PDA

View Full Version : சென்னை சங்கமம்



ரங்கராஜன்
16-01-2009, 05:00 AM
சென்னை சங்கமம்

வணக்கம் நண்பர்களே,
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் இருக்கும் நடேசன் பார்கில் சென்னை சங்கமம் விழா நடந்தது, என்னுடைய பெரியம்மாவின் வற்புறுத்தலின் பெறில் நானும் அந்த விழாவுக்கு
போனேன், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் வேண்டா வெறுப்பாக தான் போனேன். ஆனால் அங்கு போனவுடன் அனைவரையும் போல என்னையே நான் மறந்து விட்டேன். விழா நடந்த
அந்த தெருவே திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கூட்டம் என்றால் கூட்டம் அவ்வளவு கூட்டம், இலவச டி.வி-க்கு நிற்பதை விட அதிகமாக நின்றார்கள்.

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009222.jpg

முதலில் நடேசன் பூங்காவிற்கு சென்றேன், மேடை போல அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு இருந்தார்கள், கிராமிய பாடல்கள் பாடினார்கள், கிராமிய வாத்தியங்கள் வாசித்தார்கள், கடைசியாக பொது மக்களின் விசில் சத்ததிற்கு நடுவில் மேடை ஏறினார் அந்த பாடகி, தன்னுடைய கவர்ச்சியான குரலில் பாடலை பாட ஆரம்பித்தார்,

“ஊரோர புளிய மரம்
உசிப்பி விட்ட சலசலக்கும்
நான் பொறந்த மதுரையிலே ”

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009208.jpg

என்று பாடினார் பருத்திவீரன் புகழ் சரோஜா பாட்டி. அதில் ஆடுவது போல கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தார். கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. சுருதி மாறாமல், பிசக்காமல், சினிமாவில் கேட்பது போலவே பாடினார். பல இளசுகள் மேடை அருகே ஆடமே போட்டார்கள்.

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009226.jpg

வெளியே தப்பு இசைக் கருவியின் இசை என்னை ஈர்த்தது, ஒடிச் சென்று பார்த்தேன். ஆறு பேர் கொண்ட குழு தப்பை அடித்துக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள், அந்த குழுவின் நடுவில் ஒருவன் மட்டும் வித்தியாசமாக இருந்தான், ஏனென்றால் கிராமிய கலைஞர்கள் அனைவரும் தமிழின் நிறத்தில் கறுப்பாக இருந்தனர், நடுவில் இருந்தவன் மட்டும் வெள்ளையாக இருந்தான். அப்புறம் தான் ஒரு அதிர்ச்சி
அவன் வெளிநாட்டவன் என்று தெரிந்தது, அதன் பின்னும் ஒரு அதிர்ச்சி அவன் ஆண் அல்ல பெண். அவள் அவ்வளவு அழகாக சுருதியுடன் தப்பை அடித்துக் கொண்டு ஜதி மாற்றாமல் ஆடினாள். மறுபடியும்
ஒரு அதிர்ச்சி அவள் ஆட்ட கலைஞர் அல்ல, சுற்றுலா பயணி ஆட்டம் முடிந்ததும் தப்பை கொடுத்து விட்டு தன்னுடைய ஹாண்டி- கேமை எடுத்துக் கொண்டு படம் பிடிக்க சென்று விட்டாள். எந்த கலையையும்
கற்க ஆர்வம் ஒன்று போதும்.

பல விதமான ஆட்டங்களை அன்று கண்டு ரசித்தேன், ஆட்டங்களின் பெயர்கள் சரியாக தெரியவில்லை

1. கரகாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009236.jpg
2. பொய்க்கால் குதிரை ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009244.jpg
3. சாமியாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009220.jpg
4. தேவராட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009230.jpg
5. குறவன் குறத்தி ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009210.jpg
6. தப்பாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009200.jpg
7. தப்பாட்டத்திலே பல வகையான ஆட்டங்கள்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009241.jpg
8. பஞ்சாபி ஆட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009218.jpg
9. மலையாளர்களின் வாத்தியம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009199.jpg




இவை இல்லாமல் பல கலைகளை செய்து காட்டினார்கள்.

1. களரி பயிற்சி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009231.jpg
2. யோகா பயிற்சி
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009225.jpg
3. கத்தி சண்டை
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009231.jpg
4.சிலப்பாட்டம்
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009204.jpg




பஞ்சாபி ஆட்ட கலைஞர்கள் வந்தவுடன் மக்கள் அவர்களை சூழ ஆரம்பித்தார்கள், பஞ்சாபி பெண்கள் மிகவும் அழகாக சிகப்பு நிறத்தில் இருந்தனர். மெல்லிய குரலில் பாடி நடனம் ஆடினார்கள், அடிக்கடி சிரித்துக் கொண்டார்கள், வெட்கப்பட்டார்கள், அவர்களுக்குள்ளே பாடிக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தீடீர் என்று பக்கத்தில் நம்முடைய இசை சத்தம் கேட்டது

டண்ட நக்கடி,
டண்ட நக்கடி, டணக்கு நக்கடி, டணக்கு நக்கடி
டண்ட நக்கடி, டணக்கு நக்கடி, டணக்கு நக்கடி
டண்ட நக்கடி

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009216.jpg


நம்முடைய தப்பாட்டம் தான், எல்லாரும் அவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தோம். நம்ப மாட்டீர்கள் அரை மணி நேரமாக தொடர்ந்து ஆடி அசத்தி விட்டனர், அவர்களின் ஆட்டத்தில் மயங்கி வேடிக்கை பார்த்த ஒருவர் ஆட ஆரம்பித்தார், தப்பாட்டம் முடியும் பொழுது சுமார் 300 பொது மக்கள் ஆடிக் கொண்டு இருந்தனர்.

http://www.tamilmantram.com/photogal/images/5066/2_13012009241.jpg

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009242.jpg

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009243.jpg

முடித்தவுடன் அங்கு இருந்த ஆயிரம் பேரும் ஒரு சேர கையை தட்டினார்கள், அந்த கைதட்டல் சத்தத்தை கேட்கும் பொழுது எனக்கே ஒரு விதமான மயக்க நிலை வந்து விட்டது, எனக்கே அப்படி சந்தோஷமாக இருந்தது, அந்த பாராட்டை பெற்ற கலைஞர்களுக்கு எப்படி இருந்து இருக்கும், உண்மையில் பாராட்டி கை தட்டும் சத்தத்தை கேட்பது போல ஒரு போதை இருக்கவே முடியாது. அந்த கலைஞர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம், சிரித்துக் கொண்டே எங்களை பார்த்துக் கொண்டே சென்றார்கள், ஆனந்த கண்ணீருடன்.

எல்லா ஐ.டி அப்பாக்களும் கிராமத்து அப்பாக்களாக மாறி இருந்தனர், தங்களின் பிள்ளைகளை தோளின் மீது அமர்த்தி சுமந்துக் கொண்டு சென்றனர். நடு ரோட்டில் உக்கார்ந்து உணவு சாப்பிட்டனர், கூட்டத்தில் கூச்சம் இல்லாமல்
ஆடினார்கள். அப்புறம் அங்கு இருந்த உணவு கடைகள்,

விருதுநகர் பிரியாணி
கொத்து பரோட்டா
கொத்து கறி

திண்டுக்கல் பிரியாணி
செட்டிநாட்டு கறி குழம்பு
கரண்டி முட்டை

சுட்ட கறி
கறி வருவல்

எல்லாம் கிராமத்து உணவுகள், சூப்பராக இருந்தது, ஆனால் உணவு பார்ப்பதற்கு அழகாக இல்லை, அப்பொழுது தான் என்னுடைய ஓட்டல் நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது.

“டேய் எப்பவுமே ருசியா இருக்கும் உணவு பார்க்க நல்லா இருக்காதுடா”

அந்த தைரியத்தில் வாங்கினேன், உண்மையில் ரொம்ப அருமையாக இருந்தது, என்ன விலை தான் ரொம்ப ஓவர், ஒரு கரண்டி பிரியாணியின் விலை 80 ரூபாய்.

இந்த மாதிரி ஒரு விழாவை ஏற்பாடு செய்த கனிமொழி அவர்களுக்கும், அமைச்சர் இறையண்பு (சுற்றுலாதுறை அமைச்சர்) அவர்களுக்கு வாழ்த்துகளை தாராலமாக சொல்லலாம். இந்த சென்னை சங்கமத்தில் நோக்கம் என்ன? என்று ஒரு சின்ன பையனின் கேள்வி எனக்கு புரியவைத்தது.

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_13012009227.jpg

பால் நிறத்தில் இருந்த ஒரு அப்பா அதே நிறத்தில் இருக்கும் தன்னுடைய பையனை தோளில் சுமந்துக் கொண்டு நடந்துக் கொண்டு இருக்கும் பொழுது சிறுவன் கேட்டான்

”டாடி என்ன டாடி ஒரே கூட்டமாக எல்லாரும் டான்ஸ் ஆடறாங்க”

“இது தான் திருவிழா கண்ணா, கிராமத்தில் எல்லாம் இப்படி தான் திருவிழா நடக்கும்”

“கிராமம்-னா”

“.......”

இப்படிப்பட்ட விழாக்கள் நடத்துவது நல்லது தான், இல்லையென்றால் பின் வரும் சமுதாயம் நம்முடைய கலாச்சாரத்தை சார்ந்த விஷயங்களை எல்லாம் wikipedia-விலும், google-லையும் தான் அறிந்துக் கொள்ள முடியும்.

நன்றி.

இளசு
16-01-2009, 06:45 AM
தக்ஸ்

இந்த விழாவின் அடிப்படை நோக்கம் நிறைவேறி வருவதை
உங்கள் அசத்தல் பாணிக் கட்டுரை மூலம் அறிந்து மகிழ்கிறேன்!

படங்கள் - தூள்!

மனம் நிறைந்த பாராட்டுகள் - சங்கமம் பற்றி சுஜாதா விகடனில் எழுதியிருந்தால் இப்படித்தான் இருக்கும் என்னும் வண்ணம் தரம்!
!

ரங்கராஜன்
16-01-2009, 06:59 AM
தக்ஸ்

இந்த விழாவின் அடிப்படை நோக்கம் நிறைவேறி வருவதை
உங்கள் அசத்தல் பாணிக் கட்டுரை மூலம் அறிந்து மகிழ்கிறேன்!

படங்கள் - தூள்!

மனம் நிறைந்த பாராட்டுகள் - சங்கமம் பற்றி சுஜாதா விகடனில் எழுதியிருந்தால் இப்படித்தான் இருக்கும் என்னும் வண்ணம் தரம்!
!

நன்றி இளசு அண்ணா
உங்களிடம் பாராட்டு பெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கு, உண்மையில் இந்த படங்கள் எல்லாம் என்னுடைய கைபேசியில் எடுத்தது. ஆட்டத்தின் வேகத்தில் பல படங்கள் களங்கலாக வந்து இருக்கு அண்ணா, நான் இதை எல்லாம் எதிர்பார்த்து போகவில்லை, இல்லை என்றால் காமிரா எடுத்து கொண்டு சென்று இருப்பேன். நன்றி

umakarthick
16-01-2009, 09:59 AM
நானும் ஒரு நாள் போயிருந்தேன் எல்லாவற்றையும் பார்த்து விட்டு விருதுநகர் புரோட்டாவும் கோழிக்கறியும் சாப்பிட்டு விட்டு கிளம்பிட்டேன்


படங்கள் மொபைலில் எடுத்தயவையா?


நானும் ஒரு நாள் போயிருந்தேன் எல்லாவற்றையும் பார்த்து விட்டு விருதுநகர் புரோட்டாவும் கோழிக்கறியும் சாப்பிட்டு விட்டு கிளம்பிட்டேன்


வாழ்க கனிமொழி

arun
18-01-2009, 07:38 PM
சென்னை சங்கமம் விழாவுக்கு ஒரு நாள் போக வேண்டும் என்று நண்பர் ஒருவர் அழைத்தார் ஆனால் போக நேரம் கிடைக்கவில்லை

அடுத்த முறை கண்டிப்பாக போக வேண்டும்

போட்டோக்களின் பகிர்வுக்கு நன்றி தக்ஸ்

செல்வா
19-01-2009, 05:42 AM
கடந்த இரண்டு வருடங்களாகவே தைப்பொங்கல் விழா மகிழ்ச்சியை விட சென்னை சங்கமத்தில் சங்கமிக்க இயலா வருத்தம்தான் மேலிடுகிறது மனதில்.
பார்வையாளராகக் கூட இணைய முடியாதது மிகுந்த வருத்தம் தான்.
அந்தக் கவலையைத் தீர்க்கும் விதத்தில் தங்கள் பதிவு மிக அருமையாக இருந்தது தக்ஸ். படங்களும் அவ்வாறே.
தப்பாட்டம் பழமையான கலை ஆனால் அதைச் சாவு மேளம் என்று கூறி ஒதுக்கி வைத்துவிட்டனர். பரதநாட்டியத்தின் அடிப்படை அடவுகள் பலவும் தப்பாட்டத்தில் உள்ளன.
எந்த இரண்டு கலையையும் இணைத்துச் செய்வது மிகக் கடினமான ஒன்று.
பாடிக்கொண்டே ஆடுவது
வாத்தியங்கள் இசைத்தபடி ஆடுவது
வாத்தியங்கள் இசைத்தபடி பாடுவது போன்றவை...
கிராமியக்கலைகள் பலவும் இப்படித்தான் இருக்கின்றன.
ஒவ்வொரு கலையைப் பற்றிக் கூறுவது என்றால் ஒவ்வொன்றிற்கும் பெரிய கட்டுரையே வடிக்கலாம்.
ஒரு திரைப்படத்தில் வடிவேல் அவர்கள் சொல்லுவது போல ஆடுபவரை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் ஆடவைக்கும் கலை தப்பாட்டக்கலை கலை என்றுச் சொல்லுவதை விட அந்தத் தாளங்கள். கிராமியக் கலைகளுக்கே உரித்தானத் தாளங்கள் தான்.
திரைஇசையில் எழுந்து ஆடவைக்கும் மன்மதராசா போன்ற பாடல்கள் அனைத்தும் இத்தகைய தாளங்களில் அமைந்தவைதான். அதனால் தான் அவை நம்மையும் ஆடவைக்கின்றன.
அந்த மலையாள வாத்தியத்தின் பெயர் செண்டை மேளம்.
போருக்குச் செல்பவர்களின் வெறியை ஏற்றுவதற்கு இந்தத்தாளக்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மலரும் நினைவுகள் பலவற்றைத் நினைக்கவைத்துவிட்டீர்கள்....
பகிர்தலுக்கு நன்றிகள் பல தக்ஸ்.

ரங்கராஜன்
19-01-2009, 07:01 AM
அந்த மலையாள வாத்தியத்தின் பெயர் செண்டை மேளம்.
போருக்குச் செல்பவர்களின் வெறியை ஏற்றுவதற்கு இந்தத்தாளக்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
.

அப்படியா????? நல்ல தகவல். ஆனால் உண்மையில் அந்த வாத்தியம் வாசிப்பதை கேட்டால் ஒரு வெறி வரத்தான் செய்கிறது, நமக்கே இப்படியென்றால் கையில் ஈட்டி மற்றும் வாள் வைத்திருக்கும் வீரர்களுக்கு எப்படி இருந்து இருக்கும், வெட்டி சாய்த்து இருப்பார்கள். முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

இளசு
19-01-2009, 07:08 AM
செல்வாவின் கருத்தோடு ஒப்புகிறேன்..

தப்பாட்டத்தை ''கீழ்மட்ட'' மக்களின் சின்னமாய் ''மேல்''வர்க்கம் ஒதுக்கியது தப்பு..

ஒவ்வொரு நிலப்பிரிவுக்கும் ஒவ்வொரு ஆதார இசைச்சுருதி..

Voodoo தாளலயம் - ஆப்பிரிக்காவுக்கு!

தப்பாட்டம் நம் தமிழ்நாட்டுக்கு!

நாக்கமுக்க பாட்டின் வெற்றி சொல்லும்
எது நம் கலாச்சார ஆதார தாளம் என்று!

அன்புரசிகன்
19-01-2009, 07:39 AM
அந்தமாதிரி கிடக்கு. படங்கள் அருமை. உங்களின் விளக்கங்களும் அசத்தல்..

கிராமத்து விடயங்கள் எப்போதும் அழகாக இருக்கும். பார்த்ததும் நம் ஊர் கோவில் திருவிழாக்கள் தான் ஞாபகம் வந்தது.

இவற்றை பார்க்க பார்க்க ஊருக்கு போகவேணும் போல் இருக்கு...

பகிர்வுக்கு நன்றிகள்.

ரங்கராஜன்
19-01-2009, 08:10 AM
செல்வாவின் கருத்தோடு ஒப்புகிறேன்..

தப்பாட்டத்தை ''கீழ்மட்ட'' மக்களின் சின்னமாய் ''மேல்''வர்க்கம் ஒதுக்கியது தப்பு..

ஒவ்வொரு நிலப்பிரிவுக்கும் ஒவ்வொரு ஆதார இசைச்சுருதி..

Voodoo தாளலயம் - ஆப்பிரிக்காவுக்கு!

தப்பாட்டம் நம் தமிழ்நாட்டுக்கு!

நாக்கமுக்க பாட்டின் வெற்றி சொல்லும்
எது நம் கலாச்சார ஆதார தாளம் என்று!

ஆமாம் அண்ணா
அன்று நடந்த நிகழ்ச்சியில் கலைகட்டியதே நம்ம தப்பாட்டம் தான். அதனால் நான் மற்ற வாத்தியங்களையும், அந்த கலைஞர்களையும் குறை சொல்லவில்லை. அங்கு பல கலைஞர்களை இருந்தார்கள் ஏறத்தாழ 600 வகையான குரூப் இருந்தது. பஞ்சாபி, கேரளம், நம் தமிழ்நாட்டிலே இருந்த பல வகை கலைஞர்கள் எல்லாம் வந்து இருந்தனர். ஆனால் நம்ம தப்பை தப்பில்லாமல் வாசிக்க தொடங்கிய உடன் மக்கள் ஓடிவந்தார்கள், அதில் பாதி மக்கள் கார்களில் வந்திருந்த மேல்வர்க மக்கள். உண்மையில் அந்த விழாவில் மக்கள் அனைவரும் தங்களின் போலி கெளரவங்கள், அந்தஸ்தை எல்லாம் மறந்து ரசித்தனர். மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள் தான், சூழ்நிலைகளை பொறுத்து.

நான் ரசித்த சில காட்சிகள்.

வேடிக்கை பார்க்க வந்த குடும்பத்தில் அப்பாவும் மகனும் வெட்கப்பட்ட நிற்க, அம்மாவும் பெண்ணும் கூட்டத்தில் இறங்கி ஆடினார்கள், வெளியில் நின்ற இருவரையும் நடனமாட இழுத்தார்கள் ஆனால் ஆண்கள் இருவரும் வெட்கப்பட்ட வரவில்லை.

கூட்டம் இருக்கிறதோ இல்லையோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டு ஆடி மகிழ்ந்தார்கள் பஞ்சாபி நாட்டிய கலைஞர்கள்.

சிலம்பாட்டத்தில் கம்பை தவற விட்ட ஆளை பார்த்து எல்லோரும் சிரிக்க, அவன் அந்த கூட்டத்தில் இருந்து வெட்கத்துடன் நகர. அந்த கூட்டத்தில் இருந்த ஒரு வெளிநாட்டு பெண் மட்டும் கையை தட்டி
“சூப்பர், சூப்பர்” என்று பாராட்டினாள்.

இன்னும் பல இருக்கிறது

சிவா.ஜி
19-01-2009, 02:09 PM
அருமையான நிகழ்ச்சியை அழகாக தொகுத்தளித்திருக்கிறீர்கள் தக்ஸ். இத்தனை தூரத்திலிருந்து கொண்டு எங்களாலும் சங்கமிக்க முடிகிறதே....!...படங்களுடன், விளக்கங்களும் அசத்தல்.(ஆனா படங்கள்தான் ரொம்ப பெரிய சைஸ்ல இருக்கு. இந்தப்பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் நகத்தி நகத்தி பாத்ததுல கழுத்தே சுளுக்கு பிடிச்சிடிச்சி)

கிராமியக்கலை என்றாலே இரு ஈர்ப்பு இருக்கும். ஏனெனில் அதில் எளிமையும் எதார்த்தமும் இருக்கும். இன்றளவும் அந்தக் கலைக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்களென்றாலே தெரிகிறது அதன் மகத்துவம்.

இளசு சொன்ன மாதிரி நாக்க மூக்க வெற்றி நம் மக்களுக்குள் ஒளிந்திருக்கும் டண்டனக்காவை பறை சாற்றுகிறது.

பாராட்டுக்கள் தக்ஸ்.