PDA

View Full Version : நூறு ரூபாய் நோட்டுumakarthick
16-01-2009, 09:31 AM
சம்பவம் 1:

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு செவ்வாய் கிழமை இரவு கோவையில் இருந்து நண்பர்கள் வர அவர்களை மகிழ்விக்க தாம்பரம் ஒயின் ஷாப்பில் கெட் டுகுதர் போட்டோம். வாங்கிய சரக்குகள் எல்லாம் 2 வது ரவுண்டிலே காலியாக மீண்டும் சரக்கு வாங்க விருந்தோம்பல் அளித்து கொண்டிருந்த என்னையே நண்பர்கள் அனுப்பினார்கள்...


சரி என்று முன் பக்கத்திலிருந்த ஒயின் ஷாப்பில் போய் (கழுத்தில் டையுடன்,காலில் ஷீவுடன், டக் இன்னோடு) 'அண்ணே ஜான் எக்சா ஒரு 1/4 , ஆர் சி (RC) ஒரு 1/2' ன்னு கேட்டப்போ ..என் பின்னாடி யாரோ தொட்டு தொட்டு கூப்பிட்டாங்க..எவண்டா அவன்னு திரும்பி பார்த்தா..ஒரு குடிமகன் லுங்கியோடு ..கண்ணுல ஏற்கனவே புல் அடிச்ச வெறியோட நின்னிட்டு இருந்தான்.என்ன என்பது போல் நான் பார்க்க, 'பாஸ் கட்டிங்க்கு 5 ரூபா குறையுது , ப்ளீஸ் பாஸ்' , என கெஞ்ச ..நான் திரும்பி கொண்டேன்..'அண்ணே சீக்கிரம் கொடுங்க'
என கடைக்காரரை நான் அவசர படுத்த, அந்த லுங்கி மறுபடியுன் என்னை பிராண்டினான்..

'அண்ணே பிளீஸ் ன்னே 5 ரூ மட்டும் போதும்னே ' , என அவன் கெஞ்ச ..ஏற்கெனெவே ஒரு 1/4 உள்ளே போயிருக்க எனக்கு கண்ணில் பூச்சி பறந்து கொண்டிருந்தது ..'ஒரு குடிமகனை ஒரு குடிமகனால் தான் புரிந்து கொள்ள முடியும்' என்ற தத்துவத்தை மனதில் வைத்து அவனுக்கு 10 ரூபாய் கொடுத்தேன்..

அவன் காலில் விழுந்து தொட்டு கும்பிடுவது ஆக்சன் பண்ணி ,பெட்டிக்கடைக்கு ஓடினான் , அங்கே தான் கட்டிங் கிடைக்கும்.

சம்பவம் 2:


கடந்த வாரம் திங்கள் கிழமை இரவு ஆபிசிலிருந்து வீட்டுக்கு போகும் போது செம டயர்டாக இருக்க தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி , சேர் ஆட்டோ கிடக்குமா என் நின்றிருந்தேன்...ஓரிரண்டு ஷேர் ஆட்டோக்கள் போனாலும் எவனும் நிப்பாட்ட வில்லை..ஒரு ஷேட் ஆட்டோ காலியாக மிக வேகமாக வந்தது.கைக்காட்டி தான் பார்ப்போமே என கைகாட்ட அவனும் நிப்பாட்ட நானும் ஏற..அவனும் வேகமாக ஒரு பஸ்ஸை கவுதம் மேனன் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே முன்னேற அப்போது தான் கவனித்தேன் அட பாவிகளா சரக்கு போட்டிருக்காங்க செம வாடை அடிக்குதே..என்னை தவிர யாருமில்லை ஆட்டோவில், டிரைவர் பக்கத்தில் ஒருத்தன் அவன் தோள் மேல் கை போட்டு உட்கார்ந்திருந்தான்...குடிகார நண்பனாய் இருக்க கூடும்..

என் வீட்டருகே இருந்த பெட்ரோல் பல்க்கில் ஆட்டோ நுழைய சரி இங்கிருந்தே 10 ஸ்டெப் தான் எதுக்கு இவங்க பெட்ரோல் போடுற வரைக்கும் காத்திருக்கனும் என இறங்கி 5 ரூபாய் கொடுத்தேன்..அந்த டிரைவர் அதை வாங்கி பார்த்து விட்டு 7 ரூபாய் கொடு என்றான்..எதுக்கு 7 ரூபாய் பஸ் ஸ்டாண்டில தான ஏறினேன் எப்பவும் 5 ரூபா தானே வாங்குவீங்க என கேட்க , அவன் பக்கத்திலிருந்த குடிகார நண்பன் டிரைவரிடம் சரி விடு 5 ரூபா வாங்கிக்க என சொல்லி பார்க்க ..டிரைவர் ஒத்துக்கொள்ள வில்லை..என்னிடமோ 5 ரூபாய் தவிர வேறு சில்லரை இல்லை..100 ரூபாய் நோட்டு மட்டும் தான் இருந்தது

அண்ணா என்கிட்ட சேஞ்ச் இல்லை 100 ரூபா தான் இருக்கு என பாவமாய் சொல்ல..சரி கொடு சில்லரை தரேன்னு அதை வாங்கிட்டு அவன் சட்டைபாக்கெட்டுக்குள் கை விட்டு தேடினான்.நான் அப்போது என் பர்ஸை பாக்கெட்டில் வைத்துக்கொண்டிருக்க திடீரென அவன் ஆட்டோவை கிளப்பினான் வேகமாய் முறுக்கி விரட்டினான்..நான் பின்னாடியே 5 ஸ்டெப்ஸ் ஓடினேன்..அதுக்கு மேல முடியல..அதிர்ந்து போய் நின்ற்று கொண்டிருந்தேன்...அப்போது தான் எனக்கு நியாபகம் வந்தது 'அட இவன் அவன்லா!!!'

ஆமாம் இவன் அவன் தான் , இவன் தான் அன்று கட்டிங்காக என்னிடம் 5 ரூபாய் கேட்டவன்..அடப்பாவி என வீட்டுக்கு நடைக்கட்டினேன்..


நீதி :

நீங்க தான் சொல்லனும்!!!!

Mathu
16-01-2009, 03:15 PM
5 இக்கு 10 குடுத்த குடிமகன் ஆச்சே நீங்க இப்பொ 10 இக்கு 100 தந்திருக்கீங்க
என்று நினைத்திருப்பான்.
இல்ல காலில் விளுந்ததுக்கும் சேர்த்து இப்போ கறந்திருப்பான்,

இளசு
16-01-2009, 08:28 PM
கட்டிங் போட்டால் நினைவுச் சக்தியும் கட்டிங் ஆகும்!

காலில் விழுவதானாலும், கழுத்தை அறுப்பதானாலும்
கட்டிங் காசு தேற்ற மனது பதறும்போது..
அப்போது எது தோதோ அதைச் செய்யலாம்!

பசிக்குச் சோறிடுவதும்
வெறிக்குச் சாராயம் ஊற்றுவதும்
சமமா?

பாத்திரமறிந்து பிச்சையிடு..!

---------------------------

பாராட்டுகள் கார்த்திக்!

dellas
04-08-2015, 07:10 AM
நீதி : 'குடித்தபின்' குடி-மகன்களுக்குள் பேதமில்லை.

ravisekar
04-08-2015, 05:08 PM
மதுவுக்கு எதிராய் போராட்டங்கள் வலுத்துவரும் காலத்துக்கு பொருத்தமான கதை.

உமாகார்த்திக்கு பாராட்டுக்கள்.