PDA

View Full Version : இது காதலா?



mathuran
06-01-2009, 03:52 AM
காதல்... இந்த வார்த்தையின் அர்த்தம் புரியாதவர்கள் உலகில் உயிருள்ளவர்களாக நடமாடுவதில் அர்த்தமே இல்லாதவர்கள். காதலை சிலர் வலி என்பர்..., சிலர் துன்பம் என்பர்..., சிலர் இன்ப வலி என்பர்..., சிலர் வர்ணிக்க முடியாத சுகம் என்பர். ஒவ்வொருவரும் புரிந்துகொள்கின்ற முறைக்கேற்ப காதல் சுகமாகவும் சுமையாகவும் பரிணாமமெடுக்கிறது.
கரடுமுரடான இந்தப் பூமியிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் அதாவது ஒவ்வொரு உயிருக்கும் காதல் ஏற்படுவது சகஜமே. சிலருக்கு காதல் பாதை, பூக்கள் நிறைந்ததாகக் காணப்படும். இன்னும் சிலருக்கோ காதல்பாதை முட்கள் நிறைந்தனவாகக் காணப்படும். இந்த வித்தியாசம் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் அது அவரவர் மனதினால்தான் என்பது வெளிப்படையாகிறது.
உண்மையிலேயே காதல் என்பது மிகப் புனிதமான ஓர் உணர்வு. காதல் என்ற புனித உணர்வில் காமம் கலக்கின்றபோது உணர்வு உணர்ச்சிவசப்படுகிறது. அப்படி உணர்ச்சிவசப்படுகின்ற புனித உணர்வினால் காதல் காமத்தின் வசப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் காதலின் புனிதம் தூசுபடிந்த வைரமாகிவிடுகிறது. இதுதான் ஜதார்த்தம்.
காதல் திருமணம் செய்த பெற்றோர்கூட தம் பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்றால் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். இதற்குக் காரணமில்லாமலில்லை. தாம்பட்ட வேதனை தம்பிள்ளைகள் படக்கூடாது என்ற நோக்கம் ஒருபுறம் இருக்கத்தான் செய்யும். இது ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்ற நியாயமான உணர்வுதானே? (ஒருசிலர் தேவையில்லாமலும் எதிர்ப்பர்...).
ஆனால், காதல் வயப்பட்ட பிள்ளைகளுக்கு அந்நேரத்தில் பெற்றோரின் அறிவுரைகள் எரிமலைக் குளம்புபோல் கொதியாய் கொதிக்கும். அந்தக் காதல் உணர்வு படுத்தும் பாடு அது.
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால், காதல் வயப்பட்டவர்கள்தான் கண்கெட்டதனமாக நடந்துகொள்கிறார்கள் எனவேண்டும். காதல்கொண்ட உள்ளங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளங்கள் தூய்மை இழக்கும்போது அங்கு காதல் செத்துவிடுகிறது.
இன்றைய உலகில் காதலர்களை எடுத்துநோக்கினால் கடற்கரையில் குடையுடனோ அல்லது ஏசி பஸ்ஸில் பின் ஆசனத்திலோதான் காதல் லீலைகள் புரிகிறார்கள். பொது இடங்களில் காதலென்ற போர்வையில் காமலீலை புரிகிறார்கள். காதலின் சின்னம் இதயம் என்ற நிலைமாறி குடை என்ற நிலைக்கு மாறிவிட்டது. காதலருக்கு குடை அத்தியாவசியப் பொருளாகிவிட்டதென்னமோ துரதிர்ஷ்டவசம்தான். குடைக்குள் மழையாக காதல் சுகம் தேடுபவர்களுக்கு தாம் செய்வது சரியா? தப்பா? என்றுகூடத் தெரிவதில்லை. அதைப்பற்றி சிந்திப்பதற்கும் அவர்களின் புத்தி இடம்கொடுப்பதில்லை. காதல் என்ற அந்த சிற்றின்பம் வாழ்க்கை என்னும் பேரின்பத்தை மூடி மறைத்துவிடுகிறதல்லவா? இதனைத்தான் குறிப்பிடுகிறார்கள் தன்னிலை மறத்தல் என்று. எதையும் நாங்கள் அதிகமாக நேசிக்கின்றபொழுது எம்மை நாம் மறந்துவிடுகின்றோம். எதை நினைக்கின்றோமோ அதைத்தவிர வேறெதுவும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. சிலர் கடவுள் கும்பிடும்போது தன்னிலை மறந்து சத்தமாக தேவாரம் பாடி கும்பிடுவார்கள். இவ்விடத்தில் அவர்கள் தங்களை மறக்கின்றார்கள். இதுபோல்தான் காதலர்கள் அளவுகடந்து காதலிக்கும்போது தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை மறந்துவிடுகிறார்கள்... இது சமாளிப்பதற்காக சொல்லும் கருத்தல்ல, யாதார்த்தம் அதுதான். இந்நிலையை வெல்வதுதான் மனிதத்தன்மை.
உண்மையிலேயே காதல் என்பது ஒருவகை தீராத நோய் போன்றது. இந்த நோய் எளிதில் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். ஆனால் அதைக் குணப்படுத்த நினைப்பது முடியாத காரியமாகும். காதல் நோய் நம்மைத் தாக்காமல் கட்டுப்படுத்த நாமொன்றும் உணர்ச்சியில்லாத ஜடமல்லவே...?
ஆனால், இந்தக் காதல் நோய் ஒவ்வொரு உள்ளங்களையும் வெவ்வேறுவிதமாகத் தாக்குகின்றது. அந்த நோயின் தாக்கம் சிலருக்கு பாரியளவாக இருக்கலாம். ஆனால் அதன் தாக்கத்திலிருந்து எவரும் தப்பமுடியாது.
எதிர்பாலார் மீது ஏற்படுகின்ற கவர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தக் காதல். இந்தக் கவர்ச்சி அதிகமாகி ஈர்க்கப்படும்போதுதான் காதலருக்கு குடைக்குள் மழை பெய்கிறது. கடற்கரையில் எந்நேரத்தில் நீங்கள் சென்று பார்த்தாலும் அங்கே ஏதோவொரு பாறையின் பின்னால் ஏதோவொரு நிறக்குடை தெரியும். காலையில் வேலைக்குச் செல்பவர்கள், மதியத்தில் பாடசாலைப் பிள்ளைகள், மாலையில் பொதுவான அனைவருமென கடற்கரைப் பாறைகளில் தஞ்சம் புகுகிறார்கள். காதலருக்கு இது தொந்தரவில்லாத இடமாக இருக்கலாம். ஆனால், காதலுக்கு அது தொந்தரவான இடம். ஏனெனில் அந்த வர்ணவர்ணக் குடைகளுக்குள் காதல் மட்டும் நடப்பதில்லை, காமத்தின் எல்லைவரை சென்றுவிடுகிறார்கள்.
இப்படியான சம்பவங்களால்தான் உண்மையான காதல்கள் பல கைகூடாமல் போயிருக்கின்றன. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல்தான் ஒருசிலரது காதலென்ற போர்வையிலான காமத்தை கண்டு வெறுத்தவர்களுக்கு உண்மைக் காதலும் போலியானதாகத்தான் தெரியும்.
காமம் என்ற சிற்றின்பத்துக்காக ஏன் வாழ்க்கை என்ற பேரின்பத்தை இழக்க வேண்டும்? ஐந்துநிமிட சுகத்தைத் தேடி காதலின் புனிதத்தைக் கெடுக்கலாமா? ஸ்பரிஷம் மட்டும்தான் காதலில் பெரிதென நினைப்பவர்களது காதல் வெறும் போலித்தனமானது. இது பாலியல் தூண்டல்களின் வெளிப்பாடேதவிர உண்மையான, தூய்மையான காதலாக இருக்க முடியாது.
அப்படியாயின் காதலில் வகைகள் இருக்கின்றனவா? என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழும். காதலில் வகைகள் இல்லை. ஆனால், காதல் கொள்பவர்களில்தான் வகைகள் இருக்கின்றன. பலருக்கு பாலியல் தூண்டல்களால்தான் காதல் ஏற்படுகிறது. அதாவது ஒரு பெண்ணின் அங்க அசைவுகளை கண்டு, அவள்மீது ஏற்படுகின்ற தூண்டுதல்தான் அதிகமதிகம். அதேபோல் அழகான ஆண்களின் வெளித்தோற்றத்தைக் கண்டு அவர்களின் மீது ஏற்படுகின்ற மோகமும் காதலாகலாம். ஆனால், ஒருசிலர் மட்டும்தான் மனம்விட்டுப் பழகி இருமனம் இணைந்து காதல்கொள்கிறார்கள். இப்படியான காதல் நிச்சயம் வெற்றிபெறும் (சிலசமயம் காதல் வெற்றிபெறும், காதலர்கள் தோற்றுவிடுவார்கள்...). இல்லையேல் மரணத்தில் முடியும். வரலாறுகள் இதைத்தான் சொல்கின்றன.
ஆகையினால் காதலிக்குமுன் பலவற்றையும் சிந்தியுங்கள். எம் குடும்பம், எம் வாழ்க்கை, எம் சமூகம் என பலதையும் சிந்தியுங்கள். சிந்திக்க முடியாத கணப்பொழுதில் ஏற்படுவதுதான் காதல். இருப்பினும் அந்தக் கணத்தையும் மீறி மனதை கட்டுப்படுத்தி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சிந்தித்து முடிவெடுக்கின்ற நிலையில் காதல் உருவாகுமாக இருந்தால் அந்தக் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும். அதைவிடுத்து காதலித்துவிட்டு குடும்பம் ஒத்துவரவில்லை, பிரிந்துவிடலாம் என்ற தோரணையில் பிரிந்து செல்வதற்குப் பெயர் காதலல்ல. காதலென்ற புனிதத்தை தயவுசெய்து வார்த்தைகளால் கொச்சைப்படுத்தாதீர்கள்.

ஓவியன்
06-01-2009, 09:35 AM
காதலுக்கு விஞ்ஞான ரீதியான காரணம் தேடினால், அது ஹாமோர்ன் செய்யும் கலகம்தானடா என்றுதான் பதில் கிடைக்கிறது. ஆனால் புராண காலங்களிலிருந்து காதலுக்கு கணிசமான ஒரு இடம் கொடுத்து காதலின் தொடக்கம் இதயத்தில் ஆரம்பிக்கிறது என்கிறார்கள், ஆனால் இதயம் என்பது இரத்தத்தை பம் செய்யும் ஒரு இயந்திரமாகவே விஞ்ஞானம் கூறுகிறது. இப்படியாக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் காதல் என்பதற்கு இதுவரை நாம் கூறும் வரைவிலக்கணங்களும் காரணங்களும் பொய்த்துப் போனாலும் காலத்தால் கைவிடப்படாது தொடர்ந்து வியாபிக்கும் காதல் அடிக்கடி பல்வேறு பரிமாணங்களில் தன் சக்தியை உணர்த்தி நம் புருவங்களை உயர வைத்துக் கொண்டுதானிருக்கிறது....

இங்கே கட்டுரையாசிரியர் கூறுவது போல காதல் வேறு, காமம் வேறு என்ற கருத்தினை என்னால் ஏற்க முடியாது. பாசமும் காமமும் (கட்டுக்குலையாமல் அளவோடு இருக்கும் காமம் என்றும் தீதல்லவே) சரி, சமமாக எங்கே உதிக்கிறதோ அங்கே காதல் மலருமென்பது என் கருத்து...

காதலில் காமம் இருப்பது தப்பில்லை, ஆனால் காமமே காதலாக இருப்பதுதான் தப்பு....
______________________________________________________________________________________________________
தன் உள்ளக்கிடக்கையையும், உள்ளக் குமுறலையும்
ஒன்றாகத் தந்த மதுரனுக்கு என் நன்றிகள்...

arun
06-01-2009, 04:32 PM
காதல் எல்லோரிடமும் வந்து விடுவதில்லை யாரேனும் ஒருவரின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக வருவது தான் காதல்

ஆனால் காதலை பற்றி பல விதமான கண்ணோட்டங்கள் நம் அனைவருக்கும் உண்டு அதை மறுக்க முடியாது

ஓவியன் சொன்னது போல காமம் இல்லாமல் காதல் இல்லை அளவு கடந்த அன்பின் வெளிப்பாடு தான் காதல் என்பது எனது கருத்து

நிரன்
06-01-2009, 07:57 PM
காதலைக்கு விளக்கம் தேட நினைப்பதென்பது ஒரு புரியாத புதிர்!
பலருக்கு காதல் தோன்றுகிறது..சிலருக்கு நீங்கள் கூறியது போன்று
அங்க அழகில் காதல் என்று மலர்கிறது... அவர்களுக்கு அது காதலெனும்
உணர்வைக் கொடுக்கிறதான என எனக்குத் தெரியாது ஆனால் வெளியில்
இருந்து பார்ப்பவர்க்கு அது காதல் வடிவமாவே காட்சியளிக்கிறது
இதனால் காதலில் களங்கம் ஏற்படுகிறதெனக் கூறலாம் ... சிலருக்கு
காதலிப்பவரைக் கண்டால் கோபம் வரும்... இதற்குக் காரணம்
அவர்கள் அன்றாடம் காணும் காதல் என்ற போர்வையே காரணமாக
இருக்கும்.. உண்மையான காதலைப் புரிந்தவர்கட்கு அக் கோபம் உண்டாகாது.

சிலர் வீட்டில் பெற்றோர் காதலுக்கு தடை... ஆனால் அங்கு பார்த்தால்
பெற்றோர்கள் காதல் திருமணம் செய்திருப்பார்கள்.. இதற்குக் காரணம்
நீங்கள் கூறிய காதலென்பது சிற்றின்பமாக இருந்தமை... வாழ்க்கை
என்பது பெரும் துயரத்தைக் கொடுத்தமை. காதலித்தவராக இருந்தாலு
காதல் உள்ளவரைதான் எல்லாம் .... இதற்கு ஒரு பழமொழியும் உள்ளது

''மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்''

காதல் இல்லாத இடத்தில் அன்பும் இருக்காது.... ஏனெனில் இரண்டும் ஒன்றுதானே!..
இதனால் காதலித்துக் கல்யாணம் செய்பவர்க்கும் வாழ்க்கை சுமையாக
மாறுகிறது... அச்சுமை தம்மோடு போகட்டும் என சில பெற்றோர்கள்
சிலர் கௌரவம் என்று சொல்வோர்... இது என்றும் காதலருக்கும்
காதலுக்கும் இருந்து வரும் ஒரு எதிரிதானே!


========================================================================

உண்மைக் காதலென்பது இரு உள்ளங்கள் புரிந்துணர்வில் உருவதாலலென்பதும்
காதல் செய்யுமுன் யோசனை செய்து அதன் பின் மனதில் காதல்
இருந்தால் காதலிக்கலாம் என்ற கருத்தையும் நான் முழுமையாக
ஏற்றுக் கொள்கிறேன்.....இதை எல்லோரும் ஏற்றால் காதலில் பிரிவென்பதைத்
தடுக்க முடியும்..

பிறர் சந்தோசத்திற்காக வாழும் காதலருக்கும் பஞ்சமில்லை உலகில்
நம்மைப் பெற்றவர்கள் மனங்கோனதிருக்க வேண்டுமெனவும் சில
காதல்கள்... அவையெல்லாம் நீங்கள் கூறிய சிந்தனையின் அடிப்படையில்
எடுக்கப்பட்ட முடிவுகள்... அம்முடிவுகளும் வாழ்வில் வெல்லப்படுமா!
இல்லை வெல்வார்களா.... வெல்வேனனனா!!!!!! தெரியாது எல்லாவற்றிற்கும் காலந்தான் பதில் கூறும்

========================================================================

அருமையான சில உணர்வுகளையும் புதிரான விடயங்களையும் தொகுத்துத்தந்த மதுரன் அவர்கட்கு என் மனங்கனிந்த நன்றிகள்

mathuran
07-01-2009, 04:37 AM
காதலுக்கு விஞ்ஞான ரீதியான காரணம் தேடினால், அது ஹாமோர்ன் செய்யும் கலகம்தானடா என்றுதான் பதில் கிடைக்கிறது. ஆனால் புராண காலங்களிலிருந்து காதலுக்கு கணிசமான ஒரு இடம் கொடுத்து காதலின் தொடக்கம் இதயத்தில் ஆரம்பிக்கிறது என்கிறார்கள், ஆனால் இதயம் என்பது இரத்தத்தை பம் செய்யும் ஒரு இயந்திரமாகவே விஞ்ஞானம் கூறுகிறது. இப்படியாக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் காதல் என்பதற்கு இதுவரை நாம் கூறும் வரைவிலக்கணங்களும் காரணங்களும் பொய்த்துப் போனாலும் காலத்தால் கைவிடப்படாது தொடர்ந்து வியாபிக்கும் காதல் அடிக்கடி பல்வேறு பரிமாணங்களில் தன் சக்தியை உணர்த்தி நம் புருவங்களை உயர வைத்துக் கொண்டுதானிருக்கிறது....

இங்கே கட்டுரையாசிரியர் கூறுவது போல காதல் வேறு, காமம் வேறு என்ற கருத்தினை என்னால் ஏற்க முடியாது. பாசமும் காமமும் (கட்டுக்குலையாமல் அளவோடு இருக்கும் காமம் என்றும் தீதல்லவே) சரி, சமமாக எங்கே உதிக்கிறதோ அங்கே காதல் மலருமென்பது என் கருத்து...

காதலில் காமம் இருப்பது தப்பில்லை, ஆனால் காமமே காதலாக இருப்பதுதான் தப்பு....
______________________________________________________________________________________________________
தன் உள்ளக்கிடக்கையையும், உள்ளக் குமுறலையும்
ஒன்றாகத் தந்த மதுரனுக்கு என் நன்றிகள்...


நிச்சயமாக காதலுக்கும் காமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது ஓவியன். நான் இவ்விடத்தில் சொல்லவந்தவிடயம் யாதெனில், ஒரு பெண்ணை நீங்கள் காம இச்சைகளின் தூண்டுதலாலும் விரும்பலாம். அதேசமயம் அவளது நல்ல நடத்தைகளை கருத்திற் கொண்டும் விரும்பலாம். இதில் சிலசமயம் இரண்டுமே வெற்றிபெறலாம். ஆனால் உண்மையான காதலுக்கு எது அழகு என்று யோசித்தால் அதற்கு சரியான விடை மனதை விரும்புவதே தவிர, மானத்தை விரும்புவதல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

சுகந்தப்ரீதன்
17-02-2009, 11:48 AM
காதலில் வகைகள் இல்லை. ஆனால், காதல் கொள்பவர்களில்தான் வகைகள் இருக்கின்றன. ஏற்கத்தக்க வரிகள் இவை..!!

உங்களுடைய கோணத்தில் காதலைபற்றி நன்றாக அலசியிருக்கிறீர்கள் மதுரன்..!! ஆனால் உங்கள் கட்டுரையில் நீங்களே கூறியிருப்பதைப்போல அவரவர் பார்வையை பொறுத்து காதலின் இலக்கணம் மாறுபடும் என்பதை மறுப்பதற்க்கில்லை..!!

சின்ன சந்தேகம் பொறுப்பாளர்களே... இந்த கட்டுரை இருக்க வேண்டிய இடம் காதல் களஞ்சியம்தானா..??