PDA

View Full Version : சத்யம் கம்யூட்டர்ஸ்ஸின் தகிடுதத்தம்ஸ்ரீதர்
08-01-2009, 04:28 AM
நண்பர்களே !!

கடந்த 2 நாட்களாக மீடியாக்களில் அடிபட்டு வரும் விஷயம் இது. இது நாள் வரை அரசியல்வாதிகள் , சீட்டு கம்பெனி மோசடிகள் , ஊழல்கள்தான் இருந்துவந்துள்ளன. இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள மெகா கார்பரேட் ஊழல் இதுதான்.

சத்யம் கம்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு செபி (SEBI) க்கு / இயக்குநர்கள் குழுவிற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தின் சாராம்சம் இதோ :-

1) உண்மையாகவே இல்லாத சுமார் 5040 கோடி ரூபாய் வங்கி மற்றும் கையிருப்பாக காட்டப்பட்டுள்ளது.

2) சுமார் 376 கோடி ரூபாய் வட்டி வரவேண்டியது என காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாக அது வரவேண்டியது இல்லை.

3) கம்பெனி வாங்கியுள்ள கடனான 1230 கோடி கணக்கில் காட்டப்படவே இல்லை.

4) கம்பெனிக்கு வரவேண்டிய தொகையாக காட்டப்படுள்ள 490 கோடி உண்மையாக வரவேண்டியது இல்லை.

5) செப்டம்பர் முடிந்த அரையாண்டில் மொத்த இலாபமாக காட்டப்பட்டிருப்பது 649 கோடி. ஆனால் உண்மையான இலாபமோ 61 கோடிதான்.

=========

இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது இதுதான். :-

1) கம்பெனிகளின் இயக்குனர்கள் , ஆடிட்டர்கள் நினைத்தால் என்ன மாதிரியான நிதி நிலை அறிக்கையையும் சமர்பிக்கலாம்.

2) சட்டங்கள் இதை தடுக்கும் அளவுக்கு கடுமையாக இல்லை.

3) இவர்களை நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் முட்டாள்கள்.

வெற்றி
08-01-2009, 05:04 AM
யாவாரத்திலே இதெல்லாம் சஜமுங்க....
(பேலண்ஸ் ஷிட் அட்சஜ்ட் பண்ணாமல் லோண் வாங்கிய ஒருவர் இருந்தால் அது தான் அதிசயம்)
ஒரு சின்ன பச்சா கம்பெனிக்கே இவ்வளவுன்னா பெரிய கம்பெனி எப்படி இருக்கும் ?? (அதெப்படி சத்யம் நிருவணத்தை நான் பச்சா கம்பெனி என சொல்லப்போச்சு என கூப்பாடு போடாதீர்கள்....உண்மையில் பச்சா கம்பெனி தான் )
உண்மையில் நம் நாட்டில் ஏமாளிகள் தான் அதிகம்.....அந்த அளவு ஏமாற்றுகாரர்கள் இல்லை என்பது தான் என ஆதாங்கம்.. :) :) :)
அடுத்தது யாரு ?????????

பி.கு : பத்திரிக்கைகளில் வரும் டாப் டென் கேடிஸ்வரர் பட்டியலை பார்த்து இனி யாரும் ஏமாறாமல் இருந்தால் இந்த பதிப்பு பிரோஜனம் என நினைத்து நான் மகிழ்வேன்...

ஷண்முகம்
08-01-2009, 06:04 AM
கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக மாயக்கணக்கு காட்டி மக்களை முட்டாளாக்கி இருக்கிறார் "சத்யம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத 'சத்யம்' நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு.அவ்வளவு பணமும் இருப்பதாக ஐந்து ஆண்டுகளாக அடித்து சொ ல்லியிருக்கிறது தணிக்கை அறிக்கை.ஏமாந்தது,பங்குதார்கள் மட்டுமல்லஅரசாங்கமும்கூட. எல்லாவற்றையும்விட அந்த நிறுவனத்தின் 57000 ஊழியர்களின் கதியை நினைத்தால்.....மனம் நடுங்குகிறது.

தாமரை
08-01-2009, 03:31 PM
சத்யம் விசயத்தில் எது நிஜம் எது பொய் என்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

பணம் இருந்தது என்பது பொய் என இப்போது சொல்வது பொய் இல்லை என்பதற்கு உத்திரவாதம் கிடையாது, பணம் மெதுவாக கையாடப்பட்டு, ஸ்விஸ் வங்கிகளுக்கும் போயிருக்கலாம். பணம் பத்திரமானவுடன். இருந்தது ஆனா இல்லை எனக் காட்டப்படலாம்.

நேர்மையான புலனாய்வு மூலமே உண்மைகள் வெளிக்கொணர முடியும்

வருமானம் இல்லாம பந்தா காட்டலாம். வரி கட்ட முடியுமா என்ன?

ஓட்டை எக்கச் சக்கமா இருக்கு,...

jk12
08-01-2009, 04:28 PM
வருமானம் இல்லாம பந்தா காட்டலாம். வரி கட்ட முடியுமா என்ன?
உண்மைதான்..... 7000 கோடி வருமானம் என்று முதலில் கணக்கு சொல்லி இருந்தது உண்மை என்றால் அதற்கு நம்ம ஊர் கணக்கு படி 30% (சுமார் 2300 கோடி) வரிகட்டனும்
போக போகதான் உண்மை புரியும்... :confused: :icon_ush:

இபொழுது அவர்கள் இந்த மாதம் 53000 பேருக்கு சம்பளம் எப்படி கொடுக்க போகிறர்கள் என்று தெரியவில்லை.... (எல்லா வங்கியிலும் OD / LC எல்லாம் முடியிருக்கும்...) :smilie_abcfra:

arun
08-01-2009, 04:34 PM
தாமரை அவர்கள் சொன்னபடி உண்மைகள் எல்லாம் போக போக தான் தெரியும்

பணமே இல்லாமல் இது நாள் வரை கம்பெனி நடந்தது எப்படி? வரி கட்டியது எப்படி? என பல கேள்விகளை கேட்க வைக்கிறது

மொத்த பணத்தையும் அமுக்கக்கூட கூட அப்படி செய்யலாம்

எது வேண்டுமானலும் நடந்து இருக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்

aren
08-01-2009, 05:10 PM
இந்த ஐடி கம்பெனிகள் எல்லாம் இன்வாய்ஸை விலைக்கு வாங்கும், அதுபோல பில் மட்டும் விற்கும். அந்த பில்லை செட்டில் செய்ய அவர்களே நமக்கு பணம் கொடுப்பார்கள். இந்த வேலையைச் செய்ய அவர்கள் 1% அல்லது 2% கமிஷன் தருவார்கள்.

வரிகட்டவேண்டியதில்லை, ஏனெனில் இந்தப் பணம் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வருவது. அதற்கு வரி கிடையாது. அதனால்தான் இந்த மக்கள் அத்தனை லாபமும் வெளியேயிருந்து வருவதாக கணக்கு காட்டுகிறார்கள்.

இதனால்தான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்கள்கூட இரு ஐடி கம்பெனி வைத்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக கணக்கு காட்டுகிறார்கள். வரி கொடுக்காமல் ரியல் எஸ்டேட்டில் அடித்த கொள்ளையை இங்கே கணக்கு காட்டி பணத்தை அப்படியே அமுக்கிவிடலாம்.

டி.எல்.எஃப் கூட ஒரு ஐடி கம்பெனி வைத்திருக்கிறது.

நம் அரசாங்கம் சரியான கோட்பாடுகளை அமைக்காததே இப்பொழுதிருக்கும் பிரச்சனைக்குக் காரணம்.

இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இன்னும் இருக்கிறது. மற்றவர்கள் ஒவ்வொருவராக வெளியே சொல்வார்கள்.

ஓவியன்
10-01-2009, 08:52 AM
பத்திரிகையில் படித்ததை மன்றத்து மூத்தவர்களின் எண்ணவோட்டத்தில் படிக்கையில் விடயம் ஒரு தெளிவுக்கு வருகிறது, நன்றி ஸ்ரீதர், செல்வண்ணா மற்றும் ஆரென் அண்ணா....

poornima
12-01-2009, 05:01 AM
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் தக்கமிக்கி திக்குத்தாளம்.. :-)

ஸ்ரீதர்
12-01-2009, 10:19 AM
உண்மைதான்..... 7000 கோடி வருமானம் என்று முதலில் கணக்கு சொல்லி இருந்தது உண்மை என்றால் அதற்கு நம்ம ஊர் கணக்கு படி 30% (சுமார் 2300 கோடி) வரிகட்டனும்
போக போகதான் உண்மை புரியும்... :confused: :icon_ush:

இபொழுது அவர்கள் இந்த மாதம் 53000 பேருக்கு சம்பளம் எப்படி கொடுக்க போகிறர்கள் என்று தெரியவில்லை.... (எல்லா வங்கியிலும் OD / LC எல்லாம் முடியிருக்கும்...) :smilie_abcfra:

ராமலிங்க ராஜுவின் ஸ்டேட்மெண்ட் படி , இந்த 7000 கோடியும் ஒரே வருடத்தில் ஏற்றி காட்டப்படவில்லை. கடந்த 7-10 வருடங்களாக , கொஞ்சமாக ஏற்றிக்காட்டியுள்ளதாக கூறியுள்ளார். ஆகவே ஒரே வருடத்தில் 2300 கோடி வரி கட்டி அதை காட்டியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஒரு தவறு செய்யப்போய் , அதை மறைக்க இன்னொரு தவறு செய்து , அது மிகப்பெரிய பிரச்சனையில் முடிந்ததற்கு இது சரியான உதாரணம்.

இப்போதுதான் அதன் இயக்குநர்கள் குழுவினை கலைத்து , இந்திய அரசு , அரசின் சார்பாக 3 இயக்குநர்களை நியமித்துள்ளது. இதன் மூலம் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

பி.கு :- அரசியல்வாதிகள் இதில் தலையிடாமல் இருப்பதற்காக ஆண்டவனை பிரார்திப்போம்..
(அரசியல்வாதிகள் தலையிட்ட ஊழல்களான போபர்ஸ் , ஹர்ஷத் மேத்தா , போலி பத்திர ஊழல் போல இதுவும் ஆகாது என நம்புவோம்)

umakarthick
16-01-2009, 10:01 AM
சத்யம் மட்டுமல்ல எல்லாம் கம்பெனிகளும் இந்த வேலையயை தான் செய்கின்றன ஆனால் பாவம் சத்யம் மாட்டிக்கொண்டது

gans5001
20-01-2009, 09:17 AM
சத்யம் தொடர்பான பல கருத்துக்களை மன்ற அன்பர்கள் அளித்திருக்கிறார்கள்.

என் மனதில் தோன்றுவது

1. அனைத்து செய்திகளும், அது தொடர்பான கற்பனைகளும் (பத்திரிக்கைகளுக்கும், மக்களுக்கும்) வருவது ராஜுவின் கடிதத்தில் எழுதியதைப் பின்பற்றி மட்டுமே.

2. எதுவும் உண்மையென இது வரை யாரும் (போலீஸ், ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பெனி, செபி, சம்பந்தப்பட்ட வங்கிகள் உள்பட) ஆதாரம் தரவில்லை.

3. தணிக்கை முறையில் தவறேயில்லை என ஆடிட்டர்கள் சொன்னதுடன் நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிக்கையே விட்டிருக்கிறார்கள்.

4. ஒரு புதிய, இளம் ஆடிட்டராக இருந்தாலும் தவறே செய்ய முடியாத ஒரு பகுதி கம்பெனியின் ரொக்கம் மற்றும் வங்கியிருப்புகளை ஆடிட் செய்வது. ஏனெனில் ஆடிட்டர்கள் நேரடியாக வங்கிக்கே கடிதம் எழுதி இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பார்கள். அப்படி ஒவ்வொரு காலாண்டிலும் பணம் வங்கியில் இருந்ததற்கு நேரடியாக அவை உறுதியளித்திருக்கின்றன என ஆடிட்டர்கள் சொல்கிறார்கள். ஆதாரங்களை காண்பிக்கச் சொல்லி இந்திய தணிக்கையாளர்களின் தலைமையகம் நோட்டீஸ் அனுப்பினால் முழுமையாக ஒத்துழைக்கத் தயார் என்கிறார்கள். ஆனால் பாவம்... பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது போல அத்தனை பத்திரிக்கைகளிலும் ஆடிட்டர்கள் தலை தான் உருளுகிறது.

5. வருமான வரி வர சந்தர்ப்பமேயில்லை. ஏனெனில் ஐடி கம்பெனிகளுக்கு வரிவிலக்கு உண்டு.

6. நான் சரியான கணக்கு காண்பித்திருந்தால் எனது கம்பெனியின் லாபம் 3% மட்டுமே இருந்திருக்கும் என்கிறார் ராஜூ. இந்தியாவின் மற்ற ஐடி கம்பெனிகளின் சராசரி லாபம் 20-25%. எனில் அவையும் முறைகேடானவை என்கிறாரா?

7. ராஜூ தொடங்கிய மற்ற கம்பெனிகளுக்கு பணம் திருப்பி விடப்பட்டிருக்கும் என்கிறார்கள் பலர்.

என்னை பொறுத்தவரையில் எரியும் அடுப்பில் எண்ணெயை ஊற்றுவதை விட பொறுத்திருந்து உண்மையறியலாம் என நிணைக்கிறேன்

இளசு
24-01-2009, 06:44 AM
இனிய நண்பன் கண்ஸின் எண்ணவோட்டமே எனதும்..

ஏனோ பெரிய ஊழல்களின் அடிநாத உண்மை இறுதிவரை மக்களுக்கு எட்டுவதே இல்லை!

தாமரை
27-01-2009, 01:30 AM
பல தில்லு முல்லுகள் மெதுவாக அம்பலமாவதையும் கவனித்தல் வேண்டும்

1. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கணக்கு காட்டுவது 53000 ஊழியர்கள். உண்மையில் இருப்பது 40000 பேர்கள்தான். 13000 போலி ஊழியர்களின் சம்பளம் மாதாமாதம் கணக்கு காட்டப் பட்டு கையாடல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

2. ஹெச்டிஎஃபிசி வங்கியின் போலி முதலீட்டு பத்திரங்களை பயன்படுத்தி உள்ளது தெரிய வருகிறது.

எத்தனை பேரின் கூட்டு முயற்சியோ என எண்ணும் போதே மலைப்பாக இருக்கிறது.

அய்யா
27-01-2009, 06:14 AM
சத்யம் நிறுவனத்தை கையகப்படுத்த எல் & டி நிறுவனம் காட்டும் முனைப்பையும் விசாரணை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஸ்ரீதர்
28-01-2009, 06:17 AM
சத்யம் நிறுவனத்தை தணிக்கை செய்த இரு தணிக்கையாளர்கள் அந்த தணிக்கை நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன் சுட்டி இதோ :-

http://sify.com/finance/fullstory.php?id=14845829

தங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் அந்நிறுவனம் அவர்கள் இருவருக்கும் வேண்டிய உதவிகளை செய்திருக்க வேண்டும். அதை விடுத்து இது போன்ற நடவடிக்கை எடுப்பதன் மூலம் பன்னாட்டு நிறுவனம் தன் உண்மை ரூபத்தை காட்டியிருக்கிறது. வேண்டிய மட்டும் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு வேலை முடிந்ததும் உதறிவிடும் பன்னாட்டு கம்பெனிகளின் கலாச்சாரத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.

இப்போதாவது இது போன்ற பன்னாட்டு கம்பெனி மோகம் கொண்டு அலையும் நம்மவர்கள் உண்மையை உணர்வார்களா??

ஆதி
09-02-2009, 02:04 PM
சத்யத்தில் சத்யமில்லாததால் சத்யம் சத்யமில்லாமல்..

gans5001
27-02-2009, 11:01 AM
தாமரை.. 53000 ஊழியர்கள் இருப்பதும் உண்மை. சம்பளத்தில் முறைகேடுகள் இல்லை என அரசினால் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் அடுத்த நாளே விளக்கம் கொடுத்தனர். மேலும் சனவரி மாத சம்பளம் ராஜூவால் தரப்படவில்லை. அரசினால் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் தந்தார்கள். கொடுத்தது 52163 ஊழியர்களுக்கு என்றும் செய்தி தாள்களில் விளக்கம் அளித்தார்கள். ஊடகங்களில் ஊகங்களை நம்பாது இருப்பது நல்லது. சி.பி.ஐ யின் விசாரணைக்குப் பின் உண்மை வரும் என நம்புவோமாக.

இளசு
18-04-2009, 02:12 PM
கண்ஸ் நலமா?

இப்போது இன்னொரு நிறுவனம் பங்குகளை வாங்கிவிட்ட நிலையில்
அடுத்த கட்டம் என்ன?

வெற்றி
19-04-2009, 04:42 AM
கண்ஸ் நலமா?

இப்போது இன்னொரு நிறுவனம் பங்குகளை வாங்கிவிட்ட நிலையில்
அடுத்த கட்டம் என்ன?

வேறென்ன ?? !! :)
அந்த நிறுவனம் லாபம் ஈட்ட ஆரம்பிக்கும்... :)
ஆனால் அதை சீர்குலைக்க பல சக்திகள் வேலை செய்யும்....
எது நடந்தால் நன்மையே அதுதான் இறுதியில் நடக்கும்...
(நான் தாமாசுக்கு சொல்ல வில்லை......)

வெற்றி
07-12-2010, 02:30 AM
வேறென்ன ?? !! :)
அந்த நிறுவனம் லாபம் ஈட்ட ஆரம்பிக்கும்... :)
ஆனால் அதை சீர்குலைக்க பல சக்திகள் வேலை செய்யும்....
எது நடந்தால் நன்மையே அதுதான் இறுதியில் நடக்கும்...
(நான் தாமாசுக்கு சொல்ல வில்லை......)

இப்போ யாரச்சும் ஏதாவது சொல்ல விரும்பிகிறீர்களா ? ( அதன் தோரயா/நியாய விலையான 55 முதல் 60 ரூபாயில் நிலைகொள்ளும் சத்யம் ... )
மீண்டும் சொல்கிறேன் .. மெர்ஜ்/அமால்கமேசன் போன்ற வார்த்தைகள் வர்த்த நிருவணத்துக்கு தான் லாபமேயன்றி முதலீட்டார்களுக்கு அல்ல...

பாலகன்
07-12-2010, 02:49 AM
இப்போ யாரச்சும் ஏதாவது சொல்ல விரும்பிகிறீர்களா ?

மிஸ்டர் மொக்கை!

நிலவரத்தை முதலிலேயே கணித்த உங்களுக்கு ஒரு ஓ!
இன்னும் ஏதாவது கம்பெனி மூடுவிழா நடத்தபோவுதுன்னா முன்னாடியே சொல்லிடுங்க :D