PDA

View Full Version : காதல் யுத்தம்



ஆதவா
10-01-2009, 06:57 AM
மிருதுளாவுக்கும், பிரதாப்புக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்த இரண்டு வருட வாழ்வில் சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாலும், இன்று நடந்ததைப் போன்று பெரிய அளவில் நடந்ததில்லை... காலையிலேயே பிரதாப் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். மிருதுளாவிடம் பேசவில்லை.. அதன் எதிரொலி, பிரதாப்பின் அலுவலகத்திலேயே பணிபுரியும் மிருதுளா, மதிய இடைவெளியில் பிரச்சனை கிளப்ப,... அலுவலகம் முழுக்க வெடித்தது அவர்களுக்கிடையேயான பிளவு..

மாலை நான்கு.

மிருதுளா மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு இடதுபுறமுள்ள அறைக்குள் நுழைந்தான்... உடன் மிருதுளாவும் வந்தாள்... காலையிலிருந்து பிரச்சனைகள் இருவரையும் அழுத்த, இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த கோபத்தை வளர்த்தியிருந்தார்கள்.. பிரதாப்பைக் காணும்போதெல்லாம் மிருதுளாவுக்கும், மிருதுளாவைக் காணும்போதெல்லாம் பிரதாப்புக்கும் கன்னத்தில் அறைவிட்டு கோபம் தீர்த்துக் கொள்ளலாமோ என்று தோன்றும்.. இருவரும் கோபங்கள் கொப்பளிக்க, அந்த அறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்..

பிரதாப் தன் கையில் ஹாக்கி தடியை வைத்திருந்தான், மிருதுளா பெரிய அளவிலான வலிமையான தோசைக் கரண்டியை வைத்திருந்தாள்.. இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள்.. பிரதாப்பின் ஆவேசத்தை அன்று கண்ட மிருதுளா, தானும் சளைத்தவளல்ல என்று தோசைக்கரண்டியாலே அவனை திருப்பி எடுத்தாள்... பெரும்பாலும் இவ்விரு ஆயுதங்கள் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருந்தமையால் நல்லவேளையாக இருவருக்கும் அவ்வளவாக பலத்த காயமில்லை... ஆனால் காயம் பார்க்காமல் விடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ, கையில் இருந்த பொருளையெல்லாம் வீசினாள் மிருதுளா... அதனன ஹாக்கி தடியாலேயே தடுத்தான்... ஏதோ கிரிக்கெட் ஆடுவது போன்று சூழல் இருந்தது... அச்சமயத்தில் பிரதாப்பின் நெற்றியில், கோகோ டின் தெறித்து, இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது...

மிருதுளாவுக்கு இன்னமும் வெறி அடங்கவில்லை. மெத்தைக்கு அடியில் சொறுகிவைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் மட்டையைக் கையில் எடுத்தாள்.. ஓங்கி நடு மண்டையில் நச்சென்று அடித்தாள். சற்று பலத்த அடிதான் என்றாலும் சற்று சுதாகரித்துக் கொண்ட பிரதாப், அருகேயிருந்த கிதார் ஒன்றை எடுத்து திருப்பி அடித்தான்..

கணவன் மனைவி இருவரும் ஆக்ரோஷத்துடனும் பலத்த சப்தத்துடனும் ரவுடிகள் சண்டையிடுவதைப் போன்று சண்டையிட்டு, உடம்பெல்லாம் காயம்பட்டு இருப்பதைக் கண்டால் எவ்வளவு பெரிய குற்றவாளிக்கும் சற்றேனும் உதறல் எடுத்திருக்கும்..
கொஞ்சம் நேரத்தில் சோர்வுற்ற பிரதாப் அடுத்தடுத்து மிருதுளா அடித்த அடியால் பலத்த காயமுற்றான்.. அவனால் இனி ஒரு அடியும் எடுத்து வைக்கமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான்.. நிலைகுலைந்து அருகேயிருந்த மெத்தையில் மயங்கி விழுந்தான்... மெத்தையில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது... மிருதுளா இதனைக் கண்டதும் கையில் இருந்த மட்டையை கீழே போட்டுவிட்டு ஓடிவந்தாள்.. அவளுக்கு இப்பொழுது பதற்றம்..

கணவன் மனைவி சண்டைகள் எல்லாம் வாயோடு முடிந்துவிடலாம்.. ஆனால் இப்படி கொலைப்பாதைக்குத் தள்ளப்படும் என்று இருவருமே நினைக்கவில்லை..
தவறுகள் உணரப்படும் வேளையில் மனிதர்கள் காயப்பட்டிருப்பார்கள்.. இங்கேயும் அப்படித்தான்.. அவசரம் என்பது வாழ்க்கைக்கு உதவாது.. நிதானமான வேகமும், கவனமான முடிவும்தான் நல்ல வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும்... இதனை மிருதுளாவும், பிரதாப்பும் நன்கு உணர்ந்திருப்பார்கள்..
பதற்றத்தோடு ஓடிவந்த மிருதுளா, தன் சேலைத் தலைப்பால் பிரதாப்பின் தலையைச் சுற்றி கட்டு கட்டினாள். இரத்தம் ஓரளவு வடிவது நின்றது. பலத்த காயத்தோடு மரணப்படுக்கையில் வீழ்ந்த பிரதாப்பை தன் மடியில் கிடத்தி, " அய்யோ, பிரதூ!! சாரிடா..... இப்படி ஆகும்னு நினைச்சுப்பார்க்கலைடா... எழுந்திரு... எழுந்திரு...." என்று கதறி அழுதாள்.. " உனக்கும் நிறைய காயம் பட்டிருச்சா டார்லிங் " என்று அந்த நிலையிலும் பரிதாபப்பட்டான்.... இருவரது அழுகையும் கண்ணீரும் அந்த அறைமுழுவதும் எதிரொலித்தது...

சற்றுநேரத்தில் பிரதாப்பின் கைக்கடிகாரம் சப்தத்துடன் ஒளித்தது... நேரம் : மாலை 5.30, ஜனவரி 25, 2133 என்றது... மிருதுளாவும், பிரதாப்பும், அந்த விர்சுவல் மெஷினை விட்டு வெளியே வந்தார்கள்... இருவரது முகத்திலும் காதல் ரேகை புன்னகை வழியே வழிந்தோடியது..

(நீண்டநாட்கள் கழித்து மன்றம் திரும்பிய சிவா.ஜி அண்ணாவுக்கு இக்கதை சமர்ப்பணம்..)

ஓவியன்
10-01-2009, 08:07 AM
அருமை ஆதவா, Virtual machine என்பதன் விளக்கத்தை மட்டும் கருவாகக் கொண்டு இந்தக் கதையைத் தீட்டி இருக்கிறீர்கள், என்ன செய்வது எதிர்காலங்களில் மனிதனின் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இப்படியான இயந்திரங்கள் தேவைப்படும் தான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் மனதில் கோபத்தை வைத்துக் கொண்டு நிதமும் சண்டையிடாமல் ஒரு இடத்திலேயே இறக்கி வைக்க முடியும். இங்கே பிரதாப்பும் மிருதுளாவும் கோபம் தீர்த்தது போல காதல் புரியவும் ஒரு Virtual machine வைத்திருக்காமல் விட்டால் சரி.....

சண்டை புரியவெனவே Virtual machine வைத்திருக்கும் ஹைடெக் தம்பதியினர், புராதான காலத்து மனிதர்கள் போல அலுவலகத்தில் சென்று பணிபுரிவது கதை நடைபெறும் களத்துடன் ஒட்ட மறுக்கிறதே ஆதவா, அதனை விலக்கி ஜெட் வேகத்தில் பயணிக்கும் கதைக்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள்...

பி.கு - இந்த பிரதாப் என்ற பெயரில் ஏதும் உள்குத்து, வெளிக்குத்து, நடுக்குத்து இல்லையே....??!!?? :D:D:D

அமரன்
10-01-2009, 10:11 AM
நினைவுகள் காதலர்களை சேர்த்துவைக்கும் என்ற ஒரு காரணத்துக்காக அ...ஆ.. வை எனக்குப் பிடித்தது.

எண்ணங்களின் ஆயுதங்களே வார்த்தைகளும் கத்தி கபடாக்களும் என்பதை உணர்ந்தாலே பலர் வாழ்வில் புத்தாண்டில் நம் சுபியின் வாழ்க்கையைப் போல் சுபீட்சம் பரவும்.

நடக்கப்போவதைக் காட்டும் விர்சுவல் மெசின் இப்போதும் உண்டு.. கனவுகள், கற்பனைகள்L என்ற பெயருடன்.

பாராட்டுகள் ஆதவா.

நிரன்
10-01-2009, 11:09 AM
எவ்வளவுதான் தாய் தன் பிள்ளையைத் திட்டினாலும்.. மற்றவர்கள் தன்
பிள்ளையைக் குறை சொல்வதை அனுமதிக்கவும் மாட்டார்கள் அதே வேளை
அதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்..

இங்கேயும் அப்படியொரு சம்பவம்தான் கணவனுடன் கோபம்
என்றாலும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் கணவனுக்கு
ஆபத்து என்றது அந்த வேளையில் ஓடிச் சென்று தன் சேலையைக்
கிளித்துக் கட்டியதில் இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த
சண்டையை விட இந்த காதலே பெரிதாகத் தெரிகிறது.

இக்கதையில் நடைபெற்ற அச்சம்பவம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.


நல்லதொரு சிருகதை ஆதவா.

ஆதவா
10-01-2009, 11:53 AM
நினைவுகள் காதலர்களை சேர்த்துவைக்கும் என்ற ஒரு காரணத்துக்காக அ...ஆ.. வை எனக்குப் பிடித்தது.

எண்ணங்களின் ஆயுதங்களே வார்த்தைகளும் கத்தி கபடாக்களும் என்பதை உணர்ந்தாலே பலர் வாழ்வில் புத்தாண்டில் நம் சுபியின் வாழ்க்கையைப் போல் சுபீட்சம் பரவும்.

நடக்கப்போவதைக் காட்டும் விர்சுவல் மெசின் இப்போதும் உண்டு.. கனவுகள், கற்பனைகள்L என்ற பெயருடன்.

பாராட்டுகள் ஆதவா.

அதெப்படிங்க நான் எழுதினா மட்டும் எங்கிருந்தாலும் வாசனை புடிச்சுட்டு வருகிறீங்க?? உண்மையிலேயே மெய் சிலிர்த்தேன்... ஓவியன்..

அலுவலக இடறல் இப்பொழுதுதான் உறைக்கிறது.... நன்றி நண்பனே!

முதலில் தா' வை தி' யாக மாற்றித்தான் போட்டேன்... பிறகு அது தகதிமி ஆகிவிடும் என்பதால் பிரதாப் பே நிலைத்துவிட்டது :D

ஆதவா
10-01-2009, 11:55 AM
நினைவுகள் காதலர்களை சேர்த்துவைக்கும் என்ற ஒரு காரணத்துக்காக அ...ஆ.. வை எனக்குப் பிடித்தது.

எண்ணங்களின் ஆயுதங்களே வார்த்தைகளும் கத்தி கபடாக்களும் என்பதை உணர்ந்தாலே பலர் வாழ்வில் புத்தாண்டில் நம் சுபியின் வாழ்க்கையைப் போல் சுபீட்சம் பரவும்.

நடக்கப்போவதைக் காட்டும் விர்சுவல் மெசின் இப்போதும் உண்டு.. கனவுகள், கற்பனைகள்L என்ற பெயருடன்.

பாராட்டுகள் ஆதவா.

ஆஹா..... இதுக்குத்தான்யா அமரன் வேணும்கிறது.... ஒஒவியன், நீங்கள் எல்லாம் எனக்குக்க் கொடுத்து வைத்தவர்கள்.... :)

ஆதவா
10-01-2009, 11:57 AM
எவ்வளவுதான் தாய் தன் பிள்ளையைத் திட்டினாலும்.. மற்றவர்கள் தன்
பிள்ளையைக் குறை சொல்வதை அனுமதிக்கவும் மாட்டார்கள் அதே வேளை
அதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்..

இங்கேயும் அப்படியொரு சம்பவம்தான் கணவனுடன் கோபம்
என்றாலும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் கணவனுக்கு
ஆபத்து என்றது அந்த வேளையில் ஓடிச் சென்று தன் சேலையைக்
கிளித்துக் கட்டியதில் இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த
சண்டையை விட இந்த காதலே பெரிதாகத் தெரிகிறது.

இக்கதையில் நடைபெற்ற அச்சம்பவம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.


நல்லதொரு சிருகதை ஆதவா.

மிக்க நன்றி நிரஞ்சன்.. கோபம் தீர்த்துவிட்டால் மிஞ்சியிருப்பது அவர்களுடைய பாசம்தான் என்று கணக்கிட்டேன்... எந்த ஒரு பெண்ணுக்கும், ஆணைக் காட்டிலும் இரக்கம் அதிகம்..

அதேசமயம் ஆணைக்காட்டிலும் மூர்க்கம் அதிகம்.. இவ்விரண்டையும் இக்கதையில் நுழைத்திருப்பேன்..

நன்றி நண்பரே!

ரங்கராஜன்
10-01-2009, 02:48 PM
ஹா ஹா ஹா ஆதவா
சொந்த அனுபவத்தை எல்லாம் வைத்து ஒரு கதையை எழுதி இருக்க போல, ஆரம்பத்தில் இருந்து என்னடான்னா ”மிஸ்டர் எண்டு மிஸஸ் ஸ்மீத்” படம் மாதிரி இருந்தது, முடிவில் சூப்பரா, ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படம் மாதிரி virtual machine. நல்லாயிருக்கு

கபிலன்
10-01-2009, 04:32 PM
பலே !!! ஆதவன் அண்ணா ,
இந்த கதை அருமையான ஒரு கருத்தை கருவாக கொண்டுள்ளது
ஆனால் இத கதயை இன்னும் சுவாரசியமாக கொண்டு சென்ர்ரிரிக்கலாம் என நான் நினைக்கிறேன் ...
இருந்தாலும் அருமையான கருத்துக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

-----------
அன்புடன் ,
த .கபிலன்

ஆதவா
12-01-2009, 03:14 AM
தம்மூ, கபிலன்... இருவருக்கும் எனது நன்றி..

மனவெறுமையைப் போக்க இக்கதை எனக்கு உதவிற்று....

அன்புடன்
ஆதவன்

erode
13-01-2009, 10:08 AM
நல்ல கற்பனை வளம் கதையில் இருக்கு, அதுவும் கதையின் கடிஅசி வரிகள் திருப்பம் தான் யாரும் எதிர்ப்பாக்கத திருப்பம் தான்

இளசு
23-01-2009, 08:19 PM
வருங்காலக் (ஃப்யூச்சரிஸ்டிக்) கதைகள் என்னைக் கவரத் தவறுவதில்லை..
ஆதவனின் எழுத்தால் வசீகரிக்கப்படாமல் இருந்ததில்லை!

எனவே இரட்டிப்பு ஈர்ப்பு!
இரட்டை வாழ்த்துகள் ஆதவனுக்கு!!

------------------------------------------

ஓவியன்,

பிரதீப்புன்னே போட்டிருக்கலாமோ..??!!
ரோசத்திலாவது மன்றம் வந்திருப்பார்!!!

-------------------------------

தக்ஸ்,
மிசஸ் & மிஸ்டர் ஸ்மித் போலவே
வார் ஆப் த ரோசஸ் படமும் இருக்கு!

ஆதவா
24-01-2009, 12:39 AM
நன்றி ஈரோட் அவர்களே

மிக்க நன்றி அண்ணா. அடுத்தமுறை இன்னும் பலமாக முயற்சிக்கிறேன்...

ஓவியன்
24-01-2009, 11:02 AM
ஓவியன்,

பிரதீப்புன்னே போட்டிருக்கலாமோ..??!!
ரோசத்திலாவது மன்றம் வந்திருப்பார்!!!

அட அப்படினா வந்திருப்பாரோ என்னவோ...??

என்ன இருந்தாலும் பிரதீப் அண்ணாவுடன் சண்டை போடுவதே சுகம் தான்,
அந்த சுகம் மறுபடியும் கிடைக்கும் நாளுக்காக நானும் காத்திருக்கின்றேன்...

samuthraselvam
30-03-2009, 07:55 AM
கதையைப் படிக்கும் போதே நானும் அதிர்ச்சியால் பலமாக தாக்கப்பட்டேன், 'என்ன இது? நாட்டிலே இப்படியெல்லாம் நடக்குமா?' :eek::eek::eek:என்று கடைசியில் 'அப்பாடி இது இப்போதைய கால கட்டத்தில் நடக்கும் சண்டையல்ல....' என்று இருந்தது...:D:D:D

இருந்தாலும் மிருதுளாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓ........................(கணவனை என்னமா பிச்சி எடுக்கறாங்கப்பா.....!!!):icon_b::icon_b::icon_b:

மொத்தத்தில் ஒன்று மட்டும் உறுதியாகிறது.... இன்னும் எத்தனை காலங்கள் கடந்தாலும் நம் தமிழ் நாட்டு பெண்களின் கணவன் பக்தி குறையாது... அதற்கு சிறந்த உதாரணம், கணவனை அடித்து மண்டையை உடைத்து.... ரத்தம் வந்ததும் புடவை தலைப்பை எடுத்து தலைக்கு கட்டுப் போடுவது.... :lachen001::lachen001: