PDA

View Full Version : லசந்த படுகொலை



அன்புரசிகன்
08-01-2009, 02:01 PM
http://newsimg.bbc.co.uk/media/images/45355000/jpg/_45355996_lasantha226.jpg

இன்று இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் சண்டேலீடர் பத்திரிக்கையின் மூத்த எழுத்தாளருமான லசந்த விக்கிரமசிங்க இந்திய இலங்கை நேரப்படி இன்று மாலை 2 மணியளவில் மரணமடைந்தார்.

முன்னதாக இன்று காலை பத்துமணியளவில் இனம் தெரியாதோரால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இலங்கையின் ஊடகவியல் அமைச்சு இலங்கை அதிபர் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் லாவகமான பேச்சை தொலைக்காட்சிப்பெட்டியில் பார்க்கையில் மெய்சிலிர்த்திருக்கிறேன்.

இன்னொரு தலைசிறந்த ஊடகவியளாளரை இலங்கை இழந்துள்ளது...

மேலதிக தகவல் (http://news.bbc.co.uk/2/hi/south_asia/7817422.stm)

இளசு
13-01-2009, 04:58 AM
அதிகார வர்க்கம் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்கும் துணிவாளர்களைக்
கொலை செய்வது தொடர்கிறது..

இது சர்வாதிகாரியின் மனபயத்தால் நிகழ்வது..

பயம் அழிவின் ஆரம்பம்.. சரிதானே அன்பு?

அன்புரசிகன்
13-01-2009, 05:10 AM
அதிகார வர்க்கம் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்கும் துணிவாளர்களைக்
கொலை செய்வது தொடர்கிறது..

இது சர்வாதிகாரியின் மனபயத்தால் நிகழ்வது..

பயம் அழிவின் ஆரம்பம்.. சரிதானே அன்பு?

நீங்கள் சொல்வது சரி. ஆனால் இலங்கையில் நிகழ்வது யதார்த்தத்தை விஞ்சியதாக உள்ளதை தான் மனம் வருத்தத்தினை தருகிறது...

Good morning sri lanka மற்றும் இரவு 9 மணிக்குப்பின்னர் அரசியல் பிரமுகர்களை வைத்து நடாத்தும் ஆய்வு போன்ற இவரது நிகழ்ச்சிகளை கண்டிருக்கிறேன். மிகவும் திறமைவாய்ந்தவர்...

நாம் இழப்பது திறமைவாய்ந்தவர்களை என்பது தான் வருத்ததம் தரும் செய்தி.