PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 5



rambal
04-09-2003, 10:26 AM
ஒரு தவறு...

வாசகர்களே.. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது.. அது, விகாஸின் சரித்திர காதல் நாவலோடு ராமின் இலக்கியம் பற்றிய
ய்வுக்குறிப்புகள் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டன.. இவற்றை பிரித்துப் படித்து பொருள் காண வேண்டும் என்று
அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

நாவல் பற்றிய குறிப்புகளும் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் ஒரே நேரத்தில் கிடைக்க, அந்த ஒரு கணம்
என் மனம் என்னையறியாமல் ஆனந்தப்பட்டு இவைகளை தொகுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
கோளாறு ஏற்பட்டு ஆர்வக் கோளாறாகி ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டது..

ஜடாமுனியின் சித்து வேலைகளினால் ஏற்பட்ட இந்தக் குழப்பத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது..
ஆதலினால், ஜடாமுனி சித்தரை மன்னிப்புக் கேட்க அழைக்கிறேன்..

இனிவருவது, ஜடாமுனி சித்தரின் குரல்:

பிண்டமடா - உப்புப் பிண்டமாடா
ஊத்தை எடுத்த சதைத் துண்டமடா
காதல் கல்லறைப் பூவடா
இலக்கியம் பூக்கல்லறையடா - புரியாத
விகாஸ்சும் ராமும் சித்தம் கலங்க வேண்டுமடா
ராம்பால் தப்பு ஏதும் இல்லையடா - இந்த
ஜடாமுனியின் சித்தடா - எல்லாம் சித்தடா!

இப்படியாக ஜடாமுனியின் சித்தால் உங்களை கொஞ்சம் குழப்பி விட்டேன்..
மேலே ஜடாமுனியே இது தனது சித்து என்று ஒப்புக் கொண்டதால் வாசகர்களாகிய நீங்கள்
என்னைக் குறை கூற முடியாது என்று நினைக்கிறேன்..
இனி வரும், பகுதிகளை ஜடாமுனி சித்தர் கண்ணில் படாமல் எழுத முயற்சிக்கிறேன்..

நன்றி..
இப்படிக்கு உங்கள் அன்புள்ள,
ராம்பால்...

சேரன்கயல்
04-09-2003, 04:15 PM
ஜடாமுனி சித்தரிலும் நானைத் தேடி நானாய் பேசியிருக்கும் நானாகிய ராமை பாராட்டுகிறோம்...
ஜடாமுனி கண்களில் பட்டே உங்கள் பதிவுகள் வலம் வரட்டும்...கவிதையும் தருகிறாரே ஜடாமுனி...எனவே அவரை நிச்சயம் ஆலோசனை கலந்து எழுதுங்கள்....

பாரதி
04-09-2003, 05:15 PM
அன்பு ராம்.. முடிவிலி-யில் ஆரம்பிக்கும் போதே சொன்னதை நிறைவேற்ற ஒற்றைக்காலில் தவமா..?

rambal
05-09-2003, 09:44 AM
பாரதி அவர்களே..
அப்படியெல்லாம் எனக்கு எண்ணம் இல்லை..
நாவலை எழுதி முடித்த பிறகுதான்ந்த்ந்த முன்னெச்சரிக்கை கொடுத்தேன்..
உண்மையைச் சொல்லப்போனால் முன்னெச்சரிக்கை எவ்வும் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை.. அநேகமாக இது புத்தகமாக வரும் பொழுது எச்சரிக்கைகள் இருக்காது...

இளசு
06-09-2003, 09:26 PM
ராம், எனது அறிவுக்கு எட்டாத உயர்படைப்பாய் இது இருக்கிறது.
என் வாழ்நாளில் இந்த வகைப்படைப்புகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு
அறிவை இனிமேல் வளர்த்துக்கொள்ள முடியுமா என்ற அச்சமும் இருக்கிறது.
புரியாத அத்வைதம், உபநிடதம், ஐன்ஸ்டீனின் இயற்பியல் கோட்பாடுகள் போல
ஒரு பயம் கலந்த மரியாதை வரும்போது
அவற்றுடன் கூடிக்கலந்து, அறிந்து, கருத்து சொல்ல முடியாத கையறு நிலை.

சேரன் கயல், பாரதி இவர்களின் தரமான கருத்துகளைப் பார்த்தால் இந்த
என் இயலாமை இன்னும் வலுப்படுகிறது.
நண்பன் உட்பட பலரின் பல கவிதைகளை விமர்சிக்க முடியாமல் நான் மருகுவதற்கும் இந்தப் புரியாமையே காரணம்.
ஒன்று மட்டும் நிச்சயம்..
மிகத்தரமான, வித்தியாச படைப்பு இது.
புத்தகமாய் வந்து பல அறிவார்ந்த வாசகர்களால் அலசப்பட்டு
விருதுகளும் அங்கீகாரமும் பெற என் வாழ்த்துகள்.

நம் மன்ற படைப்பாளி தந்தது, நம் மன்றத்தில் முதலில் எழுதிய படைப்பு என்ற
வகையில் நாங்கள் எல்லோருமே அந்நாளில் பெருமிதத்தில் திளைப்போம்.

rambal
09-09-2003, 02:16 PM
அன்புள்ள அண்ணனுக்கு..
உங்கள் பாசத்திற்கு தலைவணங்குகிறேன்..
இந்த நாவல் பற்றிய உங்கள் விமர்சணத்திற்கு நன்றி..
இது தொடர்ச்சியற்ற முறையில் எழுதப்பட்ட நாவல்..
ஆதலால், புரிந்து கொள்ளல் கொஞ்சம் கடினம்..
முழு நாவல் முடிந்தபிறகு? கண்டிப்பாக புரிந்து கொள்வீர்கள்..