PDA

View Full Version : எங்க ஊரு அரசியல்...!!



கா.ரமேஷ்
07-01-2009, 11:47 AM
எங்க ஊரு அரசியல்...!!
=============================
தினைக்குளம் கா.ரமேஷ்.
(ஆர்குட் - முத்தமிழ் மன்றம் நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கவிதை)

உணவு இல்லை உழவனுக்கு...
உடை இல்லை தச்சனுக்கு - ஆனால்
கட்சியின் பெயரால் - இங்கே
கஞ்சியும் பிரியானியும்
கம்புகளை தூக்குகிறது...!

வெய்யிலிலும்... மழையிலும்...
ஓட்டைக் குடிசைக்குள் ஒண்டிக்கிடந்தும்
அஞ்சும் பத்துமாய்
குருவிபோல் சேர்த்து
குடும்பத்தைப் பார்த்தாலும்...!
அர்த்த ராத்திரியில்
அத்தனையும் எரியும்
கட்சிகளின் வாசம்
கரிபுகையாய் தெரியும்...!

ஆளுயர விளம்பரங்களும்
அலங்கார மேடைகளும்
பல கோடி ரூபாய்களை
பங்கிட்டு செலவிடும்...
மூவாயிரம் பேரை வைத்து
முப்பது கூட்டம் கூட்டும் - அதில்
முழு பல கோடி கொட்டும்
இத்தனையும் நடக்கும்..!

உழவுக்கும் தொழிலுக்கும் - கடனாய்
ஓராயிரம் வாங்கினால்
ஒரு வருடம் முடிவத்ற்க்குள்
ஓடி வந்து கழுத்தை பிடிக்கும்...!
இதுவும் நடக்கும்...!!

ஒருபக்கம்..
சத்தமே இல்லாமல்
சரக்கு கட்டணம் உயரும்
பதற்றமே இல்லாமல்
பேருந்து கட்டணம் உயரும்
எதற்கென்று தெரியாமல்
எகிரும் வரிகள்...!

மறுபக்கம்...
வியர்வையை வயலில் போட்டு
உழைப்பை உணவாய் தரும் ஏழையின்
நெல்லுக்கும் மிளகாய்க்கும்
நெருடலே இல்லாமல்
விலைகள் குறையும்...!

புதிய சட்டங்கள்
பொக்கிசமான திட்டங்கள்
புற்றீசலாய் முளைக்கும்
புது அரசு அமைந்தால்
அத்தனை திட்ட்ங்களிலும்
புல்லுகள் முளைக்கும்..!

சீட்டுகளும் சில்லரைகளும்
கூட்டணிகளை மாற்றும்
பழி தீர்த்த்லும் பகை வளர்த்தலும்
வெற்றி பெற்றவன் பக்கம்
விருட்ச்சமாய் வளரும்...!

சகோதரனுக்காக...
தோழனுக்காக...
குடும்பத்திற்க்காக...
சாதிக்காக..
மதத்திற்காக..
மொழிக்காக - இங்கே
அரசியல் நடக்கிறது...
மக்களுக்காக நடக்கிறதா...?
மகான்களே சொல்லுங்களேன்...!!

அமரன்
08-01-2009, 07:50 AM
அண்மையில் விகடனின் மதன் பதிகளில் "இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் செய்து மக்கள் குறை அறிந்து தீர்த்த முடியாட்சி இப்போதய குடியாட்சியை விட மேலல்லவா?" என்ற கேள்விக்கு அஞ்சாண்டுக்கு ஒருதடவை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்ற பயம் இல்லாத ஒரு காரணத்தை தவிர மற்றப்படி முடியாட்சி பரவாயில்லை என்று பதில் சொல்லப்பட்டிருந்தது. முடியாடியிலும் கொடுங்கோலன் இருந்தார்கள். என்ன ஒரு வித்தியாசம் இப்போது மலிந்து விட்டார்கள். மக்களிடத்திலேயே நல்லெண்ணங்கள் நலிந்துவிட்ட நிலையில் இவை மலிந்ததில் என்ன ஆச்சரியம். எங்கும் இருப்பது. நம் நாடுகளில் அதிகம் இருப்பது. அதனை கவிதையாக்கிய உங்களுக்கு பாராட்டுகள்.