PDA

View Full Version : ஓய்வுபெறுவது கிரிக்கட்டிலிருந்து மட்டுமே – ஹெய்டன்..!!



ஓவியன்
14-01-2009, 09:21 AM
ஓய்வுபெறுவது கிரிக்கட்டிலிருந்து மட்டுமே – ஹெய்டன்..!!


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/94602.jpg

எதிரணி எத்தனை ஓட்டங்களை எடுத்தாலும், எதிரணி வீரர்கள் எத்தனை கடினமாக பந்துகளை வீசினாலும் நெஞ்சினை நிமிர்த்திக் கொண்டு மைதானத்தினுள்ளே ஒரு போர் வீரனைப் போல களமிறங்கும் ஹெய்டனை இனிவரும் காலங்களில் சர்வதேசக் கிரிக்கட் போட்டிகளில் காணமுடியாதென்பது கவலையான விடயமே. ஆமாம் சகவீரர்களால் ‘ஹெய்டோஸ்’ என்றும் ‘யுனிட்’ என்றும் அழைக்கப்பட்ட ‘மத்யூ லோறன்ஸ் ஹெய்டன்’ சமீப காலங்களில் பலரால் எதிர்வு கூறப்பட்டது போலவே சர்வதேச கிரிக்கட் விளையாட்டிலிருந்தான தனது ஓய்வினை உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/70335.jpg

இன்னும் ஒரு ‘ஆஸஸ்’ தொடரில் விளையாடும் வாய்ப்பு இருந்தும், தன் ஆறு வயது இளையமகள் ‘டேனி’, அப்பா இன்னும் ஒரு கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டத்தில் மெல்போனில் நீங்கள் விளையாடவேண்டுமப்பா என்று கேட்டதையும் மறுத்து, மகளே நான் ஓய்வு பெற இதுதானம்மா தருணம் எனக் கூறியுள்ளார்.


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/98085.jpg

பொதுவாக உடல்ரீதியாகவும் சரி, உளவியல் ரீதியாகவும் சரி மிகவும் பலமானவராக அறியப்பட்ட மத்யூ ஹெய்டன் சமீப காலங்களில் தன் வழமையான திறனை வெளிப்படுத்தத் தவறியிருந்தார். இலங்கை இந்திய கிரிக்கட் தேர்வுக் குழுக்களைப் போலன்றி அவுஸ்திரேலிய கிரிக்கட் தேர்வுக் குழு திறமையைத் தொடர்ந்து வழங்கத் தவறும் வீரர்களுக்கு அதிக வாய்ப்புக்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதில்லை என்பது நாமறிந்ததே. தம் அணிக்காக எத்தனையோ சாதனைகளைச் செய்த பல மூத்த கிரிக்கட் வீரர்கள் (இயன் ஹீலி, மார்க் வோ..) இப்படியாக திறமையை வெளிப்படுத்தத் தவறிய தருணங்களில் கிரிக்கட் தேர்வுக் குழுக்களால் ஓரம் கட்டப்பட்டதை ஹெய்டன் மறக்காது இருந்தமையே இந்த ஓய்வு அறிவிப்பின் முக்கிய காரணமாயிருந்திருக்கும். இந்த கருத்தினை உறுதிப் படுத்துவது போல அவுஸ்திரேலியா தென்னாபிரிக்க அணியுடன் போட்டியிட்ட இருபது-இருபது போட்டிகளில் மத்யூ ஹெய்டனின் பெயரை கிரிக்கட் தேர்வுக் குழு சேர்க்காதிருந்தது.


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/87390.jpg

தொடர்ச்சியாக இந்திய, தென்னாபிரிக்க அணிகளிடம் அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தோல்விகளைத் தழுவிய தருணத்தில் அந்தப் போட்டிகளில் வழமை போல ஹெய்டன் அசத்தலாக ஆடியிருக்கவில்லையென்பதே ஹெய்டன் மீதான பலரது குற்றச் சாட்டுக்களுக்குக் காரணமாக அமைந்தது. தன் எதிர்காலத்தைக் கருதியும், இருக்கும் புகழைத் தக்கவைக்கும் முகமாகவும் ஹெய்டன் எடுத்த ஒரு முடிவாகவே இந்த ஓய்வறிவிப்புத் தோன்றுகிறது.

1971 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் பிறந்த இடது கை துடுப்பாட்ட வீரரான மத்யூ ஹெய்டன் 1994 ஆம் தென் ஆபிரிக்க அணிக்கெதிராக தன் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். அன்றிலிருந்து தான் ஓய்வு பெறும் தருணம் வரை மொத்தமாக 103 போட்டிகளில் 50.73 ஓட்ட சராசரியுடன் 8,625 ஓட்டங்களை 30 சதங்கள், 29 அரைச் சதங்கள் உள்ளடங்கலாகப் பெற்றிருந்தார். இதே போலவே ஒரு நாள் போட்டிகளில் 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக தன் அறிமுகத்தை மேற்கொண்டு 161 போட்டிகளில் 6,131 ஓட்டங்களை 10 சதங்கள், 36 அரைச் சதங்கள் உள்ளடங்கலாகப் பெற்றிருந்தார். ஒரு நாள் போட்டிகளில் ஆட்டமிழக்காத 181 ஓட்டங்கள் இவரது உச்சபட்ச தனி நபர் ஓட்ட எண்ணிக்கையாகும்.

என்னதான் அலன் போர்டரும், மார்க் டெய்லரும் மற்றும் ஸ்டீவ்வோவும் அவுஸ்திரேலிய அணிசார்பாக டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், அடுத்த ‘பிராட்மன்’ என்ற பெயரை அடிக்கடி நெருங்கிக் கொண்டிருந்தவர்கள் வேற்று நாட்டவர்களான சச்சின் டெண்டுல்கரும் பிறைன் லாராவும்தான். அவுஸ்திரேலியர்களின் இந்த நெடு நாளைய குறையை ஓரளவுக்கேனும் தீர்த்து வைத்தவர் மத்யூ ஹெய்டன் தான் எனலாம். இதற்கு பிறைன் லாராவின், நீண்ட காலமாக முறியடிக்கப் படாதிருந்த டெஸ்ட் போட்டி ஒன்றின் தனி நபர் உச்ச பட்ச ஓட்டமான 375 ஓட்டங்களை 2003 ஆம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் மைதானத்தில் வைத்து ஸிம்பாவே அணிக்கெதிராக மத்யூ ஹைடன் 380 ஓட்டங்களை குவித்து முறியடித்ததைக் கூறலாம். இந்த சாதனை மீண்டும் பிறைன் லாராவினால் ஆறுமாதங்களுக்குள்ளாகவே இங்கிலாந்து அணிக்கெதிராக 400 ஓட்டங்களைக் குவித்து முறியடிக்கப் பட்டமை வேறு விடயம்.


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/56095635.jpg

மத்யூ ஹெய்டனைப் போல் அளவற்ற மனவுறுதியுடன் ஆக்ரோசமாக அடித்து விளையாட மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரொருவர் அவுஸ்திரேலிய அணியில் தற்போது இல்லையென்றாலும், அவுஸ்திரேலிய அணியினருக்கு ஹெய்டனின் ஓய்வு மிகப்பெரிய இழப்பொன்றும் இல்லை தான். ஆனால் இவரது இடத்தினை இனி வரும் காலங்களில் யார் நிரப்பப் போகிறாரென்பதை காலம் தான் முடிவு செய்யும்.

தான் ஓய்வு பெறுவதை நேற்றைய தினத்தில் பொங்கி வரும் அழுகையை சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு மத்யூ ஹெய்டன் அறிவிக்கையில் அவர் கூறிய சில வார்த்தைகள் ,

‘நான் ஓய்வு பெறுவது கிரிக்கெட்டிலிருந்துதான், வாழ்க்கையிலிருந்தல்ல,
வாழ்க்கையில் சாதிக்க என் முன்னே இன்னும் நிறைய விடயங்கள் காத்திருக்கின்றன’


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/69898.jpg http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/69901.jpg

உண்மைதான், ஹெய்டனின் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துவதுடன், அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்காக ஹெய்டன் மீண்டும் விளையாடப் போகும் அந்தப் பொன்னான தருணத்திற்காகக் காத்திருப்போம்.

அன்புரசிகன்
14-01-2009, 09:52 AM
சென்றமுறை இடையில் அவர் பிரிவு தான் கிங்ஸின் தோல்விக்கு காரணம்... இம்முறை பார்க்கலாம்....

வாழ்க்கையில் சிறப்பாக இருக்கட்டும்.

சிறிசாந்துக்கு தான் பிரச்சனை. அவரின் கோபத்தினை காட்ட ஹெய்டன் இல்லையே... :D

நேசம்
14-01-2009, 01:59 PM
உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டாகாரர்கள் பத்து பேரை வரிசைபடுத்தினால் அதில் ஒருவராக இருப்பார் ஹெய்டன்.அவரது இடத்தை நிரப்புவது ஆஸ்திரேலியா அணிக்கு கடினம்தான்

அய்யா
14-01-2009, 03:02 PM
ஓவியன் அண்ணாவின் இப்பதிவு, ஹெய்டனுக்கு நல்லதொரு பிரிவுபசாரமாக அமைந்துள்ளது. பாராட்டுகிறேன்.

பழம் பெருமைகளை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டும் வீரர்களைக்கொண்ட அணிகளுக்கிடையே ஆஸி. அணி தனித்து நிற்பதற்கு மாத்யூ ஹெய்டன் போன்ற தன்னலமற்ற பேராளர்களும் ஒரு காரணம்!!

சென்று வாருங்கள் மாத்யூ!!!

arun
14-01-2009, 04:24 PM
மாத்யூ ஹெய்டன் பார்க்க அசுரத்தனமான தோற்றம் எந்த பவுலரையும் விளாசித்தள்ளும் பேட்டிங் அதுவும் கிரீசுக்கு ரொம்ப முன்னால் நிற்பார் வேகப்பந்து வீச்சானாலும் நடந்து வந்து அடிக்கும் ஷாட் என்னை மிகவும் கவர்ந்தது

காலத்தின் கட்டாயம் ஓய்வை அறிவிக்க வைத்து விட்டது சென்று வாருங்கள் ஹெய்டன் வாழ்த்துக்கள்

"பொத்தனூர்"பிரபு
15-01-2009, 12:56 AM
டெஸ்ட் போட்டி ஒன்றின் தனி நபர் உச்ச பட்ச ஓட்டமான 375 ஓட்டங்களை 2003 ஆம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் மைதானத்தில் வைத்து ஸிம்பாவே அணிக்கெதிராக மத்யூ ஹைடன் 400 ஓட்டங்களை குவித்து முறியடித்ததைக் கூறலாம். இந்த சாதனை மீண்டும் பிறைன் லாராவினால் ஆறுமாதங்களுக்குள்ளாகவே இங்கிலாந்து அணிக்கெதிராக 380 ஓட்டங்களைக் குவித்து முறியடிக்கப் பட்டமை வேறு விடயம்.
/////////

தவறு,,திருத்துங்கள்

ஓவியன்
15-01-2009, 02:36 AM
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி பிரபு, 380ம் 400ம் இடம் மாறி விட்டன..!! :D

Mathu
15-01-2009, 08:26 AM
ஹெய்டனின் அசத்தலான ஆரம்ப ஆட்டம் பார்ப்பதற்கே ஒரு கூட்டம் சேரும்.
35 வயதுக்கு மேல் ஓய்வு பெறுவதுதான் எப்பவும் நலம், இவர்கள் வாழ்வை
ரசிக்க தெரிந்தவர்கள் புகழ் இருக்கும் போதே குடும்பத்துடன் குளந்தகளுக்கென்று
புதிய வாழ்வில் இணைந்துவிடுகிறார்கள்.

அவுஸ்ரேலியர்களுக்கு இது இறங்கு முகம், ஹெய்டனும் கை கொடுக்கவில்லை,
கிளார்க்கும் பொண்டிக்கும் மாறி மாறி போராடுகிறார்கள் முடியவில்லை.
புதிய இள ரத்தங்கள் சேர்க்கப்பட்டால் சில வேளை மாற்றம் வரலாம்.