PDA

View Full Version : பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க.



புதியவன்
05-01-2009, 04:21 AM
நன்றி புதினம்
தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம்தான்.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியதனால்தான் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது.

அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் என்றார் அவர்.
www.thamizthai.blospot.com,
www.eelamwebsite.com

அய்யா
06-01-2009, 02:56 AM
வெற்றிக்கு 100 தந்தைகள்!

ஓவியன்
06-01-2009, 03:51 AM
ஆகவே போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டமை, விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தவேயன்றி நாட்டுக்கு நல்ல தீர்வைக் கொடுப்பதற்காவல்ல...:)

அன்புரசிகன்
06-01-2009, 03:54 AM
துரோகங்கள் ஒன்றும் புலிகளுக்கு புதிதல்ல. இவற்றால் துவண்டதுமல்ல... காலம் அனைத்தும் பதில் சொல்லும்.

அதையும் ஏற்க ஐதேக தயாராக இருக்கவேண்டும்.

praveen
06-01-2009, 06:11 AM
இந்த செய்தியில் இருந்து பேச்சுவார்த்தைக்கு முன் போர் நிறுத்தம் செய்வதன் மூலம் புலிகள் தங்களை ஒவ்வொருமுறையும் பலப்படுத்தி கொள்கிறார்கள், என்ற குற்றச்சாட்டு அடிபட்டு போகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் அப்பாவி தமிழர்கள் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று போர் நிறுத்தத்தை செய்வர் என்று நம்பி சமீபத்தில் ஏமாந்தது போல. புலிகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலவும் என்று நம்பி ஆயுதத்தை பெருக்காமல் இருந்து விட்டனர்.

இந்தியாவில் எவரை நம்பியும் இனி பிரயோசனம் இல்லை, கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் தான் இனி தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.

பழைய வரலாற்றை வைத்து பார்க்கும் போது, புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதை சிங்கள காடையர்கள் திருப்பி அடி வாங்கும் போது மீண்டும் தெரிந்து கொள்வார்கள். அதை உணரும் போது அவர்களுக்கு தப்பிக்க ஒரு வழியும் இருக்காது. அப்போது அவர்கள் போர் நிறுத்தம் வேண்டும் கெஞ்சுவார்கள் என்றே நினைக்கிறேன்.

அன்புரசிகன்
06-01-2009, 06:21 AM
பழைய வரலாற்றை வைத்து பார்க்கும் போது, புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதை சிங்கள காடையர்கள் திருப்பி அடி வாங்கும் போது மீண்டும் தெரிந்து கொள்வார்கள். அதை உணரும் போது அவர்களுக்கு தப்பிக்க ஒரு வழியும் இருக்காது. அப்போது அவர்கள் போர் நிறுத்தம் வேண்டும் கெஞ்சுவார்கள் என்றே நினைக்கிறேன்.

அதுதான் நிகழ்ந்தது. முல்லைத்தீவு ஆனையிறது முகமாலை புலிகளிடம் வீழ்ந்தது விமானநிலையம் தாக்கப்பட்டது போன்றவற்றால் தான் முதலில் பணிந்து வந்தனர். மீண்டும் இந்த நிலை வரும். ஒரு பாரிய தாக்குதல் தமிழீழத்திற்கு அப்பால் நிகழ வாய்ப்பு உண்டு.

கா.ரமேஷ்
06-01-2009, 11:16 AM
இதே ஈழத்தில் ராணுவத்தினை மடக்கி பாவம் என்று விட்ட வரலாறும் உண்டு,பதுங்கி பாய்ந்த வரலாறும் உண்டு... இனிவரும் காலத்த்தில் நல்லதே நடக்கவேண்டும் என்று வேண்டுவோம்..! வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் இவர்கள்(எல்லோரும்) தமிழ் மக்களின் இன்னல்களுக்கு என்னதான் பதில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை...?