PDA

View Full Version : ஒரு புனித நீர் இளநீர்



mgandhi
04-01-2009, 05:18 PM
ஒரு புனித நீர் இளநீர்

இளநீர் உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. வேர்குரு, சின்னம்மை, பெரியம்மை வியாதியைக் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை மாற்றுகிறது. வயிற்றுப் போக்கு, காலராவைக் கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வைக்கிறது. மஞ்சள்காமாலைக்கு சிறந்த மருந்து இளநீர். புகையிலை மற்றும் புகையால் ஏற்படும் புகை படிமானத்தை கரைக்கிறது. கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் வராமல் பாதுகாக்கிறது. உடல் உஷ்ணத்தை மிதமாக வைக்கிறது. கோடைக்கால வியாதிகளான வயிற்றுக் கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை அம்மை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகளை இளநீர் கட்டுப்படுத்துகிறது. வாரம் இரண்டு இளநீராவது நாம் குடிக்க வேண்டும்.

பாலகன்
04-01-2009, 06:05 PM
ஒரு சந்தேகம் காந்தியாரே.... ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா?

நல்லதொரு தகவலை தந்தமைக்கு நன்றி அன்பரே

இளசு
04-01-2009, 07:35 PM
மிக்க நன்றி காந்தி அவர்களே..

இளநீரின் அதிதீவிர ரசிகன் நான்.. ( என் பெயரே இளசாக்கும்..)
என் முதல் விருப்ப குளிர்பானம் - இளநீர்...
இரண்டாவது - நீர்மோர்!


கோடையில் கோக்,பெப்ஸி குறைத்து இளநீர் அருந்துவதைக் கூட்டுங்கள்!

வாழைப்பழத்துக்கு மேலைநாட்டில் விளம்பர வாசகம்

'''Sterilised and packed by nature''.

திடத்துக்கு வாழை என்றால்
திரவத்துக்கு இளநீருக்கும் இவ்வாசகம் வசமாய்ப் பொருந்தும்..

இங்கே விக்கிபீடீயாவில் இளநீர் படங்களைப் பார்த்து கண்குளிருங்கள்..
http://en.wikipedia.org/wiki/Coconut

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுக்குப் பிறகு
3ம் இடத்தில்தான் இந்தியா - தென்னை விளைச்சலில்!

ஓவியன்
05-01-2009, 03:57 AM
இளநீரின் அதிதீவிர ரசிகன் நான்.. ( என் பெயரே இளசாக்கும்..)

ஹா, ஹா..!!

அப்போ நானும் இளநீரின் இரசிகன் தான், ஏனென்றால் நான் உங்கள் ரசிகனாச்சே...!! :)
_______________________________________________________________________________________________________

இளநீர் என்றதும் என் நினைவில் வருவதெல்லாம் என் வீட்டு வளவில் என்றோ ஒரு காலத்தில் இருந்திட்ட ஒற்றை செவ்விளநீர் மரம் தான்...

இன்றும் அந்த மரத்தின் இளநீர் என் நாவில் இனிக்கிறது....

அண்மையில் அன்புரசிகன் அமீரகத்திலிருந்து ஓமானுக்கு வருகை தந்த போது, ஓமானின் சலாலா பிரதேசத்திலிருந்து ஒரு இளநீர் குலையுடன் என் வீடு வருகைதந்த நினைவும் எட்டிப் பார்கிறது...

நினைவலைகளைக் கிளப்பி நல்ல சேதி தந்த காந்தி அண்ணாவுக்கு நன்றிகள் பல...

raj144
04-03-2009, 10:10 AM
நல்ல தகவல் இதனை நம் இளம் சந்ததியினர் கற்று அறிந்து பெப்ஸி , கோ க்க கோலா போன்றவற்றை குறைப்பது உடலுக்கு நல்லது.இள நீரில் ந்ல்ல விட்டமினும் மினரல்ஸும் எல்லா அம்சங்களும் அடங்கி உள்ளது அதனை ட்ரிப் மூலம் (Multivitamin,Salaine போல்)ஆயுர் வேத மறுத்துவமனைகளில் உபோயோகிப்பதக கேள்விப்பட்டேன்.தகவல் தந்த நண்பர் காந்தி,ம்ற்றும் விக்கி சுட்டி கொடுத்த இளசுக்கும் மிக்க நன்றி.

மன்மதன்
04-03-2009, 11:01 AM
பச்சை இளநீர் / சிகப்பு இளநீர் என்ன வித்தியாசம்?

அறிஞர்
04-03-2009, 04:47 PM
பச்சை இளநீர் / சிகப்பு இளநீர் என்ன வித்தியாசம்? மற்றவர்கள் சரியான விடை தருவார்கள் என நம்புகிறேன்.
-------------
மேலும் சில தகவல்கள் (மோகன் காந்தி வேறு இடத்தில் கொடுத்தது)

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் "ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.
நன்றி தினமணி

அறிஞர்
04-03-2009, 04:51 PM
இளமை காக்கும் உணவு இளநீர்

தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு இளநீரில் இருக்கிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன.

இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும்.

இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது.
காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டிவிடுகின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது.
காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய மருந்து இது. மதுபான அடிமைகள் இளநீருக்கு அடிமையானால் அவர்கள் ஆரோக்கியம் மிக்க மனிதராகத் திகழ்வார்கள்.

குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப் பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள்.

இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்கிறது.

பாக்டீரியாக்கள் இல்லாத நோய் நுண்ம நச்சுக்கள் ஒழிக்கப்பட்ட இந்தத் தண்ணீர் பாதுகாப்பானது.

கேரளாவிலும் தமிழகத்திலும் மினரல் பாட்டில்களைவிட இளநீர் அதிகம் விற்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால்தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்இ மஞ்சள் காமாலை நோயாளிகள் சூட்டால் வெளியாகும். மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள்.

100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு 29 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும்இ இரத்த விருத்திக்கு 0.1 மில்லி கிராம் இரும்பும் இந்த இரும்புச் சத்தை உடல் நன்கு கிரகித்துக் கொள்ள செம்பு 0.04 மில்லி கிராமும் உள்ளன. அது மட்டுமல்ல இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குளோரின் உப்பு 183 மில்லி கிராமும்இ வயிற்றில் ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரக்கவும்இ தசைப்பகுதியில் அதிகமாகச் சுண்ணாம்புச் சத்து தங்கிவிடாமல் தடுக்கவும் சோடியம் உப்பு மிகவும் உதவும். இந்த சோடியம் உப்பு இளநீரில் நன்கு உள்ளது.

இத்துடன் மூளையும் நரம்பு மண்டலமும் கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ் 37 மில்லி கிராமும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஊயும் தினசரி ஒரே ஒரு இளநீரில் கிடைக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

பசி எடுத்துச் சாப்பிடவும் மூளை நலம் (மென்ட்டல் ஹெல்த்) சிறப்பாகப் பாதுகாக்கப்படவும் டீ குரூப் வைட்டமின் நியாஸினும் இளநீரில் உள்ளது. டீ வைட்டமின் அணியைச் சேர்ந்த ‘பாந்தோதெனிக்’அமிலம் ‘பயோட்டின்’ ‘ஃபோலிக்’ அமிலம் ‘பைரிடாக்ஸின்’ போன்றவையும் இளநீரில் சிறிதளவு உள்ளன.

வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.

காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.

மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன் நலமாக நீடிக்கும் சக்தி தினசரி அருந்தும் இளநீரில் இரகசியமாக உள்ளது. இந்த இரகசியத்தை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
நன்றி - அலைகள்.காம்

பால்ராஜ்
04-09-2009, 07:59 AM
இளநீருடன் கலந்து பருகக்கூடிய ஒரு அருமையான பானீயம்.. வோட்கா

rajarajacholan
08-01-2010, 06:47 AM
இதை தினமும் உணவு சாப்பிட்டதும் குடிக்கலாமா? அல்லது வாரத்திற்கு இரண்டு மூனுதடவை குடிக்கலாமா?
நன்றி தக்வலுக்கு

sunson
31-01-2010, 07:22 AM
இவ்வளவு புனிதமான மருத்துவ குணமுள்ள இளநீரை விட்டு விட்டு ஏன் தான் நம்மவர்கள் குளிர் பானங்களைத் தேடி செல்கிறார்களோ தெரியவில்லை. இளநீர் கடையில் வாங்கும் போது சுத்தமான கத்திகளை பயன் படுத்துகின்றார்களா, அவர்களின் கையில் காயம் , முறிவு போன்றவை இல்லை என்பதை உறுதி படுத்திய பின் வாங்கினால் நல்லது. பகிர்வுக்கு நன்றி .

அனுராகவன்
18-09-2010, 06:19 PM
நானும் நிறைய இளநீர் குடிக்கிறேன்..
ஆன என்ன இளமை மட்டும்தான் திரும்பல..
நன்றி...:):)

வல்லம் தமிழ்
31-10-2010, 03:25 AM
கோக் ,பெப்சி போன்ற பானங்களை தடை செய்து விட்டு அரசாங்கமே இள நீரை விற்கலாம்