PDA

View Full Version : டி-ஷர்ட் வாசகங்கள்



umakarthick
16-01-2009, 09:30 AM
பொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .


இனி வாசகங்கள் :



முதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :



#டாஸ்மாக் எந்த பக்கம் ?
#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்!!
#இலவு காத்த கிளி கதை தெரியுமா?
#ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி
#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்
#நான் குடிச்சாதான் பிளாக் எழுதுவேன்
#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர
#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான் :-(
#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....
#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்
#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை
#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை
#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்??
#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்
#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .
#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )
#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்
#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா
#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்!!
#உங்களுக்கு எத்தனை குழந்தைகள்
#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்
#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா
#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்
#இது எங்கப்பன் வூட்டு சொத்து
#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க
#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி
#என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா
சுண்டல் வாங்கி தரலாம் .
#குருவிக்கும் குசேலனுக்கும் என்ன சம்பந்தம்



பெண்களுக்கான வாசகங்கள் சில :

#லூசாப்பா நீ
#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்
#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்
#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க
நெனச்சிக்கோ
#பிஞ்ச செறுப்ப பாக்கணுமா
#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்
#நீங்க தனியா வந்துருக்கீங்களா?
# அவனா நீ?
#நீங்க ஜொள்வடிச்சான் பட்டியா?
#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை
#தீப்பெட்டி இருக்கா ? - விளக்கேத்தரதுக்குடா
#ஹாய் செல்லம்?
#என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு
#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா?




சில பொதுவானவை :



#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா?

#மச்சி நீ கேளேன்

#LORD MURUGA IS MY FAVOURITE TAMIL GOD

#மனித வெடிகுண்டு . எண் ; 666

#அல்வாடா புஜ்ஜி

#கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)

#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )

#போலீஸ் என் நண்பன் :-)

#எனக்கு தமிழ் தெரியாது


பின்குறிப்பு;

நேற்று வலையில் மேய்ந்த போது இதை படித்தேன் ..சூப்பராய் இருந்தது..உங்களுக்காக இங்கே நிறைய சென்சார் செய்து போட்டிருக்கேன்..ஒரிஜினல் படிக்க இங்கே போங்க
http://www.athishaonline.com/search/label/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

இளசு
16-01-2009, 08:47 PM
நல்ல கலாய்ப்பான தொகுப்பு..

பல முறுவல் வரவைத்தன..

பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்திக்..

ரங்கராஜன்
17-01-2009, 03:48 AM
நல்லா தான் இருக்கு

ஆதவா
17-01-2009, 05:48 AM
இந்த டீ-சர்ட் வாசகங்களைக் காட்டிலும் பெரிய அவமானம் வேறு ஏதுமில்லை.. அதை பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுதுவார்கள்.

இவையெல்லாம் திரும்பிப் பார்க்கவைக்கும் உத்தி. நான் வடிவமைத்தவை எல்லாம் இதுவரையிலும் A ரகம்.. அதாங்க.. அடல்ட்ஸ் ஒன்லி ரகம்.. இங்கே சில வாசகங்கள் ரசிக்க வைக்கின்றன... சில முகம் சுளிக்க வைக்கின்றன...

ரங்கராஜன்
17-01-2009, 06:40 AM
.

இவையெல்லாம் திரும்பிப் பார்க்கவைக்கும் உத்தி. நான் வடிவமைத்தவை எல்லாம் இதுவரையிலும் A ரகம்.. அதாங்க.. அடல்ட்ஸ் ஒன்லி ரகம்.. இங்கே சில வாசகங்கள் ரசிக்க வைக்கின்றன... சில முகம் சுளிக்க வைக்கின்றன...

ஆதவாவையே முகம் சுளிக்க வைத்த வாசகங்களா:sprachlos020::sprachlos020::sprachlos020:? என்னப்பா அது?

ஆதவா
17-01-2009, 07:01 AM
ஆதவாவையே முகம் சுளிக்க வைத்த வாசகங்களா:sprachlos020::sprachlos020::sprachlos020:? என்னப்பா அது?

அவசியம் சொல்லணுமா??? எதுக்கும் ஒருதரம் படிச்சுடுப்பா.. :wuerg019:

umakarthick
19-01-2009, 06:22 AM
ஆமாம் நான் சென்சார் செய்து தான் போட்டிருக்கிறேன் அப்படியும் முகம் சுளிக்க வைக்கும் வாசகங்கள் இருக்கிறதா??

இது கடந்த வார யூத் விகடனில் கூட வந்தது..

நல்ல கற்பனை ..இந்த எழுதிய அதிஷாக்கு தான் எல்லா வாழ்த்துக்களும் சேரும்

arun
19-01-2009, 09:37 PM
நல்லா தான் யோசிச்சி இருக்கீங்க ரசிக்கும்படி இருக்குறது