்கிட்டு அரை மணிநேரத்தில் எழுதினேன். ஒவ்வொரு விஷயமா யோசிச்சு... மனஓட்டங்களை உணர்ந்து.. எழுதினது. எனக்கே தெரியாம தோராயமா எல்லோருக்கும் பிடிக்கற மாதிரி அந்தக் கதை அமைஞ்சுடுச்சு.. ஹிஹி.
எழுதினதும் முதல்ல காண்பித்தது அந்த நண்பனிடம் தான்.. :lachen001:

மதி
24-01-2009, 05:43 AM
நன்றி மதி
ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?
சிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.

ரங்கராஜன்
24-01-2009, 05:45 AM
நன்றி மதி
நம்ம ஆதவா சொன்னது போல கதையின் சுட்டியை கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும், உங்களின் கதையை திரும்ப வாசிக்க பலர் ஆவலாக இருப்பார்கள்

ரங்கராஜன்
24-01-2009, 05:46 AM
சிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.

ஓ அப்படியா? நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............

மதி
24-01-2009, 05:51 AM
ஓ அப்படியா? நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............
செயல் புரிந்தது மட்டும் தான் நான்.. ஹிஹி.. டீயெல்லாம் வேண்டாம்... சில்லுனு ஏதாச்சும் சொல்லுங்க...

நீங்க சொன்னமாதிரி லிங்க் குடுத்தாச்சு.

இளசு
24-01-2009, 05:57 AM
மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

இப்போது வலி எப்படி உள்ளது மதி?

இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..

மதி
24-01-2009, 06:19 AM
மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

இப்போது வலி எப்படி உள்ளது மதி?

இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..
தங்கள் அன்புக்கு நன்றி இளசு. தற்சமயம் சென்னையிலேயா?
இணையத்தில் அதைப்பற்றி நிறைய படித்து, dehydration- தான் முக்கிய காரணமென்றறிந்தேன். அப்புறம் யோகா. தற்சமயம் நலம்..

இளசு
24-01-2009, 06:22 AM
நலமறிந்து மகிழ்கிறேன் மதி..
நான் சென்னையில் இல்லை..
என் நண்பர் நல்லமுறையில் இதுபோன்ற உபாதைகளுக்குத் தீர்வளிப்பவர் சென்னையில் இருக்கிறார். அவரைப் பார்க்க வழி செய்ய உத்தேசித்திருந்தேன்..

யோகப்பயிற்சியை தொடர்ந்தாலே, இவ்வலி மீளவராமால் காக்கலாம்..

ரங்கராஜன்
24-01-2009, 06:22 AM
மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

இப்போது வலி எப்படி உள்ளது மதி?

இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..

இளசு அண்ணா இப்போ நீங்க சென்னையிலா இருக்கீங்க????????????????????

இளசு
24-01-2009, 06:23 AM
இல்லை தக்ஸ்..

இருந்தால் இப்படி உன்னுடன் கண்ணாமூச்சி ஆடுவேனா?

சந்திப்போம் அடுத்த பயணத்தில் - எல்லாம் தலை செயல்!

ரங்கராஜன்
24-01-2009, 06:25 AM
இல்லை தக்ஸ்..

இருந்தால் இப்படி உன்னுடன் கண்ணாமூச்சி ஆடுவேனா?

சந்திப்போம் அடுத்த பயணத்தில் - எல்லாம் தலை செயல்!


அப்ப சரி

அமரன்
24-01-2009, 07:17 AM
அன்பு அமரன்
முன்பெல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் கொஞ்சமாவது புரியும், ஆனால் வர வர கொஞ்சம் கூட புரிவதில்லை. எனக்கு இந்த அளவுக்கு தமிழ் தெரியாது, நீங்கள் திட்டுகிறீர்களா?, புகழ்கிறீர்களா?, கிண்டல் பண்ணிறீங்களா? இல்லை தப்பை சுட்டிகாட்டிறீங்களா? சத்தியமா ஒண்ணுமே எனக்கு புரிவதில்லை. தேங்காயை உடைப்பது போல உடையுங்கள் கருத்தை அப்பொழுது தான் தவறு இருந்தால் என்னால் திருத்திக் கொள்ள முடியும்.

சந்தடி சாக்கில உன்னை தெய்வமாக்கி என்னை பக்தன் ஆக்கிட்டாய். பலே பலே.. உன் கதைகளைப் பொறுத்தவரை நான் பக்தனே. அதிலும் தேங்காய் உடைத்தால் பொறுக்கிக் கடிக்கும் அளவுக்கு தீவிர பக்தன். அந்தளவுக்கு கதைகளில் பல்வகை நர்த்தனம் புரிகிறாய். இதைத்தான் சொல்ல வந்தேன்பா.

(அடுத்து என்ன கற்பூரமா:))

ரங்கராஜன்
24-01-2009, 07:23 AM
சந்தடி சாக்கில உன்னை தெய்வமாக்கி என்னை பக்தன் ஆக்கிட்டாய். பலே பலே.. உன் கதைகளைப் பொறுத்தவரை நான் பக்தனே. அதிலும் தேங்காய் உடைத்தால் பொறுக்கிக் கடிக்கும் அளவுக்கு தீவிர பக்தன். அந்தளவுக்கு கதைகளில் பல்வகை நர்த்தனம் புரிகிறாய். இதைத்தான் சொல்ல வந்தேன்பா.

(அடுத்து என்ன கற்பூரமா:))

எப்பொழுதும் நம்ம அமரனின் சிந்தனைகள் வித்தியாசமானதாகவும், விரும்பதக்கதாகவும் இருக்கும் என்பதற்கு இந்த வார்த்தைகள் உதாரணம்.

தீபா
24-01-2009, 08:47 AM
கதை உருவான கதை - மதிய உலா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14203)...

எழுதினதும் முதல்ல காண்பித்தது அந்த நண்பனிடம் தான்.. :lachen001:

அந்த நண்பர் இப்போது எப்படி இருக்கிறார்?

மதி
24-01-2009, 08:56 AM
நல்லா தான் இருக்கிறான்.... என்னைப்போலவே... ஹிஹி

சிவா.ஜி
24-01-2009, 07:28 PM
வெந்நீர் கதை உருவான கதை.

ஒரு நாள் ஜெத்தாவுக்கு சென்றுவிட்டு செல்வாவைப் பார்த்துவிட்டு திரும்ப நானிருக்கும் இடத்துக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். திடீரென்று நல்ல மழை. லேசாக குளிர ஆரம்பித்துவிட்டது. வீட்டுக்குப் போனதும் வெந்நீர் வெச்சு குளிக்கனுன்னு நினைச்சப்பவே தொடர்ந்து அதைப் பற்றிய எண்ணங்கள் தோண ஆரம்பிச்சிடிச்சி.

எங்கப்பாவுக்கு வெந்நீர் குளியல்ன்னா ரொம்ப பிடிக்கும். எங்கம்மாவும் சரி, எங்க அண்ணிகளும் சரி முகம் சுளிக்காமல் வெந்நீர் வைத்துக்கொடுப்பார்கள். அதுவும் நினைவுக்கு வந்ததுமே...எதிர்மறையாய் சிந்திக்கத் தொடங்கினேன். ரொம்பவும் ஆசைப்படற இந்த சாதாரண வெந்நீர்குளியல்கூட கிடைக்காம ஒரு தந்தை படற கஷ்டத்தை யோசிச்சிப் பார்த்தேன். வீடு வந்து சேர்றதுக்குள்ளயே முக்கால்பாகம் கதையை மனசுல உருவாக்கிட்டேன்.

எங்க பக்கத்துவீட்ல ஒரு பெரியவர் இருந்தார்(இப்ப இல்லை) தலைமைஆசிரியரா இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு கிடைக்கிற ஓய்வூதியத்தை முழுசா அவரோட மருமகள் வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு செலவுக்குக்கூட அதிகமாக பணம் கொடுக்கமாட்டார். ஒரே மகன்தான் ஆனால் அவரும் இதை கண்டுகொள்ள மாட்டார்.

மிகவும் தயங்கித் தயங்கி என்னிடமோ இல்லை என் மனைவியிடமோ பணம் கடன் கேட்பார். திரும்பவும் கொடுத்துவிடுவார் நீண்ட நாட்கள் கழித்து. அவருடைய நினைவும் வந்தது. அனைத்தையும் இணைத்து அந்தக்கதையை எழுதினேன்.

(அந்தக்கதையை இதயம் நிறைய பிரிண்ட் எடுத்து அவருடைய நன்பர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கிறாரென்று அவர்களில் சிலர் சொன்னபோதுதான் தெரிந்தது)

மதுரை மைந்தன்
25-01-2009, 12:17 AM
நவீன கிந்தனார் சரிதம்- நகைச்சுவை சிறு கதை

இந்த கதையின் கரு தற்சமயம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள Slumdog Millionair என்ற ஆங்கில படத்தின் மூலம் வந்தது. சமீபத்தில் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது எனக்கே வியப்பை தரும் விஷயம் அந்த கதையில் Who wants to be a millionaire போட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு எப்படி ஜமால் என்ற ஸ்லம் பையன் தன் வாழ்க்கையில் நடந்தவைகளைக் கொண்டு பதிலளிக்கிறானோ அப்படியே கிந்தனாரும் பதிலளிப்பதாக நகைச்சுவையாக வந்த என் கற்பனை. மன்றத்தில் இதை யாரும் நமபப் போவதில்லை என்றாலும் இது எனக்கு என்மேலேயே நம்பிக்கை தருகிறது. நிச்சயம் நல்ல கருக்களைக் கொண்ட நகைச்சுவை கதைகளை உருவாக்கு முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

எனக்கு இதை வெளிக் கொணர வாய்ப்பளித்த தக்ஸ் அவரகளுக்கு என் நன்றி.

ரங்கராஜன்
25-01-2009, 02:57 AM
நன்றி சிவா அண்ணா & மதுரை சார்
உங்கள் இருவரின் மனதில் தோன்றிய கருவை அழகாக வடித்து இருக்கிறீர்கள், தொடருங்கள்.

ரங்கராஜன்
25-01-2009, 04:30 PM
அச்சு

இந்த கதையின் முக்கியமான கரு குழந்தை, அதனுடைய வால்தனங்கள், சிரிப்பு, கோபம், அழுகை எல்லாம் தான் காரணம்.

என்னுடைய மாமாவின் பேத்தி பெயர் பாலா, அதாவது அந்த குழந்தைக்கு நான் சித்தப்பா. என்னை படிக்க வைத்து எல்லாம் என்னுடைய தாய் மாமா தான். அவருடைய மகள் (என்னைவிட 5 வயது மூத்தவள்) எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு திருமணம் நடந்து கற்பமுற்றால், நான் அவர்கள் வீட்டில் இருந்து தான் படித்தேன். பாலா வயிற்றில் வளருவதில் இருந்தே அவள் மீது பெரும் பாசம் கொண்டு இருந்தேன். பிறந்த புதிதில் பல நாட்கள் இரவில் தூங்காமல் ஊரே குலுங்குவது போல அழுவாள், பல நாட்கள் அவளை கையில் வைத்துக் கொண்டே நான் தூங்கி இருக்கிறேன். பிறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது, வாய் என்றால் வங்காள விரிகுடா மாதிரி வாய் அடிப்பாள், கோபம் வந்தால் சும்மா விஜய்சாந்தி மாதிரி, Mr&Mrs. Simth படத்தில் வரும் ஏஞ்லினா ஜூலி மாதிரி பச்சாதாபமே பார்க்காமல் கையில் இருப்பதை தூக்கி அடிப்பாள், அவளாலே ஒரு சுற்று நான் இளைத்து விட்டேன். நான் எப்பொழுதும் அவளை நோண்டிக் கொண்டு இருப்பேன். அவளுக்கு அளவு கடந்த கோபம் வரும், சந்தேக கேஸில் திருடர்களை அடிப்பது போல என்னை பிரித்து மேய்வாள், அவள் அடிக்கும் பொழுது வேறு நான் தெரியாமல் சிரித்து விடுவேன். அவ்வளவு தான் பத்ரகாளியாக மாறிவிடுவாள்.

அவள் என்னை “த்தித்தப்பா” என்று கூப்பிடும் அழகுக்காகவே காலம் பூரா அவளிடம் நான் அடிவாங்குவேன்.

ஒருமுறை ஊருக்கு போய் இருந்தாள், நான் அவளுக்கு போன் செய்தேன் என்னிடம் போனில் அவள் பேசவில்லை, போனை தன்னுடைய அம்மாவிடம் இருந்து வாங்கி விட்டு

“அலோ யாரா இய்ந்தாலும் அப்பறமாஆ பேச்சுங்க, நான்னு வேலையாஆ இக்கேன்”

“ஏய் நாதாண்டி சித்தப்பா பேசறேன்”

போனை வைத்து விட்டாள்.

எனக்கு ஆத்திரம், கோபம், அழுகை, அவமானம் எல்லாம் முட்டிக்கொண்டு வந்தது. இது நடக்கும் பொழுது எனக்கு வயது 24, எருமை மாடு வயதில் நானும் குழந்தையாக மாறினேன். அப்புறம் தான் யோசித்தேன் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது நாமும் குழந்தையாக மாறி விடுகிறோம் என்று.

அப்பொழுது உருவான கதை தான் அச்சு. பெயர் அச்சு என்ற காரணம், ஒருமுறை நான் பஸ்ஸில் சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு தாய், தூங்கிக் கொண்டு இருந்த தன்னுடைய மூன்று வயது மகனை

“அச்சு செல்லம், எழுந்து சாப்பிடுங்க, பசிக்கலையா அச்சு செல்லத்திற்கு” என்று
கொஞ்சினால் அதற்கு அந்த குழந்தை ஒரு சிணுங்கு சிணுங்கியது. அவ்வளவு அழகாக இருந்தது அந்த காட்சி. அந்த தாயின் கொஞ்சலா, அல்லது அந்த குழந்தையின் சிணுங்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பெயர் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது அதான் அச்சு,

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18513


கீழே அவளும் நானும் சண்டை இட்டுக்கொள்ளும் வீடியோவை கொடுக்கிறேன் பாருங்கள்

http://in.youtube.com/watch?v=-qxb-so__Xc&feature=channel_page

ஆதவா
26-01-2009, 01:16 AM
சிவா.ஜி, மதுரை, அண்ணாக்கள், மற்றூம் தம்மூ!!

உங்கள் கதை உருவான கதை உண்மையிலேயே மிகவும் அருமை..... வாழ்த்துக்கள்....

ரங்கராஜன்
04-02-2009, 03:59 PM
நீ எனக்கு வேண்டும்

வணக்கம் உறவுகளே
ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த பக்கம் வந்து, சரி இந்த முறை கொஞ்சம் சுவாரஸ்யமான கரு இது. எப்பொழுது எங்கு என்று நினைவில்லை. ஒரு புத்தகத்தில் ஒரு கட்டுரையை படித்தேன், என்னுடைய சுஜாதா ஐயா நண்பரின் நிஜ வாழ்க்கையை எழுதி இருந்தார். பெயர் நியாபகம் இல்லை. சுஜாதா ஐயாவின் எழுத்தில் இருந்து.

“என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடன் நான் பணி புரியும் சென்னை விமான நிலையத்தில் எனக்கு சீனியராக இருந்தார். அவர் ஒரு கட்ட பிரம்மச்சாரி வயது 40 இருக்கும், திடீர் என்று ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சென்றேன். பார்த்தால் அவர் வயதுடைய ஒரு பெண்ணும் அவருடைய குழந்தைகளும் இருந்தார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம். யார் அவங்க என்று கேட்க விரும்பினாலும் கேட்கவில்லை. அவரே சொன்னார்

“ இவங்கல தான் நான் கல்லூரி படிக்கும் பொழுது காதலித்தேன், ஆனால் அவங்க சம்மதிக்கவில்லை, எங்கள் வீட்டிலும் சம்மதிக்கவில்லை, அவங்க திருமணம் செய்து கொண்டாள். நான் செய்துக் கொள்ளவில்லை. ரொம்ப வருஷம் கழித்து போன வாரம் ஒரு கல்யாணத்தில் அவங்கள சந்தித்தேன், கணவர் இறந்து விட்டாராம். தனியாக கஷ்டப்பட்டாங்க, நான் என்னுடன் அழைத்து கொண்டு வந்துவிட்டேன் குழந்தைகளுடன்” என்றார் என்னுடைய நண்பர் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, சற்று சலங்கை ஒலி படம் போலவும் இருந்தது. என்ன வித்தியாசம் அது நிழல் இது நிஜம். காமம் என்ற சுகத்திற்காக மட்டும் காதலிக்கும் காலத்தில், காதலுக்காக காதலித்த என்னுடைய நண்பரை பார்க்க பெருமையாக இருந்தது. ஆச்சர்யத்துடன் இதை என்னுடைய மருத்துவ நண்பரிடம் சொன்னேன், அத்ற்கு அவர் சிரித்துக் கொண்டு சொன்னார் “அவர் ஒரு அப்நார்மல் மனிதன், சைக்கலாஜிக்கா அவருக்கு எதோ பிராபலம் இருக்கிறதுனு” சொன்னார்

இப்படி முடித்து இருப்பார் அந்த கட்டுரையை, நான் இதை படித்து பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அந்த பெயர் தெரியாத மனிதன் மேல் எனக்கு மிகுந்த மரியாதை வந்தது. மருத்துவம் அவருக்கு என்ன பெயர் வைத்தாலும், மனம் அவரை மகுடத்தில் தான் வைத்து அழகு பார்க்கிறது. இந்த கருவை வைத்து தான் கொஞ்சம் என்னுடைய கோபங்களையும் வைத்து கதையை திரித்தேன்.

இந்த மாதிரி பிரச்சனையை கொஞ்சம் அலசினால், இந்த மாதிரி அடமண்ட், அக்ரஸிவ், பண்புகள் எல்லாம் ஒரு குழந்தை மட்டும் இருக்கும் குடும்பத்து குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். எப்படியாவது தான் நினைத்தது தனக்கு வந்து சேர வேண்டும் என்று நினைப்பது உண்டு. குழந்தைகள் வளர வளர வேகமும், கோபமும், மூர்க்கதனமும் அதிகமாகும். அப்பொழுது தான் மனம் இந்த மாதிரி கிரிமினலாக நினைக்க வைக்கும்

ஒரே குழந்தையாக வளர்ந்த தகுதியில்
தக்ஷ்ணாமூர்த்தி.

கதையின் சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18560

ரங்கராஜன்
08-02-2009, 03:49 PM
நகரத்தில் புது மனைவி

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18042

இந்த கதை எழுத காரணமாக இருந்தவர் எனக்கு தெரிந்த உடன்பிறவா அக்கா ஒருத்தி, திருமணம் ஆகி அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் மிக மென்மையானவள், சிரித்த முகம் உடையவள். திருமண வாழ்க்கையை பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதவள். அவளுக்கு தெரிந்தது எல்லாம் குடும்பம் மட்டும் தான், அப்பா, அம்மா, தம்பி, தங்கை அவ்வளவு தான். அவளுக்கு அமெரிக்காவில் இருந்து மாப்பிள்ளை வந்தார் அவர் நல்லவர் தான் (கதையில் வரும் கணவனுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை, அது கற்பனை). ஒன்றுமே தெரியாத அவளுக்கு சென்னையே புதுசு, அப்போ அமெரிக்கா எப்படி இருக்கும்????????, மனரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும். இத்தனையையும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து சொல்ல முடிவு செய்தேன். மனைவி மட்டும் தான் கதையில் வருவாள், அவள் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவது போல கதையை அமைத்து இருந்தேன். கர்பமாக இருக்கும் சில பெண்களை இப்படி பேசி நான் கேட்டு இருக்கிறேன். கணவன் வேலையில் இருந்து வந்ததும் குழந்தை அங்கு உதைத்தது, இங்கே இடிச்சது என்று சொல்லி சந்தோஷப்படுவாள், கணவனும் தன்னுடைய பையை கூட கழற்றி வைக்காமல் மெய் மறந்து கேட்டுக் கொண்டு இருப்பான், அது ஒரு விதமான சுகமான உணர்ச்சி. ஆனால் கணவன் சரியில்லாத பெண்களின் நிலை என்ன?????????, அவர்கள் அந்த சந்தோஷத்தை எல்லாம் யாரிடம் சொல்லுவாள், சொந்த ஊராக இருந்தாலும் தன் சொந்தத்திடம், அல்லது தோழிகளிடம் சொல்லுவாள். யாரும் தெரியாத ஊரில், கெட்ட கணவனை வைத்துக் கொண்டு அவள் யாரிடம் சொல்லுவாள் என்று யோசித்த பொழுது தோன்றிய கரு இது. நான் எதிர்பார்த்த படி இது வாசகர்களிடம் சேரவில்லை என்றாலும் எனக்கு பிடித்த கதைகளில் இது முக்கியமானது.

நன்றி

ரங்கராஜன்
28-02-2009, 02:51 AM
உன் வாசம் மாறவில்லை

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18332

வணக்கம் உறவுகளே
இந்த கதையின் கரு மிக மிக மென்மையான கரு, இந்த கருவை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது, அப்படி புரிந்தாலும் ஒத்துக் கொள்ள முடியாது அதற்கு முக்கிய காரணம் சமுதாயம்.
இந்த கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் பார்த்தால் தான் இந்த கதையின் நியாயம், நேர்மை புரியும். ஆனால் இந்த கதையை மூன்றாவது மனிதனாக பார்த்தால் இந்த கதையின் ஒழுக்கம் புரியாது, உறவும் புரியாது.

எல்லார் வாழ்க்கையிலும் காதல் உண்டு, அதுவும் இளமையில் உண்டான காதல் என்றும் மறைவது கிடையாது. அந்த காதல் வெற்றியானல் கொஞ்ச மாதங்களிலே மறைந்து விடுகிறது, தோல்வியானால் இறக்கும் வரை நெஞ்சில் இனிக்கிறது. எல்லாருக்கும் அந்த உணர்வு இருக்கும், சுயமரியாதையை அல்லது உங்களின் சுயவட்டத்தை கொஞ்சம் அழித்துவிட்டு பார்த்தால் அந்த உறவுக்காக நீங்கள் மறைமுகமாக ஏங்குவது புரியும். அப்படி பட்ட முதிர்ச்சியான காதல் தான் இந்த கதையின் கருவும் கூட.

எனக்கு தெரிந்த உறவுகாரர் ஒருவர் வீட்டில் நான் தங்கி இருந்தேன், அவர் என்னுடைய மாமா முறை, அவருக்கு அவருடைய பிறந்த நாளின் பொழுது சரியாக ஒரு பெண்ணிடம் இருந்து வாழ்த்து அட்டை வரும், ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல, சரியாக 29 வருடங்களாக வந்துக் கொண்டே இருக்கிறது, எனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா? 29 பிறந்த நாள் வாழ்த்து அட்டையையும் அவர் பத்திரமாக வைத்து இருக்கிறார். அவருக்கு வயது 49, ஆனால் இவர் ஒரு நாள் கூட அவங்களை திரும்ப தொடர்பு கொண்டது கிடையாது என்று தெரிகிறது. ஏனென்றால் ஒவ்வொரு அட்டையிலும் ”நீங்கள் எப்படி இருக்கீங்கனு ஒரு முறையாவது பதில் போடுங்கனு எழுதி இருப்பாங்க” இந்த வரி 29 அட்டைகளிலும் தவறாமல் இருக்கும். எங்க மாமாவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு பெரிய பசங்க இருக்கிறார்கள், அந்த பெண்மணிக்கு கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் போல, கடிதத்தில் இருந்தது, தன்னுடைய மகன் பிறந்ததில் இருந்து அவன் வேலைக்கு போகிறான் என்பது வரை ஒவ்வொரு வருடமும் அந்த பெண்மணி எழுதி இருக்கிறார்.

எங்க மாமா இது வரை ஒரு பதில் கூட போட்டது கிடையாது, ஆனால் பல நாள் இரவு அந்த அட்டைகளை எனக்கு தெரியாமல் எடுத்து பார்ப்பார் (அந்த வீட்டில் நானும் அவரும் மட்டும் தான், வேலை விஷயமாக அவர் குடும்பத்தை விட்டு என்னுடன் தங்கி இருந்தார்), பல ராத்திரிகள் அதை முறைத்தபடி உக்கார்ந்து இருப்பார். கண்டிப்பாக அந்த பெண்மணி இவர் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத உறவாக தான் இருக்க முடியும்.

எனக்கு இவர்கள் இருவரை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது, குறிப்பாக அந்த பெண்மணி, குடும்பம் என்று ஆன பின் தான் நேசித்த ஒரு உறவை எப்படி அதே பாசத்துடன் 29 ஆண்டுகள் நேசிக்க முடிகிறது, பதில் இல்லை என்றாலும் பொறுமையாக வாழ்த்து அட்டை போட முடிகிறது. (அதை தவிர எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் இல்லை)

அப்புறம் அந்த மாமா பதில் போடவில்லை என்றாலும் மனதளவில் அந்த பெண்மணியை மிகவும் நேசிக்கிறார், அவரின் கடிதங்களை அவ்வளவு பாசத்துடன் பார்ப்பார், தொடுவார்.

என்ன மாதிரியான உறவு இது?, தூரமாக இருந்தாலும், பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் இருவரும் மனதளவில் ஒன்றாக வாழ்கிறார்கள்.

இந்த உறவின் கரு தான் இந்த சிறுகதையின் ஆணி வேர், சில பல மாற்றங்களுடன் மாற்றி சிறுகதை வடிவத்தில் கொடுத்தேன். முன்பே சொன்ன மாதிரி இந்த கதையின் நாயகன் நாயகியாக உங்களை பொறுத்தி பார்த்தால் மட்டும் தான் கதையின் நியாயம், ஒழுக்கம் புரியும். நாயகனுடைய மகனாகவும், மனைவியாகவும் அல்லது நாயகியின் மகனாகவும், கணவனாகவும் பார்த்தால் எரிச்சலாக தான் இருக்கும், எனென்றால் எனக்கும் முதலில் அப்படி தான் இருந்தது. நன்றி

samuthraselvam
28-02-2009, 09:20 AM
இந்த உறவின் கரு தான் இந்த சிறுகதையின் ஆணி வேர், சில பல மாற்றங்களுடன் மாற்றி சிறுகதை வடிவத்தில் கொடுத்தேன். முன்பே சொன்ன மாதிரி இந்த கதையின் நாயகன் நாயகியாக உங்களை பொறுத்தி பார்த்தால் மட்டும் தான் கதையின் நியாயம், ஒழுக்கம் புரியும். நாயகனுடைய மகனாகவும், மனைவியாகவும் அல்லது நாயகியின் மகனாகவும், கணவனாகவும் பார்த்தால் எரிச்சலாக தான் இருக்கும், எனென்றால் எனக்கும் முதலில் அப்படி தான் இருந்தது

நான் அந்தக் கதையை படித்தேன். மிகவும் சரி அண்ணா..

மஞ்சுபாஷிணி
22-09-2009, 04:48 PM
தீயில் ஒரு பனித்துளி மிக அருமையான கதை தக்ஸ்... ஆழ்ந்து படிக்க முடிந்தது.. பாசத்துக்கு என்றுமே அளவுகோல் கிடையாது... எப்படியோ அப்பாவை புரிஞ்சுட்டானே அதுவே போதும். கதை எழுத உங்களுக்கு கரு கிடைத்த விதம் பற்றி நீங்கள் போட்டது மிக அருமை. நன்றி தக்ஸ்...

மன்மதன்
30-01-2010, 01:17 PM
அருமையான திரி.

கான்செப்ட்டே வித்தியாசமாக இருக்கிறது.

மற்ற கதைகளின் கருவையும் தொடரலாமே.

nellai tamilan
08-06-2010, 05:43 PM
நான் கதை எழுதிய இல்லை ஆனால்.

கீதம் எழுதிய முற்றல் வெண்டைக்காய்-யின் ஒரு வரி பிளாஸ் பாயிண்டை என்னால் சொல்ல இயலும்.

ஏற்கனவே அறிந்த பழமொழி.....
கடைக்கு போய் காய்கறி வாங்கும் போது மனதில் பாதித்த முதிர்கன்னி வெண்டைக்காயாக மனதில் தோன்றியதன் விளைவுதான் அந்த கதை என்று நினைக்கிறேன்.

அப்படித்தானே..கீதம்

satham107
08-03-2011, 07:53 AM
நன்றி மதி
ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?

ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?[/QUOTE]

கீதம்
16-04-2011, 01:27 AM
எனது பத்துப் பன்னிரண்டு வயதுகளின்போது கோடை விடுமுறைகளுக்கு அம்மாச்சியின் ஊருக்குச் செல்வது வழக்கம். அப்படியே இலவச இணைப்பாக பக்கத்திலிருக்கும் பெரியம்மாவின் ஊருக்கும் சமயங்களில் செல்வது உண்டு. பெரியம்மாவின் ஊர் திருத்துறைப்பூண்டிக்கருகில் உள்ள கொக்காலடி என்னும் சிற்றூர். அப்போது பெரியம்மாவின் வீடு என்பது ஒரு குளத்தையொட்டி இருந்த குடிசையே...

வீட்டின் கொல்லைப்புறம் குளம் இருந்தது. அந்தக் குளத்தில் நான் பார்க்கும்போதெல்லாம் ஒரு வயதான அம்மா கழுத்து மட்டும் மேலே தெரியும்படி அமிழ்ந்திருப்பார். யாருடனும் எதுவும் பேசமாட்டார். ஆனால் தனக்குத்தானே பேசி சிரித்துக்கொள்வார். காலையிலிருந்து மாலை வரை நீரில் ஊறிக்கொண்டே இருப்பார்.

அவரது வீடு குளத்தை ஒட்டியே அந்தப்பக்கம் இருந்தது. பெரிய வீடு. சொல்லப்போனால் அந்தச் சிற்றூரில் பணக்கார வீடும் அதுதான். மாடிவீடு. பெரிய கொல்லை! வண்டிமாடுகளும், எருமைகளும், பசுக்களுமாய் கொல்லையே நிறைந்திருக்கும். அந்த வீட்டு முதலாளியின் தாயார்தான் அந்தம்மா. மனநிலை பாதிக்கப்பட்டு இப்படி செய்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். ஏன் மனநிலை பாதிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் அந்தம்மா குளத்தை விட்டு வெளியேறி வீட்டுக்கு செல்வார், முழு நிர்வாணமாக. அச்சந்தர்ப்பங்களில் பெரியம்மா என்னை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அனுப்பிவிடுவார் என்றாலும் விவரம் தெரியாத வயதில் அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது.

மற்றொரு நிகழ்வு பெரியம்மா சொல்லக்கேட்டது. ஊருக்குள் திரிந்த மனநிலை தவறிய இளம்பெண் இரண்டாவது குழந்தை பெற்றிருக்கிறாள் என்றும் இரு குழந்தைகளும் நல்ல தெளிவான மனநிலையில் இருப்பதாகவும் பார்க்க அத்தனை அம்சமாக இருப்பதாகவும் சொல்லி அந்தப் பெண்ணுக்காக மிகவும் பரிதாப்பப்பட்டார்.

இந்த சம்பவமும் என்னை பாதித்தது. இந்தப் பெண்ணைப் பற்றிதான் கதை எழுதவேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஒரு எண்ணம் இருந்தது. ரங்கராஜனின் லாலா கதையில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் எழுதும்போது என்னை அறியாமலேயே அந்த முதியவளின் நினைவு தோன்றி இரு சம்பவங்களையும் இணைத்து ஒரு கதையாக்கிவிட்டேன்.

இதுவே சிவப்பி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27024) கதை உருவான கதை.

அமரன்
18-04-2011, 07:44 PM
நினைவிடுக்குகளில் சிக்குண்ட மனதின் சிதறல்கள் சிவப்பியின் உருவாக்க அணுக்கள்..

அனுராகவன்
16-08-2014, 06:22 AM
பாராட்டுக்கள் ....