PDA

View Full Version : கடைசி வரை கனவுதான்.!



shibly591
18-01-2009, 03:03 AM
கனவுகள் நிறைந்த சாலையில்தான்
எப்போதும் என் பயணம் நிகழ்கிறது...

என்ன ஒன்று...

கடைசி வரை கனவுகள் கனவாகவே....!

இளசு
24-01-2009, 06:07 AM
நாளைப்பொழுது என்றும்
நமக்கென வாழ்க!அதை
நடத்த ஒருவன் உண்டு
கோயிலில் காண்க!
வேளை பிறக்குமென்று
நம்பிக்கைக் கொள்க! எந்த
வேதனையும் மாறும்
மேகத்தைப் போல.....


கவியரசன் சொன்னது..

நடத்துவது - நம்பிக்கையோ கனவுகளோ..
நடப்போம்!

வாழ்த்துகள் ஷிப்லி!

அமரன்
24-01-2009, 07:38 AM
கவிச்சமர் விள்ளல்..
கனவுகள் அமைத்த சாலையில் பயணிக்கும் சில்பியின்
இக்கவிதைக்கு எசக்கவிதையாக பொருந்தும் என்ற எண்ணத்தில்

மறுபடியும் பயணம் தொடங்குகிறது
யாரோ முடித்த இடத்திலிருந்து
புதியப் பயணமெனும் பெயரில்.

பலர் பயணித்தப் பாதைகளில்
அவர்கள் தடம்பற்றியும்
புதியவர்கள் கரம்பிடித்தும்
புதிதாய் பாதங்களைப் பதித்தும்

தொடரும் அப்பயணங்களும்
முற்றுப் பெறாமல் முறிகின்றன.
பாதைகள் மட்டும்
நீண்டு கொண்டேப் போகின்றன.


கிளைகள் இல்லாத சாலைகள் இல்லை.
கிளைகள் இல்லாத கிளைகளும் இல்லாமல் இல்லை.
முடியாத கிளைகளும் இல்லாமல் இல்லை.
கிளை முடியுமிடத்தில் நாம் பயணங்களை முடிப்பதில்லை.
பயணங்கள் முடிக்கப்படும் இடத்தில் பாதைகள் முடிவதில்லை.

பாராட்டுகள் ஷில்பி.

ஓவியன்
19-09-2009, 06:11 AM
எப்போது கண்ட கனவுகளில்
வந்த ஆறு பாம்புதான்
இன்றைய பென்சீன் (C6H6)..!!

கனவுகளைத் தூசி தட்டுங்கள்
பல நடப்பு நினைவுகளுக்கு
வழி காட்டும் பென்சீன் போலவே..!!