PDA

View Full Version : இணையத் தளம் ஒன்றின் - பார்வையாளர்கள் தகவல் திரட்டுவது எப்படி..?

மஸாகி
08-01-2009, 03:54 PM
எமது இணையத் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் - தங்களது விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு, அல்லது Data Base ஒன்றிற்கு அனுப்புவதற்கான படிவத்தை (Form) தயாரிப்பது எப்படி..? அதற்கான coding எப்படி எழுத வேண்டும்.. என்று யாராவது விளக்க முடியுமா..?

aren
08-01-2009, 05:13 PM
நம் மன்ற வல்லுனர்கள் வந்து விளக்குவார்கள்.

சூரியன்
09-01-2009, 12:47 PM
தளத்திற்க்கு தினம் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற தகவல்களை அனுப்ப வேண்டுமா?இல்லை எப்படி?

அன்புரசிகன்
09-01-2009, 12:55 PM
உங்களது இணையத்தின் வழங்கி எந்த database ஐ ஏற்கும்??? Ms Access or SQL??? php or asp????

நிரன்
11-01-2009, 01:09 PM
php coding மூலம் நீங்க கேட்டதை செய்யலாம்.. என்னிடம் அந்த
கோடிங் உள்ளது வெப்தளத்திலிருந்து மின்னஞ்சலுக்கு
கருத்துகள் வரும். எனது கணினியில் உள்ளது தேடி எடுத்துத் தருகிறேன்:)

மஸாகி
27-01-2009, 05:31 AM
php coding மூலம் நீங்க கேட்டதை செய்யலாம்.. என்னிடம் அந்த
கோடிங் உள்ளது வெப்தளத்திலிருந்து மின்னஞ்சலுக்கு
கருத்துகள் வரும். எனது கணினியில் உள்ளது தேடி எடுத்துத் தருகிறேன்:)

எனது கேள்விக்கு விளக்கமளிக்க முற்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். கொஞ்சம் சீக்கிரமாவே தேடி எடுத்து தாருங்கள் நிரன்..

நட்புக்கு - மஸாகி
27.01.2009

அன்புரசிகன்
27-01-2009, 05:55 AM
asp php எதிலும் செய்யலாம். இது சாதாரண ஒரு கோடிங் தான். ஒவ்வொரு முறை வரும் போதும் ஒரு கவுண்டிங் செய்து Database ல் சேமிப்பது போன்று செய்ய வேண்டும். save ற்கு பின் அந்த Entry ஐ print செய்தால் சரியாக வரும். தற்சமயம் கையில் கோடிங் இல்லை. நீங்கள் asp or php தெரிந்தவர் என்றால் மிக இலகுவானதே...

ஸ்ரீதர்
24-02-2009, 03:50 AM
எமது இணையத் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் - தங்களது விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு, அல்லது Data Base ஒன்றிற்கு அனுப்புவதற்கான படிவத்தை (Form) தயாரிப்பது எப்படி..? அதற்கான coding எப்படி எழுத வேண்டும்.. என்று யாராவது விளக்க முடியுமா..?

அன்பு நண்பர்களே !

இதற்கு பிரச்சனை இல்லாத தீர்வாக நான் நினைப்பது www.emailmeform.com (http://www.emailmeform.com) இணைய தளத்தைத்தான்.

இதில் நண்பர் கேட்கும் வசதியான , பார்வையாளர்கள் தங்கள் விவரங்களை / கேள்விகளை ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் உள்ளது. இதில் form களை நாமே உருவாக்கிக்கொள்ளலாம். ஒரே அக்கவுண்ட்டில் பல form களை உருவாக்கிக்கொள்ளலாம். இதன் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு நமக்கு Programming தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

முயற்சித்துப்பாருங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி.

விகடன்
05-04-2009, 07:50 AM
இந்த தளத்தால் குறிப்பிட்ட எமது தளங்களுக்கு எதுவித பாதிப்புமில்லையே???

ஸ்ரீதர்
07-04-2009, 07:25 AM
இந்த தளத்தால் குறிப்பிட்ட எமது தளங்களுக்கு எதுவித பாதிப்புமில்லையே???

இல்லை நண்பரே! தைரியமாக உபயோகியுங்கள்.