PDA

View Full Version : ஒட்டஞ்சில் சொல்லும்



v.pitchumani
13-01-2009, 08:02 AM
பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல்
சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து
பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து
அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து
குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்
காதில் மணலும் மூக்கில் தண்ணீரும் புகுந்து
விரல்களில் தசைகள் சுருங்கி கண்கள் சிவந்து போக
கண்கள் சிவப்பு போக்க ஒட்டஞ்சில் ஒத்தடமும்
விளையாடிவிட்டு வருவதாக காண்பிக்க புழுதி தடவி
மூக்கில் முட்டையிடும் சளி காட்டி கொடுக்க
அரட்டி சிந்த சொல்லி சிந்தா மூக்கை பிடித்து
சிந்தி சிந்தி ஒரு பக்கம் சாய்வாய் என் மூக்கு
ஆனாலும் திருட்டுதன குளியல் தொடர
ஆற்று நீரும் மூக்குக்கு பழகி போனதும்
ஒட்டஞ்சில்லில் தவளை விட்டு மகிழ்ந்ததும்
பூட்டிய குளியலறையில் வாசனை சோப்பு போட்டு
குளித்தாலும் அந்தகுளியல் சுகம் என்றும் வராது
இன்றும் ரோட்டில் எப்பவாது காணும்
ஒட்டஞ்சில் சொல்லும்
சூட்டு ஒத்தடத்தையும்
ஆற்று நீர்பரப்பில் தவளை விட்டதையும்
மகிழ்ச்சிக்காக குளித்ததையும்

இளசு
17-01-2009, 11:40 AM
நீந்தி முங்கிக் குளித்தால் வரும் கண்சிவப்பை
சட்டென மறைத்து வீடேக
ஓட்டாஞ்சில் சூட்டு வைத்தியமா?

அப்பவே தெரியாம போச்சே பிச்சுமணி!
பிச்சி ஒதறிய அடிக்கணக்கு குறைஞ்சிருக்குமே!!


அசத்தல் நினைவுக்கவிதைக்குப் பாராட்டுகள் பிச்சுமணி அவர்களே!

அக்னி
17-01-2009, 12:11 PM
மீண்டும் அந்தக் காலம் வருமா...

ஆற்றுக்குள் ஆனந்தமான
அந்தக் கணங்களை,
மீண்டும் அனுபவித்திடலாம் என்றால்,
கனவுகளாய் மட்டும் போகின்றது...

நீர் சுமந்த நிலம் எல்லாம்,
இன்று,
கட்டிடங்களின் ஆக்கிரமிப்பு...

இருக்கும் நீர்நிலைகளும்,
நீரற்ற நிலையிலிருக்க,
குறுகுறுத்த மணலையும்,
அகழ்ந்திடும் கள்வர்கள்...

ஒன்றில் வரட்சி...
இல்லையெனில் வெள்ளம்...
காரணம்,
காணமல் போன நீர்நிலைகள்...

மனிதரின் வளர்ச்சியில்,
இயற்கையின் வளர்ச்சி,
குன்றிக்கொண்டே...

ஆனந்தமான
அந்தக் காலம் மீண்டு வருமா..?

சாத்தியங்கள் இல்லைதான்...
ஆனாலும்
இருப்பதைக் காக்கச்
சாத்தியங்கள் உள்ளனதான்...

*****
அனுபவித்ததை அழகாய்க் கவி வடித்துள்ளீர்கள்...
மிகுந்த பாராட்டுக்கள் பிச்சுமணி அவர்களே...

ஓட்டாஞ்சில் என்றால் என்ன..?

*****
அண்ணலுக்கு நீச்சலில் அனேக நினைவுப்பரிசுகள் கிடைத்துள்ளது போலிருக்கே...

இளசு
17-01-2009, 12:15 PM
சபாஷ் அக்னி..

இப்படி உடனுக்குடனான பின்னாக்கங்கள் நம் மன்றத்தின் தனிச் சிறப்பு..

மீண்டும் களைகட்டட்டும் முன்னர்போல் !

------

ஓட்டின் உடைந்த சிறுபகுதி - சில்லு!
ஒரே சொல்லாய் ஒட்டினால் - ஓட்டாஞ்சில்(லு)..
கிராமவாசம் ததும்பும் சொல்!

---------------------------

என் நினைவுப்பரிசுகள் :traurig001::traurig001:என்னோடு இருக்கட்டும்..
உனக்குப் பகிரமாட்டேன்..
(தாங்க மாட்ட --- வடிவேலு பாணியில் ...ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!)

சிவா.ஜி
18-01-2009, 04:14 PM
ஆற்றுக்குளியல்....ஆஹா....அது ஆனந்தக் குளியல். நீறில் ஊறிக்கிடக்கும் எருமைகளின் இடத்தை நாங்கள் வாங்கிக் கொண்ட காலம். இழுத்துக்கொண்டோடும் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தி சாகசம் செய்த பயமறியாக் காலம்.

அழகான நினைவுகளை அருமையான வரிகளால் கவிதையாக்கிய பிச்சுமணிக்கு வாழ்த்துகள்.

ஓட்டாஞ்சில்லு எதற்கெல்லாமோ பயண்பட்டதே அப்போது. சில நேரங்களில் எங்களுக்கு பணமே அதுதான்.

சசிதரன்
18-01-2009, 04:20 PM
நினைவுகளை அழகான வரிகளாக வடித்துள்ளீர்கள் நண்பரே...:)

மிக அருமையான பின்னூட்டம் தந்து அசத்தி விட்டீர்கள் அக்னி அவர்களே...:)

ஆதவா
19-01-2009, 09:59 AM
நீந்தி முங்கிக் குளித்தால் வரும் கண்சிவப்பை
சட்டென மறைத்து வீடேக
ஓட்டாஞ்சில் சூட்டு வைத்தியமா?

அப்பவே தெரியாம போச்சே பிச்சுமணி!
பிச்சி ஒதறிய அடிக்கணக்கு குறைஞ்சிருக்குமே!!


அசத்தல் நினைவுக்கவிதைக்குப் பாராட்டுகள் பிச்சுமணி அவர்களே!

வீட்டில் அத்தனை ஸ்ட்ரிக்ட் ஆ அண்ணா?

ஆறு இல்லாமல் போனதால் நீச்சல் தெரியாமல் போனது.. பிறகு பலமுறை கூச்சத்திற்கு பயந்து அணிந்திருக்கும் உடையோடே காவிரியில் நீச்சல் தெரியாமல் அல்லாடியதும், ஒருமுறை ப்ளாக் தண்டரில் செயற்கை அலையில் சிக்கி மூக்கில் நீர்புகுந்து திண்டாடியதும் ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு கவிதை, பழைய ஞாபகத்தை வரவழைத்தது என்றால் அதுவே பெரும் வெற்றியாகக் கருதப்படும்..

வாழ்த்துக்கள் பிச்சுமணி அவர்களே

இளசு
19-01-2009, 05:48 PM
அண்ணலுக்கு நீச்சலில் அனேக நினைவுப்பரிசுகள் கிடைத்துள்ளது போலிருக்கே...


வீட்டில் அத்தனை ஸ்ட்ரிக்ட் ஆ அண்ணா?



ஆதவா

அக்னி கேட்டதையே மீண்டும் கொஞ்சம் மாற்றிக் கேட்கும்
உன் ஆவல் புரிகிறது..

அண்ணனுக்கு நடந்த அக்காலப் பூசைகளைக் கேட்டறியும் ஆசை தெரிகிறது..:)

ஆனாலும் என் பதில் -
....................................!

---------------------------------------

சிவா, ஆதவன் பின்னூட்டங்களால்
இக்கவிதையின் வெற்றி இன்னும் உறுதியாகிறது!!:icon_b:

v.pitchumani
20-01-2009, 05:51 AM
இளசு சிவா சசிதரன் ஆதவா அனைவருக்கும் நன்றி . ஒரு பையன் என்பதால் மிகுந்த அக்கறை . அக்னி உங்கள் கவிதை அருமை
பிச்சுமணி

நேசம்
20-01-2009, 06:40 AM
நினைவுகளை தூண்டும் அருமையான கவிதை.ஒட்டாசில்லுன்னா எனக்கும் தெரியவில்லை,(அக்னி கவிதையும் அருமையாக இருந்தது)