PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 6



rambal
06-09-2003, 11:54 AM
விதண்டாவாத சிந்தனைகள்:

வெளியில் மழை.. உள்ளே இறுதி ஆண்டு பரீட்சை.. பரீட்சை எழுதாமல் பரீட்சை அறையை விட்டு
வெளியில் வந்து மழையில் நனைந்ததுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

உயரமான இடத்தில் தொடுக்கிக் கொண்டு நிற்கும் பாறை.. அதில் அமர்ந்து காலை தொங்கப் போட்டுக் கொண்டு
யிரம் அடி பள்ளத்தை வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துவிட்டு கீழே குதிக்கலாமா? வேண்டாமா?
என்று காசை சுண்டி போட்டு பார்த்ததுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

கால்களில் கயிறைக் கட்டிக் கொண்டு மொட்டைமாடியில் இருந்து பங்கி ஜம்பிங் செய்கிறேன் என்று
காம்ப்பவுண்ட் சுவற்றில் முகத்தை முட்டி மோதிய அனுபவம் உண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

இரவு பதினொரு மணிக்கு லேடிஸ் ஹாஸ்டல் சுவர் ஏறிக் குதித்து, பிடிக்காத பெண்ணின் அறையில்
போட வேண்டிய காலியான பியர் புட்டியை வார்டன் அறையில் போட்டுவிட்டு மாட்டிக்கொண்ட
அனுபவம் ஏதும் உண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

பதிமூன்று வயதில் தேவர் குலப்பெண் ஒருத்திக்கு காதல் கடிதம் கொடுத்து ஊரே திரண்டு
வெட்ட வந்து ஓடிப் போனதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

அமைதியான பள்ளிக்கூடத்தில் அனைத்து மாணவர்களும் படித்துக் கொண்டிருக்கையில் ஆயிரம்வாலா சரவெடி கொளுத்திப் போட்டு தலைமை சிரியரிடம் அடி வாங்கியதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

12 வயதில் நீலப்படம் பார்த்து வீட்டில் அடி வாங்கியதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

பதினாறு வயதில் இருபத்தியிரண்டு வயதுப் பெண்ணிற்கு (அல்லது) வயது மூத்த பெண்ணிற்கு
உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

காதலித்த பெண்ணின் தோழியையும் காதலிக்கிறேன் என்று ஓரங்கட்டிய அனுபவம் உண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

முன்னால் வரிசையாக பெண்கள்.. இறுக்கமான ஜீன்ஸ், மற்றும் இறுக்கமான டீ சர்ட்.
பின்னால் அமர்ந்து பிதுங்கிக் கொண்டு தெரியும் அவர்களின் பேண்டீஸை வரைந்து விட்டு
மை பாய்ண்ட் ப் வ்யூ என்று சண்டை போட்டதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

பேஸன் ஷோவில் பாலீதீன் பையில் உடை தைத்து உள்ளே போட்டிருக்கும் உள்ளாடை வரை
தெரிய போஸ் கொடுத்து பெண் நடுவர்களை கலங்கடித்த அனுபவம் உண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

புருவத்தில், மூக்கில், காதில் வளையங்களும் பத்து விரல்களிலும் வித விதமான மண்டை ஓடு மோதிரங்கள்
சகிதமாக அரைக்கால் பேண்ட்டோடு (மேலே சட்டை ஏதும் அணியாமல்) காலேஜிற்கு சென்று பாடம் படித்ததுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

வேதியியல் பாடம் எடுக்க வந்த பெண் லெக்சரருடன் ஓடிப்பிடித்து விளையாடியதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

சம்பந்தமில்லாத பௌதீகதுறை HOD யை கமெண்ட் அடித்து வாங்கிக் கட்டியதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

கஞ்சா அடித்து விட்டு வகுப்பறையில் நாள் முழுதும் சிரித்து யாரையும் பாடம் எடுக்கவிடாதபடி செய்ததுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

ஸ்டிரைக் என்று கல்லூரி பேருந்தை கொளுத்தியதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

சக மாணவிகள் எல்லோரையும் கற்பழித்துவிடுவேன் என்று மிரட்டியதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

கையில் மல்லிகை சரமும் மல்லு வேட்டியும் கட்டிக் கொண்டு உங்கள் துறையைச் சார்ந்த HOD யை படுக்கைக்கு
அழைத்ததுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

முதலாம் ஆண்டு படிக்கும் பொழுதே மூன்றாம் ஆண்டு மாணவியோடு சேர்ந்து படம் மற்றும் பார்க் என்று சுற்றியதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

காதலித்தவளை கர்ப்பமாக்கிவிட்டு டி அண்ட் சி பண்ணிக் கொள் என்று அலட்சியமாய் சொன்னதுண்டா?

( ) ஆம். ( ) இல்லை.

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் இந்த நாவலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

( ) ஆம். ( ) இல்லை.

இங்கு மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்பது உங்கள் பதில் என்றால் இந்த நாவலை தொடர்ந்து படிக்கவும்..
இல்லை என்பது உங்கள் பதில் என்றால், நீங்கள் வேறு ஏதாவது உருப்படியான காரியத்தை செய்யப்போகலாம்..

பின்குறிப்பு: இல்லை எனும் பதிலுக்குரியவர்கள் மேலே இருப்பது போன்ற பைத்தியக்காரத்தனங்களை
முயற்சி செய்து பார்க்கவேண்டாம்.. அப்படி முயற்சி செய்தால் அதற்கு நானோ எனது இந்த நாவலோ பொறுப்பேற்காது..

இக்பால்
07-09-2003, 01:50 PM
ஒன்றிரண்டு கேள்விகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் இல்லை
என்பதே என் பதிலாக இருந்தாலும், பெரும்பாலும் கேள்விப்பட்ட
நிகழ்ச்சிகளே கேள்விகளாக இருப்பதால் நாவலைத் தொடரப்
போகிறேன். -அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
07-09-2003, 03:10 PM
இந்த கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் (இந்த நாவலின் ஆசிரியர் என்றில்லாது) எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள ஆசை...
விதண்டாவாதம் என்று தலைப்பில் கூறியிருப்பதால் உங்களின் பதில்கள் எப்படியிருக்கும் என கேட்கிறது மனது...

rambal
09-09-2003, 02:15 PM
இதில் நான் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்திற்கும் என் பதில் ஆம்..
ஒரே ஒரு கேள்வியைத் தவிர..
அது..
இறுதிக்கேள்விக்கு முந்தின கேள்வி...

பாரதி
09-09-2003, 02:29 PM
அன்பு ராம்பால்,
3 தின விடுமுறைக்குப் பின் இன்றுதான் மன்றம் வந்தேன். நீங்கள் கேட்ட கேள்விகளில் கடைசி கேள்விக்கு பதில் தெரியவில்லை. மற்ற எல்லா கேள்விகளுக்கும் "இல்லை" என்பது என் பதில். இல்லை என்று சொல்வதால் உங்கள் தொடரை படிக்கவா, வேண்டாமா என்ற கேள்வியே எனக்கு எழவில்லை. கண்டிப்பாக படிக்கப்போகிறேன்.

இக்பால்
09-09-2003, 04:52 PM
ராம்பால் நண்பரே...எல்லா கேள்விகளுக்கும் இல்லை என பதில்
இருந்தாலும் படிக்கலாமா? அப்புறம் ஏன் அப்படி சொன்னீர்கள்?
-அன்புடன் அண்ணா.