PDA

View Full Version : நிஜம் எரிக்கும்.......



Nanban
06-09-2003, 10:50 AM
நிஜம் எரிக்கும்.......

ஒரு மழை நாளில்,
தத்தித் தாவி
துள்ளித் திரிந்தது
விட்டில் பூச்சி...

அலறிப் புடைத்து
அடித்த இடியில்
ஒளியிழந்து போனது
மின்னொளி....

அந்தகார இருளில்
ஒலியெழுப்பி
பாதையைத் தேடியது
விட்டில் பூச்சி....

ஒலியெழுப்பி
பாதையை
காணத் தெரியா
மனிதன்,
ஏற்றி வைத்தான்
நெருப்புமிழும்
விளக்கு ஒன்று....

வெளிச்சம்
வந்த பின்பு
துள்ளித் திரிந்த
விட்டில் பூச்சியினைக்
காணவில்லை....

நிஜம் -
எரித்து கொண்டிருந்தது....

gankrish
06-09-2003, 11:24 AM
நண்பா மீண்டும் ஒரு அருமையான கவிதை. நிஜம் பல நேரம் இது போல் தான் இருக்கு.

இக்பால்
06-09-2003, 12:39 PM
ஒளியின் வெளிச்சத்தை மட்டும் உபயோகப் படுத்து.
ஒளியையே உள்வாங்க நினைக்காதே.

இளசு
06-09-2003, 11:17 PM
பாராட்டுகள் நண்பன் அவர்களே

இக்கவிதை பல்வேறு மாறுபட்ட எண்ணக்கலவைகளை
என்னுள் உற்பத்தி செய்தது.

அகால முடிவைத் தேடி ஓடும் விட்டில்,
அற்பாயுசில் மரிக்கும் ஈசல்,
தெரிந்தே போதைக்குழியில்
விழுந்து எழ முயன்றும் முடியாமல்
பாதியில் பயணத்தை முடித்த மனிதர்,


பச்சாத்தாபம் வர உச்சுக் கொட்டுவது
என்னில் ஒரு பாதி!

ஆனால், இயற்கை காட்டும் வழியிலேயே
விளக்கு வரா ஆதியிலிருந்தே
சில நிகழ்வுகள் இவ்வகையே அல்லவா?

புணர்ந்த உடனே மடிந்துபோகும் ஆண்தேனீ,
புலிக்கு இரையான புள்ளிமான்,
தாயால் விழுங்கப்படும் பாம்புக்குட்டி..

சில முடிவுகள் விதிக்கப்பட்டவை.
சில தெரிந்தே எடுக்கப்பட்டவை...

பாவாடை தாவணியில் பார்த்த உருவத்திடம்
இப்படி சொன்னவன் விட்டிலா தேனீயா?
"இன்றே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்
மங்கை உனைத் தொட்டவுடன் மறைந்துவிட்டாலும் - நான்
மறுபடியும் பிறந்து வந்து மாலை சூட்டுவேன்..."



இக்கால இளைஞன் இப்படி பாடுகிறான்..
சாலை வளைவில் தொலைந்த ஆப்பிள் பெண்ணை எண்ணி"நான் இன்னொரு பிறவி எடுத்து வந்தேனும்
மீண்டும் காதலிப்பேன்...
விளக்குகள் - விட்டில்கள் தொடர்கதைதான் இல்லையா?

நிஜம் எரிக்கும் - எச்சரிக்கை சரியே...
எரியப்பிறந்தவை இதனால் மாறுமா இல்லையா???

sri
07-09-2003, 02:08 AM
நிஜமாகவே நல்லாஇருக்குது

இ.இசாக்
07-09-2003, 05:00 PM
இன்னுமின்னும் கொடுங்கள் கவிதைகளை
காத்திருக்கிறேன்

rambal
09-09-2003, 02:45 PM
இதுவும் ஒரு முடிவிலிதான்..
பாராட்டுக்கள் நண்பன்..
அண்ணனுக்கு..
ஆன் தேனீ மட்டுமல்ல
ச்சிட்டிக் என்று ஓசை எழுப்பும் சுவர்க் கோழிக்கும் அதே கதிதான்..
உறவு முடிந்ததும் மரணம்..
விமர்சணத்தோடு அறிவியலைக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்...

poo
09-09-2003, 03:10 PM
நிஜமான கவியொன்று.. பாராட்டுக்கள் நண்பனுக்கு!

நிதர்சணமான உரையொன்று... நன்றிகள் என் அண்ணனுக்கு!!

பாரதி
09-09-2003, 05:09 PM
நடைமுறை வாழ்க்கையை நயம்பட உரைத்த நண்பனுக்கு வாழ்த்துக்கள். நிஜம் சுடும், எரிக்கும் என்பதும் உண்மையே.