PDA

View Full Version : சிறிசுகளின் திருமண முயற்சிஅன்புரசிகன்
06-01-2009, 05:26 PM
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/new-200.jpg

ஜெர்மனியை சேர்ந்த 6 வயது சிறுவனும் 7 வயது சிறுமியும் திருமணம் செய்வதற்காக ஆபிரிக்கா புறப்பட்டு சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்திய விசித்திரச்சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. இதில் அடுத்த விசித்திரம் என்னவென்றால் திருமண நிகழ்ச்சிக்கு சாட்சியாக சிறுமியின் 5 வயது சகோதரனையும் அழைத்து சென்றிருக்கிறார்கள்...

எப்படியெல்லாம் யோசிக்குதுங்க இந்த சுட்டிகள்....

மன்றத்தில் கல்யாணமாகாத பெரியவர்கள் இதைப்பார்த்தாவது சுதாகரிச்சுக்குங்க.... http://content.sweetim.com/sim/cpie/emoticons/00020236.gif

முழுமையான செய்தி இதோ... (http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=10057) (நன்றி வீரகேசரி)

சிறு காதலர்களான 6 வயது சிறுவனும் 7 வயதுடைய சிறுமியும் திருமண பந்தத்தில் இணைய ஆபிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பொழுது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. மிகா , அனா லெனா என்ற இந்த சின்னஞ்சிறு ஜோடி, வெப்பமான ஆபிரிக்க காலநிலையில் திருமணம் செய்து கொள்ளவென நீச்சல் உடைகள், குளிர் கண்ணாடிகள் மிதவை என்பன சகிதம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு சாட்சியாக அனா லெனாவின் 5 வயது சகோதரியையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். அண்மையில் மேற்படி சின்னஞ்சிறு காதலர்களின் குடும்பத்தினர் புதுவருட தினத்தை ஒன்றாக கொண்டாடிய சமயமே மிகா இந்த திருமணத்துக்கான யோசனையை முன்வைத்துள்ளான்.

""பெற்றோர் புதுவருட கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள வேளை, சிறுவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர்'' என பொலிஸ் பேச்சாளர் ஹொல்ஜொ யுரேக்ஸ்கோ "ஏ.எவ்.பி.' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இரவு பெற்றோர் உறங்கச் சென்றதும், தமது திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் சிறுவர்கள் களம் இறங்கினர்.

அவசர அவசரமாக தமக்கு தேவையான வெப்ப கால ஆடைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டனர். ஹனோவரின் புறநகர்ப் பகுதியிலமைந்த தமது வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை சென்ற சிறுவர்கள் அங்கிருந்து மின்சார வண்டியில் ஏறி ஹனோவர் புகையிரத நிலையத்தை வந்தனர்.

சிறுவர்கள் மூவரும் புகையிரத நிலையத்தில் ஹனோவர் விமான நிலையத்துக்கு செல்லும் புகையிரதத்தின் வருகைக்காக காத்திருந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த காவல் அதிகாரியொருவர் சிறுவர்களின் விசித்திர நடவடிக்கையால் சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பணமும் விமானப் பயணச்சீட்டுகளும் இல்லாத நிலையில் வயது வந்தவர்கள் எவரதும் துணையும் இன்றி காணப்பட்ட இந்த சிறுவர்களிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதையடுத்து, இந்த அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

ஆபிரிக்காவின் வெப்பமான காலநிலையில் திருமணம் செய்துகொள்ள விரும்பியே அந்நாட்டுக்கு பயணம் செய்ய முடிவெடுத்ததாக சின்னஞ்சிறு காதலர்கள் தெரிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்கள். இதையடுத்து ஹனோவர் பொலிஸ் தலைமையகத்தில் விசேட தடுப்பு முகாமில் இந்த பிஞ்சிலே பழுத்த காதலர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். விடயத்தை கேள்விப்பட்டு பதறிப் போய் வந்த பெற்றோர், சிறுவர்களை விடுவித்து அழைத்துச் சென்றுள்ளனர்

arun
06-01-2009, 05:47 PM
காலம் ரொம்ப தான் மாறிப்போச்சு

நிரன்
06-01-2009, 06:44 PM
:lachen001::lachen001::lachen001: ஆகா என்னால இந்தக்காட்சியை நேரில்காண முடியவில்லையே:traurig001:

ஜெர்மனி பொலிஸ் புதுமையான அனுபவங்கள் எல்லாவற்றிற்கும்
முகம் கொடுக்கிறது போல இருக்கு ...:D:D:D
நம்ம நாரா எங்க இதைப்பார்த்தாலாவது கொஞ்சம் நின்மதியடைவார்:D

========================================================================காலம் எவ்வளவு வோகமாக ஓடுகிறது... முன்பெல்லாம் பால்யவிவாகம்
என்று சிறுபராயத்தில் ஒன்றுமே அறியாத வயதில் இவருக்கு இவர்
என வேலை வெட்டி இல்லாததுகள் நிச்சயித்து விடுவார்கள்
அது தற்பொழுது மங்கிவரும் வேளையில் இச்செய்தி புதிதாக
பாலர் விவாகத்திற்கு வளிவகுக்கிறது....:lachen001:

========================================================================

வேடிக்கயைன செய்யியொன்றையும் சிந்திக்க வைக்கும் நிகழ்வையும் பகிர்ந்தமைக்கு நன்றி அன்பண்ணா!!

அறிஞர்
06-01-2009, 08:36 PM
கலிகாலம் என்று சொல்வார்களே.. அது தான் இதுவா....

திருமணம் என்றால் என்னவென்றே அறியாத வயதில் இப்படியா..

ரங்கராஜன்
07-01-2009, 02:40 AM
இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப தெளிவா தான் இருக்குறாங்க????????????, அதுவும் போட்டோக்கு சிரிப்ப பாருங்க அழகா போஸ் குடுக்குது

ஓவியன்
07-01-2009, 02:47 AM
சின்னஞ்சிறு வயதில் பட்டதாரியாக ஆசைப்பட்டா புகழுறாங்க...
ஆனா, அதே வயசில கல்யாணம் செய்ய ஆசைப்பட்டா கைது பண்ணுறாங்க...

இந்த பெரியவங்கள் ரொம்ப மோசம்...!! :sauer028::sauer028::sauer028:

அன்புரசிகன்
07-01-2009, 02:56 AM
சின்னஞ்சிறு வயதில் பட்டதாரியாக ஆசைப்பட்டா புகழுறாங்க...
ஆனா, அதே வயசில கல்யாணம் செய்ய ஆசைப்பட்டா கைது பண்ணுறாங்க...

இந்த பெரியவங்கள் ரொம்ப மோசம்...!! :sauer028::sauer028::sauer028:

இந்த பெரியவங்க என்று சொல்லி உங்களையும் திட்டுறியளே ஓவியரே... உங்க பிள்ளையை எங்கே அனுப்பி வைக்க திட்டம்.??? ஆபிரிக்காவா அந்தாட்டிக்காவா???

ஓவியன்
07-01-2009, 03:03 AM
நானே ஒரு குழந்தை எனக்கெப்படி...??? :D:icon_rollout::D

அன்புரசிகன்
07-01-2009, 03:16 AM
நானே ஒரு குழந்தை எனக்கெப்படி...??? :D:icon_rollout::D

அறிஞரை தான் வையணும்... குழந்தைகளுக்கெல்லாம் பண்பட்டவர் தகமை கொடுத்து கெடுத்து வைச்சிருக்கார்.

aren
07-01-2009, 04:11 AM
அன்பு இப்பொழுதாவது உங்களுக்குத் தோன்றி நீங்களும் உங்கள் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாமே????

எப்போ நீங்கள் கல்யாண சாப்பாடு போடப்போகிறீர்கள்???

அன்புரசிகன்
07-01-2009, 04:17 AM
அன்பு இப்பொழுதாவது உங்களுக்குத் தோன்றி நீங்களும் உங்கள் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாமே????

எப்போ நீங்கள் கல்யாண சாப்பாடு போடப்போகிறீர்கள்???

இப்படித்தான் கேட்ப்பீங்கள். அப்புறமா சாப்பிடாமலே போறன் என்பீங்கள். இதனாலேயே கல்யாணம் வெறுத்துப்போச்சு... :D :D :D

கடவுளின் கிருபையால் அடுத்தவருசம் நிகழலாம். :rolleyes:

Mano.G.
07-01-2009, 04:37 AM
கல்யாணம் ஆகாதவங்க லிஸ்ட்
பெருசா இருக்கும் போல
எனக்கு தெரிஞ்ஜு சந்திப்புல
பாத்தவங்க மூனு பேரு
இன்னும் எத்தனையோ???????

மனோ.ஜி

அன்புரசிகன்
07-01-2009, 04:41 AM
கல்யாணம் ஆகாதவங்க லிஸ்ட்
பெருசா இருக்கும் போல
எனக்கு தெரிஞ்ஜு சந்திப்புல
பாத்தவங்க மூனு பேரு
இன்னும் எத்தனையோ???????

மனோ.ஜி

அதிலேயும் ஒருத்தர் ரொம்ப மோசமா பாதிச்சிருந்திருப்பாரே......... :lachen001:

நேசம்
07-01-2009, 04:41 AM
போறன் என்பீங்கள். இதனாலேயே கல்யாணம் வெறுத்துப்போச்சு... :D :D :D
அப்ப*டியெல்லாம் வெறுத்து போக* கூடாது.க*ல்யாண*ம் ப*ண்ணி பாருங்க*.(அப்புற*ம் எல்லாம் வெறுத்து போகும்....)

aren
07-01-2009, 04:45 AM
அதிலேயும் ஒருத்தர் ரொம்ப மோசமா பாதிச்சிருந்திருப்பாரே......... :lachen001:

நீங்க யாரைச் சொல்கிறீர்கள். சந்திரனையா அல்லது சூரியனையா அல்லது கீர்த்தி அதிகமாக உடையவரையா?

புரியாமல்
ஆரென்

aren
07-01-2009, 04:46 AM
அப்ப*டியெல்லாம் வெறுத்து போக* கூடாது.க*ல்யாண*ம் ப*ண்ணி பாருங்க*.(அப்புற*ம் எல்லாம் வெறுத்து போகும்....)

அனுபவம் பேசுகிறது போலிருக்கு.

நேசம்
07-01-2009, 04:49 AM
நீங்க யாரைச் சொல்கிறீர்கள். சந்திரனையா அல்லது சூரியனையா அல்லது கீர்த்தி அதிகமாக உடையவரையா?

புரியாமல்
ஆரென்

யாராக* இருந்தாலும் என்ன*.... க*ல்யாண*ம் ஆக*வில்லையென்றால் அப்புற*ம் எப்ப*டி பாதிப்பு (அனுப*வ*ம் தான் பேசுது)

ரங்கராஜன்
07-01-2009, 04:56 AM
நீங்க யாரைச் சொல்கிறீர்கள். சந்திரனையா அல்லது சூரியனையா அல்லது கீர்த்தி அதிகமாக உடையவரையா?

புரியாமல்
ஆரென்

அய்யோ அய்யோ நான் இல்லை அரென் அண்ணா,

அன்புரசிகன்
07-01-2009, 05:08 AM
நீங்க யாரைச் சொல்கிறீர்கள். சந்திரனையா அல்லது சூரியனையா அல்லது கீர்த்தி அதிகமாக உடையவரையா?

புரியாமல்
ஆரென்

எனக்கு எதுவும் புரியல.... :D

அய்யோ அய்யோ நான் இல்லை அரென் அண்ணா,

இங்க பாருங்க... ஒரு மீன் சிக்கியிருக்கு... வுடாதீங்க............. :lachen001:

அன்புரசிகன்
07-01-2009, 05:09 AM
அப்ப*டியெல்லாம் வெறுத்து போக* கூடாது.க*ல்யாண*ம் ப*ண்ணி பாருங்க*.(அப்புற*ம் எல்லாம் வெறுத்து போகும்....)
நாம எல்லாம் வெள்ளம் வரமுன்னமே அணைகட்டுறவங்க... அப்புறமா இன்னொருத்தருக்கு இப்படி பதில் போடவேண்டிய நிலை வராதே.............. :mini023:

நேசம்
07-01-2009, 05:19 AM
நாம எல்லாம் வெள்ளம் வரமுன்னமே அணைகட்டுறவங்க... அப்புறமா இன்னொருத்தருக்கு இப்படி பதில் போடவேண்டிய நிலை வராதே.............. :mini023:

அணையா நல்லப்படியா கட்டுங்க ஆனால் அப்புறம் இப்படி பதில் போடமுடியல்லைன்னு வெறுத்து போக கூடாது சரியா...

ஆதவா
07-01-2009, 05:26 AM
இதுக பரவாயில்லீங்க... இதுக்கு மேலயும் நடக்குதுக... எனக்கு கிடைச்ச ஒரு தணிக்கை வீடியோவைப் பார்த்துட்டு ரொம்ப நொந்துட்டேன்...

நம்ம தம்மூவுக்கு நல்ல அனுபவமுனு கேள்விப்பட்டேனே!!!

ஆதவா
07-01-2009, 05:30 AM
நீங்க யாரைச் சொல்கிறீர்கள். சந்திரனையா அல்லது சூரியனையா அல்லது கீர்த்தி அதிகமாக உடையவரையா?

புரியாமல்
ஆரென்

நீங்க எதா இருந்தாலும் நேரடியா சொல்லிடுங்க... நமக்கு எப்பவுமே நேரடியா அடிவாங்கித்தான் பழக்கம்... :D:D:D

விகடன்
07-01-2009, 05:47 AM
வயது முதிர்ந்து திருமணம் முடித்தாலும் பிறக்கும் குழந்தையின் ஆயுட்காலத்தைப் பாதிக்கும் என்று சொல்கிறீர்கள்....

குறைந்த வயதில் திருமணம் முடிக்க முற்பட்டாலும் தடுக்கிறீர்கள்??

என்ன கொடுமை சார்?

ரங்கராஜன்
07-01-2009, 05:47 AM
இதுக பரவாயில்லீங்க... இதுக்கு மேலயும் நடக்குதுக... எனக்கு கிடைச்ச ஒரு தணிக்கை வீடியோவைப் பார்த்துட்டு ரொம்ப நொந்துட்டேன்...

நம்ம தம்மூவுக்கு நல்ல அனுபவமுனு கேள்விப்பட்டேனே!!!

ஆதவா
என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, என்ன எதுக்குடா மாட்டிவிடற. எனக்கா அனுபவம் அதிகம்????????. பண்பட்டவர் பகுதியில் போய் பார்த்தால் தெரியும் யாருக்கு அனுபவம் அதிகம்னு (ஹா ஹா ஹா :lachen001:).

நேசம்
07-01-2009, 05:54 AM
[QUOTE=daks;401518]ஆதவா
என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, என்ன எதுக்குடா மாட்டிவிடற. எனக்கா அனுபவம் அதிகம்????????. பண்பட்டவர் பகுதியில் போய் பார்த்தால் தெரியும் யாருக்கு அனுபவம் அதிகம்னு (ஹா ஹா ஹா :lachen001:).[/QUஓடே]
இருந்தாலும் உங்க*ளுக்கு ரொம்ப* த*ன்ன*ட*க்க*ம்

விகடன்
07-01-2009, 06:02 AM
அந்த சாட்சியை யார் என்று பார்க்க வேண்டாமா??

இதுதான் எடுக்கப்பட்ட முழுப்படம்...

http://www.tamilmantram.com/photogal/images/2522/1_Anna-Bell-Anna-Lena-and-M-001.jpg
மேலதீக தகவலுக்கு... (http://www.guardian.co.uk/world/2009/jan/05/german-children-elope-mika-annabel)

ஆதவா
07-01-2009, 06:04 AM
ஆதவா
என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, என்ன எதுக்குடா மாட்டிவிடற. எனக்கா அனுபவம் அதிகம்????????. பண்பட்டவர் பகுதியில் போய் பார்த்தால் தெரியும் யாருக்கு அனுபவம் அதிகம்னு (ஹா ஹா ஹா :lachen001:).

ஆமாமாம்... நீ எழுதற பலதும் அங்க தான் மாத்தப்படுதாம்.... விசாரிச்சுட்டேன்.. :aetsch013:

அன்புரசிகன்
07-01-2009, 06:05 AM
ஐ............. வடிவான குட்டி.............

விகடன்
07-01-2009, 06:18 AM
தெரியாத மாதிரி கேற்காதே அன்பு...
உண்மையைச் சொல்..
ஏன் அவனுடைய தங்கையின் படத்தை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு பிரசுரித்தாய்?

ஜேர்மனியில் குடியுரிமை பெறும் எண்ணம் ஏதாவது????

அப்படி இருந்தால் அடுத்த செய்தி இன்னும் அற்புதமாக வருமடாப்பா....

"5 வயதுச் சிறுமியும் 6 மடங்கு மூத்தவரும் காதல்....” என்று

மதி
07-01-2009, 06:55 AM
அறிஞர் சொன்னது மாதிரி தான்...
கலிமுத்திப் போச்சு..!

விகடன்
07-01-2009, 08:05 AM
இதைத்தான் எவ்வளவு காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?

முத்தின கலி எப்போதுதான் கனியாகுமாம்?!?!?!!?!!

கா.ரமேஷ்
07-01-2009, 12:02 PM
பாத்துங்க பொறந்த உடனே கல்யாணம் பன்னி வெச்சுடுங்கோனு சொல்லபோறாங்க....

சூரியன்
07-01-2009, 12:20 PM
என்ன கொடுமைங்க இது 7 வயசுலயே திருமணமா?
காலம் கெட்டு போச்சு

மன்மதன்
08-01-2009, 12:56 PM
LKG கடைசிபெஞ்ச் குரூப்பா இருக்கும்..:rolleyes:

ஜேர்மனியில் குடியுரிமை பெறும் எண்ணம் ஏதாவது????
அன்புவின் காலர்ட்யூன் ‘ஜெர்மனியின் செந்தேன்மலரே’ ஆகிவிட்டது போல..:D

அன்புரசிகன்
08-01-2009, 01:45 PM
LKG கடைசிபெஞ்ச் குரூப்பா இருக்கும்..:rolleyes:

உண்மையில் அதை தான் முதலிலேயே நினைத்தேன்.
அன்புவின் காலர்ட்யூன் ‘ஜெர்மனியின் செந்தேன்மலரே’ ஆகிவிட்டது போல..:D
துபாயில் caller tune விட ரொம்ப அதிக காசு செலவழிக்கணும். (சுபியின் கோலர் டியூன் "சின்னச்சின்ன ஆசை"):icon_ush:

மன்மதன்
12-01-2009, 03:25 AM
உண்மையில் அதை தான் முதலிலேயே நினைத்தேன்.துபாயில் caller tune விட ரொம்ப அதிக காசு செலவழிக்கணும். (சுபியின் கோலர் டியூன் "சின்னச்சின்ன ஆசை"):icon_ush:

அப்ப ஹிந்தியில அது ‘ச்சோட்டி ச்சோட்டி ஆஷா..’.. பேரு பேஷா இருக்கே..:D:rolleyes:

அன்புரசிகன்
12-01-2009, 03:37 AM
‘ச்சோட்டி ச்சோட்டி ஆஷா..’.. பேரு பேஷா இருக்கே..:D:rolleyes:

ஆஷா கிட்ட ச் ச் கேட்குறமாதிரியே கிடக்கு... எப்படியெல்லாம் கேட்குறாங்கையா.... :eek:

lolluvathiyar
17-01-2009, 09:23 AM
காலம் கெட்டு போச்சு

காலம் கெட்டு போகல இதை குழந்தைக விளையாட்டுனு நினைச்சுகிட்டு போயிடலாமா. நானும் விளையாட்டா எடுத்க்கலாம். இங்க அப்பா அம்மா விளையாட்டு விளையாடுமல்ல குழந்தைக அது மாதிரி அதுக கல்யானம் பன்னி விளையாடுதுக அவ்வளவுதான்

நிரன்
17-01-2009, 09:48 AM
காலம் கெட்டு போகல இதை குழந்தைக விளையாட்டுனு நினைச்சுகிட்டு போயிடலாமா. நானும் விளையாட்டா எடுத்க்கலாம். இங்க அப்பா அம்மா விளையாட்டு விளையாடுமல்ல குழந்தைக அது மாதிரி அதுக கல்யானம் பன்னி விளையாடுதுக அவ்வளவுதான்

வாத்தியாரே! என்ன இப்படிச்சொல்லி நீங்களும் இந்த குழுல சேர்ந்திட்டீங்களா
அன்பு அண்ணா இப்படியான செய்திய போடாதீங்க... வாத்தியார் தன்னோட
பழைய அனுபவங்கள் என்று எஸ்கேப் ஆகீடுவார்.:D:D:D

அக்னி
17-01-2009, 09:58 AM
அட..
இவுகளப் பார்த்தாவது, தைரியத்த வளர்த்துக்க வேண்டியதுதான்.
கருவறையிலேயே யோசிச்சிருப்பாங்களோ..???