PDA

View Full Version : விளம்பரத்தாலே....இளசு
05-09-2003, 06:23 PM
விளம்பரத்தாலே....


விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்றார் கண்ணதாசன்.

ஆனால், செட்டியார் மிடுக்கா சரக்கு மிடுக்கா என்ற சொலவடையில்
உலக நடப்பு உணர்த்தும் உண்மை உள்ளது.

முப்பது, நாற்பது நொடிகளுக்குள் நம் கவனத்தை சிறைப்பிடித்து
ஒரு சேதியை நம் மூளைக்குள் ஏற்றியாகவேண்டிய செப்படி வித்தை அது.

சட்டு சட்டென மாறும் வண்ண பிம்பங்கள் , பின்னணி ஜிங்கிள்கள்..
டி.வி. பார்க்க ஆரம்பிக்கும் குழந்தைகளை முதன் முதலில் கவருவதே " <span style='color:#ff00e3'>அவிட்டா" </span>தான் !
(அவிட்டா = அட்வெர்டைஸ்மெண்ட்டின் மழலையாக்கம்!)

பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலமிது!
நுகர்வோர் கலாச்சாரம், பெருகிவரும் போட்டிகள்
இவற்றால் வரும் சவால்களைச் சமாளிக்க
விளம்பர தேவதையே துணை!

கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும் துறை இது.
ஒரு கச்சித கவர்ந்திழுக்கும் விளம்பர வாசகம் தந்து
இலட்சக்கணக்கில் ஊதியம் பெறுவது இங்கே சாதாரணம்!
முக்கியமாய் பெப்ஸி, கோக் போன்ற ராட்சசக் கம்பெனிகளில்
ஒன்று மிகப்பிரபலமான விளம்பரம், வாசகம் வெளியிட்டால்
பொறாமை, போட்டி கொப்பளிக்க
சரியான பதிலடியாய் எதிர்விளம்பரம் தேடும்போது
அமைப்பாய் ஒன்று நீங்கள் கொடுத்தால்
கேட்ட தொகைக்கும் மேலேயே கிடைக்கும்.

(பந்தர் - (குரங்கு) என்ற வார்த்தை சிலேடையில்
இவர்களின் மோதல் விளம்பர யுத்தம் சில ஆண்டுகளுக்கு முன்
பிரசித்தம். இந்தி தெரிந்த அண்ணல், கான்கிரீஷ்இதுபற்றி விளக்கினால் நலம்.)

ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், மகேஷ்
ரவிKசந்திரன், அரவிந்தசாமி,
இன்றைய கனவுக்கன்னி திரிஷா என
விளம்பரத்துறை தந்த வெளிச்சத்தால் பெரியதிரை
வந்தவர்கள் ஏராளம்.

என்னைக் கவர்ந்த சில விளம்பரங்களை
இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...


அந்தக் காலத்தில் கார்டன் புடவைகளுக்காக
வந்த ஒரு விளம்பரப்படம்...

தெளிந்த நீருள்ள அழகிய குளம்.
கரையோரம் ஓர் ஊஞ்சல்..
உஞ்சல் ஆட்டத்தில் பாதி நேர பிம்பம் மட்டும்
தண்ணீரில் தெரியும் வண்ணம் அதன் அமைப்பு.

ஒரு ஆட்டம்.. ஆஹா... நீலவண்ணச் சோலையிலே ஒரு புள்ளிமயில் பெண்!
குளம் கலங்க, வட்ட அலை எழும்ப காட்சி கலைய...
மறு ஆட்டம்... இது என்ன பச்சை சேலையிலே அதே மல்லிகை மங்கை!
இப்படி ஒரு மௌனக் கவிதையாய் விரியும் அந்த விளம்பரம்..!

பரவச நீராடும் லிரில் விளம்பரம்...
பார்ப்பவரும் நிச்சயம் அந்த மலையருவியில் குளித்தது போல்
(அந்த அழகியோடு அல்ல.. தனியாகத்தான்!)
எலுமிச்சைப் புத்துணர்ச்சி தரும் வெற்றி விளம்பரம் அது!
(அந்த அழகி விபத்தில் அகால மரணம் அடைந்ததாய்
கிளம்பிய புரளி நம்பி பசி இழந்த நாட்கள் பல உண்டு..)


சில மேலைநாட்டு விளம்பரங்கள்.

விட்டுவிட முயற்சிப்பதை விட்டுவிடாதீர்கள்.
(Don't give up giving up..)
முயற்சி தோற்று மீண்டும் புகைபபவருக்கு..

சாம்பல் கிண்ணத்தை முத்தமிடாதீர்..
(Say NO KISS to ashtarays.)
புகைப்போக்கி வாயர்களின் துணைக்கு....


இடது பக்கம் ஒரு ஆரஞ்சுப்பழம்.
தோலுடன், முழுசா...
ஸ்ட்ராவை அதில் சொருகி உறிஞ்சும் முயற்சி..
வாசகம் : Mission Impossible, பலிக்காது பாச்சா!
வலது பக்கம்.. அழகிய கோப்பையில் ஆரஞ்சு ஜூஸ்.
இப்போ ஸ்ட்ரா முயற்சி குளிர்ச்சியான வெற்றி...
வாசகம்: Mission Accomplished. பலே பாண்டியா!

சில விளம்பரங்கள் அழகிய சிறுகதைகளையே சொல்லிவிடும்.
Stella Artois என்ற பீர் விளம்பரம் சொல்லும் சிறுகதைகள்
சுஜாதா அளவுக்கு தரமானவை!


அது சரி... இதை ஏன் இந்தப்பகுதியில் பதித்தாய் என நீங்கள்
கேட்குமுன் சின்னதிரையில் கவர்ந்த விளம்பரங்கள் கொடுத்துவிடுகிறேன்.

பந்தடித்த சச்சின் அது கீழே வருவதற்குள் சென்னை நெரிசலில்
கடைக்குப்போய் திரும்பியே வந்துவிடுவார்.
அந்த அதிசயத்தில் பீல்டர் வாய்பிளக்கும் தருணம் பந்து கீழே வர
கேட்ச்சை கோட்டைவிட.. சச்சினின் மந்திரப்புன்னகை..அடடா...
(ஆனால் பியட் கார் வாங்கவில்லை நானென்பது வேறு விஷயம்..!)

இன்னொன்று...
<span style='color:#0024ff'>வீட்டு பெயிண்டுக்கான , " சந்துரு..
புது வீடு, புது காரு, புது மனைவி" விளம்பரம்!
</span>

உங்களைக் கவர்ந்த விளம்பரங்களைப் பகிர்ந்து
தொடரவேண்டுகிறேன்.

வணக்கம். நன்றி.

poo
05-09-2003, 09:38 PM
வீட்டு பெயிண்டுக்கான , " சந்துரு..
புது வீடு, புது காரு, புது மனைவி" விளம்பரம்............

..பிரமாதம்....

அந்த விளம்பரம்தான் என்னை மிகவும் கவர்ந்தது அண்ணா..

நல்ல பதிவு.. கலகலக்கும் சத்தம் விரைவில் காதுகளுக்கு நிச்சயம்..
நானும் வருகிறேன்.. கொஞ்சம் கண்விழித்து படித்து....

சேரன்கயல்
06-09-2003, 04:32 AM
"இணைந்தாலே கனவு நனவாகும்
அரிய சுவை உதயம் புதிய சன்ரைஸ்..
இணைந்தாலே சுவையை பருகிடலாம்
அரிய சுவை உதயம் புதிய சன்ரைஸ்"
(சன்ரைஸ் காபி விளம்பரம்)

"டான் டட்ட டான் டட்ட டான் டட்ட டட்ட டட்ட"
(டைட்டன் கடிகார இசை)

விளம்பரத்தின் அதிமுக்கிய அம்சங்களில் ஒன்றான பொருளின் பெயர் (Brand Name) உச்சரிக்கப் பட்டு கேட்பவர் பார்ப்பவர் மனதில் தங்கும்படி அமைய வேண்டும் என்பதற்கிணங்க அந்த காலத்தில் வந்த...
" அப்பா அப்பா கடைக்கு போறியா...
ஆமாம் கண்ணு உனக்கென்ன வேணும் சொல்லு...
டாலர் பிஸ்கட் டாலர் பிஸ்கட் டாலர் பிஸ்கட் வேணும்"
(நண்பா பூ...இந்த விளம்பரம் வானொலியில் நான் சிறு வயதில் கேட்டது, நீங்கள் தெரியாது என்று கூறினால் அதில் நிச்சயம் நியாயம் உண்டு)

கொஞ்சம் கடுப்படிக்கும் தன்மையில் அமைந்த...

"நிர்மா நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா
பாலைப்போல வெண்மை நிர்மாவாலே வருமே
வண்ணத் துணிகள் எல்லாம் பளபளப்பு பெறுமே
எல்லோரும் போற்றும் நிர்மா
வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா...நிர்மா"

இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா நடித்தது என்றி நினைக்கிறேன்...
கேட்பரீஸ் பெர்க்ஸ் விளம்பரம்...கியூவில் நின்று களைத்துப் போய் பலர் பசியாற வெளியேறும்போது..இருந்த இடத்திலேயே சிற்றுண்டியாக கேட்பரீஸ் பெர்க்ஸ் சாக்கிலேட் சாப்பிடுவார்"

சில விஷயமே...சில விஷேசமே...என்று தொடங்கும் பாட்லைக் கொண்ட கேட்பறீஸ் 5 ஸ்டார் சாக்கிலேட் விளம்பரம்..

இன்னும் நிறைய இருக்கு....

gankrish
06-09-2003, 11:50 AM
இதனால் ஒரு தீமை. என் பையன் இதில் வரும் சில விளம்பரத்தை பார்த்து (முக்கியமாக Cartoon Network)ல் வீடு புல்லா ஒரே ஸ்டிக்கர் மயம். இந்த Horlicks, Bournvita, Complan இவர்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாது. ஒரே மாசத்தில் மூன்று பேரும் ஏதாவ்து ஒரு free gift அறிவிப்பாங்க. நம்ம பாடுதான் திண்டாட்டம்.

poo
06-09-2003, 05:46 PM
ஆரோக்கிய வாழ்வினையே காப்பாற்றும் லை·ப்பாய்.... அந்த விளம்பரம்தான் எத்தனை பாப்புலர்... அந்த சோப்பை.. காசு திரட்டி வளையம் போட்டு திருவிழாக்கடையில எடுக்கிறதுல இருக்கற அலாதி.. அருமை.. எத்தனையோ பரிசு இருந்தாலும்.. பாருங்க அந்த சோப்தான் கிடைக்கும் திரும்ப திரும்ப...


ஒன் பிளாக் ·காபி பிளீஸ்... பிகர் இப்படி கேட்டதும் நொந்து நூலாய்ப்போவாரே.. சாந்தி தொடரில் நடித்த தாத்தா.... அந்த வருடம் சிறந்த விளம்பரமென விருதும் வாங்கியது அது..


ஆ..ஒண்ணு.. ரெண்டு.. மூணு.... ........... க்கிகிக்..கிகிகி...கிடைச்சாச்சு..கிடைச்சாச்சு... மீன்பிடிக்கும் பெவிக்கால் விளம்பரம்.. தூர்தர்ஷனில் கிரிக்கெட் மேட்சுக்கு இடையே எத்தனைமுறை வந்தாலும் சிரிக்கவைக்குமே...


டிராபிக் ஜாமில் சிக்கித்தவிக்கும் கார்மீது தவறி விழுந்த முட்டையொன்று ஆம்லெட்டாக மாற நிறையபேர் அந்த கார் பேனட்மீது ஆம்லெட் போடும் என்ஜின் ஆயில் விளம்பரம்...

அப்புறம்... ரொம்ப முக்கியமா நான் விளம்பரங்களை கவனிக்கிறதே.. என்னென்ன பொருளுக்கு என்ன இலவசம்னு.. ஏன்னா ஒண்ணு வாங்கினா உபயோகமா இன்னொன்னு கிடைக்குது பாருங்க.. செலவு மிச்சமாகும்.. அந்த வகையில கடைசி மூணு மாசமா விடாம லை·பாய் பிளஸ் சோப் வாங்கறேன்... கூடவே ரெண்டு லை·பாய் பவுடர் சாஷே தர்றாங்க... சோப் ஒருவாரம் வந்தாலும் பவுடர் ரெண்டு வாரம் வருதுங்கோ...

இளசு
18-09-2003, 12:19 AM
கலந்து கருத்துசொல்லி கலகலப்பாக்கிய கண்மணிகள்
பூ
சேரன்கயல்
கான்கிரீஷ்
மீண்டும் பூ

ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும்.

இந்த விளம்பரத்தாலே தலைப்புக்கு
இன்னும் பதிவுகள் வர
என்ன விளம்பரம் செய்யலாம்?
:wink: ஒண்ணுமே புரியலியே...!!

poo
18-09-2003, 03:19 PM
விளம்பரத்தின் அதிமுக்கிய அம்சங்களில் ஒன்றான பொருளின் பெயர் (Brand Name) உச்சரிக்கப் பட்டு கேட்பவர் பார்ப்பவர் மனதில் தங்கும்படி அமைய வேண்டும் என்பதற்கிணங்க அந்த காலத்தில் வந்த...
" அப்பா அப்பா கடைக்கு போறியா...
ஆமாம் கண்ணு உனக்கென்ன வேணும் சொல்லு...
டாலர் பிஸ்கட் டாலர் பிஸ்கட் டாலர் பிஸ்கட் வேணும்"

(நண்பா பூ...இந்த விளம்பரம் வானொலியில் நான் சிறு வயதில் கேட்டது, நீங்கள் தெரியாது என்று கூறினால் அதில் நிச்சயம் நியாயம் உண்டு)


என்னை குழந்தையென ஏற்றுக்கொண்டு அதை அனைவருக்கும் விளம்பரப்படுத்த முன்வந்த தங்களுக்கு நன்றி சேரன்கயல் அவர்களே!!

lavanya
19-09-2003, 01:47 AM
நல்ல நல்ல தலைப்புகளை தொடங்கி கொண்டிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

நம்மை கவர்ந்தவைகளில் சில

1. இன்றுனக்கு மணநாள்
என்னை விட்டு போகும் நாள்
என்னருமை மகளே
என் பெருமை மகளே......

என்று தொடங்கும் லலிதா ஜுவல்லரியின் விளம்பரம் அப்பாவும் - பெண்ணுமாய்
'பொன்னான தருணங்களில் லலிதா ஜுவல்லர்ஸ்' என வரும் அந்த விளம்பரம்.

2. கட்டு சோறு கட்டிகிட்டு
கட்டை வண்டி ஓட்டிக்கிட்டு
பட்டணந்தான் போற மச்சான்
எங்க போற எங்க போற...?

பருவக்கிளிக்கு பரிசம் போட
பட்டுப்புடவை எடுக்க தானே
சாரதாஸ் போறேன் பொண்ணே
சாரதாஸ் போறேன் பொண்ணே

திருச்சி சாரதாஸ் விளம்பரம்

3. சிமெண்ட் விளம்பரத்தில் வரும் அந்த வீட்டுக்காரரின் உணர்வு நெகிழ்வான விளம்பரம்
நீடித்து நிற்கும் பந்தம்....

4. அம்மாவை சைக்கிள் பின் கேரியரில் வைத்து அம்மா கையை எடுத்து தோள்பட்டையில்
வைத்துக்கொள்ளும் சிறுவன் - அற்புதமான கவிதை

5. எல்லா விளம்பரத்தையும் விட தஞ்சையின் எல்லாத் திரையரங்குகளிலும் தவறாது
திரையிடப்படும் 'விக்கோ டெர்மரிக் ' விளம்பரம். மெலிதான அவஸ்தை.எழுந்தும் வெளியே
போக முடியாது.ஏனெனில் இந்த விளம்பரம் வந்தால் அடுத்து படம்தான்....

இளசு
19-09-2003, 02:00 AM
அருமை அருமை லாவண்யா!
தந்தை -மகள் உறவை ஒரு வர்த்தக நிர்ப்பந்தத்திலும்
நிஜமாய் வடித்த லலிதா விளம்பரம் ஒரு சிறுகவிதைதான்.
(அன்பு மொழி கதையில் சேர்த்திருக்கலாம்...)

சைக்கிள் சிறுவனின் அந்தக் கண கண் வெளிச்சம்..
காணக் கண் கோடி வேண்டும்!

திருச்சி வந்தால் சாரதாஸ் விளம்பரம் பார்க்கணும்!
தஞ்சை வந்தால் தியேட்டர் போகமாட்டேம்ப்பா...
வஜ்ரதந்தி வஜ்ரதந்தியை விட்டுட்டீங்களே...
நறக் என அங்கே கடிக்க இங்கே எனக்குப் பல் கூசும்... :lol:

gankrish
19-09-2003, 11:32 AM
இப்போ புதுசு.. Bajajன் Hoodi Baba... Hoodi Baba... இதே வரி வரும் விளம்பரம் முழுதும். அதில் பின்னாடி உட்கார்ந்து இருக்கும் பையன் பள்ளி homeworkஐ முடித்து விடுவான். அத்தனை smoothஆக போகும்ன்னு பைக்கின் விளம்பரம் அது.

sujataa37
19-09-2003, 12:00 PM
விக்கோ வஜ்ரதந்தி மற்றும் டெர்மெரிக் விளம்பரங்களின் ஒரு விசேஷம் தெரியுமா ?
விக்கோ கம்பெனியினர் முதலிலிருந்தே தங்கள் விளம்பரங்கள் விஷ¤வல் மீடியாவில் மட்டுமே வரவேண்டும் என்று ஒரு முடிவெடுத்தனர்.
அதனால் விக்கோ அவிட்டாக்களை (நன்றி இளசு அவர்களே) பொதுவாக அச்சு மீடியாவில் பார்க்கவே முடியாது.
அதனால்தானோ என்னவோ அவைகளுக்கு ஒரு தனி brand recall உண்டென்று நினைக்கிறேன்.

sujataa37
19-09-2003, 12:07 PM
"ஐ'ம் எ காம்ப்ளான் girl " என்று சம உரிமை கோரிய அந்த சுட்டிப்பெண் விளம்பரம்.
உயரம் அதிகரிக்க சுவரில் தன் வளர்ச்சியின் அடையாளக்கோடு கிழிக்கும் பையனின் Incremin டானிக் அவிட்டா.
அப்படியே சாப்டுவேன், சுசித்ராவின் ஹார்லிக்ஸ் குடும்பம்
சற்று ஆபாசமாக இருந்தாலும், அந்த Aristocrat ஆப்பிள் ஜூஸ் விவகாரம்.
கண்ணாடி வழியே விதவிதமாக உருவங்கள் மாறும் Smirnoff விளம்பரம்.

mania
20-09-2003, 02:58 AM
ஒரு 5 வருடங்களுக்கு யாருமே " என்ன ஆச்சு ?" என்று கேக்கமுடியாத நிலை.
"என்ன ஆச்சு?"......................குழந்தை அழுதது !.............உட்வார்ட்ஸ் கிரைப் வாட்டர் கொடு.....
நீ குழந்தையா இருந்தபோது நான் அதுதான் கொடுத்தேன்"
பரம்பரை பரம்பரையாக நடந்து வந்த காரியம். மறக்கமுடியுமா ?
அன்புடன்
மணியா

poo
20-09-2003, 09:30 AM
நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்..
லிட்டருக்கு நாலு சொட்டு...

(தூர்தர்ஷன் காலத்து விளம்பரங்கள்தான் என்றென்றும் நினைவில் நிற்பவைகளாக..)

இளசு
20-09-2003, 08:55 PM
கலக்கும் கான்கிரீஷ்
சுவாரசியமாய் சொன்ன சுஜாதா37அழாமல் பதித்த மணியா
வெள்ளை உள்ள பூ..

அனைவருக்கும் பாராட்டுகள்..

சொட்டு நீலம் டோய்...
என்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ..
(மால்குடி சுபாவின் கணீரென்ற குரலில்...)
ஆனாலும் உஜாலாவை முந்த முடியல..

gankrish
22-09-2003, 08:10 AM
வந்தால் என்றால் வரவேற்க்கும்
சென்றால் எல்லா இடமும் சீறு சிறப்பும்
ப்ரிமியர் வேஷ்டி அனிந்தவருக்கு
என்றும் சிறப்பு (அப்போ மத்த வேஷ்டி கட்டறவனுக்கெல்லாம் ???)

mania
22-09-2003, 01:26 PM
மத்தவனுக்கெல்லாம் என்ன... சிறப்புக்கு பதில் செருப்புதான்??!!!
அன்புடன்
மணியா

poo
22-09-2003, 03:45 PM
வந்தால் என்றால் வரவேற்க்கும்
சென்றால் எல்லா இடமும் சீறு சிறப்பும்
ப்ரிமியர் வேஷ்டி அனிந்தவருக்கு
என்றும் சிறப்பு (அப்போ மத்த வேஷ்டி கட்டறவனுக்கெல்லாம் ???)

நல்ல சிரிப்பு!


அப்போ சட்டசபைக்கு போகும்போது அந்த வேட்டிதான் கட்டனும்.. அப்போதான் அவிழ்க்கமாட்டாங்க?!!!

rajeshkrv
24-09-2003, 05:31 AM
நல்ல தலைப்பு
தொடங்கிய இளசுவிற்கு நன்றி

1. "இல்லத்தின் எழில் வண்ணம் பொங்கிடவே" என்ற நெரொலாக் விளம்பரம் பள்ளி நாட்களிலிருந்தே மனதை கவர்ந்த ஒன்று

2. "வாழ்க்கையில எல்லமே ஹ்ம் இல்ல ஹ¤ஹ்ம் தான் " என்ற கோல்ட்
வின்னர் விளம்பரம் ஒரு நல்ல கவிதை . அதுவும் அந்த அழகான அம்மா தன் மகனுக்கு தானே கிரிக்கெட் மட்டை தேர்வு செய்வது அழகு

3. சமயத்திற்கேற்றார்போல் வரும் தி சென்னை சில்க்ஸ் விளாம்பரம் அருமை
"ஆனந்தமாய் கொண்டாடலாம் எல்லொருமே தீபாவாளி சென்னை சில்க்ஸ்" என்று சுபாவின் குரலிக் கேட்க இனிமை

4. சமீபகாலமாக "அப்பாவ திட்டினாயமே ரொம்பா கோவப்படரார் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டார்" என சுட்டிப்பெண் கூற "அவிட்டா மசாலா இருந்தா தன்னால வருவாரு" என்று அந்த அம்மா பதில் கூற அந்த வாசனையில் கணவன் வீட்டுக்குள் வர ஒரே குஷி தான்

5. என்றும் என் மனதில் நின்ற விளம்பரம்
ஜண்டு பாம் ஜண்டு பாம் வலிகளை நீக்கும் பாம்
அந்த டியூன் மிகவும் கவர்ந்த ஒன்று

ராஜ்

poo
24-09-2003, 02:51 PM
ராஜ்... நல்ல தெரிவுகள்..

உண்மைதான் அந்த ஜண்டுபாம் ஜண்டுபாம்... நினைவில் நீங்காத டியூன்!!

இளசு
24-09-2003, 07:27 PM
இனிய நண்பன் கான்கிரீஷ்
இசை நண்பர் ராஜ்...
அருமை நண்பர்களே...
தொடருங்கள்!

gans5001
27-09-2003, 01:54 AM
எப்படி
"பேஷ்.. பேஷ் ரொம்ப நல்லாருக்கு" வையும்
"இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்" ஐயும் விட்டார்கள் நண்பர்கள் என்பது தெரியவில்லை.

சமீபத்தில் என்னைக்கவர்ந்தது ரிலையன்ஸ் மொபைல் போன் விளம்பரம். இளந்தந்தை வியாபார விவாதத்தில்.. குழந்தையிடமிருந்து போன்.. நண்பர்களிடமிருந்து அனுமதி பெற்று போனிலேயே ஓர் கதை சொல்ல கவிதையாய் விரியும் குழந்தையின் கண்கள்.. "பாப்பா.. இன்னொரு கதை" என்ற அந்த கடைசி வரிகளும்.. அதன் பதிலாய் தகப்பனிடமிருந்து வெளிப்படும் பெருமிதப் புன்முறுவலும்... மொத்தத்தில் ஒரு முழு கவிதை

தமிழ்லியோ
27-09-2003, 07:31 PM
இதையெல்லாம் படிக்கும் போது, வீட்டு ஞாபகம் வந்துடுச்சி.. சனி, ஞாயிறு நிம்மதியா உக்காந்து சன் டிவி பாக்கும் காலம் எப்போ? Fox, NBC போர் அடிச்சு போச்சு இப்போ

puppy
27-09-2003, 07:41 PM
சன் டிவி தான் வருதே இங்கே.,,அப்புறம் என்ன தம்பி....Dish வாங்குங்க

தமிழ்லியோ
28-09-2003, 07:03 PM
டிஷ் போடலாம், சன் டிவி பார்க்கலாம்.. ஆனா வீட்டு சூழல் வருமா? அம்மா கையால் காபியும், முறுக்கும் வருமா? அதெல்லாம் போகட்டும், இதுக்கெல்லாம் நேரம் வேண்டாமா? மெஷின் வாழ்க்கையாயிட்டுது....

Dr. Agaththiyan
29-09-2003, 09:11 PM
குடிக்க வேணாம் , அப்படியே சாப்பிடலாம்

குடும்ப ஆரோக்கியத்துக்கு டாக்டர்கள் பரிந்துரைப்பது ஹார்லிக்ஸ்..

(விளம்பரத்தை சொன்னேன்.)

இளசு
17-10-2003, 10:51 PM
"மாதா ஊட்டாத சோறும்
மான் மார்க் அப்பளம் ஊட்டும்"

madhuraikumaran
18-10-2003, 12:49 AM
1. காபின்னா நரஸ¥ஸ் காபிதான்... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு...

2. ஒயாசிஸ் சுந்தரி... (சிறு வயதில் திரையரங்குகளில் பார்த்தது)

3. டார்டாய்ஸ் கொளுத்துங்க.. கொசுவத் தொரத்துங்க... சந்தோஷமாய் இருங்க... (சின்னி ஜெயந்த் விதவித வேடங்களில் வந்து கலக்குவார்... )

4. பட்டர்பிளை பிரஷர் குக்கர் பாடல்...

5. வா என்றழைத்தால் வருவாயே நீ..
என் வலிகளைப் போக்கிடுவாயே நீ...
என் அன்புக்குரிய உயிர்த்தோழியே
அன்புக்குரிய அமிர்தாஞ்சன் !!!

6. போயே போச்சு... போயிந்தே... இட்ஸ் கான் !!!

7. ஜரா ஸா... ஒரு துளி ரின் !

8. ஸர்·ப் புகழ் லலிதாஜி.... "அதுக்கெல்லாம்... புத்திசாலித்தனம் வேணும்' !!!

9. நம்ம ஊரு வண்டி... TVS XL

10. பட்டுப்போன்ற மேனி... ரெக்ஸ்சோனா

ரேடியோ விளம்பரங்கள்...

1. "என்னடா இப்படி வீட்டுக்கும் போகாம ரோட்டுக்கும் போகாம..." மோஹன் குரலில் S.N.சுரேந்தர்

2. அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் - நல்லெண்ணை சித்ரா

3. ஒரிஜினல் தென்ன மரக்குடி எண்ணெய்

4. சிலோன் வானொலியின்...
" என் அத்தானின் வயல் தனிலே பினோலெக்ஸ் தண்ணீரு பாயுது...
பினோலெக்ஸ் செஞ்சிடும் ஜாலமே... தங்கமே தங்கமிது !'

5. இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா புகழ்.. கோபால் பல்பொடி.. இன்றும் அப்துல் ஹமீது இரவு 8.00 மணியை கோபால் பல்பொடி நேரம் என்றே குறிப்பிடுகிறார்.

இளசு
18-10-2003, 08:53 AM
மெகா அசத்தல் நண்பரே
இப்போ எந்தப்பணியில் இருக்கீங்க? விளமரத்துறையா?????!!!! :D

(கோபால் பல்பொடி "சாப்பிட" ரொம்ம்ம்ம்ப நல்லா இருக்கும்ல?) :D

Emperor
18-10-2003, 09:56 AM
சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய்
என்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ

Emperor
18-10-2003, 09:59 AM
ஆஹா ஓஹோ பேஷ் பலே
சுவையான சமையலே..
சக்தி மசாலா..

இளசு
18-10-2003, 10:00 AM
·ப்பொர்ஹென்ஸ் பற்பசை விளம்பரம்-

சிறுவன் : (அப்பாவிடம்) நுரை வருமாப்பா?
கடைக்காரர் : நெறைய வரும்ப்பா!

(எம் சொந்தம் சிரிப்பு எந்த பற்பசையின் கைங்கர்யமோ? :D )

Emperor
18-10-2003, 10:01 AM
அப்பாவ திட்டினியாமே
கோவபடுறாரு, சாப்பட மாட்டேன் சொல்லிட்டாரு
என்னபன்னுவ

ஆவிட்டா மசாலா போட்ட தன்னால வருவாரு.

ஜிங்கு ஜிங்குனு மனம் இலுக்குது ஆஹா இந்த சுவை அழைக்குது..
ஆவிட்டா மசாலா ;)

Emperor
18-10-2003, 10:04 AM
·ப்பொர்ஹென்ஸ் பற்பசை விளம்பரம்-

சிறுவன் : (அப்பாவிடம்) நுரை வருமாப்பா?
கடைக்காரர் : நெறைய வரும்ப்பா!

(எம் சொந்தம் சிரிப்பு எந்த பற்பசையின் கைங்கர்யமோ? :D )

பெரியவர் ஆயிட்டா ஒன்னும் மாறாது..
பெப்சோடெண்டுக்கு மாறிட்ட எல்லாம் மாறிடும் ;)

Emperor
18-10-2003, 10:06 AM
குளிக்காதா.................
2 நாள் கேம்ப் தானே வந்து குளிச்சுக்கலாம், மீரா இல்லனா குளிக்காத....

இளசு
18-10-2003, 10:08 AM
குளிக்காதா.................
2 நாள் கேம்ப் தானே வந்து குளிச்சுக்கலாம், மீரா இல்லனா குளிக்காத....

படிச்சவுடன் பக்குனு சிரிச்சிட்டேன்.. :lol:
குளிக்கா.........ஆஆஆத....
ஒலிக்கிறது குரல்!
நன்றி சொந்தமே!

Emperor
18-10-2003, 01:23 PM
பூஸ்ட் இஸ் த சீக்கரட் ஆப் மை எனர்ஜி

இளசு
18-10-2003, 02:40 PM
பூஸ்ட் இஸ் த சீக்கரட் ஆப் மை எனர்ஜி

அசராம பதிக்கிற இரகசியம் இதுதானா???!!!

madhuraikumaran
18-10-2003, 09:39 PM
விளமரத்துறையா?????!!!!

அது என்னங்க விளமரம் ?.... இந்த விளாம்பழம் காய்க்குமே அந்த மரமா?... :wink:


(கோபால் பல்பொடி "சாப்பிட" ரொம்ம்ம்ம்ப நல்லா இருக்கும்ல?)

ஆஹா... அந்த நறநற இனிப்பு மறக்க முடியுமா ? தேய்க்கும் போது பல்லில் இருந்து வரும் கீச் கீச் சத்தம் கூட சங்கீதம் !!! :) :lol:

இளசு
18-10-2003, 09:46 PM
[quote]
விளமரத்துறையா?????!!!!

அது என்னங்க விளமரம் ?.... இந்த விளாம்பழம் காய்க்குமே அந்த மரமா?... :wink:
[quote]
பார்த்துட்டு சரி பண்றதுக்குள்ள
மன்ற வி.வி என்ற சுழல் என்னை இழுத்துட்டுப்போச்சே
இப்ப முழிச்சு என்ன பயன்..???
:lol:

Emperor
19-10-2003, 09:08 AM
தொண்டையில் கீச் கீச் தொண்டையில் கீச் கீச்
என்ன செய்ய
விக்ஸ் மாத்திரை போட்டிங்க
கீச்ச கீச்ச துரத்துங்க

Emperor
19-10-2003, 09:12 AM
தலை வலியா
ஆமா..
மூக்கடைப்பா
ஆமா
உடம்பு வலியா
ஆமா பா ஆமா

அப்போ விக்ஸ் ஆக்ஷன் 500 போடுங்க.

இளசு
19-10-2003, 09:44 AM
சூப்பர் அப்பூ!
இரவில் வெளியேறும் காதல் ஜோடி
இருமலால் மாட்டிக்கொள்ளும்
பழைய விளம்பரம் ஒன்று..ஆ கவிதை அது!

Emperor
20-10-2003, 08:22 AM
தினந்தோரும் வாங்குவேன் இதயம்

poo
25-10-2003, 06:52 PM
தினந்தோரும் வாங்குவேன் இதயம்

இதை தினந்தோறும் வாங்குவேன் உதையும்.. என்று படித்துவிட்டு திடீர் என சிரித்துவிட்டேன் நண்பரே!!!

Emperor
26-10-2003, 06:06 AM
:aetsch013:

சகுனி
11-11-2003, 06:57 AM
1.அந்த தந்தை மகள் பாசம் பொங்கும் லலிதா ஜூவல்லரி விளம்பரம் பார்த்து அழுதவர் பலருண்டு.
2.சன்ரைஸ் - ஓர் இனிய ராகம்.
3.அவிட்டா - இனிய சுவை (விளம்பரம் மட்டும்.)
4.என்ன விசேஷமோ கேட்பரிஸ்- கேட்க கேட்க இனிக்கும்.
5.லிரில் பிரீத்தி ஜிந்தா - விளம்பரம் வரும்நேரம் எதிர்பார்க்கவைப்பது.
6.உட்வர்ஸ் - பழைய கள் என்றும் சுவை.
7.மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் குருடன் மாறி காதலன் செய்யும் காதலியிடம் செய்யும் அசிங்கம்-உற்றுநோக்கினால் நெளியவைப்பது.
8.பாண்ட்ஸ்-அழகியின் ஆக்கிரமிப்பு.
9.நட்ஷத்திரா-ஐஸ்வர்யாவின் அழகுக்கானது.
10.டிவிஎஸ் எக்ஸெல்-தொடர் ரசனைக்கு.

எரிச்சலூட்டுவது.
1.கொகோகோலாவின் மாத்தாடு மாத்தாடு மல்லிகை.
2.கோல்டுவின்னர்
3.பிந்து அப்பளம்.

puppy
01-12-2003, 04:59 PM
பார்லே கம்பெனியை வேற யாரும் வாங்கிட்டாங்களா...இப்போ கொஞ்ச நாளா அவங்க விளம்பரங்கள் அதிகம்....எல்லாமே ரசிக்கும்படியா...
hideandseek...விளமபரம் அருமை......

poo
01-12-2003, 05:10 PM
பார்லே கம்பெணியில யாராச்சும் புதுசா வேலைக்கு சேர்ந்திருப்பாங்களோ?!!

பப்பி நீங்க சொன்னமாதிரி வேற யாரும் வாங்கி இருக்கமாட்டாங்க.. ஏன்னா... சுவை(!!!!) இன்னமும் அப்படியேதான் இருக்கு!!

மன்மதன்
03-12-2003, 09:36 AM
இந்த பக்கங்களை படிக்கும்போது பழைய நியாபகங்கள் வருகிறது..
வீட்டில் சும்மா தொலைகாட்சி பெட்டி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு
எல்லோருடனும் அரட்டை அடித்துக்கொண்டு இருந்ததெல்லாம் ஒரு பொற்காலம்.

ஓவ்வொரு விளம்பரஙகளும் ஒவ்வொரு நினைவுகளை முன் நிருத்தும்.

எதாவது விளம்பரஙகளை பார்க்கும் போது நமக்கு பழைய நியாபகம் வருவது மறுக்க முடியாது.

2, 3 மணி நேரம் சொல்லாத கருத்தை , கொடுக்காத ஹாஸ்யத்தை 1 நிமிட விளம்பரம் கொடுத்து விடும்..

ஒரு விளம்பரத்தில் இரண்டு பேர் உணவகத்தில் காfபி அருந்தி கொண்டு இருப்பார்கள்.
அப்போது ஒரு வயதான பெண்மனி அவர்களை உத்து பார்த்து விட்டு பிறகு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்.
பிறகுதான் தெரியும் ஒரு கண்ணாடி இருவருக்கும் மத்தியில் இருக்கிறது என்பது..எந்த கண்ணாடி எண்று நியாபகம் இல்லை.

அது மாதிரி பெப்சி பண்ணிய எல்லா விளம்பரங்களும் நன்றாகவே இருக்கும்.
அதுவும் உலகக்கோப்பையுன் போது அவர்கள் பண்ணிய அனைத்து விளம்பரங்களும் நன்றாகவே இருந்தன.
முக்கியமாக ஒரு பெப்சி மெஷினிலிருந்து எல்லா விளையாட்டு வீரர்களும் பெப்சி எடுக்க எதெதோ பண்ணுவார்கள்.
ஒரு சின்ன பையன் அப்புறம் வந்து power switch ON பண்ணிட்டு பெப்சியை எடுத்து விட்டி பிறகு power switch off பண்ணிடுவான்.

இது மாதிரியான் காமெடி கலந்த விளம்பரங்கள் சீக்கிரமே மக்களை அடைந்து விடும்...சரிதானே?

poo
03-12-2003, 03:39 PM
மிகச்சரி...

அடிக்கடி காமெடியாய் பேசுவதால்தான் நீங்களும் மன்றத்து மனங்களில் "அடைந்து"விட்டீர்கள் மதன்!!

பாரதி
03-12-2003, 05:33 PM
..எந்த கண்ணாடி எண்று நியாபகம் இல்லை.


அது செயிண்ட் கோபைன் (Saint Gobain). சென்னைக்கு அருகிலும் அந்நிறுவன ஆலை உண்டு. அன்பே சிவம் படத்திலும் இடம் பெற்ற காட்சி அது.

lavanya
03-12-2003, 11:46 PM
இப்போது டிவியில் சர்ப் எக்ஸெல்லுக்கு ஒரு விளம்பரம் வருகிறது.
1.50 ரூபாய்க்கு பாக்கெட் வடிவில் வந்திருக்கிறதாம். ஆபிஸக்கு
போய் வரும் கணவன் ஏகப்பட்ட அழுக்கோடு வந்து எப்படி இப்படியெல்லாம் ஆனது என்று மனைவியிடம் விளக்க அந்த மனைவி
அழகாய் சொல்வார்....

"ஒண்ணரை ரூபா கறை...அதுக்கு இவ்ளோ பெரிய கதை..."

வெரி நைஸ் ...!

மன்மதன்
04-12-2003, 04:32 AM
நன்றி பாரதி அவர்களே.
அன்பே சிவம் படத்தில் மாதவன் அந்த விளம்பரத்தை பண்ணி இருப்பதாக காட்டுவார்கள்.
அது சரி.. தொழிற்சாலை உள்ள இடமெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்.

மன்மதன்
09-12-2003, 03:24 PM
'ஹலோ'
'ஹலோ'
'இன்று இரவு என்ன செய்ய போகிறீர்கள்'
'நானா?'
'நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா?'
'நிச்சயமா'
அவர் அவள் பக்கத்தில் வருகிறார்.
அவள் அவளுடைய காதிலிருந்து மிக சிறிய செல்போன் எடுத்து 'ஒன் ப்ளாக் காfபி ப்ளீஸ்' என்கிறாள்..
அவர் அசடு வழிகிறார்.

சோனி எரிக்ஸான் விளம்பரம்....
மறக்க முடியுமா??.

பொன்னியின் செல்வன்
10-02-2004, 05:57 PM
ரஹ்மானின் தென்றல் இசையில் தவழ்ந்து வரும் ஏர்டெல் ஒரு நிமிட முழு விளம்பரம். ( express yourself). சமீப காலத்தில் கருப்பு வெள்ளையில் வந்து மனதைக் கவர்ந்த விளம்பரம். say something, say nothing, inspire, conspire, confess, etc... கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் ஒரு மென்மையான விருந்து.

அந்த காலத்தில் வந்த 'care free' விளம்பரத்தில், ஒரு பெண் ரிக்ஷாவில் வந்து கடையில் ஒரு பொட்டலத்தை வாங்கிக் கொண்டு துப்பட்டா சிறகடிக்க மகிழ்ச்சியோடு திரும்புவாள். பள்ளி பருவத்தில் 'அதை' பற்றி தெரியாமல், அக்காவிடம் இது எந்த சோப்பு விளம்பரம் என்று அசட்டுத்தனமாக கேட்டது நினைவுக்கு வருகிறது.

' லைப்பாய் எவ்விடமே ஆரோக்கியம் அவ்விடமே; ஆரோக்கிய வாழ்வைக் காப்பாற்றும் லைப்பாய்' வானொலியில் கேட்டு மனதில் பதிந்த ட்யூன்.

கல்லூரிக் காலத்தில் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகப் பட்ட ad-mad என்ற, நகைச்சுவையும் ஆக்கத்திறனும் கொண்ட நிகழ்ச்சிகள் பற்றி எண்ணி மனம் அசை போடுகிறது. அதற்கு வாய்ப்பு தந்த மன்றத்திற்கு நன்றி.

இளசு
10-02-2004, 09:08 PM
அருமையான நினைவுக்கோர்ப்பு நண்பர் பொன்னியின் செல்வன் அவர்களே

"அவிட்டாக்களை" ஊமை மொழியில் செப்பி, அணிகள் கண்டுபிடிக்கும்
அந்தப் போட்டிகள்.. ஆஹா..அறிவு, கவனித்து உள்வாங்கி காலத்தே பயன்படுத்தும் ஆற்றல்,
சமயோசிதம், வேகம், நகைச்சுவை.... ம்ம்ம்ம்..பல படிம வெளிப்பாடு...

மன்மதன்
11-02-2004, 01:42 PM
சில விசயமே, விசேஷமே நம் வாழ்விலே...
கேட்பரீஸ் எக்லர்ஸ்...

அருமையான விளம்பரம்...

மன்மதன்
03-06-2004, 01:40 PM
இந்த விளம்பரத்தை பாருங்கள்.. 6 மில்லியன் செலவு செய்து எடுத்ததாம்.. ஹோண்டா அக்கார்டு விளம்பரம்..

இந்த விளம்பரத்தை பார்க்க உங்க கணிணியில் ப்ளாஷ் இருக்க வேண்டும்..

http://www.steelcitysfinest.com/hondaaccordad.htm


:D :D :D :D

சேரன்கயல்
03-06-2004, 04:41 PM
சில விசயமே, விசேஷமே நம் வாழ்விலே...
கேட்பரீஸ் எக்லர்ஸ்...

அருமையான விளம்பரம்...


சூப்பர் விளம்பரம்...

மன்மதன்
06-06-2004, 12:22 PM
யாரும் அந்த ஹோண்டா விளம்பரத்தை பார்க்கவில்லையா.. :roll: :roll: :roll:

அறிஞர்
07-06-2004, 08:21 AM
அன்பரே... இந்த விளம்பரத்தை.. முன்பே பார்த்துள்ளேன்..

சிரமப்பட்டு.. எடுத்துள்ளனர்...

poo
07-06-2004, 02:31 PM
அன்பரே... இந்த விளம்பரத்தை.. முன்பே பார்த்துள்ளேன்..

சிரமப்பட்டு.. எடுத்துள்ளனர்...
எனக்கு ஒண்ணுமே விளங்கல..

மன்மதன்
07-06-2004, 04:05 PM
அன்பரே... இந்த விளம்பரத்தை.. முன்பே பார்த்துள்ளேன்..

சிரமப்பட்டு.. எடுத்துள்ளனர்...
எனக்கு ஒண்ணுமே விளங்கல..


பூ, நான் மேலே கொடுத்துள்ள பதிவை பாருங்கள்.. சுட்டியை கிளிக்குங்கள்.. பளாஷ் (Flash) மென் பொருள் உங்க சிஸ்டத்தில் இருக்க வேண்டியது அவசியம்..

அன்புடன்
மன்மதன்

poo
07-06-2004, 04:22 PM
பார்த்தேன்.. விளம்பரம்தான் விளங்கலன்னு சொன்னேன்!! (ஹிஹி!)

மன்மதன்
07-06-2004, 04:24 PM
வெளங்கிடும். :lol: :lol: :lol:


அது ஒரு அனிமேஷன் விளம்பரம்.. ஹோண்டா கம்பெனி காருக்கு.. விளம்பரத்துறையில் இருப்பவருக்குத்தான் பளிச்சென விளங்கும்.. அதை விடுங்க பூ..

இப்பொது நல்லா புகழோட இருக்கிற விளம்பரம் எது?

அன்புடன்
மன்மதன்

பாரதி
07-06-2004, 06:44 PM
அது ஒரு அனிமேஷன் விளம்பரம்.. ஹோண்டா கம்பெனி காருக்கு..


அன்பு மன்மதன்...
இன்றுதான் பார்த்தேன். மிகவும் அருமையான விளம்பரம். மிக மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளனர். இது அனிமேஷன் படம் அல்ல.
*. காரின் பாகங்களைக் கொண்டே முழுப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
*. விளம்பரத்திற்காக மொத்தம் 606 சாட்டுகள் எடுக்கப்பட்டன.
*. முழுப்படமும் கேமராவால் மட்டுமே படம் பிடிக்கப்பட்டுள்ளது. கணினி தொழில்நுட்பம் எதுவும் இந்த விளம்பரத்தில் இல்லை என்பது தனிச்சிறப்பு.

சுட்டி கொடுத்த மன்மதனுக்கு நன்றி.
(படம் பிளாஷ் என்பதாலும், சற்று பெரியது என்பதாலும் உங்கள் கணினியில் முழுமையாக காண சற்று நேரம் பிடிக்கும்.)

thiruarul
15-07-2004, 08:48 PM
மதிப்பிற்குரிய இளங்கரிகாலன் அவர்களது வித்தியாசமான பதிவுகளில் இதுவுமொன்று. விளம்பர உத்திகளை இலகுவாகப் புரிந்துகொள்ளும்படி விளக்கும் பதிவு இது

நிற்க,

இதனோடு தொடர்புடைய பதிவு ஒன்று மன்றில் உள்ளது. பார்வையிடுவதற்கு இங்கே அழுத்துங்கள் (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=4107)

அன்புடன் திருவருள்

இளசு
06-12-2004, 08:38 PM
நன்றி திருவருள்...

நீங்கள் சொன்ன சுட்டியில் சாகரன் அவர்கள் தந்த கட்டுரையும்,
பாவ்லோவ் எடுத்துக்காட்டுடன் கூடிய உங்கள் கருத்தும் அருமை.


இப்போதெல்லாம் ( தயாநிதி மாறன் மத்திய அமைச்சரான பிறகு?)
எக்கச்சக்க விளம்பரங்கள் சன் டிவியில்..

எதுவும் நம் மன்ற நண்பர்களின் கண்களை/ கருத்தைக் கவரவில்லையா என்ன?

மன்மதன்
02-01-2005, 09:38 AM
நான் சென்னை சென்ற போது நிறைய விளம்பரங்கள் சன் டிவியில் பார்த்தேன்.. அனைத்துமே நன்றாக எடுத்துள்ளனர். 25 நிமிட விளம்பரத்திற்கு 25 நாட்கள் கூட சூட்டிங் நடத்தியிருப்பார்கள் போல.. சென்னை சில்க்ஸ் கூட நியூயார்க் சில்க்ஸ் அளவில்தான் விளம்பரம் எடுக்கிறது..
அன்புடன்
மன்மதன்

சேரன்கயல்
03-01-2005, 04:00 AM
பின்னிட்டாய்ங்க ஹோண்டா விளம்பர மக்கள்...