PDA

View Full Version : என்னைக் கொன்றவள்....



Nanban
05-04-2003, 10:56 AM
என்னைக் கொன்றவள்......

எப்போதும் எண்ணிவிடாதே -
என்னைக் கொன்றது
காலத்தின் மூப்பு என்று.

எதிரியால் கொல்லப் படுவது
பயங்கரமானது என்றாலும்
நடக்கக் கூடியதே.

வாழ்க்கையைச் செழிக்கச் செய்யும்
ஜீவநதியின் மூலத்தால்
நான் கொல்லப்பட்டேன்.

நான் கொல்லப்பட்டது
உன்னால் -
என் ஆத்மாவின் ஆத்மாவால்.

rambal
05-04-2003, 11:04 AM
நல்ல காதல் கவிதை..
இன்னொரு காதல் கவி நம்மன்றத்திற்கு..
பாராட்டுக்கள்..

anushajasmin
05-04-2003, 11:07 AM
நல்ல கவிதை .தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

poo
05-04-2003, 11:55 AM
நண்பா.. உன் கவியில் மயங்கிக் கிடக்கிறேன்.. பாராட்டுக்கள்!!!

aren
05-04-2003, 01:28 PM
கவிதை நன்றாக வந்திருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

discreteplague
06-04-2003, 04:06 AM
அனுபவத்தில் கவிதைவடிவில் தெறிக்க விட்டு இருக்கிறீர் போலும்.....

விஷ்ணு

இளசு
06-04-2003, 02:51 PM
ஜீவநதியால் கொல்லப்பட்டாலும்
முக்தியுடன் கவிதையும் கிடைத்தது

பாராட்டுகள் நண்பனே!

மன்மதன்
23-11-2004, 02:55 PM
நல்ல கவிதை.. நண்பனின் பழைய கவிதைகளை படிக்க ஆவலுடன்
மன்மதன்

அக்னி
01-06-2007, 12:50 AM
காதல் இளவயதோடு முடிந்துவிடுமா..?
எத்தனை வயதானோர், உலகில் காதலின் வேதனையில் மடிந்து போகின்றனரோ...

அழகிய வேதனை...

விகடன்
07-06-2007, 08:34 PM
பட்டும் படாமலும் காதலின் சோகக்கதையை சொல்லியிருக்கிறீர்கள்.
இன்னொருவர் வாழ்க்கையில் வரவேற்க முடியாத கவிதை.
வரவேற்கப்பட வேண்டிய கவியின் கவிதை.