PDA

View Full Version : 32 வது புத்தக கண்காட்சி



ரங்கராஜன்
16-01-2009, 05:04 PM
32 வது புத்தக கண்காட்சி


வணக்கம் நண்பர்களே
நேற்று சென்னையில் நடந்த 32 வது புத்தக கண்காட்சிக்கு சென்று இருந்தேன், அதில் இருந்து சில துளிகள்.


நுழைவாயிலில் பெரிய பெரிய பேனர்கள் வைத்து இருந்தார்கள் பதிப்பகத்தினர், தங்களின் புதிய புத்தகங்களையும், படைப்பாளிகளின் படத்துடன் போட்டு இருந்தனர். 100 பதிப்பகத்துக்கு மேல் இருக்கும். வழிநெடுக்க வழக்கம் போல பட்டாணி, சுண்டல், காபி & டீ கடைகள் இருந்தது, டிக்கெட் கவுண்டர் (ticket counter) பக்கத்திலே, புதுசாக கேண்டீன் போட்டு இருந்தார்கள், போன முறையும் இருந்தது. ஆனால் இந்த முறை பீஸா, பர்கர், நூடல்ஸ், சூப், மற்றும் வெஜீடபில் பிரியாணி, தயிர் சாதம், பரொட்டா குருமா, செட் ஐடம்ஸ், ஐஸ் கீரிம்............. அப்பா விரல் வலிக்கிறது, புரிகிறது வேலை மெணக்கெட்டு இதை ஏன் முதலில் எழுதுகிறாய் என்கீறீர்களா???. சும்மா ஒரு ஜாலிக்கு. நான் சென்றவுடன் அதை தான் பார்த்தேன். விலையை கேட்டவுடன்
வெளியில் ஓடிவந்து விட்டேன், ஒரு வேர்கடலை பாக்கெட்டுடன்.

உள்ளே நுழைந்தேன் டிக்கெட் 5 ரூபாய், நடு மைதானத்தில் அரங்கம் அமைத்து இருந்தனர், கட்டை மற்றும் இரும்பு தகடுளின் உதவியுடன் கடைகளை பொட்டி பொட்டியாக பிரித்து இருந்தார்கள். காசுக்கு ஏற்றார் போல சிறிது, பெரிது, மிகப்பெரிது என்று பிரித்து இருந்தனர். வழக்கம் போல வரிசை இல்லாமல் நம்பர்கள் மாறி மாறி கடைகள் இருந்தது.

இந்த முறை போன முறையுடன் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்த்து புத்தகங்களின் விலைகளை அதிகப்படுத்தி தள்ளுபடி விலையில் கொடுத்தனர். சில கடைகள் போட வேண்டுமே என்று போட்டு இருந்தனர். உள்ளே சென்று பார்த்தால் இருந்தது கொஞ்ச புத்தகம், அதுவும் அந்த பதிப்பாளரே எழுதியது சொந்த கதைகள், சோக கதைகள். பதிப்பது இப்பொழுது குடிசை தொழிலாக மாறி வருகிறது, யார் வேண்டுமானால் பதிக்கலாம்.

மக்கள் டி.வி ஒரு கடை விரித்து ராமதாஸ் அவர்கள் எடிட்டராக இயங்கும் ஒரு புதிய தினசரி பத்திரிகையை இலவசமாக தந்துக் கொண்டு இருந்தனர், அதையே டெக்கன் க்ரோனிக்கலும் செய்தது.

சில பதிப்பகங்கள் வேறு வழியில்லாமல் மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். (படைப்பாளிகள் பஞ்சம் போல, நம் மன்ற படைப்பாளிகள் கவனிக்கவும்)

வழக்கம் போல கல்கியின் படைப்புகளை அடுக்கி வைத்து இருந்தனர், பொன்னியின் செல்வன், அலை ஒசை, பார்த்திபன் கனவு எல்லாம் புது புது அட்டையில் மின்னியது. அமரர் கல்கியின் சாதனை இது.

விசா பதிப்பகத்தில் வழக்கம் போல சுஜாதா ஐயாவிற்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கி இருந்தனர். அவரின் பல புதிய புத்தகங்கள் இருந்தது. 35, 45 65, 70 என்று வித விதமான விலையில் அதற்கேற்ற காகித தரத்தில்.
தொடர்ந்து பல வருஷங்களாக அவர் புத்தக கண்காட்சிக்கு வருவார், எப்பொழுது வருவார் என்று தெரியாமல், அவரை பார்க்க ஏங்கி, சரியாக கணித்து அவர் வராத நாட்கள் சென்று எத்தனையோ முறை ஏமாந்து இருக்கிறேன் .....வழக்கம் போல இந்த முறையும் ஏமாந்தேன்.

உயிர்மை பதிப்பகம் எனக்கு மிகவும் பிடித்த பதிப்பகம், காரணம் கேட்டால் சிரிப்பீர்கள். அதில் பதிக்கப்படும் புத்தகங்களின் முகப்பு அட்டையும், உள்ளே இருக்கும் காகிதத்தின் தரமும் என்னை மிகவும் கவர்ந்தது. விலை கொஞ்சம் அதிகம் தான், தமிழின் சில சிறந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் இங்கு கிடைக்கும். பார்த்தசாரதி, சுஜாதா, சல்மா, சாரு நிவேதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று பலர்.
நான் சென்று இருக்கும் பொழுது சாரு நிவேதாவும், உரிமையாளர் மனுஷ்யபுத்திரனும் இருந்தனர். (ரசிகர்களின் புத்தகங்களில் கையெழுத்திட)

இந்த முறை மனதை உறுத்திய விஷயம். அடியாள் என்று ஒரு புதிதாக ஒரு புத்தகம், அதன் அட்டையில் (ஒரு அரசியல் அடியாளின் உண்மை வாக்குமூலம்) என்று அவருடைய படத்துடன் இருந்தது, திருப்பி விலையை பார்த்தேன் 110 ரூபாய் என்று இருந்தது. அப்படியே வைத்து விட்டு பக்கத்தில் இருந்த திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன், பிரித்தேன் பொருளுரையுடன் இருந்தது விலை 15 ரூபாய்.

கண்காட்சிக்கு உள்ளே பஜ்ஜி கடை, காபி & டீ கடை, பழங்கள் கடை என்று ரயில்வே ஸ்டேசன் போல இருந்தது. இதில் என்ன காமெடி என்றால் மக்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் பஜ்ஜிக்காக நின்றனர், அதில் நானும் ஒருவன் (ஹி ஹீ ஹீ).

திடீர் என்று நம்ம தலை மணியா அவர்களின் நியாபகம் வந்து அவருக்கு மெசேஜ் அடித்தேன்.

“என்ன தல எப்படி இருக்கீங்க, நான் புத்தக கண்காட்சியில் இருக்கிறேன், நீங்க இங்கு வந்தீர்களா?”

தலையின் பதில் “புத்தக கண்காட்சியா? அப்படினா?” என்று அனுப்பி இருந்தார்.

அப்புறம் அடுத்த நாள் அவரிடம் போனில் பேசும் பொழுது

“என்னை பார்த்து எப்படி அந்த கேள்வியை நீ கேட்டாய்” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

நான் என்ன அப்படி கேள்வி கேட்டு விட்டேன்

“காரை வைத்திருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் ......” அந்த கேள்வியா கேட்டேன்.

“புத்தக கண்காட்சிக்கு வரவில்லையானு கேட்டேன்”.

அதற்க்கு நம்ம தல “உன்ன யாருடா ஜாங்கிரி கொடுக்க சொன்னது” என்று நம்ம கவுண்ட மணி ஸ்டைலில் அதையே கேட்டுக் கொண்டு இருந்தார்.

அதே போல நம்ம ஆதவனிடம் பேசும் பொழுது நான் புத்தக கண்காட்சிக்கு போனதை சொன்னேன், அவன் என்னிடம் கேட்டான்.

“அப்படியா நல்லது, சரி எனக்கு ஒரு உதவி செய்வாயா டா”

“சொல்லு”

“மறுபடியும் போகும் பொழுது எனக்கு கம்பராமாயண பொருளுரையோடு வாங்கி வருகிறாயா, நான் காசு அனுப்புகிறேன்”

“கம்பராமாயணம் தானே, இருந்தால் நான் வாங்கி வருகிறேன். யார் எழுதியது வேண்டும்”

”(அவன் சிரித்துக் கொண்டு) டேய் கம்பராமாயணம் யார் எழுதி இருப்பா, கம்பர் தான்:lachen001::lachen001::lachen001:. அவர் எழுதியது தான் வேண்டும்” என்று சிரித்தான்.

“(நானும் சிரித்துக் கொண்டு) இல்லடா எந்த பதிப்பகம் வேண்டும் என்று கேட்டேன்” எப்படியோ சமாளித்து விட்டேன்.

எனக்கு எப்பொழுது புத்தக கண்காட்சிக்கு சென்றாலும் ஒரு பழக்கம், இரண்டு முறை செல்வேன். முதல் முறை சென்று எல்லா புத்தகங்களை ஒரு நோட்டம் விட்டு, பிடித்ததை குறித்து கொள்வேன். வீட்டுக்கு சென்று
குறித்து வைத்த புத்தகத்தின் விலை யெல்லாம் கணக்கு செய்து என்னுடைய பர்ஸை சுடாத புத்தகங்களை மட்டும் வரிசை படுத்தி இரண்டாவது முறை சென்று வாங்கி விடுவேன்.

விலை அதிகம் காரணமாக நான் வாங்க நினைத்து வாங்காத புத்தகங்கள்

ஜெயமோகனின் ஏழாம் உலகம்,
சுஜாதாவின் குறுநாவல்களின் தொகுப்பு,
நாடகங்களின் தொகுப்பு,
ரத்தம் ஒரே நிறம்.
பார்த்தசாரதியின் குருதிப்புனல்.
சாரு நிவேதாவின் 0 டிகிரி,
வாலியின் சுயசரிதை என்றென்றும் வாலி,
ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு.

சரி வாங்கிய புத்தகங்கள்

வருச நாட்டு ஜமீன் அழிந்த கதை
மரபுப் பொறியியலில் மகத்தான முன்னேற்றம்
மலை மாளிகை (சுஜாதா)
சார்லி சாப்ளின் சுயசரிதை
பாதி ராஜ்யம் (சுஜாதா)
A-1 மூஸ்லிம் அசைவ சமையல்
கி.மு, கி.பி (மதன்)
மகான் ராமானுஜர்
6961 (சுஜாதா)
விரும்பி சொன்ன பொய்கள் (சுஜாதா)
பழங்குடிகளும் பழக்க வழக்கங்களும்
புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஒபாமா.

இது தான் நான் வாங்கி புத்தகங்களின் பட்டியல் 567 ரூபாய் ஆனது.

இளசு
16-01-2009, 08:19 PM
வாழ்த்துகள் தக்ஸ்..

டெல்லியிலும் மும்பையில் இல்லாத பெருமை
கொல்கத்தாவுக்கும் சென்னைக்கும் உண்டு -
அது அதிக நூல்கள், இதழ்கள் விற்பது!

உங்களைப்போல் நானும் இப்படி அள்ளி வருபவனே!
(ஆனால் கண்டவுடன் அதே இடத்தில்.)

இம்முறை சென்னையில் ஒரு கடையில் நான் கண்டவற்றில் மிகக்குறைந்த விலை நூல் -

காந்தியின் சத்தியசோதனை!

விலை குறைவு என்பதால், குறள் குறைந்துவிடுமா என்ன?

இரண்டடியார் பெருமையை எந்த அடியாளால் அடிக்க முடியும்????

(தலையின் குசும்பான குறுஞ்செய்தி - அவரின் தனி முத்திரை..!

இம்முறையும் சுஜாதா காணாமல் ஏமாந்தேன் - தக்ஸின் தனி முத்திரை!!)

மதி
17-01-2009, 02:44 AM
நல்லா போயிட்டு வந்திருக்கீங்க கண்காட்சிக்கு... என்னவோ எனக்கும் இந்த புத்தக கண்காட்சிக்கும் ஒத்தே வர்றதில்ல.. இதுவரை ஒரு கண்காட்சிக்கும் போனதில்ல..
அனுபவிங்கய்யா அனுபவிங்க..

தங்கவேல்
21-01-2009, 03:11 AM
தக்ஸ், முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்களே நியாயமா அய்யா ? கண்காட்சி கலர் கலரா அமைக்கப்பட்டிருந்ததாமே... ? அதைப் பற்றியெல்லாம் விலாவரியாக எழுதினால் அல்லவா கட்டுரை நிறைவு பெற்றிருக்கும்.

arun
21-01-2009, 06:26 PM
எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தாலும் இது வரை காசு கொடுத்து வாங்கியதே இல்லை அதனால் அங்கு எல்லாம் போய் பழக்கமே இல்லை :D

சூப்பர் பகிர்வு தக்ஸ் :icon_b:

arun
21-01-2009, 06:27 PM
தக்ஸ், முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்களே நியாயமா அய்யா ? கண்காட்சி கலர் கலரா அமைக்கப்பட்டிருந்ததாமே... ? அதைப் பற்றியெல்லாம் விலாவரியாக எழுதினால் அல்லவா கட்டுரை நிறைவு பெற்றிருக்கும்.

என்ன கலர்? இதுல ஏதும் உள்குத்து இல்லையே? :icon_rollout:

ரங்கராஜன்
22-01-2009, 03:20 AM
தக்ஸ், முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்களே நியாயமா அய்யா ? கண்காட்சி கலர் கலரா அமைக்கப்பட்டிருந்ததாமே... ? அதைப் பற்றியெல்லாம் விலாவரியாக எழுதினால் அல்லவா கட்டுரை நிறைவு பெற்றிருக்கும்.

வணக்கம் தங்கவேலு ஐயா
என்ன கலர்? புரியவில்லையே. நீங்கள் குறிப்பிட்ட கலர், நான் அர்த்தம் பண்ணிய கலர் என்றால் அதற்கு பதில், “அப்படி ஒண்ணு கலரா இல்லை, எல்லாம் பிளாக் & ஒயிட் தான்”. ஆனால் நீங்கள் கூறிய கலர் இதுவல்ல என்று எனக்கு தெரியும்

ரங்கராஜன்
22-01-2009, 03:24 AM
எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தாலும் இது வரை காசு கொடுத்து வாங்கியதே இல்லை அதனால் அங்கு எல்லாம் போய் பழக்கமே இல்லை :D

சூப்பர் பகிர்வு தக்ஸ் :icon_b:

நன்றி அருண்
உண்மையில் உங்களை போல தான் நானும், முன்பு காசு கொடுத்து வாங்கிப் படிக்க யோசிப்பேன். ஆனால் ஓ.சியில் வாங்கி படித்தால் அதில் ஒரு ஆர்வம் இருப்பதில்லை. காசு கொடுத்து வாங்கினால், காசு கொடுத்து வாங்கி இருக்கிறமே என்று ஆர்வமா படிக்க வருது. அதான் காரணம்.

ஓவியன்
24-01-2009, 10:24 AM
தக்ஸ், புத்தகங்களில் அபரிமிதமான காதலை வைத்திருந்திருக்கின்றேன்...

என்ன செய்வது, நான் புத்தகங்கள் வாங்க கூடிய இடத்தில் இருக்கையில், நான் புத்தகங்களை வாங்கும் நிலையில் இருக்கவில்லை...
இப்போது நான் புத்தகங்களை வாங்கும் நிலையில் இருக்கையில், நான் புத்தகங்களை வாங்கும் இடத்தில் இல்லை....

நான் சென்ற வருடம் சிங்கைக்கு சென்ற போது அள்ளி வந்தவற்றில் புத்தகங்களே அதிகம், சிங்கையிலேயே இத்தனை தமிழ் புத்தகங்களென்றால் சென்னையில் எத்தனை புத்தகங்கள் இருக்குமென ஏங்கியிருக்கின்றேன்....
அந்த ஏக்கத்தை இன்னும் அதிகரித்துள்ளது உங்கள் பதிவு...

நல்ல பதிவு தக்ஸ், அத்துடன் நான் இன்னுமொரு தகவலைச் சொல்லியே ஆக வேண்டும்...
இங்கே ஓமானில் ஒரு தமிழக நண்பரைக் கண்டேன், எதோ பேச்சுவாக்கில் கம்பராமயணம் பற்றிப் பேசுகையில் 'ஓ' வைரமுத்து எழுதிய புத்தகமா என்று அவர் கேட்டு வைக்க என்னிடம் அதற்குப் பதிலே இருக்கவில்லை ஆதவனைப் போலவே... :D:D:D

Keelai Naadaan
24-01-2009, 04:18 PM
நானும் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். சில புத்தகங்கள் வாங்கினேன்.

தினமும் மாலையில் பெரியோர்கள் சிறப்புரை ஆற்றியதைப் பற்றியும் சொல்ல வேண்டும்.நான் சென்றிருந்த போது சுகிசிவம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

சில வருடங்களுக்கு முன்பு புத்தக கண்காட்சியில் தென்கச்சி கோ. சாமிநாதன் அவர்களும், ஜெயகாந்தன் அவர்களும் பேசியதை கேட்க வாய்ப்பு கிடைத்தது.

உண்மையில் அத்தனை புத்தகங்களையும் பார்த்த போது எதை வாங்க எதை விட என்று மனசு தடுமாறியது.

ரங்கராஜன்
24-01-2009, 04:49 PM
நானும் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். சில புத்தகங்கள் வாங்கினேன்.

தினமும் மாலையில் பெரியோர்கள் சிறப்புரை ஆற்றியதைப் பற்றியும் சொல்ல வேண்டும்.நான் சென்றிருந்த போது சுகிசிவம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

சில வருடங்களுக்கு முன்பு புத்தக கண்காட்சியில் தென்கச்சி கோ. சாமிநாதன் அவர்களும், ஜெயகாந்தன் அவர்களும் பேசியதை கேட்க வாய்ப்பு கிடைத்தது.

உண்மையில் அத்தனை புத்தகங்களையும் பார்த்த போது எதை வாங்க எதை விட என்று மனசு தடுமாறியது.

என்னங்க சொல்லறீங்க நானும் சுகிசிவம் பேசும் பொழுது அங்கதான் இருந்தேன்.

சிவா.ஜி
24-01-2009, 04:57 PM
மிக நல்ல பதிவு தக்ஸ். கண்டதை சுவாரசியம் குறையாமல் மிகுந்த சுவையோடு எழுத்தில் வடிக்க எல்லோராலும் முடியாது. அந்தக் கலையில் நீங்கள் விற்பன்னர். சென்னை சங்கமும் இப்போது இந்த புத்தக கண்காட்சியும் தெரிவிக்கிறது உங்கள் திறமையை.

எனக்கும் புத்தகங்களோடு மிகக்காதல். ஒவ்வொருமுறையும் ஊருக்கு வந்து திரும்பும்போது வாரிக்கொண்டு வருவேன். விகடன் பிரசுரத்தின் அத்தனை புத்தகங்களும் என்னிடம் உள்ளன. புதிய புத்தகம் பிரசுரிக்கும்போது அவர்களே எனக்கு தபாலில் தெரிவிப்பார்கள். அந்தளவுக்கு தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளன்.

இந்தமுறை சென்னை விமானநிலையித்திலிருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன். சாரு நிவேதிதா, சுஜாதா மற்றும் ராஜேஷ்குமார் எழுதியவை. சுஜாதா சார் என் ஆதர்ச எழுத்தாளர் எப்போதுமே...!!

பகிர்வுக்கு மிக்க நன்றி தக்ஸ்.