PDA

View Full Version : இனிது இனிது தமிழ் இனிது



இளசு
01-04-2003, 05:30 AM
இனிது இனிது தமிழ் இனிது

அமிழ்தினும் இனிய தமிழுக்கு
அழகிய தளம் தந்த தலைவா
கணினியுகம் தாண்டியும்
காலமெல்லாம் உன் புகழ் வாழ்க!

அழகுக்கு அழகு செய்ய
அணிகலன் அளிக்கும் தோழரே
பொன்நகை மோகம் தீராத் தமிழ்க்கன்னி
போற்றுவாள் உங்களின் அன்பெண்ணி

நன்றியைச் சொல்ல என்ன வழி?
நல்லதாய் நீயும் படைப்பு அளி
படைக்கும் வழி பழகும் வரை
படித்தவற்றுக்கு பாராட்டளி

வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி

அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.

Narathar
01-04-2003, 09:56 AM
தமிழ் மன்றத்தை வாழ்த்தி தமிழ் கவியுடன் ஆரம்பித்த இளசு அவர்களை
தமிழ் மன்றம் சார்பிலும், அதன் நிர்வாகிகள் சார்பிலும், அங்கத்தவர்கள்
சார்பிலும் வருக வருக என வரவேற்கின்றேன்.............

anushajasmin
01-04-2003, 10:24 AM
அருமையான கவிதையை தமிழுக்கு அர்ப்பணித்திருக்கும் நண்பர் இளசு(முழுப்பெயர் என்ன..?) அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

உங்களின் இந்த கவிதை இம்மன்றத்தின் தேசிய கீதமாக மாற வாழ்த்துக்கள்

aren
01-04-2003, 11:57 AM
இளசு அவர்களே,

அருமையாக உள்ளது உங்கள் கவிதை. பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்

ஆரென்.

poo
01-04-2003, 12:56 PM
அண்ணா... வணக்கம். உங்கள் அபார திறமைக்கு திறவுகோல்... உங்கள் படைப்புக்குத்தான் முதலில் பதில் எழுதுகிறேன்.(அறிமுகம்கூட செய்யவில்லை என்னை நான்..)

வழக்கம்போலவே பாராட்டுக்கள் ஏராளமாய்.. தாராளமாய் அள்ளி வீசுங்கள் அளவில்லா கவிதைகளை...

இளசு
01-04-2003, 04:19 PM
தமிழ் மன்றத்தை வாழ்த்தி தமிழ் கவியுடன் ஆரம்பித்த இளசு அவர்களை
தமிழ் மன்றம் சார்பிலும், அதன் நிர்வாகிகள் சார்பிலும், அங்கத்தவர்கள்
சார்பிலும் வருக வருக என வரவேற்கின்றேன்.............

நன்றி கானத்தின் தலைவா.

இளசு
01-04-2003, 04:20 PM
அருமையான கவிதையை அமிழுக்கு அர்ப்பணித்திருக்கும் நண்பர் இளசு(முழுப்பெயர் என்ன..?) அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
உங்களின் இந்த கவிதை இம்மன்றத்தின் தேசிய கீதமாக மாற வாழ்த்துக்கள்

நன்றி தோழியே
முழுப்பெயர் இளங்கரிகாலன்.
செல்லப்பெயர் இளசு.
காரணப்பெயர் ரவுசு.

இளசு
01-04-2003, 04:21 PM
இளசு அவர்களே,
அருமையாக உள்ளது உங்கள் கவிதை. பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்

கெழுதகை நண்பர் ஆரென் அவர்களுக்கு
நன்றியும்
வாழ்த்தும்
வணக்கமும்.

இளசு
01-04-2003, 04:23 PM
ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணா... (மன்னிக்கவும்)இங்கே இளங்கரிகாலனாய் அல்ல இளசுவாய்.. (ஆங்கில இளசு பார்ப்பதற்கு நன்றாய் இல்லை!!!)வலம் வரலாமே!!!

தம்பி
நன்றி சொல்லவும் வேண்டுமோ உனக்கு...
ப்ரொ·பைலில் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.
பின்னர் முடிக்கிறேன்.

rambal
01-04-2003, 04:42 PM
இளசுவின் கவிதையே பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக உள்ளது..
பாராட்டுக்கள்..

PonniyinSelvan
01-04-2003, 05:20 PM
நான் எனது பெயரை மாற்றுவதால் இந்த பதிவை அழித்துவிட்டேன்.

தமிழ்குமரன்
01-04-2003, 05:24 PM
இ-----இலட்சியம்
ள--- வளமான எண்ணங்கள்
சு--- சுந்தரதமிழ்
இது தான் இளசு வா..
வாழ்த்துக்கள்

madhuraikumaran
01-04-2003, 05:25 PM
கலக்கிட்டீங்க... இளையவரே... உங்கள் கவிதை புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டி. இது ஸ்டிக்கி ஆக பதவி பெற வாழ்த்துகிறேன் !!

அருள்மொழி வர்மன்
01-04-2003, 05:39 PM
இளையவரே,
வழக்கம்போல் தூள் கிளப்புறீங்க. சண்டை சச்சரவுகள் இல்லாமல், இந்த தளம் இணைய தமிழர்களுக்கு ஒரு சிறப்பான கருத்தாடல் மன்றமாக விளங்க உங்கள் அறிவுரையை அனைவரும் ஏற்று நடக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
அ.வ.

இளசு
01-04-2003, 06:10 PM
இளசுவின் கவிதையையே பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக உள்ளது..
பாராட்டுக்கள்..
இளவலின் படைப்புகளே உரைகல்லாய் அமையுது.
வாழ்த்துகள் ராம்!

இளசு
01-04-2003, 06:12 PM
இ-----இலட்சியம்
ள--- வளமான எண்ணங்கள்
சு--- சுந்தரதமிழ்
இது தான் இளசு வா..
வாழ்த்துக்கள்

அவைக்கூச்சம் வரும் அளவு புகழ்ச்சி இது!
பிறர் மகிழ இன்சொல் தரும் தமிழர் பண்பு இது.....!!!!

இளசு
01-04-2003, 06:14 PM
கலக்கிட்டீங்க... இளையவரே... உங்கள் கவிதை புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டி. இது ஸ்டிக்கி ஆக பதவி பெற வாழ்த்துகிறேன் !!


நன்றி நண்பர் மதுரைக்குமரனே!
சொன்னபடி நடந்தா முதல் இனிப்பு உங்களுக்குத்தான்....!!

இளசு
01-04-2003, 06:16 PM
இளையவரே,
வழக்கம்போல் தூள் கிளப்புறீங்க. சண்டை சச்சரவுகள் இல்லாமல், இந்த தளம் இணைய தமிழர்களுக்கு ஒரு சிறப்பான கருத்தாடல் மன்றமாக விளங்க உங்கள் அறிவுரையை அனைவரும் ஏற்று நடக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
அ.வ.


ராஜராஜ சோழன் ஆ(ணை)சை நிறைவேறட்டும்..!
நானும் இறைஞ்சுகிறேன் இறையை..!!!

perisamy
01-04-2003, 08:22 PM
கவிதை மிக அருமையாக இருக்கிறது. இளசு.. வாழ்த்துக்கள்..... தொடருங்கள் உங்கள் கவிதை மழையை.....

இளசு
02-04-2003, 03:38 AM
கவிதை மிக அருமையாக இருக்கிறது. இளசு.. வாழ்த்துக்கள்..... தொடருங்கள் உங்கள் கவிதை மழையை.....


என் அன்புக்குரிய நண்பர் பெரியசாமி அவர்களை
மன்றத்தில் சந்திப்பதில் மனம் துள்ளுகிறது!
நன்றியும் வாழ்த்தும் நண்பரே!

Vanambadi
02-04-2003, 04:19 AM
கவிதை சூப்பராக உள்ளது! "இளசு" போலவே!

இளசு
02-04-2003, 04:46 AM
கவிதை சூப்பராக உள்ளது! "இளசு" போலவே!


கருத்து உற்சாகமாக இருக்கிறது வானம்பாடியின் கானம் போலவே!

chezhian
06-04-2003, 09:05 PM
அழகான கவிதை தந்த
நண்பர் இளசு அவர்களே
வருக..வருக....

இளசு
07-04-2003, 05:23 PM
�அழகான கவிதை தந்த
நண்பர் இளசு அவர்களே
வருக..வருக....


அன்பு நண்பர் செழியனுக்கு
நன்றியும், பதில் வரவேற்பும்..

prabhaa
08-04-2003, 01:04 AM
தமிழையும், இந்த மன்றத்தையும், மிக அழகாக போற்றியுள்ளீகள் lasu.
எனது மனம் திறந்த பாராட்டுக்கள்!! மன்றத்தில் உமது சேவை சிறக்க என் வாழ்த்துக்கள்.

இளசு
08-04-2003, 05:44 AM
வாழ்த்திய நண்பர் பிரபாவுக்கு என் உளமார்ந்த நன்றிகள்....

இளசு
13-10-2003, 09:18 PM
இனிது இனிது தமிழ் இனிது

அமிழ்தினும் இனிய தமிழுக்கு
அழகிய தளம் தந்த தலைவா
கணினியுகம் தாண்டியும்
காலமெல்லாம் உன் புகழ் வாழ்க!

அழகுக்கு அழகு செய்ய
அணிகலன் அளிக்கும் தோழரே
பொன்நகை மோகம் தீராத் தமிழ்க்கன்னி
போற்றுவாள் உங்களின் அன்பெண்ணி

நன்றியைச் சொல்ல என்ன வழி?
நல்லதாய் நீயும் படைப்பு அளி
படைக்கும் வழி பழகும் வரை
படித்தவற்றுக்கு பாராட்டளி

வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி

அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.

........

puppy
13-10-2003, 09:28 PM
எததனை வாட்டி போட்டாலும் சிலருக்கு புரியாது......ஒதுக்கிட்டு போய்கிட்டே
இருக்க வேண்டியது தான்......

இக்பால்
14-10-2003, 04:50 AM
இளசு அண்ணா,
இக்கவிதையில் நானும் பங்கேற்று என் நன்றியையும்
தலைவர் இராசகுமாரனுக்கு சொல்லி வாழ்த்துக்களும் உடன் சொல்கிறேன்.
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை என்ற கணக்காக
தலைவர் விடுப்பில் சென்று விட்டார். இப்பொழுது விடுப்பிலிருந்து
திரும்பியிருக்கும் அவருக்கு என் வணக்கமும் கூட.
என் பிறந்தநாளுக்கு நம் மன்றத்திலிருந்து தனிமடல் அனுப்பிய
ஒரே நபர் இராசகுமாரன் நண்பர்தான். அதுவே ஒரு தலைப்பைத்
தொடங்கி எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்ல வித்திட்டது.
நன்றி.
-அன்புடன் சகோதரர் இக்பால்.

இக்பால்
14-10-2003, 04:55 AM
எததனை வாட்டி போட்டாலும் சிலருக்கு புரியாது......ஒதுக்கிட்டு போய்கிட்டே
இருக்க வேண்டியது தான்......

அன்புச் சகோதரியே... யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
நம் மன்றத்தில் எல்லோரும் நல்லவர்தானே.
-அன்புடன் அண்ணா.

Nanban
04-11-2003, 02:45 PM
இளசுவின் கவிதை அருமை. இது அறிமுகக் கவிதையா? இளசு கூட தன்னை அறிமுகப்படுத்தி தான் உள்ளே நுழைந்தாரா? ஆச்சர்யமாக இருக்கிறது..............

Nanban
10-01-2004, 09:39 AM
ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆ.......
தலைமை கண்காணிப்பாளருக்கு இத்தனை நாட்கள் கழித்துத் தான் வணக்கம் சொல்ல முடிந்தது.......
வணக்கம்........

ஆன்டனி ஜானி
04-12-2010, 03:14 PM
சபாஸ் அருமையான கவிதை
தமிழ் மன்றத்தின் பெருமையை கவிதை வரிகளால்
தமிழே இனிது என்று தமிழுக்கு பெருமை தந்து
விட்டீர்கள் ...........

வாழ்த்துக்கள் ./

பாலகன்
04-12-2010, 03:21 PM
மிக மிக அருமை. எளிய வரிகளில் மிகவும் உயர்ந்த குணங்களை விளக்கிய எங்கள் இளசு அண்ணாவிற்கு பாராட்டுகள்

ஆன்டனி ஜானி
18-12-2010, 03:38 AM
எத்திசையும் முளைங்கிடுவோம் தமிழை
என்று நம்ம இளசு ரெம்ப ஒரு தமிழுக்கு பாராட்டு கொடுத்துட்டாறு
பாராட்டுக்கள் இளசு அவர்களே ......

வல்லம் தமிழ்
21-12-2010, 02:19 PM
இளசுவின் கவிதை இன்றைய தேவை,இனிய விதை,நன்றி