PDA

View Full Version : திருமங்கலம் இடைத்தேர்தல்: திமுக அமோக வெற்றி!



அய்யா
12-01-2009, 02:03 PM
திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றுள்ளது.திமுக வேட்பாளர் லதா அதியமான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை விட 39,266 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர்.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பத்திலிருந்தே திமுக வேட்பாளர் லதா அதியமான் முன்னிலையில் வகித்து வருகிறார். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிகையின் முடிவிலும், லதா அதிகமான அதிக வாக்குவித்தியாசத்தில் முன்னேறி கொண்டிருந்தார்.

காலை 11.30 மணியளவில், தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் திமுக அமோக வெற்றிப் பெற்றது.

திமுக 79,422 வாக்குகளும், அதிமுக 40 ஆயிரம் வாக்குகளும் பெற்றிருந்தன. இதனால், திமுக வேட்பாளர் லதா அதியமான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை விட கூடுதலாக 39,266 வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றார்.

தேமுதிக வேட்பாளர் தன பாண்டியன் 13,136 வாக்குகளும், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியானதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
_______________________________________________________________________

அதிகார துஷ்பிரயோகத்தின் வெற்றி: ஜெ.


திருமங்கலம் இடைத்தேர்தலில் பணபலம் வென்றது; ஜனநாயகம் தோற்று விட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

திமுகவின் பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன; ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது.

_________________________________________________________________________

திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, வெறும் மாயை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற ஓர் தேர்தல். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரே, இந்த இடைத்தேர்தல் பீகாரையும் மிஞ்சிவிட்டது என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே ஒரு குட்டி இடைத்தேர்தலுக்கு கோடிக் கணக்கில் அரசியல் கட்சிகள் பணத்தை கொட்டிய வரலாறு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஓர் சம்பவம்.

இந்த சூறாவளியிலும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு தேமுதிகவிற்கு வாக்களித்துள்ளனர்.
_____________________________________________________________________

Source : in.tamil.yahoo.com

arun
12-01-2009, 04:30 PM
பலரின் கணிப்புகளை மீறி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது

இனிமேல் பாமகவின் நிலை?

கம்யூனிஸ்டுகள் எங்கே போனார்கள் ?

பாவம் சரத் குமார் மற்றும் விஜய் காந்த்

அய்யா
13-01-2009, 03:10 AM
பாவம் சரத் குமார் மற்றும் விஜய் காந்த்


:icon_b::icon_b::icon_b::icon_b:

நேசம்
13-01-2009, 05:40 AM
திமுக தோற்றால்தான் ஆச்சர்யம்.ஆனால் இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுக்கு அஞ்சா நெஞ்சனின் செயல்பாடு தான் காரணம் ..??

anna
13-01-2009, 10:55 AM
திருமங்கலம் எங்கள் ஊர் தான். ஊரைவிட்டு வந்து வெகுகாலம் ஆகிவிட்டது.

இருந்தாலும் எங்கள் ஊர் தேர்தல் இப்போது அகில இந்தியாவிலும் பிரபலமாகி விட்டது. இந்த மீடியாக்களினால். நாட்டிலே 88.89 சதவீதம் மக்கள் ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையைச்செய்துள்ளனர் என எண்ணும் போது நம்ம ஊர் மக்களுக்கு நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் உள்ள பற்றை நினைக்கும் போது உள்ளம் பூரிப்படைகிறது. அதாவது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் வாக்களித்துள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையை மிக நேர்த்தியாக செய்துள்ளது.

இந்த அபார வெற்றியை அதிமுக அதிகார தூஷ்பிரயோகம் என சொல்வது சும்மா பிதற்றல் தான் என சொல்ல வேண்டும். ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் அதாவது தோல்வியின் போதும் ஜெயலலிதா மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என சொல்வதாக எனக்குத்தெரியவில்லை. மாறாக தேர்தல் ஆணையம், ஆளுக்கட்சியின் அட்டூழியம்,பணபலம்,ஜனநாயகம் தோற்றுவிட்டது என சொல்வதாகத்தான் தெரிகிறது. இது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை தெளிவாக காட்டுகிறது.

இந்த விஷயத்தில் விஜயகாந்தின் பேட்டி எப்படி உள்ளது என பாருங்கள். இந்த வெற்றி ஒரு மாயை என சொல்லி இருந்தாலும், என்னை நம்பி தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு 13 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி என சொல்லி இருப்பது அவரின் தெளிவான மனநிலையையும், தன் கட்சியை எப்படி வழி நடத்த வேண்டும் எனபதையும் காட்டுகிறது. மேலும் அவரின் அரசியல் முதிர்ச்சியையும் காட்டுகிறது.

இந்த முறை வாக்காளர்பட்டியலிலும் வாக்களாரின் புகைப்படம் இருந்ததால் கள்ள ஓட்டு முற்றிலும் களைப்பட்டுவிட்டது. மக்கள் தன் வாக்கை தைரியமாக செலுத்தி உள்ளனர்.இந்த வெற்றி இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் போது பேசி இருந்தார். நம்ம மக்கள் எல்லாம் இன்னும் 1980,85 ல இருக்குறதாக நினைக்கிறார் போலும். தன் சட்டமன்ற உறுப்பினர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அது எப்படி இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். கேட்பவனை இன்னும் கேணையன் என நினைத்துக்கொண்டு பேசுகிறார்.

திருமங்கலம் எப்போதுமே அதிமுக வின் கோட்டை தான் இதில் 39 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வென்று இருப்பது அதிசயமாகத்தான் உள்ளது. இரட்டை இலையை பார்த்தாலே ஓட்டு போடும் தொகுதி திருமங்கலம் அதில் இரட்டை இலைக்கு ஓட்டு போடாதே என சொன்னால் கூட எவனும் கேட்கமாட்டான்.பணம் கொடுத்தா மட்டும் ஒட்டு போட்டு விடுவானா என்ன? அப்படிப்பட்ட மக்கள் கொண்ட தொகுதியில் திமுகவின் வெற்றிக்காரணம் என்ன என ஆராயும் போது எனக்கு ஒரு உண்மை தெரியவருகிறது.

அதாவது 1975-1985ல் இருந்த எம்.ஜி.ஆர் மாயை தற்போது முற்றிலுமாக நீங்கிவிட்டது என எண்ணலாம்.கல்வியறிவும் இப்போது 90 சதவீதம் வந்து விட்டது. எவன் எது செய்கிறான் என்ற பகுத்து ஆயும் தன்மையும் வந்து விட்டது. எம்.ஜி.ஆர் என்னும் மாயை திருமங்கலத்தைவிட்டு சென்றதில் முக்கிய பங்கு ஜெயலலிதாவுக்கே சேரும். அவர் செய்த 1996 அட்டுழியம் இன்னும் மக்கள் மனதை விட்டு விலகவில்லை.

அதனால்தான் சென்ற முறை கூட மதிமுகவுக்கு திருமங்கலத்தை கொடுத்தார். அப்போது மதிமுக வெற்றி பெற்றதால் மீண்டும் அதிமுக வுக்கு செல்வாக்கு திருமங்கலத்தில் வந்து விட்டது என தப்புக்கணக்கு போட்டு விட்டார். போனமுறை செய்தது "குரங்கு குட்டியை விட்டு ஆழம்பார்ப்பது போல்" செய்தார். அந்த குட்டி தெளிவாக நீந்தி கரை ஏறியதை அறியாமல் ஆழம் இல்லை என தப்புக்கணக்கு போட்டு தான் மாட்டிக்கொண்டார் எனபது தான் சரி. மற்றபடி அவர் புலம்புவது சும்மா கதைக்கு ஆகாது என மக்கள் அறிந்து உள்ளனர்.

எது எப்படியோ ஆளும் கட்சிக்கு அதாவது ஜெயலலிதாவின் கூற்றுப்படி ஆளும் மைனாரிட்டி திமுகவுக்கு ஒரு எம்.எல்.ஏ கிடைத்து விட்டது.வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் லதா அதியமானுக்கு வாழ்த்துக்கள். அவரின் கணவர் அதியமான் பலமுறை திமுக சார்பில் நின்று தோற்று போயிருக்கிறார். நான்கு முறை நின்று ஒரு முறை தான் வெற்றி பெற்று இருந்தார். அவரின் மனைவி லதா அதியமானின் வெற்றி இந்திய அரசியலில் வரலாறு படைத்து விட்டது. ஒரு சிறிய இடைத்தேர்தல் ஒட்டுமொத்த தமிழகத்தையே கலக்கிவிட்டது.

கூத்துல கோமாளி வந்து மாதிரி உள்ளது சரத்குமாரின் செயல்பாடுகள். அவரால் ஒரு ஆயிரம் ஓட்டு கூட வாங்க முடியவில்லை. அவர் தன்னை அடுத்த முதல்வர் என சொல்வது செம காமெடி.

நானும் திருமங்கலத்துக்காரன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

jk12
13-01-2009, 04:57 PM
இந்த தேர்தல் வரவிருக்கும் நாடாழுமன்ற தேர்தலுக்கு ஓரு முன்னோட்டமாகதான் இரு பெரிய கட்சிகளும் நினைத்து வேலை செய்தன... செலவும் செய்தன...
அ.தி.மு.கவும் அதிகமாகவே செலவு செய்தது...
( நாடாழுமன்ற தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் அல்ல.... அந்த தேர்தலுக்கான தொகுதி பங்கிட்டை முடிவு செய்வதற்காகதான் )

உண்மையாகவே ஓரு பெரிய ஆச்சரியம்... அறிக்கை கட்சிக்கு 700 ஒட்டுக்கள் விழுந்ததே...

உதயசூரியன்
13-01-2009, 07:25 PM
அண்ணாமலையின் பதிவு சுவாரசியம்...

இத்தேர்தலை வைத்து மகா மட்டமான கட்சிகள் என்று சிலர் தங்களை தோலுரித்து காட்டினர்..
அதிலும் அ. தி.மு.க தான் வெற்றி பெறும் என கதை வேறு..
எல்லோருக்கும்.. தி.மு.க வின் செயல்பாடுகள் நன்றாகவே தெரிகிறது..
போர் எனும் போது.. சிங்களர்கள் போல் அ.தி.முக வினர் நடந்து கொள்கின்றனர்..


இத்தேர்தலை நடத்த.. சம்பந்த பட்ட தமிழக அரசை கலந்து ஆலோசிக்கவில்லை..
அடுத்து ஜெ வின் சாதி வெறியை தேர்தல் தலைமை கமிஷனரும் உடன் பட்டு..
புது காவல் ஆணையர்..
துணை ராணுவம்
ஒரு இடை தேர்தலுக்கு.. மத்திய அரசு ஊழியர்கள் என தேர்தல் கமிஷன் தன் சாயத்தை வெளுத்து கொண்டது..
பீகாரை விட திருமங்கலம் ஆபத்து என்று சொன்ன வார்த்தை அய்யோடா..
கடைசியில் வாக்கு பதிவு எப்படி நடந்தது..
சாதரணமாக நடக்கும் சில அசம்பாவிதங்கள் கூட நிகழாமல்.. வாக்கு பதிவில் சாதனை படைத்தனர்.. மக்கள்..

முத்துராமலிங்கம் ஒரு பெரிய கூட்டத்தையே அழைத்து உள்ளே சென்று விதிகளை மீறி.. மனு தாக்கல் செய்கிறார்..
பிரச்சாரத்துக்கு 60 கார்கள் புடை சூழ ஜெ செல்கிறார்...... தேர்தல் கமிஷனர் தி.முகவை துரத்துகிறார்...
தேர்தல் கமிழனுக்கு மக்களே சரியான தண்டனை கொடுத்து உள்ளனர்..
தமிழர்கள்.. மற்றும் கலைஞர் என்றால் மட்டும் வட இந்தியர்களுக்கு வேப்பங்காய் தான்..
வட நாட்டினில் அதுவும் பீகாரில் உ.பி யில் எல்லாம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்..

வட இந்தியாவில் நினைத்தால் ரயிலை நிருத்துகின்றனர்..
கர்னாடகம் உச்ச நீதி மன்ற தீர்ப்பையே மதிக்கவில்லை..

ஆனால் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தப்ப.. ஆட்சியை கலைத்துவிடுவோம் என்று மிரட்டல்..
அடபாவிகளா.. உச்ச நீதி மன்றமும்.. தேர்தல் கமிழனும்.. இன்னும் சாதி பற்றுள்ளவர்களை கொண்டுள்ளது..

சரி.. இத்தேர்தலில்..
எடுத்த எடுப்பிலேயே.. ஒன்றும் மக்கள் முடிவெடுக்க வில்லை..
அ.தி.முக. வின் தினந்தோரும் அறிக்கை போராட்டங்கள் மக்களிடம் வெறுப்பை தான் வரவழைத்துள்ளது..
எங்கையோ இருந்து கொண்டு அறிக்கை மட்டும கொடுக்கும் விஜயகந்துக்கும், சரத்துக்கும் டெபாசிட் போகும் அளவுக்கு பாடம் தந்திருக்கிறார்கள்..
மக்கள் வெறுப்பை எப்படியெல்லாம் சம்பாதித்தார் ஜெ
ஜெ வின் போலியோ மருந்தில் கூட கேவலமான் அணுகுமுறை..
ஜெவின் ஆர்பாட்டம்..
முன்னாள் தி.முக எம். எல் ஏ வை இன்று அ.தி.மு.க வேட்பாளராக .. அவர்களின் கட்சியினரே எற்பது கடினம்..
முதலில் அவரின் மீசையே அவரை அன்னிய படுத்தி விட்டது..
பிரச்சாரத்தில்.. ஜெ வின் பேச்சுக்கள்.. விஜயகாந்தின் பேச்சுக்கள்.. படித்தவர் எவரும் சகிக்க முடியாதவை..(1980 களில் ஏமாற்ரிய பேச்சுக்கள்)
ம.தி.மு.க விடம் இருந்து எந்த காரணத்தையும் சரியாக விளக்காமல் தொகுதியை பிடுங்கியது..
அ.தி.மு.கவின் அட்டூழியத்தை எடுத்து காட்டுகிறது(அங்கே எப்போதும் அதே கதை தானே)
வைகோவை நம் மக்கள் ஒரு புழுவாக தன் பார்க்கின்றனர்..
வருத்தமான விஷயம்.. கம்யூனிஸ்டுகளின் வாக்குகள் என்று ஒன்றும் இல்லை.. இனியும் இருக்காது என்று கம்யூனிஸ்ட் உறுப்பினர்களே.. திருமங்கலம் தேர்தலில் தி.மு.க விற்கு ஓட்டளித்துள்ளனர்..

சில சிறு குறைபாடுகள் இருந்தாலும்.. பல நன்மைகள் தி.மு.க ஆட்சியில் தான் நடக்கிறது என்பதை மக்கள் சொன்னாலும்.. பத்திரிகைகள்.. ரொம்ப ஓவராக சீன் போடுகின்றனர்..
80 ஆயிரம் வாங்கும் கட்சியினை.. 800 ஓட்டுக்கல் வாங்கும் கட்சியினை இணைத்து அவர்களை விளம்பர படுத்தினர்..
வார்டு கவுன்சிலருக்கு கூட.. 2000 ஓட்டாவது வேணும்..
அய்யோ..
ம.தி.முக மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு இன்னும் பெரிய அடி காத்து இருக்கிறது..
மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்..இவர்களின் வேஷத்தை...

இதுவரை மு.க அழகிரியை பற்றி அவர்கள் சொன்னதை வைத்து அவரின் தேர்தல் பிரச்சாரத்தை கவனித்தேன்..
தற்போது வெற்றி பெறசெய்து.. தன்னுடைய கவனத்தை எல்லோரும் பார்க்கும் படி செய்துள்ளார்..

இவர்கள் சொல்வது போல் அவர் இல்லை என்பது தெரிய ஆரம்பித்து இருக்கின்ரது..

நன்றாக கவனித்தால்..
ஜெ விற்கு தேவையில்லாத ஒன்று..
தான் தோன்றி தனமான ஒன்று..
அவரின் முடிவு.
5 நாட்கள் பிரச்சாரம் ஒரு இடை தேர்தலுக்கு!!!!!!??
கூட்டம் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்ற கட்டளை.. எதற்கு இந்த வெட்டி பந்தா??
அவர் வரும வரை ஆபாச நடனங்கள் வேறு!!!??
அதே.. பவ்யம்..
ஏற்கனவே.. சிதறிவிட்ட அ.தி.மு. கவில்.. இனி வருபவர்களது புத்தியுடன் செய்வார்களா?? என்றால் முடியவே முடியாது..
தமிழன் என்ற அடையாளமே எங்களுக்கு தேவையில்லை என அவர்களின் தொண்டர்கள்..

இத்தேர்தலில்.. கூட்டம் கூட்டமாக நடிக நடிகைகள்...ஜெ, விஜயகாந்த், சரத், ராதிகா..!
இடை தேர்தல் நடந்தது.. சென்னையாக இருந்தால் கூட சொல்லலாம்.. அங்கே சட்டை செய்யமாட்டார்கள் என..
ஆனால்.. மூன்று நடிகர், நடிகையர் கட்சியின் இடையே..
படத்தில் நடிக்காத இருவர் கதானாயகர்களாயினர்..
எதை பற்றியும் கவலை படாமல்.. அவர்களின் பிரச்சாரம் அருமை.. சாதனைகளை முன்வைத்து.. பட்டி தொட்டிகளில் மக்களுடன் மக்களாக கலந்து வாக்கு சேகரித்தனர்..
வாழ்த்துக்கள் தளபதி ஸ்டாலின் மற்றும் அழகிரி இருவருக்கும்..

தோல்வியடைத்தவுடன் சொல்லும் வார்த்தை ஜெவை தவிர வேற யாரும் கேவலமாக சொல்வது கிடையாது..

2001ல் தி.முக. தோற்றபோது...கலைஞர் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் 6 மாதங்களுக்கு குறைகளை சுட்டி காட்ட மாட்டேன் என்றார்..
1991ல் தோற்ற போது தனது எம்.எல்.ஏ பதவியை துறந்தார்..

ஆனால் ஜெ வின் அறிக்கை மட்டும் எப்போதும் இப்படித்தானோ.. வர் ஜெயித்தல் ம்ட்டுமே நல்ல ஒட்டு.. பரவாயில்லை இம்முரி க்ல்ல ஒட்டு என்று என்ற் பேச்சே வர்வில்லை...
இவர் தான் இத்தேர்தல் பிரச்சாரத்தை..
ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளி ஆக்கி ஓட விட்டார்..
ஆனஸ்ட் மேன் என்று சர்டிபிகேட்டும் கொடுத்தார்.. நரேஷ் குப்தாவிற்கு..
ஜெ சொல்படி இத்தேர்தல் நடந்ததால்.. அ.தி.மு.க வினர் ரொம்ப ஆணவத்துடன் இருந்தனர்..
90 சதம் வாக்கு பதிவு நடந்தவுடன் தன் முயற்சியால் தான் வாக்கு பதிவு தேர்தல் கமிழன் ஒழுங்காக நடை பெற்றது என்று சொன்ன ஜெ..
அதிக வாக்கு பதிவு ஆகியிருப்பதால் அ.தி.மு.க விற்கே வெற்றியென்றும்.. அடுத்து பல வரலாற்று நிகழ்வுகள் நிகழும் என்றும் அடித்த கூத்துக்கள்.. அம்மம்மா..

மக்களே.. ரொம்ப தெளிவா தைரியமா இருந்தா ஒண்ணும் சொல்வதற்கில்லை..

அப்புறம்.. செய்தி தாள்களில் குருட்டாம் போக்கில் சொல்வதை பத்திரிகைகள் நிருத்தட்டும்..
எதிர்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் அ.தி.முக.. தான் பணம் இரைக்கும்..
விபரம் அறிந்த .. தேர்தல் பூத் கமிட்டி ஆட்கள் அனைவருக்கும் தெரியும்..

இத்தேர்தலுக்காக கலைஞர் தூரத்தில் இருந்து தான் பார்த்தார்..
இதற்கு முந்திய இடை தேர்தல்களில் ஜெ முதல்வராக இருந்த போது.. கோட்டையையே அங்கு எடுத்து சென்றுவிடுவார்.. முதல்வரே 6 நாள் பிரச்சாரம் செய்வார்..

கலைஞரிடம் மரபுகளை மதிக்கும் பண்பு உள்ளது..

ஜெவையும் சினிமா மோகத்தையும்.. 40 வருட அரசியலுக்கு சொந்த காரர்கள் தளபதியையும், அண்ணன் அழகிரியையும் வைத்து வீழ்த்தியிருக்கிறார் கலைஞர்..

விஜயகாந்த் ஒழுங்காக அரசியல் நடத்தாமல் ஜெ வின் ஆம்பளை வாரிசாக செயல் படுவதும்.. தேர்தல் நேரத்தில் வருவதும்..
சென்டிமென்டாக பேசுவதும்.. மற்ற நேரங்களில் சினிமாவில் நடிப்பதும்..
மனைவி, மச்சான்களை வைத்து கட்சி பிசினஸ் நடத்துவதும்.. கேவலமாக கலைஞரை விமர்சித்ததும் அவர் மேல் பெரிய அதிருப்தி வெளிபடுகிறது..
அவரின் கணக்குகள் இன்னேரம் ஒரு வாக்கு அதிகமானாலும் தமிழகத்தின் தலையெழுத்து நான் தான் என்பார்..
இப்பொழுது போன முறை வாங்கியதை கூட வாங்க முடியாமல் டெபாசிட் இழந்திருப்பது.. எல்லா சின்ன கட்சியை போல் அதுவும் ஒரு சின்ன கட்சி என்று புரிய வைத்து விட்டனர் மக்கள்..

நல்லவன் வேஷம் மற்றும் தமிழன் வேஷம் இனி மக்களிடம் எடுபடாது..விஜயகாந்த்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

விக்ரம்
14-01-2009, 09:23 AM
நல்லவன் வேஷம் மற்றும் தமிழன் வேஷம் இனி மக்களிடம் எடுபடாது..
இடைத் தேர்தல்களின் வரலாறில் முக்கால் வாசி, ஆளும்கட்சிக்கு சார்பாகத் தான் வந்திருக்கிறது. தி.மு.க இந்த தேர்தலில் ஜெயித்தது ஒன்றும் ஆச்சரியப்பட வைக்கும் செய்தியல்ல.

திருமங்கலம் தொகுதியின் வெற்றி, தங்களது வருங்கால அரசியலை ஒளிமயமாக்கும் என்று தி.மு.க எண்ணினால், அது மண்குதிரையை நம்பி சவாரி செய்த கதி தான்.

திருமங்கலம் வெற்றியின் மூலம், ஒட்டு மொத்த தமிழகமும் தி.மு.கவின் ஆட்சியை அங்கீகரிக்கிறது என்று அர்த்தமல்ல. தற்போது தி.மு.கவிற்கு பலம் அதிகரித்திருக்கிறது என்று நினைத்தால், ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒட்டு மொத்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக முடியுமா?

அவ்வாறு தயாராகி, அந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெறமுடியுமா? அவ்வாறு வெற்றிபெற்றால், தங்களுக்கு கிடைத்த மைனாரிட்டி தி.மு.க என்ற பெயரை மாற்றி மெஜாரிட்டி தி.மு.க ஆகலாம். இது முடியுமா? அந்த நம்பிக்கை தி.மு.கவிற்கு வருமென்றால், மக்கள் ஆட்சியை அங்கீகரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

அது இப்போது இருக்கும் நிலையில் முடியுமா? கேரளாவில் உள்ளது போன்ற ஒரு நிலை தான் தமிழக சட்டசபைக்கும் நிலைமை. மக்களை திருப்தி படுத்த தி.மு.க தவறிவிட்டது. ஆனால் அடுத்து வரும் அ.தி.மு.க ஆட்சியும் மக்களை திருப்தி செய்யாது.

அடுத்த அ.தி.மு.க ஆட்சியிலும் கலைஞர் உயிரோடு இருந்தால், அதற்கடுத்த ஆட்சிக்கட்டில் தி.மு.கவிற்குத் தான். அவர் இல்லை என்றால், தி.மு.க ஒரு கேள்விக்குறி என்பதை மறக்க வேண்டாம்.

அதேபோல் தான் அ.தி.மு.கவும் ஜெயலலிதா என்ற மையத்தை சுற்றி மட்டுமே இயங்குகிறது.

திராவிட கட்சிகளின் ஆட்சி விளையாட்டு மிக விரைவில் தமிழகத்திலிருந்து அழிந்துவிடும். அடுத்த மச்சக்காரன் யார் என்பதை காலம் தான் சொல்லும், அதுவரை பொறுத்திருப்போம். இதை தெரிந்து கொண்டு தான், நான் தான் அடுத்த தமிழக முதல்வர் என்று ஒவ்வொருவரும் கூவுகின்றனர்.

நான் அ.தி.மு.கவின் அபிமானியோ (அ) தி.மு.கவின் எதிரியோ இல்லை. ஆனால் தி.மு.கவின் திருமங்கலம் வெற்றியால் தமிழ்நாட்டிலுள்ள, ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சந்தோஷப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை.

அய்யா
14-01-2009, 02:24 PM
ராஜா அண்ணாமலை மற்றும் உதய சூரியனின் பதிவுகள் பல செய்திகளைத் தெளிவுப்படுத்தியுள்ளன. நன்றி நண்பர்களே!

ஸ்டாலின் குறிஞ்சி மலர் என்ற தொ.கா. தொடரிலும், ஒரே ரத்தம் என்னும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார் உதயசூரியன்!!

arun
14-01-2009, 04:17 PM
அண்ணாமலை மற்றும் உதய சூரியனின் பதிவுகள் உண்மை நிலைகளின் பிரதிபலிப்பாக இருக்கின்றன

இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான உற்சாக டானிக் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் கண்டிப்பாக இந்த தேர்தலின் பிரதிபலிப்பு நாடாளுமன்ற தேர்தலில் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது

மேலும் கலைனருக்கு பின் திமுகவிற்கு ஸ்டாலின் இருக்கிறார் அவருக்கு கட்சியை வழி நடத்துவது என்பது ரொம்ப பெரிதான வேலையாக இருக்காது என நினைக்கிறேன்

Keelai Naadaan
15-01-2009, 03:42 AM
திருமங்கலத்தில் தி.மு.க வெற்றி பெற்ற கதைகளை கேட்டால்...:)

சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தலில் ம.தி.மு.க பெற்ற வாக்குகள் 45000 சொச்சம் தி.மு.க 40000 சொச்சம் என்பதாக நினைவு

இந்த தேர்தலில் ஓட்டு வித்தியாச விபரம் 39000 சொச்சம்

அடடா எத்தனை பெரிய முன்னேற்றம்..?

பீகாரை மிஞ்சி விட்டது காஷ்மீரை மிஞ்சி விட்டது என தேர்தல் அதிகாரி வருந்தியிருக்கிறார்.

கடைசி ஒரு மணி நேரத்தில் 30% வாக்குகள் பதிவானதாக கேள்விபடுகிறோம்.

தி.மு.க வின் திருமங்கல திறமை லேசானதல்ல.

ஆனால் ஒரு தொகுதிக்கே அவ்வளவு பணம் என்றால் பாராளுமன்ற தேர்தலில் எவ்வளவு செலவாகும்..?

அந்த அளவுக்கு பணம் இருந்தால் பாராளுமன்றத்திலும் வெற்றி பெறக்கூடும்.

கட்சிகளிடம் பணம் உண்டு. தேர்தலுக்கு முன்பு முதலீடு செய்தால் தேர்தலுக்கு பின் அறுவடை செய்து கொள்வார்கள்

முன்பெல்லாம் ஊழல் என்றால் லட்சம், கோடி என்பார்கள். இப்போதெல்லாம் ஆயிரம் கோடிகளில் தான் சொல்கிறார்கள்

வாழ்க அரசியல்வாதிகள்.

அய்யா
15-01-2009, 03:53 AM
நீங்கள் சொல்வது சரியே கீழை அண்ணா! ஆனால் திமுக மட்டுமா செலவழித்தது?

அதிமுகவும் லேசுப்பட்டதல்ல. இந்த இடைத்தேர்தல் வெற்றியை வைத்து, அகில இந்திய அரசியல் கனவுகளோடு அதுவும் பணத்தை வாரிவிட்டதை மறுப்பதற்கில்லை.

ஒருவேளை முடிவு வேறுவிதமாக இருந்திருந்தால், அம்மாவின் அடுத்த அறிக்கை என்னவாக இருக்கும் என்று தாங்கள் அறியாததா?

virumaandi
15-01-2009, 05:17 AM
கீழையார் அவர்களே..
எதை வைத்து இப்பொழுது சொல்கிறார்கள்.. தோற்றுவிட்டதாலே தானே..
ஜெயித்திருந்தால்..??எப்படி நீங்கள் பேசியிருப்பீர்கள்..

சரி.. ஜெ இந்த தேர்தலுக்கு மட்டுமா இப்படி சொன்னார்..
அவர் தோத்த பொது தேர்தல்களில் கூட கள்ள ஓட்டு என்பார்..

உலகம் முன்னேறும் போது.. தேர்தல் கமிஷன் கொண்டு வந்த எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினை கூட அரசியல் செய்தார்.. தி.முக தான் என்ரார்..
ஆனால் அதே தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார்..
சரி.. இது வரை இடை தேர்தல்கள் எப்படி நடந்தது..
இவர்கள் கட்சியினர்.. விட்டிற்க்குள்ளாகவா இருந்தார்..
இடை தேர்தலுக்கு முதல்வரே அங்கு தான் இருப்பார்..

அவர்கள் ரொம்ப சுத்தமானவர்களா..

உதயசூரியன்
15-01-2009, 06:01 AM
கீழையாரே..
எதிர் கட்சியினரின் தற்போதைய பிரச்சாரத்தை ஊடகங்களில்.. வந்ததை மட்டும் சொல்லியுள்ளீர்...
அ.தி.முக. வினர் எதையும் செய்யும் துணிந்தவர்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை..
பல இடங்களில்.. பணம் பட்டுவாடா.. பண்ணி மாட்டியது அ.தி.முக தான்..
இன்றும் பூத்தில் உட்காரும் ஆட்களுக்கு..தி.மு.க வில் கொடுக்கும் படியை விட இரன்டு மடங்கு தருவார்கள்.. தெரியுமா..??

தமிழ்நாடே கலைஞருக்கு எதிராக இருந்தது போலவும் அதை.. தி. மு.க... பீகாரை மிஞ்சிய அளவுக்கு கலவரம் நடத்தி குண்டு வீசி.. துப்பாக்கியால் சுட்டு மாற்றினர் என்பது போல் தங்கள் பேச்சு மிக பரிதாபமாக உள்ளது..
தாங்கள் வெளியூரில் இருக்கிறீர்..
தமிழ் நாட்டினில் .. தி.மு.க வினர் மீதும் சொல்லும் சில குறை பாடுகளும்.. அப்பா அம்மாவிடம் உரிமையுடன் சொல்லும்.. எதிர் பார்க்கும் குறைகளே..

அப்பூறம்.. ஒன்று தெரியுமா..
உண்மையான வாக்கு பதிவின் நேரத்தை கனக்கு செய்யுங்கள்..
னீங்கள் படித்தவர் தானே..

தேர்தல் கமிழன் இத்தேர்தலை எப்படி நடத்தியது..
தமிழக அரசுடன் கலந்தோலாசிக்காமல் அறிவித்தது..
ஜெ பாராட்டினார்..
புது கமிஷனர்..
புது மத்திய ஊழியர்கள்..
காமிராக்கள்
தேர்தல் உளவு படை..
ஜெ உட்பட.. குப்தா வை "ஆனஸ்ட் மேன்" என்று வர்ணித்தது.. தேர்தல் முடிவு தெரியும் வரை..!!!!

கலைஞர் தி.மு.கவினரின் கோபத்தையும் அடக்கி வைத்தார்..
இதை வைத்து கேவலாமாக எதிர் கட்சியினரும்..
தேர்தல் கமிஷனுரும் நட்ந்து கொள்கின்றனர்.. தோற்றாலும் பர்வாயில்லை.. ஆனாலும்.. தேர்தலில் நிறுத்தும் அளவுக்கு இடம் கொடுக்க கூடாது.. என்று கட்டளை இட்டர்..
தி.மு.கவினரும் மோதல் போக்கை விட்டு பிரச்சார வியூகத்தை மாற்றி கொண்ட்னர்..

திருமங்கலம்.. அ.தி.மு.க கோட்டை..
முத்துரமலிங்கம்.. அழகிரியின் முன்னாள் ஆதர்வாளர்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்..

சரி..
தேர்தல் வரை ஜெ சொன்னதும் மற்றவர் சொன்னதும் படிக்காத மக்களை கூட கோப பட செய்யும்..??
ஜெ சொன்ன போலியோ அரசியல் உண்மை என மக்கள் .. தி.முகவிற்கு எதிராக இருந்தனரா..?/
ஜெ வின் பிரச்சார தாக்குதல்களில் மக்கள் மயங்கி ஓட்டு போட தயாராக இருந்தனரா..??

கிழையாரும் அவர்களின் ஸ்டேட்மென்டை அப்படியே தந்தது.. வியப்பு..
ஏனெனில்..
வாக்கு பதிவின் அன்று நடந்த அமைதியான வாக்கு பதிவு இதுவரை திருமங்கலத்தில் ஏன் இந்தியாவிலேயே கூட.. ஒரு இடை தேர்தலில் நடந்தது இல்லை..
இதை தேர்தல் கமிஷனும் ஒத்து கொண்டுள்ளது..
ஜெ வும் என்ன சொன்னார்.. என்னால் தான் இது நடந்தது என்று அவருக்கு சாதகமான நடந்த.. தேர்தல் கமிஷனுக்கு சர்டிபிகேட் கொடுத்தாரே.. அப்போ அது பொய்யா..??
சரி.. உங்களின் வாக்கு பதிவு கணக்கை..பார்ப்போம்..
கடைசி ஒரு மணி நேரத்திற்க்குள்.. 30 சதம்..
சரி..
பொது தேர்தலில் கூட முன் கூட்டியே வராத மக்கள்.. இதில் வாக்கு பதிவு தொடங்கும் முன்னரே.. நீண்ட வரிசையில் நின்றனரே..
அமைதியாக வாக்கு பதிவு நடந்ததே..
எல்லா இடங்களிலும்.. காமிரா வைத்து இருந்தனரே..??
சரி..
11.30 மணிக்குள் 45 சதம் பதிவான தொகுதியை மதிய செய்தியிலேயெ சொல்லி கொண்டு இருந்தனரே..?/
அப்புறம்.. 30 சதம் ஒட்டுக்கள் ஒரு மனி நேரத்திற்குள் போட முடியுமா..
னீங்கள் படித்தவர் என்பதால் கேட்கிறேன்..
எல்லா பூத்திலும்.. மெஷினை பக்கத்தில் வைத்து ரிசெட்டை பூத் தலமை அதிகாரி அழுத்திவிட்டும்.. கையெழுத்து பொட்டு முக்கி எடுத்தாலும் முடியவே முடியவே முடியாது..
ஒரு பூத்தில் தவறு நடந்தாலும் 30 சதம் என்பது ரொம்ப ஓவர்..??
சரி அங்கே போட்டியிட்ட 26 வேட்பாளர்களின் 2*2*26 =104 பூத் எஜெண்ட்கள் என்ன செய்தனர்..
உள்ளே இருந்த அதிகாரிகள் அனைவரும் என்ன செய்தனர்..
அங்கெ இருந்த காமிரா என்ன ஆனது..
அங்கெ இருந்த துணை ராணுவம் அவர்கலும் ஒத்துழைத்தனரா..

அப்படி எல்லோரும் சேர்ந்தே..
ஒரு தொகுதி முசுதும் உட்கார்ந்து ஒரு மணிக்குள் 30 சதம் .. முடித்தார்கல் என்றால்..கின்னஸ் சாதனை தான்..
அப்படி இப்படி அனைவருக்கும்9போத்தில் இருந்தவர்கள்) பிடிக்காத அ.தி.மு.க எப்படி ஜெயிக்கும்..
அவர்களும் ஒரு மக்கள் தானே..??

வாக்கு பதிவின் பொது சில தவறுகல் நடை பெறும் தான்.. ஆனல்.. அதை அப்படி நடக்கும் இடத்தில் சொல்லலாம்..
ஆனால்.. 40000 ஓட்டில் தோற்ற விஷயத்திற்கு சொல்வது அந்த கட்சிர்கு தான் அசிங்கம்..

முதலில் தமிழர்கள்.. அடுத்த மானிலத்தவர்களுக்கு காவடி எடுப்பது எப்பொழுது நிருத்துவார்களோ..
ஜெ கொலை கொள்லை அடித்தாலும் கெட்க நம் தமிழர்களுக்கு..(ஒரு சிலருக்கு) துப்பில்லை..
ஆனால் புஷ் மிது செருப்பு வீசினாலும் அது கலைஞரின் சதி ஜெ சொல்லுவார்.. அதையும் சிலர்.. தமிழ் பாட்டி, நாட்டுக்காக உழத்த, சுதந்திர போராட்ட தலைவி சொல்லியதாக சொல்லி மூக்குடை படுகிறார்கள்..

மக்களின் ஏமாற்ரத்தில் தானே.. 1980 களில் ஒரு மெம்பாலங்கள் கூட கட்டாமல்.. ஆனால் அதே ஆட்ச்சி அரியனை ஏறியது..

இனி அடாவடி வாதம் செய்கிறவர்களுக்காக.........இனி வருபவை..
இவர்கல் தப்பு செய்து வந்தாலும் நல்லதெ செய்வார்கல் ஓரலவிற்கு..இது தப்பு செய்தனர் என்று சொல்பவர்கலுக்காக..

சரி.. இப்பொழ்து.. இடை தெர்தலுக்கு வருவோம்..
இது ம. தி.மு க தொகுத்.. அதை ஏன் அ.தி.மு.க நின்றது..
ரவுடிசமும்.. எதிர்க்கும் தில் எங்களுக்கு இருப்பதாக காட்டி கொள்ல தானே..
அது உங்கல் அ.தி.முக வில் இல்லை என்பது இப்பொழு புரிகிரது அல்லவா..
ம.தி.மு.க, கம்யூனிச்டி தலைவர்கல் மட்டுமெ ஜெவை ஆதரிக்கிரார்கள்..
அவர்களின் பின்னாள்.. வரும் தொண்டர்களின் மனனிலை அப்படியில்லை என்பது மக்கள் ஏன் அந்த தொண்டர்கலுக்கும் தெரியும்/...!!




மையிலை இடை தேர்தல்..
பெருந்துறை..
ஆண்டிபட்டி..
எல்லொரும் மரந்து விட்டார்கலா..?/
தி.முகவினர் பலர் கொல்ல பட்டது தான் மிச்சம்..
ஆனாலும் அங்கே.. தி.முக.. வாபசாகமல் இருந்தால்.. வாக்கு வித்தியாசம் அதிகம் இருக்காது..

அப்புறம்.. ஆப்பீலில் மூக்குத்தி.. என்றதும்..
ஓட்டுக்கு பனம் கொடுக்கும் கலையை கற்ரு தந்ததே.. அ.தி.முக. தானே..

அ.தி.மு.க செலவு செய்தது கொஞ்சமா நஞ்சமா..
ஏன் இப்ப வந்த விஜய காந்த் குட பனம் பட்டுவாட பண்ணினார்..
ஆனால்.. அதை பட்டுவாட் செய்யும் அலவுக்கு ஆள் இல்லை..

அடுத்டு பாருங்கல்.. அவரும் வைகோ போல கட்சிக்கு செல்வௌ செய்ய போன முறை போல உ.பி. யில் சென்ரு ஏமாற்ரி பனம் கறந்து வருவார்..
இல்லையென்றால்... செல்வௌ செய்ய பல கொடிகலை வாங்கிகொன்டு ஏதாவதொரு அணியில் சேர்ந்து விடுவார்..
எல்லொரும் காலம் கால்மாக செய்த விஷயம் தானே..

வாய் பூலித்ததொ.. மாங்காய் புளித்ததொ என்ரு பேச குடாது..

ஆலும் கட்சிக்கு சதகமான ஒட்டுக்கள் தான் அவை..
அதற்கு காரனம்..
அங்கெ விர ஈளவரசனுக்காக விழுந்த ஓட்டுக்கல்.. அவை தி.முக ஓட்டுக்களாகியது...
எல்லொரும் அவரவர் திரமைக்கு ஏற்ப்ப கள்ல ஓட்டும் போட்டு இருப்பர்..
இதில் தி.முக மட்டும் விதி விலக்கல்ல..
மல்லுக்கு நிற்க தான் அவ்வலவு குட்டனி இருக்கே..
2000 அல்லது 4000 ஓட்டுக்களில் வித்தியாசத்தில் வெற்ரி பெரும் பொது தான் கள்ல ஒட்டுக்களின் கை வரிசை தெரியும்.. அப்பொழுது தான் கள்ல ஒட்டின் முலம் முடிவு தெரியும்..
ஆனால் இங்கே.. 40000 வித்தியாசம் வெரும் கள்ள ஒட்டு என்ரால்.. நம் சிந்தனை எவ்வாறு சொல்வது..
கேட்பவன் கெனையாகவெ இருக்க சொல்கிரது..
அதற்கு பதில்.. தொல்விக்கான கலையை எடுக்க வேண்டும்.. அ.தி.முக வில் அது முடியாது..
இப்படி புரானம் பாடகூடாது..

கள்ள ஓட்டினாலும்.. இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தை கொடுக்க முடியாது..
அது பிகாரிலும் கொடுக்க முடியாது..
மிக பெரிய கலவரம்.. போத் அனைத்தையும் கைப்பற்றி குண்டு வீசி பொட்ட்லும் இவ்வலவு வித்தியாசம் கிடைக்காது..
அதி புரிந்து கொள்லுங்கல்..

தி.முக். 4000 ஓட்டு போட்டிருந்தால்.. நிச்சயம் அ.தி.முக. 3500 ஒட்டவாது பொட்டிருப்பார்கள்..
சரி.. இப்படி ஏதும் கலவரமெ நடக்காமல்.. அத்தேர்தல் முடிவு வரும் பொது.. சொல்வது அபத்தம்..
ஏன்?/
தேர்தல் நடந்த விதம் குட்.. திருப்தி சொல்ல பட்டகே..

பல இடை தேர்தல் அ. தி..மு.க வில் நடந்த பொது.. பல தேர்தலில் தேர்தல் நடந்த அன்று.. தி.முக. கலவரத்தை கன்டு.. காலை 9 மணிக்குள்.. போட்டியிலிருந்து விலகியதே..
அது போல செய்து இருக்கலாமே..??/

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அவசரமாக செல்லுகிறேன்.. தட்டச்சு பலகை சரியில்லை.. வந்து தமிழை ச்ரி செய்கிறேன் மன்னிக்கவும்

Keelai Naadaan
15-01-2009, 06:26 AM
திருமங்கலத்தில் தி.மு.க வெற்றி பெற்ற கதைகளை கேட்டால்...:)

சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தலில் ம.தி.மு.க பெற்ற வாக்குகள் 45000 சொச்சம் தி.மு.க 40000 சொச்சம் என்பதாக நினைவு

இந்த தேர்தலில் ஓட்டு வித்தியாச விபரம் 39000 சொச்சம்

அடடா எத்தனை பெரிய முன்னேற்றம்..?

பீகாரை மிஞ்சி விட்டது காஷ்மீரை மிஞ்சி விட்டது என தேர்தல் அதிகாரி வருந்தியிருக்கிறார்.

கடைசி ஒரு மணி நேரத்தில் 30% வாக்குகள் பதிவானதாக கேள்விபடுகிறோம்.

தி.மு.க வின் திருமங்கல திறமை லேசானதல்ல.

ஆனால் ஒரு தொகுதிக்கே அவ்வளவு பணம் என்றால் பாராளுமன்ற தேர்தலில் எவ்வளவு செலவாகும்..?

அந்த அளவுக்கு பணம் இருந்தால் பாராளுமன்றத்திலும் வெற்றி பெறக்கூடும்.

கட்சிகளிடம் பணம் உண்டு. தேர்தலுக்கு முன்பு முதலீடு செய்தால் தேர்தலுக்கு பின் அறுவடை செய்து கொள்வார்கள்

முன்பெல்லாம் ஊழல் என்றால் லட்சம், கோடி என்பார்கள். இப்போதெல்லாம் ஆயிரம் கோடிகளில் தான் சொல்கிறார்கள்

வாழ்க அரசியல்வாதிகள்.
சகோதரர்கள் அய்யா மற்றும் விருமாண்டி அவர்களுக்கு பணிவுடன் ஒரு சுட்டி காட்டல்.
நான் அ.தி.மு.க வை பற்றி உயர்வாக சொல்லவில்லை.

நான் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாற்றம் இல்லை.

எந்த கட்சி உத்தமம் என நினைப்பது அவரவர் உரிமை.
அவரவர் அறிந்த வரை மனதில் ஏற்படும் நினைப்பு

நான் என் மனதில் பட்டதை சொன்னேன்.
(சத்தியமாக) யாரையும் புண்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை.
எனக்கு விவாதங்களில் ஈடுபட விருப்பமில்லை.

ஒருவன் தவறு செய்தான் என்பதால் இன்னொருவனின் தவறை சுட்டிக்காட்டக்கூடாது என்றால் உங்களின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை

உதய சூரியன், நான் அறிந்த வரை நீங்கள் மிக நல்லவர்.
உங்களின் கட்சி மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
உங்களை போன்றோர்தான் அக்கட்சியின் உண்மையான சொத்து, பலம்.

(நான் தற்போது சென்னையில் தான் இருக்கிறேன்)

ஆதி
15-01-2009, 06:51 AM
அன்பு விக்ரம் அண்ணா,

//திருமங்கலம் தொகுதியின் வெற்றி, தங்களது வருங்கால அரசியலை ஒளிமயமாக்கும் என்று தி.மு.க எண்ணினால், அது மண்குதிரையை நம்பி சவாரி செய்த கதி தான்.//

தங்களின் இந்த வரிகளை அப்படியே வழி மொழிகிறேன்..

நீங்கள் சொன்னவைகளைதான் கலைஞரும் வழி மொழிவார், அவருக்கு தெரியாத அரசியலா என்ன ?

பின் எதற்கு இந்த வெற்றி முழக்கங்கள் ?, மக்களை நம்பவகைக்கதான், திமுக ஆட்சியில் மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு எண்ண அலையை ஏற்படுத்ததான்..

இதை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் கலைஞருக்கு தெரியும், இருந்தாலும் ஜெய்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கிற மனப்போக்கு உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர் அறிவார்..

இந்த தேர்தலில் வெற்றியால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பலம் பொருந்திய அணியாய் திமுக இருக்கும் என்று மற்ற கட்சிகள் சற்று அச்சம் கொள்ளவும் செய்யும்.. என்பதும் முக்கியம்..

ஆனால் இந்த வெற்றியால் ஒளிமயமான எதிர்காலாம் திமுகவுக்கு அமை இருக்கிறதோ இல்லையோ, அழகிரிக்கு இருக்கு.. இன்றதற்கான சேதிவரும் என்று நம்புகிறேன்.. பார்ப்போம்..

ஆதி
15-01-2009, 09:04 AM
பொறுப்பானவர்களுக்கு தக்க பொறுப்பளிப்பதுதானே ஞாயம், காத்திரு அழகிரி கழகத்தைக் காக்கும் பொறுப்புனக்கு தரப்படும் என்று சொன்ன கலைஞர், அதை பேராசிரியரிடம் பேசிவிட்டு கூறுவதாகவும் சொல்லி இருந்தார்..

இன்று அன்பழகன் வெளியிட்டிருக்கும் செய்தியில், அழகிரிக்கு தென்மாவட்ட திமுக தலைவராக பதவி அளிக்கப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார்..

உதயசூரியன்
15-01-2009, 06:45 PM
அது நேற்றைய செய்தி ஆதி அவர்களே..
அப்பொறுப்பு ஏற்கனவே.. தென்னரசு பார்த்து கொண்டிருந்த்தார்..
அப்பொறுப்பின் பெயர்.. தென் மாவட்ட அமைப்பு செயலாளர்.பல வருடங்களுக்கு முன்னரும் இப்பதவி இவருக்கு வழங்க பட்டு பின்னர் பறிக்க பட்டு.. ஒதுக்கி வைத்து இருந்ததனர் என்று நினைக்கிறேன்..
காலியாக் இருந்த அந்த பொறுப்பு மிண்டும் நிரப்ப பட்டுள்ளது..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

agniputhiran
17-01-2009, 11:23 AM
திருமங்கலம் இடைத்தேர்தலை மிகவும் அமைதியாக துணை இராணுவக் கட்டுப்பாட்டில் எவ்வித முறைகேடும் இல்லாமல் மிகச்சிறப்பாக நடத்திக்காட்டி இருக்கிறது இந்தியத் தேர்தல் கமிஷன். எதிர்கட்சிகளை விட ஆளும் கட்சியிடமே அதிகமான கெடுபிடிகளைக் காட்டி வறுத்தெடுத்தது தேர்தல் கமிஷன். மக்களவைத்தேர்தல் மிக அண்மையில் வரும் ஒரு சூழலில் அவசர அவசரமாகத் திருமங்கலத்தில் இடைத்தேர்தலை வரவைத்ததில் அதிமுகவின் செல்வாக்கு தேர்தல் கமிஷனில் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதையும் உணர முடிகின்றது. ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு! மக்களிடம் தொடர்ந்து அசைக்க முடியாத செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவராகத் தமிழக முதல்வர் கலைஞர் திகழ்கிறார். கட்சியிலும் ஆட்சியிலும் அவரின் உழைப்புக்கு ஏற்ற வகையில் வெற்றி மிகப்பிரமாண்டமாக வெளி வந்திருக்கின்றது. திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் சுமார் எண்பதாயிரம். வாக்கு வித்தியாசம் மட்டும் சுமார் நாற்பதாயிரம் வாக்குகள். சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இரண்டு மடங்கு கூடுதலான வாக்குகளைப் பெற்று திமுக கம்பீரமாகவும், அதே சமயம் அதிமுக கூட்டணி சென்ற தேர்தலில் முன்பு பெற்ற வாக்குகளில் சுமார் ஐயாயிரம் வாக்குகளை இழந்து சோகமாகவும் காட்சியளிக்கிறன.


நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் பல உண்மைகளை அரசியல் உலகுக்கு உரைத்திருக்கின்றது. அண்மையக் காலங்களில் திமுக மீதும் திமுக அரசு மீதும் அவதூறுப்பிரச்சாரம் செய்தும் திமுகவின் செல்வாக்கு குறைந்து வருவது போலவும் சில ஏடுகளும் சில அரசியல்தலைவர்களும் தொடர்ந்து பரப்பி வந்த கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புலனாகின்றது. இந்நேரம் திமுக மட்டும் தோல்வியைத் தழுவியிருந்தால் பல்வேறு விஷஅம்புகள் விமர்சனம் என்ற பெயரில் கலைஞரைத் துளைத்தெடுத்திருக்கும். மாறாக அதிமுக படுதோல்வி என்றவுடன் பல்வேறு நொண்டிச்சாக்குகளைத் தேடி அலைகிறார்கள்.


பணநாயகம் வெற்றி பெற்றுவிட்டது. ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பது எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் புலம்பும் புலம்பல். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிடம் இல்லாத பணமா? பணப்பட்டுவாடாவில் திமுகவை முந்தியது அதிமுக என்று ஊடகங்களே செய்தி வெளியிட்டதை வசதியாக மறந்துவிட்டு விமர்சனம் செய்வது உண்மையை மறைப்பதாகும்.


இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எல்லாம் அரசியல் வரலாறு தெரியாதவர்கள் கூறிடும் பொய்மூட்டை. அதிமுக கட்சி, தான் சந்தித்த முதல் தேர்தலான திண்டுகல் தேர்தலின் போது திமுக ஆளும் கட்சிதான். ஏன் அதிமுகவே, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் காலத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அண்ணாநகர் மற்றும் மயிலாடுத்துறை தொகுதிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இவை போல எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே இடைத் தேர்தலில் ஆளும்கட்சிக்கே வெற்றி என்ற வாதம் எல்லாம் எடுபடாது. மக்கள் நினைத்தால் முடிவுகள் மாறியும் வரும்.


சென்ற தேர்தலில் திமுக பக்கம் இருந்த கம்னியூஸ்ட்டுகள் தற்போது இல்லை. பாமக கட்சியும் நடுநிலை என்று அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் நிலைமையோ படுமோசம். எப்போதும் காங்கிரஸ் கட்சியில் மாற்றுக் கட்சி ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இருப்பார்கள். தற்போது இருக்கும் பல்வேறு குழுக்களில் இருக்கும் ஜெயலலிதா/விஜயகாந்த் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி திமுக இமாலய வெற்றி பெற்றிருக்கின்றது. ஆக ஒருவிதத்தில் பார்த்தால் இந்த வெற்றி திமுக என்ற தனிப்பட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகவே எடுத்துக்கொள்ளலாம்.

கூட்டணியால் பாமக மற்றும் கம்னியூஸ்ட் கட்சிகளால் பிரதான கட்சிகளுக்கு எவ்விதப்பயனும் இல்லை. பிரதான கட்சிகள் வழியேதான் அக்கட்சிகள்தான் பயன் பெற்று வருகின்றன என்பதும் தெளிவாகி விட்டது. வட்டாரக் கட்சியான மருத்துவர் இராமதாசு பாமக அண்மையக்காலங்களில் மத்தியில் ஆளும் அமைச்சர்களாக வலம் வருவது பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினால்தான் என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் உணர வேண்டும். இது திருமங்கலம் தெரிவிக்கும் ஒரு உண்மையாகும். வட்டாரக்கட்சிகள் தேர்தல்சமயத்தில் பிரதான கட்சிகளிடம் சீட்டுகளுக்காகப்பேரம் பேசிக் கெடுபிடி செய்வதற்குத் திருமங்கலம், திருமங்களம் பாடிவிட்டது. இனி கொடுப்பதைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் பாமக, மதிமுக, கம்னியூஸ்ட்டுகள் தள்ளப்பட்டுவிட்டன.


இன்று அரசியல் களத்தில் பலத்த அடிவாங்கி கட்டுத்தொகையை (ஜாமீன்தொகை) இழந்து மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது விஜயகாந்தின் தேமுதிக கட்சி. மிகப்பெரிய தோல்வி. ஊடகங்களால் ஊதி ஊதிப் பெரிதாகக் காட்டிய பிம்பமாகக் காற்றுடைத்த பலூன் கதையாக பட்டென்று வெடித்துச் சிதறிய நிலையில் விஜயகாந்தின் மீது இருந்த நம்பிக்கை உடைந்து சிதறியிருக்கிறது. அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் படுதோல்வி அதிமுக தொண்டர்களுக்குச் சற்று ஆறுதலான விஷயம்தான். விஜயகாந்த் தனது உயரத்தைச் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டியதன் உண்மையைப்போட்டு உடைத்திருக்கிறது திருமங்கலம்.

நடிகர் விஜயகாந்தின் வீரியத்தை பெருமளவு குறைத்த பெருமை நடிகர் சரத்குமாரையே சாரும். அரிதாரம் பூசிய சினிமா நடிகர்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மக்கள் எண்ணியதற்கு இந்த இரண்டு நடிகர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தது ஒரு காரணமாக அமைந்தது எனலாம். சினிமாவினால் கிடைக்கும் பிரபலத்தை முதலாகப் போட்டு, நடிகர்கள் எல்லாம் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைப்புக்கு ஆப்பு வைத்துத் திருமங்கலம், திருமங்களம் பாடிவிட்டது.

சரி திமுகவின் இந்த மாபெரும் வெற்றிக்கு என்னதான் காரணம்?

அனைவரின் விரலும் ஒரு குறிப்பிட்ட நபரைத்தான் முதலில் சுட்டிக் காட்டுகின்றது. அந்த நபர் “ஹாட்ரிக் வீரர்” அழகிரிதான். இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. சரியான தலைமைத்துவப் பண்புகளுடன் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுத் தொண்டர்களுடன் தொண்டராகக் கடுமையாக உழைப்பவர் அழகிரி.

திமுக தமது ஆரம்பக்காலங்களில் தொண்டர்களின் எழுச்சியைத் தட்டி எழுப்பி வெற்றிக்கனியை சுவைத்து வந்த ஒரு இயக்கம். இடையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. அந்தத் தொய்வுக்குச் சற்றும் இடம் தராமல் மதுரையில் அழகிரி தலைமையில் திமுக தொண்டர்கள் எழுச்சி பெற்று விளங்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை! அவர்களின் கடுமையான உழைப்பே இந்த மாபெரும் வெற்றி ஏற்பட சாத்தியமானது.

ஆனால் அடிப்படையில் கலைஞரின் நல்லாட்சியின் பயன்கள் அடித்தள மக்களுக்கும் சென்றடைந்திருக்கின்றது என்பதே இவ்வெற்றிக்கு விலாசமாகின்றது. இதை அழகிரியே அண்மைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஒன்றும் ஒன்றும் சேர்ந்து இரண்டு என்பது போல அழகிரியின் ஆற்றல் கலைஞரின் நல்லாட்சி இரண்டும் சேர்ந்து வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றது. ஆக, தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், அதே சமயம் அழகிரி போன்ற ஆற்றலாளர்களின் சேவை கட்சிக்குத் தேவை. அழகிரி போன்ற ஆற்றலாளர்கள் அனைத்துப் பகுதிகளிலும் உருவாகிச் செயல்பட வேண்டும்.

இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். ஸ்டாலின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. தொடர்ந்து தொகுதியில் தமது அண்ணனுடன் இணைந்து அருமையான முறையில் யாரையும் தரம்தாழ்த்தி விமர்சிக்காது சிறந்ததொரு பிரச்சார உத்தியை மேற்கொண்டார். ஸ்டாலின் உருவத்தில் மக்கள் கலைஞரைக் கண்டனர். தயாநிதி மாறன், ஸ்டாலின், அழகிரி கூட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இந்த ஒற்றுமை நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இவ்வுண்மையே திமுகவிற்குத் திருமங்கலம் கூறும் நற்செய்தியாகும்.

அமைதியான ஆர்ப்பாட்டாமில்லாத ஸ்டாலின் பிரச்சாரம் மக்களிடம் எடுப்பட்டது போல ஆவேச பேச்சாளர் வைகோ கடுமையாகப் பிரச்சாரம் செய்தும் எதுவும் மக்களிடம் சென்று சேரவில்லை. மக்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்கிறார்கள். இனி வைகோவின் அரசியல் வாழ்வு ஒரு கேள்விக்குறிதான்! மதிமுக கரைந்துகொண்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

மதிமுக வெற்றி பெற்ற தொகுதியை அதிமுகவிடம் தாரைவார்த்ததன் மூலமாக வைகோவே மதிமுக கரைந்துகொண்டிருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். திமுகவை எதிர்க்கும் ஆற்றல் தமக்கு இல்லை, அந்த ஆற்றல் அதிமுகவிற்கே உள்ளது என்பது போல அவர் செய்கை அமைந்து விட்டது.

எந்த திருமங்கல மேடை பேச்சிற்காக எழுச்சி பெற்று பொடாவில் உள்ளே சென்றரோ அதே திருமங்கலம் இன்று வைகோவின் அரசியல் வாழ்விற்கு முடிவுரையும் எழுதிவிட்டது. திருமங்கலம் வைகோவின் அரசியலுக்குத் திருமங்களம் பாடிவிட்டது. மதிமுக தொண்டர்கள் மெல்ல மெல்ல தாய்க்கழகமான திமுகவை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். இனி தனிக்கடை நடத்துவதினால் யாதொரு பயனும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக வைகோவிற்குத் தெரிவித்து விட்டது திருமங்கலம். மதிமுகவின் ஒரு பிரிவு எல்.கணேசன் தலைமையில் திமுகவுடன் இணைவது போல வைகோ பிரிவும் அதிமுகவில் இணைந்து விடலாம். இவரின் சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளால் இவரை தங்கள் கட்சிகளில் சேர்த்துக்கொள்ள அக்கட்சித்தலைமையும் விரும்பாது என்றே தோன்றுகிறது. பாவம் திரிசங்கு நிலைதான் வைகோவிற்கு. வினை விதைத்தால் வினையைதானே அறுவடை செய்ய முடியும்!

மதிமுகவிடம் இருந்த தொகுதியைக் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்ட அதிகமான நாட்கள் தொகுதியில் தங்கி அனல் பறக்கும் வகையில் அபாண்டமான பொய்களை அடுக்கடுக்காகக் கூறி பரபரப்பான முறையில் பிரச்சாரம் செய்தார் அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா. அப்படிப் பிரச்சாராம் செய்தும் முன்பு தமது கூட்டணி கட்சியான மதிமுக வாங்கிய ஓட்டை விட சுமார் ஐந்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுப் படுதோல்வி அடைந்திருக்கின்றது அதிமுக.

மக்கள், அதிமுக மீதும் அதன் தலைமை மீதும் நம்பிக்கை இழந்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. திமுகவைத் தவிர்த்து அனைத்து எதர்க்கட்சிகளின் ஓட்டுகளைக் கூட்டினாலும் கூடத் திமுகவின் வாக்கு வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகத் தெரிகிறது. மக்கள் தெளிவான முடிவு எடுத்து திரண்டு வந்து வாக்களித்திருக்கின்றனர்.

அதிமுக கட்சிக்குத் திருமங்கலம் தேர்தல் முடிவு சொல்லும் உண்மை என்ன? அதிமுகவில் தற்போது சரியான தலைமைத்துவமில்லாத நிலையில் அதிமுகவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல செல்வி ஜெயலலிதா கட்சிப்பொறுப்புகளில் இருந்து முற்றிலும் விலகிக்கொண்டு ஆற்றல்மிக்கவர்களைக் கட்சிப்பொறுப்புகளில் அமர்த்தினால் மட்டுமே எதிர்காலத்தில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக நிலைத்திருக்கும். ஜெயலலிதா மீது நம்பிக்கை இழந்த அதிமுக தொண்டனுக்கும் கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் சற்று நம்பிக்கை வருவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

இவையே திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிக்கும் உண்மைகளாகும். திருமங்கலம் திருவாய் மலர்ந்து திருமங்களம் பாடிவிட்டது. சம்பந்தபட்டவர்கள் சிந்திப்பார்களா?
-அக்னிப்புத்திரன்

அய்யா
17-01-2009, 12:23 PM
இக்கட்டுரை ஏதோ ஒரு இதழில் வெளிவந்ததாக இருக்குமென நம்புகிறேன். பெரும்பாலான கருத்துகள் ஏற்கத்தக்க அளவில் உள்ளன.

எனினும் அதிமுக தலைமை மாற்றம் தேவை என்பதெல்லாம் கொஞ்சம் ஒவ்வாததாகவே தோன்றுகிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி அ.பு.

உதயசூரியன்
17-01-2009, 05:57 PM
அ.தி.மு.க தலைமையை மாற்றினால் மட்டும் போதாது..
அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சுக்கள்..
மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் கூட பேச தயங்கும் விதமான.. யாரோ எழுதியதியதை படிக்கும் அந்த தோரனை என்றுமே.. வீக்னஸ் தான்..
அதனால் பேசாமல் அடக்கி வாசித்தலே நலம்...

தி.மு.க வில் கலைஞரை போலவே சிறு வயதானாலும் அழகாக பேசுகிறார்..ஸ்டாலின்.
மற்றவரை திட்டுவதில் அதிக நேரம் எடுப்பதில்லை..

இதை பின் பற்றட்டும்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஓவியன்
18-01-2009, 03:51 PM
அக்னிபுத்திரன், உங்களது திரியினது கருப்பொருளிற்காக ஏற்கனவே ஒரு திரியிருப்பதால் உங்களது திரியினை இந்தத் திரியுடன் இணைத்துள்ளேன்..

-ஓவியன்
பொறுப்பாளர்

arun
18-01-2009, 07:01 PM
அக்னிபுத்திரனின் கருத்துக்கள் பல ஏற்கக்கூடியதே

பொதுவாக அரசியல் வாதிகள் பணத்துக்காக தான் அணிகள் மாறுகின்றனர் அதில் வைகோவும் விதி விலக்கல்ல

தன்னை கைது செய்த ஜெயலலிதாவிடமே அவர் கூட்டு சேர்ந்துள்ளார் இதை எங்கு போய் சொல்வது ??

அய்யா
19-01-2009, 05:50 AM
வைகோவை நினைத்தால், விவேக்கின் பிரபல வசனம்தான் ( எப்படியிருந்த நான்...) நினைவுக்கு வருகிறது!

கூடவே ரஜினியின் படிக்காதவன் படப்பாடலும் (அடங்காத காளை ஒண்ணு...) நினைவுக்கு வருகிறது!!

rajatemp
19-01-2009, 09:52 AM
ஒரு ஓட்டுக்கு 5000 கொடுத்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்

miindum
19-01-2009, 10:31 AM
ஆமா...அய்யாயிரம் கொடுத்தவர்கள் ஜெயிக்கலாம்னா ஜேவும் ஜெயிச்சிருக்கனும்ல....நாப்பதாயிரம்ல வித்தியாசம்...தோத்தவங "புல்ஷித்" பன்னுரத பெரிய ஒரு இஷ்யூவாக்கவேணாம்.

ஐய்யா,,,,,நான் ஒரு பகிக்காத கிணத்து தவளையாட்டம் ஒரு குக்கிராம விவசாயி பேசறேன்..........."அதென்னமோ....எனக்கு தெரியாது....தமிழன்..திராவிடம் ஆரியம்,,,தர்மம்..மகாமகம்,குடும்ப அரசியல் தோழி,,மைனாரிட்டி ஜனநாயகம் பணநாயகம் ஒன்னும் தெஇர்யாதுங்க.

ஆனா ஒன்னு ஒரு 3 வருஷத்துக்கு முன்னால ,,நாங்க பட்ட அவமானங்கள வாய்விட்டுத்தான் சொல்லனும்போல இருக்கு.

அரிசி ரேஷன் கடையில் வாங்க மூனு ரூவா அம்பது காசு கிலோவிற்கு,என் மகன் டிகிரி படிச்சுட்டு வேலைக்கு முயற்சிக்கவே இல்ல,கேட்டா வேலை நியமண தடை சட்டம் இருக்கு என சொல்லி முயற்சிக்கவே இல்ல.அடங்கொக்கா மக்க சரி குலதெய்வம் போய் கிடா வெட்டி சாமி கும்புட்டு வேண்டுதல் செய்வோம்னு கிடா வெட்டி கொழம்ப வச்சு சாமிய கும்பிடம்போது ,,,கிடா வெட்டுவது குத்தம்னு லோக்கல் எஸ்.அய் வந்து கும்பிட்ட கைகளில் விலங்க மாட்டுனாரு..கேட்ட நான் என்ன செய்ய ,,அம்மா உத்தரவுன்னுட்டார்.ஓகோ..........அவங்கம்மா அய்யருபோலன்னுட்டு நினைச்சுக்கிட்டேன்.
சரி தலைமை செயலகம்னு ராஜ அரண்மனையில் வேலை பாக்கிறவங்க என் பக்கத்துவீட்டுக்காரங்க அவங்கலுக்கு போன் பண்ணி விஷயத்த சொன்னா அவங்களே ஜெயில்ல இருக்குறதா தகவல்.போச்சுடா...என்னதான் நடக்குது நாட்டிலன்னுட்டு யோசிக்கும்போது ,,,ஓட்டு போட கூப்பிட்டாங்க கட்சிக்கரை வேட்டிக்காரங்க..ரூப கொடுத்துக்கூப்ப்பிட்டாங்க...தர்மம் சொல்லி கூப்பிட்டாங்க..ஒன்னும் புரியல.

என் பக்கத்து வீட்டு படிச்ச பைய்யன் ,,அண்ணே,,உங்களுக்கு ஒரு உரிமை இருக்கு,,ராஜாவாக்க..போங்க போங்க ,,உரிமையா யார் சொல்ராங்களோ அவங்க சொல்லுர படத்துல ஓட்ட போடுங்கன்னே ..என்றான்.

போனேன்..இருட்டாவும்பலிகொடுக்கும் நிறத்திலயும் இருக்கும் கறை வேட்டிக்காரர் ஒருத்தர்,,,,என்னை தோளில் கைபோட்டு வீட்டில் அனைவரும் நலமா என அன்பாய் தமிழில் பேசி ,,,குலதெய்வ கும்பிடுதல் விழாவில் பங்கெடுப்பவர் என்ற முகாந்திரத்தில் ,,,மேற்க பாத்து சாமிய பாத்து ஓட்ட போடுங்கன்னார்.....மனி மூனு..பள்ளிக்கூடத்துக்குள நுழையும் முன்னர் மேற்கே பார்த்தேன்....வெயில் சாயிற வேளையானதால ..கடவுள நினைக்க முடியல வெயில் தாழ இருப்பதை நினைத்து ...பொங்கல் கும்பிடும் நினைவுடன் ..போட்டேன் படம் பார்த்து...

பட்து நாள் கழிச்சு அரிசி வாங்க ரேஷன் கடைக்கு போனேன்...பொசுக்குனு பத்துகிலோவுக்கு அரிசி போட்டும் மீதம் நிறயப்பணம் என் கைகளில்.

அப்புறம் ஒரு ஆறுமாசம் கழிச்சு வீட்டுக்குள்ளவே பயாஸ்கோப்ப் படம் பாக்குற பொட்டி..ஆனா நாட்டில் இருக்குற நல்லவங்களூம் கெட்டவங்களும் காட்டிக்கொடுக்குறதா இருந்தது.புரிஞுக்கிட்டேன்.

சினிமாவுல நடிக்குறவங்க நெஜத்துலையும் நடிக்கிறத.

என் சொந்த பந்தம் ராவணன் காட்டில் படுற அவஸ்தைய பார்த்து காண்ணீரா கொட்டினேன்.

கோபமாவும் இருந்தது.என்ன செய்ய படிக்காத பாமரன்யா...என்னால என்ன செய்ய முடியும்

எனக்கு இருக்குற ஒரே ஆயுதம் ....ஓட்டுதான்.....

அய்யா
19-01-2009, 11:46 AM
அசத்தல் .. அசத்தல்... அசத்தல்..

மீண்டும், மீண்டும் அசத்துங்க!

arun
19-01-2009, 04:49 PM
வைகோவை நினைத்தால், விவேக்கின் பிரபல வசனம்தான் ( எப்படியிருந்த நான்...) நினைவுக்கு வருகிறது!

கூடவே ரஜினியின் படிக்காதவன் படப்பாடலும் (அடங்காத காளை ஒண்ணு...) நினைவுக்கு வருகிறது!!

சரியாக சொன்னீர்கள் :D :D

அய்யா
20-01-2009, 12:32 AM
சரியாக சொன்னீர்கள் :D :D

நன்றி அருண் அண்ணா!

ஸ்ரீதர்
20-01-2009, 08:54 AM
அ.தி.மு.க தலைமையை மாற்றினால் மட்டும் போதாது..
அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சுக்கள்..
மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் கூட பேச தயங்கும் விதமான.. யாரோ எழுதியதியதை படிக்கும் அந்த தோரனை என்றுமே.. வீக்னஸ் தான்..
அதனால் பேசாமல் அடக்கி வாசித்தலே நலம்...

தி.மு.க வில் கலைஞரை போலவே சிறு வயதானாலும் அழகாக பேசுகிறார்..ஸ்டாலின்.
மற்றவரை திட்டுவதில் அதிக நேரம் எடுப்பதில்லை..

இதை பின் பற்றட்டும்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

முன்பு வெற்றிகொண்டான் என ஒருவரை வைத்துக்கொண்டு தி.மு.க , காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு , அருவருப்பாக பேச வைத்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை என நினைகிறேன். அதிமுக அளவுக்கு திமுக வும் நீங்கள் சொல்லும் ”வீக்னஸ்” உடையது என நான் நினைக்கிறேன்.

சத்தியமாக நான் அதிமுக காரன் இல்லீங்க!!! சண்டைக்கு வராதீங்க !!!

அய்யா
20-01-2009, 10:31 AM
முன்பு வெற்றிகொண்டான் என ஒருவரை வைத்துக்கொண்டு ...



வெற்றிகொண்டான் இப்போதும் இருக்கிறார்!

சிவா.ஜி
20-01-2009, 02:59 PM
போன தேர்தல்ல ஓட்டு போட போனனுங்க. அங்க நின்ன எந்த வேட்பாளரையும் பிடிக்கலன்னு, ஞானி சொன்ன மாதிரி நெகடிவ் ஓட்டு 'ஓ' போடனுன்னு சொன்னேங்க. அவ்ளோதான். ரெண்டு கலர் கட்சிக்காரங்களோட ஆளுங்க ஒதைக்க வந்துட்டாங்க.

அட அவங்கதான் கட்சிக்காரங்க...அப்படி பண்ணா பரவால்ல...ஆனா இந்த அசிங்கம் புடிச்ச அரசு ஊழியர்கள் 3 மணி நேரம் தேவுடு காக்க வெச்சு அந்த ஃபாரமே இல்லன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. எங்க ஊர்ல இருக்குற எல்லா கிராமத்துலயும் எலைக்குதாங்க ஓட்டு போடுவாங்க. ஏன்னா எங்க வட்டத்தை மாவட்டமாக்கி பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தது எலைக்காரங்கதாங்க. ஆனா அதிசயம் பாருங்க அந்த தேர்தல்ல எல்லா கிராமத்துலயும் ரெண்டுகலர் கட்சியே நிறைய ஓட்டு வாங்கியிருக்காங்க.

எங்க கிராமத்து மக்கள் கிட்ட கேட்டேனுங்க...”ஏங்க எல்லாரும் அந்தக் கட்சிக்கு மாறிட்டீங்களான்னு?..மூக்கால அழுதாங்க. “என்னத்த சொல்ல நாங்க போட்டது எலைக்கு....ஆனா ஜெயிச்சது அந்த எச்சிலை(எங்க ஊர் MLA நிஜமாவே எச்சிலைதாங்க)அப்படீன்னாங்க. இது என்னடா அதிசயமா இருக்கேன்னு வீட்டுக்கு வந்துட்டேனுங்க.

அப்ப பக்கத்து வீட்டு அரசாங்க ஊழியர் முன்னால இருக்கிற கடைக்கால் கல்லுமேல உக்காந்துகிட்டு பெருமையா சொன்னாருங்க “நானே 65 ஓட்டு போட்டேம்ப்பா.”
அதுக்கு முன்னால உக்காந்திருந்தவரு கேக்குறாரு..”எப்படீங்க”

“அதுவா....கிராமத்து ஆளுங்க...ஓட்டு மெஷினைப் பத்தி ஒண்ணும் தெரியாது. எப்படிங்கய்யா வோட்டு போடனுன்னு கேப்பாங்க இப்படித்தாங்கன்னு சன்னுல குத்தி ஓட்ட போட்டுடுவேன். அப்புறம் வந்து அதை ரீசெட் பண்ணாம வெச்சிருப்பேன். அவங்களும் எலைக்கு குத்துவாங்க. பீப்ன்னு ஒரு சவுண்ட் கேட்டதும்..ஓட்டு வுழுந்திடிச்சின்னு சந்தோஷமா போயிடுவாங்க. அப்புறம்தான் ரீசெட் பண்ணுவேன். இப்படித்தான்யா 65 போட்டேன்” அப்படீன்னு பெருமையா சொன்னாரு. அதுக்கு

”அடப்பாவி இது தப்பில்லையா?” அப்படீன்னு மத்தவர் கேக்க...

‘எங்களுக்கெல்லாம் ஆப்பு வெச்ச அந்தம்மா வரவே கூடாது. பெரியவர் வந்தா நம்ம ராஜ்ஜியம்தான். அதனாலத்தான் அப்படி பண்ணேன்”

எப்படீங்க?...ஒழுங்கா வேலை செய்ய வக்கில்லன்னுதானே அம்மா அவங்களுக்கு ஆப்பு வெச்சாங்க. அதுக்கு பழி வாங்கறாங்களாம்மா....

இப்படி இருக்கிற ஆளுங்க தேவையின்னுதான் இப்ப பல்லு போன கெழவிங்களுக்கெல்லாம் டீச்சர் போஸ்ட் போட்டு கொடுக்குறாரு தர்மதுரை. இவங்கல்லாம் போய் பள்ளிக்கூடத்துல என்னத்தைக் கிழிக்கப் போறாங்க. அடுத்த தேர்தலுக்கு உபயோகப்படுவாங்க...அவ்ளோதான்.

ஏற்கனவே பாதி தமிழர்ங்களை பிச்சைக்காரங்களாக்கி கையேந்த வெச்சுட்டாரு. அதுவும் நம்ம காசுல. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு ஒடைக்குற கணக்கா... இதுல தொலைக்காட்சிப் பெட்டி ஃப்ரீயா கிடைச்சதுல மீண்டும், மீண்டும் சந்தோஷப்படறாங்க...பாவம்.

அந்தம்மாதான் ஆரியரு...ஆனா தலைவரு சுயமரியாதைக்காரர்தானே அப்ப ஏனுங்க சாய்பாவை வீட்டுக்கு வரவெச்சு சந்திச்சு சந்தோஷப்பட்டாரு? பித்தலாட்டம் தானே இது?

ஆட்சி முடிஞ்சி போகும்போது அரசு கஜானாவக் காலியாக்கிட்டுப் போறதையே வழக்கமா வெச்சிருக்காரு. பின்னாடி வர்றவங்க நிர்வாகம் பண்ண திணறனுன்னு...என்னா ஒரு சாணக்கியத்தனம்.

ஒத்த இடைத்தேர்தல்ல ஜெயிச்சதுக்கு இந்த ஆட்டம் ஆடறாங்களே....அழகிரி மாதிரி ஒரு ரௌடி நெனைச்சா என்ன வேணுன்னாலும் பண்ண முடியுன்னு மக்களுக்கு தெரியாதா?

அதனால...

”ஆடாதடா...ஆடாதடா...மனிதா...ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா”

இந்தப் பாட்டை ஞாபகப்படுத்துறேனுங்க.

arun
20-01-2009, 05:48 PM
[QUOTE=சிவா.ஜி;402874]


அப்ப பக்கத்து வீட்டு அரசாங்க ஊழியர் முன்னால இருக்கிற கடைக்கால் கல்லுமேல உக்காந்துகிட்டு பெருமையா சொன்னாருங்க “நானே 65 ஓட்டு போட்டேம்ப்பா.” [QUOTE=சிவா.ஜி;402874]


தாங்கள் சொல்வது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது ஏனெனில் இந்த தேர்தலில் துணை ராணுவம் கண்காணிப்பு கேமரா எல்லாம் இருந்ததாக சொன்னார்களே

அந்த அளவுக்கு புத்திசாலிகளா??...

சிவா.ஜி
20-01-2009, 06:08 PM
அருண் நான் சொன்னது முந்தைய பொதுத்தேர்தலைப் பற்றி. அன்று இது போல எந்த கண்கானிப்பும் இல்லை.

அய்யா
21-01-2009, 08:29 AM
சிலநாட்களுக்கு முன் ஜெயா செய்திகளில் ஒரு காட்சி. கலைஞர், தயாளு அம்மா, திரு & திருமதி அழகிரி ஆகியோரின் படத்தைக் காட்டியவாறே செய்தி வாசிப்பவர் சொன்னார்..

"இலங்கையில் தமிழ் மக்கள் அல்லல்படும் இவ்வேளையில், கருணாநிதி குடும்பத்தினர் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து கும்மாளமாக தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினார்கள்!"

எவ்வளவு கேவலமான அரசியல் பண்பாடு இது!

அய்யா
21-01-2009, 08:33 AM
சிவா அண்ணா,

இந்தியாவிலா இருக்கிறீர்கள்?

ஸ்ரீதர்
21-01-2009, 10:18 AM
சிலநாட்களுக்கு முன் ஜெயா செய்திகளில் ஒரு காட்சி. கலைஞர், தயாளு அம்மா, திரு & திருமதி அழகிரி ஆகியோரின் படத்தைக் காட்டியவாறே செய்தி வாசிப்பவர் சொன்னார்..

"இலங்கையில் தமிழ் மக்கள் அல்லல்படும் இவ்வேளையில், கருணாநிதி குடும்பத்தினர் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து கும்மாளமாக தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினார்கள்!"

எவ்வளவு கேவலமான அரசியல் பண்பாடு இது!

அவர்களது பாசத்திற்குரிய அம்மா ! எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு 4 மாதங்களுக்கு மேலாக கொடநாடு எஸ்டேட்டில் சுகம் அனுபவித்துக்கொண்டே வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டு மக்களுக்கு மாபெரும் தொண்டாற்றி எதிர்கட்சி தலைவர் பொறுப்பினை நிறைவேற்றியதை ஜெயா டிவியால் கவனிக்க முடியவில்லை என நினைக்கிறேன்.

ஜெயா டிவியாவது , சன் டிவியாவது , கலைஞர் டிவியாவது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

நாம் எல்லோரும் செய்யக்கூடிய நல்ல காரியம் ஒன்று உண்டு என்றால் , இந்த மாதிரியான டிவி பார்ப்பதை நிறுத்துவதுதான். நான் நிறுத்திவிட்டேன். என் குடும்பத்துடன் செலவிட நல்ல நேரம் கிடைக்கிறது. முடிந்தவர்கள் முயன்று பாருங்கள்.

சிவா.ஜி
21-01-2009, 02:07 PM
சிவா அண்ணா,

இந்தியாவிலா இருக்கிறீர்கள்?

இல்லை அய்யா. துபாயில்தான் இருக்கிறேன்.

ஸ்ரீதர் சொன்னதைப்போல இந்த தொலைக்காட்சிகளைக் காணாமல் இருப்பதுதான் சிறந்தது. நேரத்தை நல்ல வழியில் செலவிடலாம். நான் ஐந்து மாதமாக எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை. இணைப்பு எடுக்க வசதியிருந்தும் வேண்டாமென்று ஒதுக்கியுள்ளேன்.

அய்யா
21-01-2009, 03:26 PM
ஜெயா டிவியாவது , சன் டிவியாவது , கலைஞர் டிவியாவது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

நாம் எல்லோரும் செய்யக்கூடிய நல்ல காரியம் ஒன்று உண்டு என்றால் , இந்த மாதிரியான டிவி பார்ப்பதை நிறுத்துவதுதான். நான் நிறுத்திவிட்டேன். என் குடும்பத்துடன் செலவிட நல்ல நேரம் கிடைக்கிறது. முடிந்தவர்கள் முயன்று பாருங்கள்.


எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எல்லாவற்றிலும் உள்ள அல்லவை ஒதுக்கி, நல்லவை ஏற்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

arun
21-01-2009, 04:52 PM
அருண் நான் சொன்னது முந்தைய பொதுத்தேர்தலைப் பற்றி. அன்று இது போல எந்த கண்கானிப்பும் இல்லை.

ஓ ஓகே நான் இந்த தேர்தல் என்று தவறாக புரிந்து கொண்டேன்

இளசு
21-01-2009, 10:44 PM
கருத்தாடலுக்கும்
கண்மூடிப் பிரச்சாரத் துதிபாடலுக்கும்
வித்தியாசம் உண்டு..

அதைப் புரிந்த அறிவார்ந்தவர்கள் நம் மன்றத்தினர்..
சரிதானே நான் சொல்வது?