PDA

View Full Version : விர்சுவல்பாக்ஸ் பற்றியது



dmoorthy
14-01-2009, 11:46 PM
விர்சுவல்பாக்ஸ் எப்படி உபயோகிப்பது என்பது பற்றி விளக்கமாக கூறமுடியுமா?

பாரதி
22-01-2009, 03:33 PM
இதை நானும் இன்னும் பயன்படுத்தவில்லை. இருப்பினும் படித்ததில் இருந்து எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன்.

பொதுவாக நமது கணினியில் நாம் விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயங்குதளங்குகளை நிறுவி இருப்போம். பொதுவாக, அவற்றில் இயங்கக்கூடிய மென்பொருட்களையோ அல்லது வேறு இயங்குதளங்களையோ பயன்படுத்த வேண்டுமெனில், அவற்றை பதிவிறக்கி கணினியில் நேரடியாக நிறுவ வேண்டியதிருக்கும். அப்படியில்லாமல் விர்ச்சுவல்பாக்ஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால், வேறு எந்த எந்த மென்பொருளையும் அந்த விர்ச்சுவல் பாக்ஸினுள் நிறுவிக்கொண்டால், புதிதாக நிறுவப்படும்
அந்த மென்பொருளாலோ, இயங்குதளத்தினாலோ கணினிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது. நமக்கு தேவை இல்லையெனில் நிறுவிய மென்பொருளை எளிதில் நீக்கி விடலாம். அந்த மென்பொருளின் பயன்பாடு நம்பகத்தன்மையை அறிந்த பின்னர் தேவைப்பாட்டால் கணினியில் நேரடியாக நிறுவிக்கொள்ளலாம்.

காசு கொடுத்தால் VMware workstation அல்லது Microsoft Virtual PC போன்ற மென்பொருட்களால் விர்ச்சுவல் பாக்ஸ் வசதியை பெறலாம்.

இலவசமாக வேண்டுமெனில், சன் நிறுவனம் வழங்கும் விர்ச்சுவல் பாக்ஸ் மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். கோப்பின் கொள்ளளவு 35.6MB.

பதிவிறக்கச்சுட்டி:
http://download.virtualbox.org/virtualbox/2.1.2/VirtualBox-2.1.2-41885-Win_x86.msi

மேற்கொண்டு உங்களுக்கு தேவையான விபரங்களையும் அங்கேயே பெறலாம்.