PDA

View Full Version : ஆட்டோமேடிக்காக cmd.exe தோன்றி தோன்றி மறைகிறது.



anna
17-01-2009, 07:47 AM
என்னுடய மடி கணினியில் இப்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அதாவது கணினியில் இண்டர்நெட் இனைத்தால் ஆட்டோமேடிக்காக cmd.exe தோன்றி தோன்றி மறைகிறது. இப்போது ஏதுவும் இவ்வகை வைரஸ் ஏதுவும் பரவுகிறதா? என்னிடம் ஆண்டி வைரஸ் நார்ட்டன் காப்பரேட் எடிசன் உள்ளது. இன்று வரையில் அப்டேட் செய்து உள்ளேன்.இத்தகைய பிரச்சனையை நீக்க யாராவது உதவுங்களேன்.

பாரதி
22-01-2009, 06:22 AM
அன்பு நண்பரே,
சமீபத்தில் ஏதேனும் மென்பொருளை நிறுவினீர்களா..? அப்படியெனில் அதை நீக்கி விட்டு பரிசோதித்துப்பாருங்கள். உங்களிடம் இருக்கும் நச்சுநிரல் கொல்லி - தனிப்பட்ட முறையில் நீங்கள் வாங்கியதா..?

என்னுடைய ஆலோசனை என்னவெனில் கீழ்க்கண்ட இலவச மென்பொருட்களை பதிவிறக்கி கணினியில் நிறுவுங்கள். உங்கள் கணினியை ஒவ்வொரு மென்பொருளையும் கொண்டு முழுமையாக பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

1. அவஸ்ட் ஆண்டி வைரஸ்
2. ஸ்பைபாட் செர்ச் அண்ட் டெஸ்ட்ராய்
3. லாவாசாஃப்ட் நிறுவனத்தின் ஆட் அவேர்.
4. சிகிளீனர்

உங்கள் பிரச்சினை விரைவில் தீர வாழ்த்துகள்.

anna
22-01-2009, 10:49 AM
உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி, இந்த பிரச்சனை திடீரென தோன்றிய உடன் வைரஸாக இருக்குமோ என அதிக குழப்பமாகி விட்டது. மற்றபடி ஒன்றும் பிரச்சனை இல்லைஸ்கைப் இன்ஸ்டால் செய்து இருந்தேன். அதனால் ஏதுவும் பிரச்சனை இருக்குமா என அன் இன்ஸ்டால் செய்து விட்டு பார்த்தேன். பிரச்சனை நீக்கியது . இப்போது மீண்டும் ஸ்கைப் இன்ஸ்டால் செய்தேன் . பழைய பிரச்சனை இல்லை.