PDA

View Full Version : தளத்தினுள் நுழைய முடியவில்லை



ரங்கராஜன்
16-01-2009, 05:13 AM
வணக்கம் நண்பர்களே
எனக்கு பல வாரங்களாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது, அதாவது பல நேரங்களில் என்னால் தளத்தினுள் நுழைய முடியவில்லை, காரணம் என்னவென்று தெரியவில்லை. சில பெரியவர்களிடம் கேட்டேன், பதில் கிடைக்கவில்லை (அல்லது) பதில்கள் புரியவில்லை. பிரச்சனையை சரி செய்வார்கள் என்று காத்து இருந்து, காத்து இருந்து வெறுத்து விட்டேன். அதனால்

1. நண்பர்களே, உங்களில் யாராவதற்கு இந்த பிரச்சனை இருக்கிறதா?

2. இந்த பிரச்சனை மன்றத்திலா? அல்லது என் கணினியிலா?

3. சில நேரங்களில் நுழைய முடிகிறது, பல நேரங்களில் முடியவில்லை? ஏன்?

தயவு செய்து உறுப்பினர்களாவது தீர்த்து வையுங்கள்.

அமரன்
16-01-2009, 07:35 AM
இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி மூர்த்தி. நீங்கள் என்ன உலாவி உபயோகிக்கிறீர்கள். எந்த உலாவியை உபயோகிக்கும்போது இப்படி நடக்கிறது. அன்னமாதிரியான பிழைச்செய்தி வருகிறது. வீட்டில் இருக்கும்போதா அல்லது அலுவலகத்தில் இருக்கும்போதா இரு இடத்திலுமா இந்நிலை. இப்படி சில தகவல்களை தாருங்கள். ஏற்கனவே உங்கள் பிரச்சினையைக் கவனிக்கும் நிர்வாகிகளுக்கு, நிறுவனருக்கு அவற்றை எடுத்துச்சென்று கொடுக்கிறேன்.

ஓவியன்
16-01-2009, 07:45 AM
தக்ஸ்..!!

அத்துடன் உங்கள் கணினியில் மட்டும் தான் பிரச்சினையா, இல்லை உங்கள் பயனாளர் கணக்கில் பிரச்சினையா...??

உங்களுக்கு மட்டும்தான் பிரச்சினையா, இல்லை இன்னும் பலருக்கா...??

புரொக்ஸிகள் மூலம் உள்ளே நுளைய முடிகிறதா, இப்போது எப்படி உள்ளே நுளைய முடிந்தது...??

எல்லாவற்றுக்கும் பதிலளித்தால் விடை காண இலகுவாக இருக்குமே..

அறிஞர்
16-01-2009, 02:24 PM
பல இடங்களில் இருந்து வருபவர்களிடம் விசாரித்தேன்.... யாருக்கும் அந்த பிரச்சனையில்லை என்றார்கள்.

சிலருக்கு அவர்களுடைய இணைய வசதி கொடுப்பவர்களால்.. சில பிரச்சனை வருவதாக கூறினார்கள்..

IE, Firefox உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சனையில்லையே..

ரங்கராஜன்
16-01-2009, 03:37 PM
நன்றி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகி-க்கு

அமரன் மொட்டையாக சொல்லாமல் கொஞ்சம் முடியை வைத்துக் கொண்டே சொல்கிறேன்.

நான் உபயோகிப்பது internet explorer

அதில் வரும் பிழைச் செய்தி page cannot display

வீட்டில் இருக்கும் பொழுது தான் இந்த பிரச்சனை.

ஓவியன் கேள்விகளுக்கு

என் கணிணியில் மற்ற எல்லா தளமும் ஒழுங்காக வருகிறது. அப்புறம் என் பயனாளர் கணக்கில் என்ன பிரச்சனை? புரியவில்லை.

மற்றவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதா என்று எனக்கு தெரியாது, அவர்கள் இந்த திரியை பார்த்து விட்டு சொன்னால் தான் தெரியும்.

ப்ராக்ஸி நான் இது வரை உபயோகித்தது இல்லை.

இப்போ எப்படி நுழைய முடிந்தது?

இது தான் என்னுடைய கேள்வி, நீங்கள் என்னை திரும்பி கேட்கிறீர்களே, நியாயமா?

அன்புரசிகன்
16-01-2009, 04:08 PM
உங்கள் IE ன் குக்கீஸை நீக்கிவிட்டு பாருங்கள். இல்லை என்றால் நெருப்பு நரியாலும் ஒருமுறை முயன்றுபாருங்களேன்... இப்போது எவ்வாறு வந்தீர்கள்???

இளசு
16-01-2009, 08:50 PM
இப்போது மன்றம் வரமுடிகிறதா தக்ஸ்?

சில சமயம் எனக்கும் இப்படி ஆனதுண்டு..தன்னாலே சரியானதுண்டு..

அன்பு சொன்னதுபோல் செய்துபார்க்கவும்..

அன்புரசிகன்
17-01-2009, 02:26 AM
சில அதிசயங்கள் எனக்கும் இங்கு நிகழ்வதுண்டு. IE மூலம் வரும் போது can not display என்று வரும். நெருப்பு நரிமூலம் வரும் போது சரியாக வரும். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எனது கணினியில் remember password ஐ தெரிந்துவைத்திருக்கிறேன். முன்பெல்லாம் கடவுச்சொல் கேட்க்காது. இப்போது சிலவேளைகளில் கடவுச்சொல் கேட்க்கிறது. cookies setting or session ல் ஏதாவது மாற்றங்கள்??? session மாற்றங்களால் பிரச்சனை வராது என்பது எனது எண்ணம்.

மதி
17-01-2009, 02:45 AM
எனக்கும் அவ்வப்போது இது மாதிரி ஆனதுண்டு. ஆனா சில மணிநேரங்களிலேயே சரியாகிவிடும்.

ரங்கராஜன்
17-01-2009, 03:53 AM
இப்பொழுது வர முடிகிறது, இது என்னுடைய ip problem தான், ஒரு முறை நண்பன் வீட்டில் இருந்து மடிக்கணிணியை உபயோகித்தேன், அப்பொழுது அவனுடைய address-ஐ உபயோகித்தேன். அதை மாற்றவே இல்லை இப்பொழுது தான் ஞாபகம் வந்தது, மாற்றி விட்டேன் இப்பொழுது மன்றம் வரமுடிகிறது. அதனால் இது முற்றிலும் என்னுடைய தவறு தான் என்பதை மன்ற உறவுகளுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன், மன்னிக்கவும். உதவி கேட்டவுடன் வந்து தீர்த்து வைத்த அமரன், அறிஞர், ஒவியன், அன்பு, இளசு அண்ணா, மதி அனைவருக்கும் என் நன்றிகள்.

அக்னி
17-01-2009, 10:02 AM
புரியவில்லை daks...
உங்கள் இணைய இணைப்பைக் கொடுத்தவுடன் தன்னாலாகவே IP மாறிவிடாதா?
கொஞ்சம் விரிவாகச் சொன்னால், எதிர்காலத்தில் யாருக்கேனும் பிரச்சினை ஏற்படுகையில்,
எடுத்துக்கூற ஏதுவாக இருக்கும்.

ரங்கராஜன்
17-01-2009, 12:25 PM
புரியவில்லை daks...
உங்கள் இணைய இணைப்பைக் கொடுத்தவுடன் தன்னாலாகவே IP மாறிவிடாதா?
கொஞ்சம் விரிவாகச் சொன்னால், எதிர்காலத்தில் யாருக்கேனும் பிரச்சினை ஏற்படுகையில்,
எடுத்துக்கூற ஏதுவாக இருக்கும்.

நான் இத்தனை நாள் உபயோகித்த dns number மற்றும் ip address நண்பனுடைய இணைய விபரங்கள், இத்தனை நாள் அதாவது கொஞ்ச வாரமாக பிரச்சனை இருந்தது. நான் என்னுடைய இணைய customer care-ஐ தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர்கள் வேறு dns number மற்றும் ip address -ஐ தந்தார்கள், அதாவது என்னுடைய உண்மையான இணைய விபரங்கள். அதன் பின் என்னால் மன்றம் உள் வர முடிந்தது.............. தாங்க்ஸ் டீ அஸ்வினி ஹேர் ஆயில், சாரி சாரி மன்னிக்கனும். ஒரு ஃப்லோல வந்துவிட்டது.

அக்னி
17-01-2009, 12:46 PM
விளக்கத்திற்கு நன்றி daks...
அரட்டைப் பகுதியை ஒருக்கா எட்டிப் பாருங்கோ...

சூரியன்
19-01-2009, 08:03 AM
எனக்கும் முன்பு இந்த சிக்கல் இருந்தது இப்போது இல்லை.


புரொக்ஸிகள் மூலம் உள்ளே நுளைய முடிகிறதா, இப்போது எப்படி உள்ளே நுளைய முடிந்தது...??
அதன் மூலம் சில சமயங்களில் உள்நுழைய முடிவதில்லை