PDA

View Full Version : உன் காதலின் அர்த்தம்!



நாகரா
14-01-2009, 11:10 AM
தூக்கங்களை நீக்கும்
ஏக்கங்களின் ஆழத்தில்
வார்த்தைகளும் கைவிட்ட
மௌனத்தின் உச்சத்தில்
எண்ணங்கள் ஒடுங்கிய
இருப்பின் பக்கத்தில்
வசப்படுமே
உன் காதலின் அர்த்தம்!

நாகரா
16-01-2009, 05:23 AM
என் காதலை
உனக்குச் சொல்வதற்கு
வார்த்தைகளைத் தேடினேன்!
எந்த வார்த்தையிலும்
திருப்தி இல்லாமல்
எல்லா வார்த்தைகளையும்
நிராகரித்து விட்டு
மௌனமாகிறேன்
உன் மீது நான் கொண்ட காதல் மட்டுமே
என் மனம் முழுவதும் நிரம்பி!
என்னை முழுமையாக நீ நிரப்ப வரும்
வேளைக்காக என் தவம் தொடர்கிறது!