PDA

View Full Version : ஆரு மனமே நீ ஆரு!



நாகரா
15-01-2009, 02:01 AM
ஆரு மனமே நீ ஆரு
ஆணவமோ நின் பேரு
தேரு மனமே நீ தேரு
ஆணவம் அழிஞ்சே நீ தேரு
தேரு மனமே நீ தேரு
குருரதமே நீ தேரு
சேரு மனமே நீ சேரு
இருதயத்தில் நீ சேரு
வேரு மனமே நின் வேரு
இருதயமே நீ பாரு
ஊரு மனமே நின் ஊரு
மெய்யுடம்பே நின் ஊரு
ஊறு மனமே நீ ஊறு
மெய்யுள்ளே நீ ஊறு
சோறு மனமே நின் சோறு
மெய்யுணர்வே நின் சோறு
கூறு மனமே நீ கூறு
குருமொழியை நீ கூறு
ஏறு மனமே நீ ஏறு
ஏழுந்தாண்டி நீ ஏறு
தீரு மனமே நீ தீரு
ஐயமெல்லாம் நீ தீரு
மீறு மனமே நீ மீறு
தளையெல்லாம் நீ மீறு
மாறு மனமே நீ மாறு
ஆண்டவனுள் நீ மாறு
சீறு மனமே நீ சீறு
சிறுமை கண்டு நீ சீறு
ஆறு மனமே நீ ஆறு
அன்புக்குள்ளே நீ ஆறு
சீரு மனமே நின் சீரு
அருளேதான் நின் சீரு
கீறு மனமே நீ கீறு
கயமைகளை நீ கீறு
சாறு மனமே நின் சாறு
தயவேதான் நின் சாறு
சேறு மனமே மருட்சேறு
வன்பேதான் இருட்சேறு
கோரு மனமே நீ கோரு
குருவரத்தை நீ கோரு
வீறு மனமே நின் வீறு
யாவுந் தாண்டும் நின் வீறு
நீரு மனமே நீ நீரு
பாயும் நல்லருள் நீரு
நீறு மனமே வெண்ணீறு
நெற்றியிலே நீ பாரு!

இளசு
17-01-2009, 11:33 AM
அன்னைத்தமிழின் சந்தச்சுவையை
ஆன்மீக ஆக்கத்தில் ஊற்றி
இனிப்பாய் எங்களுக்கு ஊட்டும் பணி!

அருமை நாகரா அவர்களே!