PDA

View Full Version : முக்காலம்...

mathuran
05-01-2009, 04:22 AM
வார்த்தையால் வடித்திட்ட
வலிகளின் வலிமையை
உளிகொண்டு துளைத்திட்ட
பாறையின் பளிங்காய்
செவிப்பறையில் சொல்லிடும்
பிரிவின் துயர்தனில்...

அருகில் நீயிருந்தும்
அரவணைக்க முடிவதில்லை...
பிரிவின் துயரத்தை
எம்மையன்றி யாரறிவர்...
காலம்தான் வீணாகும்
கற்பனையில் வாழ்கையிலே...
சொற்பகால வாழ்வதனை
சொப்பனத்தில் வாழ்கின்றோம்...
வடிக்கின்ற கண்ணீரில்
நிலம்கூட ஈரமாகும்
உளம்மட்டும் கனியாமல்
காயாக இருப்பதேனோ...?

பாயாக விரித்துவைத்த
பாசங்கள் வீணாச்சு...
பாலாக ஊற்றிவைத்த
பாவங்கள் புளித்தாயிற்று...
புதுவாழ்வு தேடியின்று
நெடுந்தூரம் வந்தாயிற்று...
கொடுமையாய் இருக்குதடி
உனைப்பிரிந்து தவிக்கையிலே...
கனவான நம்வாழ்க்கை
நினைவாவதெப்போது...?
அக்கால நினைவெண்ணி
முக்காலமும் வாழ்ந்திடுவேன்...!

ஓவியன்
05-01-2009, 04:49 AM
முக்கால வாழ்வோடும் சங்கமித்த
காதலுக்கு வடித்த கவி அருமை...

வாழ்த்துக்கள் மதுரன், தொடரட்டும் உங்கள் கவிதைகள்
இன்னும் பற்பல பரிமாணங்களுடன்....

கா.ரமேஷ்
05-01-2009, 05:13 AM
அருமை தோழரே...!

mathuran
05-01-2009, 11:51 AM
முக்கால வாழ்வோடும் சங்கமித்த
காதலுக்கு வடித்த கவி அருமை...

வாழ்த்துக்கள் மதுரன், தொடரட்டும் உங்கள் கவிதைகள்
இன்னும் பற்பல பரிமாணங்களுடன்....

நன்றி ஓவியன். உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு தெம்பளிக்கின்றன. தொடர்ந்து பல பரிமாணங்களில் எழுதத் துடிக்கின்றேன்.

mathuran
05-01-2009, 11:52 AM
அருமை தோழரே...!

நன்றி ஓவியன். உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு தெம்பளிக்கின்றன. தொடர்ந்து பல பரிமாணங்களில் எழுதத் துடிக்கின்றேன்.

பென்ஸ்
05-01-2009, 04:25 PM
வணக்கம் மதுரன்...
பாராட்டுகள்...

முக்காலம் பற்றி மூன்று பத்திகளில் மூன்று கால நிலமையும்
சொல்லி நல்ல கவிதை....

தலைவலியும், பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்...
காதல் வலியும் அப்படிதான்...

இறந்த கால நினைவுகள் தெளிவாய் காதில் எதிரொலிக்க
நிகழ் கால கண்ணீர் கனவுகளில் நிச்சலடித்து
எதிர்காலத்தை நோக்கி போகும் போது கரை எளிதில் தெரிவதில்லை...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

இளசு
05-01-2009, 06:30 PM
பாராட்டுகள் மதுரன்...

மனதில் பொங்குவதை இலகுவாகவும் இயல்பாகவும் வடிக்க வருகிறது உங்களுக்கு..

பாய், பால் - பயன்படுத்திய லாவகமே சான்று!

ஓவியன், இனிய பென்ஸ் விமர்சனங்கள் - வெண்பொங்கலில் மிளகுபோல் கூட்டுசுவை!

mathuran
06-01-2009, 03:48 AM

நன்றி பென்ஸ். அனுபவத்தில் உணர்வது ஒரு ரகம், அனுபவத்தை உணர்வது மற்றொரு ரகம். இதில் இரண்டும் இருக்கிறது எனக்கு...

mathuran
06-01-2009, 03:50 AM
பாராட்டுகள் மதுரன்...

மனதில் பொங்குவதை இலகுவாகவும் இயல்பாகவும் வடிக்க வருகிறது உங்களுக்கு..

பாய், பால் - பயன்படுத்திய லாவகமே சான்று!

ஓவியன், இனிய பென்ஸ் விமர்சனங்கள் - வெண்பொங்கலில் மிளகுபோல் கூட்டுசுவை!

உங்கள் பாராட்டுக்கு நன்றி இளசு. காதலென்பது ரொம்ப இலகுவானது. அதில் மூழ்கினால் வரிகளும் இலகுவாக வரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. வலிகளும் இலகுவாகவே வரும், வரிகளும் இலகுவாக வரும்.

சசிதரன்
06-01-2009, 11:09 AM
உங்கள் கவி அருமை நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்..:)