PDA

View Full Version : கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா?*



shibly591
04-01-2009, 08:05 AM
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட
நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும்,
துரோகங்களையும் சந்தித்திருக்கிறது.


விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான
நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும்
செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும்
மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல்
ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ
விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப்
போராட்டத்தை தலைமை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட்டத்தின்
நெருக்கடிகளை எல்லாம் சாதுரியமாக தீர்வுகண்டு முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில்
யாழ். குடாநாட்டையும் கிளிநொச்சி நகரப்பகுதி தவிர்ந்த மாவட்டத்தின்
பெரும்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.


கிளிநொச்சியின் இராணுவக் கேந்திரத்தன்மையை 1984 ஆம் காலப்பகுதியில்
உணர்ந்ததனாலேயே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கிளிநொச்சியில் தங்கியிருந்து
போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டவேளை 1985 ஆம்
காலப்பகுதியில் கிளிநொச்சி இராணுவப் பொலிஸ் நிலையம் மீது முதலாவது வாகன
குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.


இத்தாக்குதலுடன் கிளிநொச்சி நகரத்தின் மீதான அழிவுத் தாக்குதல்கள் ஆரம்பமாகி
இன்றுவரை அந்நகரம் மாறிமாறி மிகப்பெரும் அழிவுகளைச் சந்திப்பது அந்நகரத்தின்
துரதிஷ்டமே. வடமாகாணத்தின் முக்கியமான விவசாய வர்த்தக நகராக உருவெடுத்த
கிளிநொச்சி பின்நாளில் தமிழரின் இராஜதந்திர நகரம் என்று உலகளாவிய ரீதியில்
அறியப்படும் அளவிற்கு அதன் வளர்ச்சி அபரிமிதமானது. 1985ஆம் ஆண்டு வாகனக்
குண்டுத் தாக்குதலுடன் ஆரம்பமாகிய கிளிநொச்சி மீதான படைநடவடிக்கைகள் இந்திய
இராணுவ வருகையுடன் மேலும் சிதைவுகளைச் சந்தித்தது.


இந்திய இராணுவம் வெளியேறியபின் 1990 ஆம் ஆண்டு 2ஆம் கட்ட ஈழப்போர்
ஆரம்பமானவுடன் கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றுவதற்காக புலிகள் இயக்கம் உக்கிரமான
முற்றுகைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து
கிளிநொச்சி நோக்கி ஒரு மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இதனைப்பயன்படுத்தி
கிளிநொச்சியிலிருந்த இராணுவத்தினர் ஆனையிறவுக்குத் தப்பிச்சென்றனர். இந்த இரு
பகுதியினரும் மேற்கொண்ட மீட்புச் சண்டையினால் கிளிநொச்சி நகரம் இரண்டாவது
தடவையாகவும் பெரும் அழிவைச் சந்தித்தது. ஆனால் இதன்மூலம் ஆனையிறவுக்குத் தெற்கே
கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்க்
கொண்டுவரப்பட்டது.


கிளிநொச்சி மீண்டும் புத்துயிர் பெற்று வன்னியின் வர்த்தக மையமாக
வளர்ச்சியடையத் தொடங்கிய போதிலும் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதும் யாழ். குடா
புலிகளின் கையிலிருந்து நழுவியபின் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவமுகாமை
புலிகள் மீட்டுவிட, அன்றைய சந்திரிக்கா அரசாங்கம் கிளிநொச்சி மீது 1996 இல்
சத்ஜெய 01, 02, 03 என மூன்று மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகளைச் செய்து
கிளிநொச்சி நகரத்தையும், அதன் தெற்கே ஏ9 வீதியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி
வரை கைப்பற்றியது. 1997 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின்
கடல் தாக்குதல்கள் அதிகரித்தன. யாழ்ப்பாணத்திற்கான கடற்போக்குவரத்திற்கு
கடற்புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் தடையினால் யாழ்ப்பாணத்திற்கான
தரைவழிப்பாதையின் அவசியத்தை உணர்ந்த அரசு யாழ்ப்பாணற்கான தரைவழிப்பாதை திறப்பு
எனக்கூறிக் கொண்டு 1997 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி ஜயசிக்குறு இராணுவ
நடவடிக்கையை ஆரம்பித்தது.


வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 பாதையூடாக மாங்குளத்தைக் கடந்து
கிளிநொச்சியில் தரித்து நின்றவர்களும் மாங்குளம் வந்தவர்களும் கைகுலுக்குவதற்கு
தயாரான போது, கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 1998 ஆண்டு ஜனவரி மாதம் புலிகள்
மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதல், அதன் பின்னர் 1998 செப்டெம்பர் மாதம்
கிளிநொச்சி நகரத்தின் மீது புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 2 நடவடிக்கை
ஆகியவற்றின் மூலம் கிளிநொச்சி நகரம் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆளுகையின்
கீழ் வந்தது. ஆனால், 1985 இலிருந்து 1998 செப்டெம்பர் வரை கிளிநொச்சி நகரம்
கண்ட பல இராணுவப் பலப்பரீட்சைகளும், அதனால் மூண்ட கடும் சண்டைகளும்
அந்நகரத்தினை மண்மேடாக்கிவிட்டுப் போய்விட்டது.


1998 செப்டெம்பர் கிளிநொச்சி நகரம் புலிகளால் கைப்பற்றப்பட்டாலும் அது இராணுவ
தாக்குதல் வளையத்துக்குள் தொடர்ந்தும் உட்பட்டதாகவே இருந்தது. 1999 நவம்பர்
விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் வன்னிப்
பெருநிலப்பரப்பை புலிகள் கைப்பற்றியதோடு கிளிநொச்சிக்கான அச்சுறுத்தலாக இருந்த
ஆனையிறவு கூட்டுப்படைத்தளமும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கிளிநொச்சி
மாவட்டத்தின் முழுப்பரப்பளவும் அதாவது இரணைமடுச் சந்தியிலிருந்து முகமாலை
வரையான பகுதிகள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன.


போரின் கோரவடுக்களால் மண்மேடாகிக் கிடந்த கிளிநொச்சி நகரம் மீண்டும் புத்துயிர்
பெறத் தொடங்கிற்று. அத்தோடு வன்னிக்கான நிர்வாக மையமாகவும், விடுதலைப்புலிகளின்
நிர்வாக மையமாகவும் மாற்றமடையத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது, தீச்சுவாலை
இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் மூலம் புலிகளால்
நிலைநிறுத்தப்பட்ட இராணுவச் சமநிலையும், இதனால் ஏற்படுத்தப்பட்ட சமாதான
உடன்படிக்கையும் சர்வதேச இராஜதந்திரிகளின் கிளிநொச்சி வருகையும், அவர்களின்
சமரசப் பேச்சுக்களும் கிளிநொச்சியை சர்வதேச அளவில் புலிகளின் இராஜதந்திர நகரமாக
மாற்றியது.


துரித கதியில் மகோன்னத வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது என்று செல்வதே
பொருத்தம். ஏனெனில், சமாதான ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சிப் பகுதியெங்கும்
மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளின் வேகமும் அதன் வளர்ச்சியும் சர்வதேச
இராஜதந்திரிகளை வியப்புக்குள்ளாக்கியது. இதன் வெளிப்பாடுதான் நோர்வேயின்
சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் "இரண்டாம் உலகப் போரின் அழிவிலிருந்து
ஐரோப்பா மீண்டெழ நீண்ட காலம் எடுத்தது. ஆனால் குறுகிய சில மாதங்களிலேயே
வன்னியின் எழுச்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எனக் குறிப்பிட்டமையாகும்.
இதிலிருந்து கிளிநொச்சியின் வளர்ச்சியின் போக்கினை நாம் உணரமுடியும்.


மீண்டெழுந்த கிளிநொச்சியின் துரதிஷ்டமோ என்னவோ, சமாதான உடன்படிக்கை முறிவும்,
கடந்த ஒன்றரை வருடங்களாக கிளிநொச்சியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இராணுவ
நடவடிக்கையும் பல பரிமாணங்களைத் தாண்டி, 2008 டிசம்பர் 31 இல் பரந்தன்
வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜனவரி 2 இல் கிளிநொச்சி நகரத்தினை இராணுவப் பிடிக்குள்
மீண்டும் சிக்கவைத்துவிட்டது. இதற்கான போரின் மூலம் கிளிநொச்சி நகரம் அழிந்த
நகரமாக மக்கள் அற்ற நகரமாக, பாழடைந்த நகரமாக மாற்றமடைந்து விட்டது. கிளிநொச்சி
நகரத்திற்கான படையெடுப்பானது 57 ஆவது டிவிசன், கூஊ1 படையணிகள் முறையே மேஜர்
ஜெனரல் ஜெகத் டயஸ், மற்றும் பிரிகேடியர் சவீந்திர சில்வா ஆகியோரின்
வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது.


படையினர் கடந்த மூன்று மாதங்களாக முட்டி மோதி பாரிய இழப்புக்களைச் சந்தித்து
பரந்தனூடாக முன்னேறி, ஏ9 வீதியை இரண்டாகப் பிழந்து பெட்டியடித்து நிலைகொண்டு,
கிளிநொச்சியை மூன்றுபக்கமும் சூழ்ந்து பரந்தனிலிருந்தும், அடம்பனிலிருந்தும்,
இரணைமடுச்சந்தியிலிருந்தும் மும்முனைகளில் நகர்ந்து கிளிநொச்சி நகரத்தினை தமது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர். இதன்மூலம் ஏ9 வீதியில்
வவுனியாவிலிருந்து பரந்தனுக்கு அப்பால் உமையாள்புரத்திற்கு அண்மைவரை ஏ9
வீதியையும், அதற்கு மேற்குப் புறமுள்ள மேற்கு வன்னியின் முழுப்பரப்பையும்
படைகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளன. அத்துடன் கிழக்கு வன்னியின்
மாங்குளத்திற்கும், முல்லைத்தீவுக்கும் இடையேயான ஏ34 வீதியின் தென்பகுதியாகிய
கிழக்கு வன்னியின் தென்அரைப்பாகம் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்
வந்திருக்கிறது.


கிளிநொச்சி நகரத்தின் முழுப்பகுதியும் இராணுவப் பிடியில் அகப்பட்டதோடு
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதியின் இரண்டாம் மைல்கல்லுக்கு
அண்மைவரை படையினர் அண்மித்திருக்கின்றனர். கிளிநொச்சி நகரம் முழுவதும் இறுதிவரை
சண்டையிட்ட புலிகளின் படையணிகள் தமது இழப்புக்களை தவிர்க்கும் நோக்கில்
படிப்படியாக பின்வாங்கி திருவையாற்றுப் பகுதியிலும் இரணைமடு குளக்கட்டுப்
பகுதிலும், வடக்காக முரசுமோட்டை கண்டாவளை, ஊரியான் ஆகிய பகுதிகளை இணைக்கும் ஒரு
நேர் கோட்டில் புதிய முன்னரங்கப் பகுதியை நிறுவி நிலையெடுத்திருப்பதாக களமுனைத்
தகவலிகளிலிருந்து அறியமுடிகின்றது.


இதன்மூலம் இரணைமடுக்குளத்தின் ஆரம்பத்திலிருந்து ஊரியான் வரையான புதிய
முன்னரங்கப் பகுதியில் சண்டைகள் நிகழ்வதற்கு சிறிது காலம் தாமதமாகலாம். ஆனால்,
புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியதனால், பரந்தனில் நிலைகொண்டிருக்கும்
படைகளுக்கு ஏற்பட்ட உளவுரண் உறுதி அவர்களை ஆனையிறவு நோக்கி நகர உந்துவது
இயல்பானதே. எனவே படைகள் உடனடியாக உமையாள்புரப் பகுதியில் நிலைகொண்டிருக்கும்
புலிகளின் முன்னரங்கை நோக்கி ஒரு பாய்ச்சல் சூட்டோடு சூடாக இடம்பெறும் என
எதிர்பார்க்கலாம். கிளிநொச்சியின் வீழ்ச்சியானது முகமாலைப்பகுதியில்
நிலைகொண்டிருக்கும் புலிகளின் படையணிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்திருக்கிறது
என்பது உண்மையே.


ஏனெனில் முகமாலை பகுதிக்கான நேரடி வழங்கல் பாதை முடக்கப்பட்டு விட்டது.
எனினும் முகமாலைப் பகுதிக்கான விநியோகங்களை கடல் வழியாகவோ அல்லது சுண்டிக்குளம்
வழியாகவோ கடைசிவரை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும்.எது எப்படியிருப்பினும்
ஆனையிறவு நோக்கி படையினர் நகருகின்ற போது கிளாலி முகமாலைப் பகுதிலும் சரி,
நாகர்கோவில் பகுதியிலும் சரி, சண்டையிடும் புலிகளின் படையணிகளுக்கு பெரும்
நெருக்கஎகள் ஏற்படுவது தவிர்க் முடியாதது. ஏனெனில், முகமாலைக்கும்
ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பச்சிலைப்பள்ளிப் பிரதேசமும், சுண்டிக்குளம் தொடக்கம்
நாகர்கோவில் வரையான வடமராட்சி கிழக்குப்பகுதியும் ஒடுங்கலான பிரதேசமாகவுள்ளது.


தற்போதைய நிலையில் அதன் இருபக்கங்களிலும் இராணுவம் நிலைகொண்டிருப்பதோடு பாக்கு
வெட்டியில் அகப்பட்டிருக்கும் பாக்கின் நிலையை ஒத்ததாகவே பச்சிலைப்பள்ளி
இருக்கின்றது. இவ்வாறு ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்
யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை புலிகள் தக்கவைப்பதற்கு எத்தகைய வியூகத்தை
வகுக்கப் போகின்றார்கள் என்பதையிட்டு இராணுவ விற்பன்னர்கள் மண்டையைப் பிய்க்கத்
தொடங்கிவிட்டனர். எனினும் முகமாலைப் பகுதியை எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள்
வந்தாலும் தக்கவைப்பதற்கு புலிகள் முனைவர். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை
முல்லைத்தீவு நோக்கிய நகர்வின் முனைப்பினை மேலும் தீவிரப்படுத்தக் கூடும்.


59ஆவது டிவிசன் மணலாற்றுப் பகுதியிலிருந்து நகர்ந்து ஏ34 வீதியில்
கூழாமுறிப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு
முல்லைத்தீவின் நுழைவாயிலான நீராவிப்பிட்டி வரை தமது கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டுவந்ததோடு, வீதியின் வடபுறம் நகர்ந்து வற்றாப்பளை கிராமத்தை
முற்றுகையிடுவதோடு வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கேப்பாபுலவு
நோக்கி நகர்ந்து கேப்பாபுலவுக்குத் தெற்கே 3 மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது.


முல்லைத்தீவினுள் நுழைவதற்கு ஏ34 வீதியில் நீராவிப்பிட்டிக்கு அப்பால்
நகர்வதற்கு புலிகள் கடும் எதிர்ப்புக் காட்டுவதனால் முல்லைத்தீவு நகரையும்,
முள்ளிவாய்க்கால்ப் பகுதியையும் முற்றுகையிடும் நோக்கில் கேப்பாபுலவைத் தாண்டி
நந்திக்கடலைச் சுற்றிச் சென்று ஏ35 வீதியை முள்ளிவாய்க்கால்ப் பகுதியில்
ஊடறுப்பதன் மூலம் முல்லைத்தீவை வீழ்த்துகின்ற மூலோபாயத்தினை படைத்தரப்பு
வகுத்திருப்பதாகவே தெரிகிறது. கூழாமுறிப்புப் பகுதியில் நிலைகொண்டிருக்கும்
படையினர் மேற்கு நோக்கி ஒட்டுசுட்டான் நோக்கியோ அல்லது கெருடமடு, பேராற்றுப்
பகுதி நோக்கி நகர்ந்து ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை ஊடறுப்பதன்
மூலம் ஒட்டுசுட்டானை வீழ்த்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கான முஸ்தீபுகளில்
படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் மாங்குளம் பகுதியிலிருந்து நகர்ந்த படையினர் கரிப்பட்ட முறிப்புவரை
நகர்ந்து அங்கிருந்து தெற்காக அம்பகாமம், பீலிக்குளம் வரை நகர்ந்து
இரணைமடுக்குளத்தின் தென்புறத்தை அண்மித்து இரணைமடுக்குளத்தின் கிழக்குப் புறமாக
பழைய கண்டிவீதிவழியே வட்டக்கச்சி நோக்கி நகர்வதற்கான முயற்சிகளிலும்
ஈடுபட்டிருக்கின்றனர். ஆகவே, மொத்தத்தில் வன்னிமீதான படைநடவடிக்கை என்பது
பூநகரி ஊடான யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சி
கைப்பற்றுதல், வன்னிமக்களை விடுவித்தல், ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான போர். என
நோக்ங்கள் காலத்திற்குக் காலம் மாறி தற்போது புலிகளை அழித்தொழித்தல் என்ற
கோசத்துடன் இன்று வன்னியில் மிகப்பெரும் மனிதப் பேரவல விளிம்பில் வந்து
நிற்கிறது.


இராணுவம் மேற்கொண்ட படைநடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமது இழப்புக்களை
முடிந்தவரை குறைத்து படையினருக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்த முடியுமோ
அவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்தி, படைகளின் முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்து
படிப்படியான தந்திரோபாயப் பின்வாங்கல்களை மேற்கொண்டுவந்த புலிகள் இயக்கம் இன்று
கிழக்கு வன்னியின் வட அரைப்பாகத்தில் குறுகிய பகுதியினுள் தனது
முழுப்படையணிகளையும் குவித்துள்ளது. இந்நிலையில் மூன்று பக்கங்களிலும் இராணுவ
நெருக்குதல்களை எதிர்கொண்டவாறு தற்காப்புத் தாக்குதல் வியூகத்தை
கடைப்பிடிப்பதென்பது இனியும் தொடர முடியாது.


வன்னியில் ஆனையிறவு நோக்கியமுனை, இரணைமடுக் குளப்பகுதி நோக்கியமுனை,
கரிப்பட்டமுறிப்பு ஒட்டுசுட்டான், மற்றும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு, ஆகிய
முனை கள் நோக்கி சண்டைகள் விரிந்திருப்பதனால் ஒடுக்கப்பட்டிருக்கின்ற குறுகிய
நிலப்பரப்பினுள் செறிந்திருக்கும் ஒட்டு மொத்த வன்னிமக்களின் அன்றாடப் பிரச்சி
னைகள் ஒருபுறம், இராணுவ நெருக்குதல்கள் மறுபுறம் என புலிகள் எதிர்கொள்ளும்
மிகப்பெரும் சவால்களை முறியடிப்பதற்கு வெறும் தற்காப்பு முறியடிப்புத்
தாக்குதல்கள் இனியும் பயனளிக்கப் பேவதில்லை.


எனவே வன்னிமீது போடப்பட்டிருக்கும் இறுக்கமான முடிச்சை அவிழ்ப்பதற்கும் இராணுவ
முஸ்தீபை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரேவழி புலிகள் மேற்கொள்ளும் வலிந்த
தாக்குதலேயன்றி வேறெகுவும் இல்லை என்ற நிலைக்கு விடுதலைப் புலிகளை இட்டுச்
சென்றுவிட்டது. ஆகவே, தமிழீழ விடுதலைப் போராட் டத்தில் இழப்புக்களும்,
பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமா னவையும் அல்ல.


இதற்கு உதாரணமாக கிளிநொச்சி நகரமே பல முறை கைமாறி விட்டதல்லவா? காலத்திற்குக்
காலம் ஏற்பட்ட நெருக்கடிகள் இழப்புக்களையும் தாண்டி ஒவ்வொரு கட்டத்திலும்
போராட்டம் உத்வேகத்துடன் முன்னோக்கி தள்ளப்பட்டதுதான் வரலாறு. ஆகவே கிளிநொச்சி
வீழ்ந்தால் என்ன?. முல்லைத்தீவு பறிபோனால்தான் என்ன? வெற்றிகள் எப்போது
ஒருவருக்குச் சொந்தமானதல்லவே. காலச்சக்கரம் சுழலும் காத்திருக்கும் தருணம்
கைகூடும். களங்கள் கைமாறும்.


தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பாதையை மீண்டும் ஒரு முறை செப்பனிட்டு
முன்னோக்கி நகர்ந்த்தபடும் என்பதில் புலிகள் இயக்கம் உறுதியாகவே உள்ளது. எனவே
விடுதலைப் போராட்டங்கள் முடிந்ததாகவோ அழிந்ததாகவோ உலக வரலாற்றில் நாம்
எங்கேனும் கண்டதுண்டா? போராட்டம் என்பது தொடர்ச்சியானதே. அது முடிவில்லாததும்
கூட.


[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

ஓவியன்
04-01-2009, 01:23 PM
தற்போதைய நிலையில் அதன் இருபக்கங்களிலும் இராணுவம் நிலைகொண்டிருப்பதோடு பாக்கு
வெட்டியில் அகப்பட்டிருக்கும் பாக்கின் நிலையை ஒத்ததாகவே பச்சிலைப்பள்ளி
இருக்கின்றது. இவ்வாறு ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்
யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை புலிகள் தக்கவைப்பதற்கு எத்தகைய வியூகத்தை
வகுக்கப் போகின்றார்கள் என்பதையிட்டு இராணுவ விற்பன்னர்கள் மண்டையைப் பிய்க்கத்
தொடங்கிவிட்டனர்.

இது போன்று பாக்கு வெட்டிக்குள் அகப்பட்ட நிலைக்குள் இருந்து கொண்டு சமராடி வெற்றியீட்டிய அனுபவம் ஒரு தடவையல்ல, இரு தடவை புலிகளுக்குண்டு....

முதலாவது, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது புளியங்குளத்தினை புலிகள் ஒரு இராணுவத்தளமாக மாற்றி முன்னேறிய இராணுவத்துக்கு பெரும் இடையூறாக இருந்தனர். கிட்டத்தட்ட நான்கு முனைகளால் சூழப்பட்டிருந்தும் இராணுவத்தினரால் அப்போது புலிகளின் புரட்சிக் குளமாக மாறிவிட்டிருந்த புளியங்குளத்தினை நெருங்கவே முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியாக இருந்த லெப்.கேணல் ராவகன் இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்து புளியங்குளத்தினுள்ளேயே நின்று அதைப் புரட்சிக் குளமாக்கி, கடைசிவரை இராணுவத்தினரை அரண்களை உடைத்து உள் புகவிடாதிருந்து தன் தலமையின் ஆணையின் பின்னரே தன் படையணிகளுடன் பின்னகர்ந்து வந்த சம்பவம்.....

இரண்டாவது ஓயாத அலைகள் மூன்றின் புகழ்பூத்த இத்தாவில் சமர்க்களம், குடாரப்புவில் தரையிறங்கி இத்தாவிலில் நிலையெடுத்து ஒரு புறம் யாழ்ப்பாணத்திலிருந்த இராணுவம் மறுபுறம் ஆனையிறவில் அப்போதிருந்த இராணுவமென பாக்கு வெட்டிகளாக வெட்ட முனைந்தும் வெட்ட விடாமல் ஆனையிறவுப் பெருந்தளத்தை வீழ்ச்சியுறச் செய்த பிரிகேடியர் பால்ராஜ் நடாத்திக் காட்டிய வரலாற்று சம்பவம்....

இந்த இரு சம்பவங்களும் இந்த தடவை புலிகளுக்கு வழிகாட்டிகளாக இருக்குமென்பது என் எண்ணம்....

இளசு
04-01-2009, 07:53 PM
அடுத்தகட்டங்களில் வெற்றிகள் தமிழருக்குச் சாதகமாய் அமையட்டும்..

போராட்டங்கள் முடிவதே இல்லை என்ற கடைசிவரி கண்டு கவலை!

முடியவே முடியாத போராட்டங்களால்...
யாருக்காகப் போராட்டம் நடக்கிறதோ
அவர்கள் நாளுக்குநாள் நலிந்தபடி....

மக்கள் சுமுகவாழ்க்கை வாழும் நிலைவர, நல்ல முடிவு விரைவில் வரட்டும்!

Narathar
05-01-2009, 01:13 AM
அடுத்தகட்டங்களில் வெற்றிகள் தமிழருக்குச் சாதகமாய் அமையட்டும்..

போராட்டங்கள் முடிவதே இல்லை என்ற கடைசிவரி கண்டு கவலை!

முடியவே முடியாத போராட்டங்களால்...
யாருக்காகப் போராட்டம் நடக்கிறதோ
அவர்கள் நாளுக்குநாள் நலிந்தபடி....

மக்கள் சுமுகவாழ்க்கை வாழும் நிலைவர, நல்ல முடிவு விரைவில் வரட்டும்!

நான் சொல்ல நினைத்ததை
சொல்லி விட்டன உங்கள் வரிகள்............

sns
05-01-2009, 04:23 AM
புலிகள் தமது போராட்ட வடிவத்தை இப்போது மற்ற வேண்டிய நிலைகள் உள்ளனர், இந்தா 30 வருட களத்தில் அவர்கள் ஈட்டிய வெற்றிகளின் பலன்கள் எதுவும் இதுவாரை சாதரண தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை, அந்த சமுதாயம் இன்று ஒரு நலிந்த நிலையில் இருப்பதக்கு புலிகள் தான் முக்கிய காரணம் ,முடிவுறத இந்தா யுத்தத்தை நடத்துவதை விட சமாதானமாக எதாவது ஒரு தீர்வுக்கு வருவது நல்லலது என நினைக்கிறேன்
மீண்டும் புலிகள் கிளிநொச்சியை கைபற்றினாலும் அதனால் சாதரண தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்க போதிறது, இப்போது 30 வருட காலத்தில் ஒரு தலைமுறையே அழிந்து விட்டது, இன்னும் அடுத்த தலைமுறைக்கு இந்தா யுத்தம் தேவைதானா
என்னை புலி எதிர்பலனாக என்ன வேண்டாம் ஒரு சாதரண தமிழ் குடிமகனின் நிலையில் இருந்து இதை எண்ணி பார்க்கிறேன்

ஓவியன்
05-01-2009, 04:39 AM
முடிவுறத இந்தா யுத்தத்தை நடத்துவதை விட சமாதானமாக எதாவது ஒரு தீர்வுக்கு வருவது நல்லலது என நினைக்கிறேன்

உண்மைதான் நண்பரே, ஆனால் இது புலிகளுக்கு மட்டுமில்லை போரில் ஈடுபடும் இரு தரப்பினருக்கும் பொருந்தும்...

எப்போதும் ஒரு கை தட்டினால் சத்தம் வராதுதானே, இருந்தும் புலிகள் எப்போதும் தாம் யுத்த நிறுத்தத்துக்கு தயாரென்பதாகவே கூறிக் கொண்டிருக்கின்றனர் (http://www.puthinam.com/full.php?22NpVcc3nX34dy2h202HPO4d3ZhG0aj4F2e2DQC3b3cI8e). அதனைக் கணக்கிலெடுக்கப் போவதில்லையெனக் கூறி போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது இலங்கை அரசாங்கம்தான்....

sns
05-01-2009, 04:52 AM
[COLOR="DarkRed"]உண்மைதான் நண்பரே, ஆனால் இது புலிகளுக்கு மட்டுமில்லை போரில் ஈடுபடும் இரு தரப்பினருக்கும் பொருந்தும்...



ஆம் நான் உங்களுடன் உடன் படுகின்றேன், இரு தரப்பினரும் கட்டாயம் இத்தட்ட்க்கு உடன்பட வேண்டும், ஆனால் போர்நிறுத்தத்தின் பின் பேச்சுவார்த்தையின் பொது இரு தரப்பினரும் விட்டுகொடுக்கும் மனநிலையில் பேச்கிவர்தையில் இடுபட வேண்டும் இல்லாவிட்டால் தனி தமிழ் ஈழமே புலிகளின் தாகம் எனும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் சிங்களவன் ஒருபோதும் தனி ஈழம் தர மாட்டான் , அவன் எப்போதும் யுத்தத்யே விரும்புவன் நாம் தான் நமது சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு ஓரளவுக்கேனும் விட்டு கொடுத்து நடக்கவேண்டும்

கா.ரமேஷ்
05-01-2009, 05:06 AM
எது எப்படியோ போராட்டங்கள் முடிவுபெற வேண்டும்....
மக்கள் நிம்மதியான சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்..விரைவில் நடந்தால் நல்லது...!

Ravian
05-01-2009, 05:15 AM
இந்திய அரசு எப்பொழுது இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையிடுகிறதோ அப்பொழுதுதான் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டமுடியும்.
வங்காளதேசத்தை உருவாக்கி தந்த இந்தியாவிற்கு தமிழ் ஈழம் உருவாக்கி தருவதும் ஒரு பெருமையான, பொறுப்பான, திருப்தியான தீர்வுதான். (இலங்கைக்கும், ஈழத்திற்கும், இந்தியாவிற்கும்)

அய்யா
05-01-2009, 05:44 AM
இலங்கை நண்பர்கள் யாராவது, தற்போதைய புலிகளில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பகுதி பற்றிய வரைபடம் ஒன்றை தந்து உதவ இயலுமா?

வீரகேசரியின் விரிவான ஆய்வில் சொல்லப்படும் ஊர்களின் அமைவிடங்களையும் வரைபடரீதியாக அறிந்திட ஆவல். உதவுங்கள் தோழர்களே.

அன்புரசிகன்
05-01-2009, 07:09 AM
இலங்கை நண்பர்கள் யாராவது, தற்போதைய புலிகளில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பகுதி பற்றிய வரைபடம் ஒன்றை தந்து உதவ இயலுமா?

வீரகேசரியின் விரிவான ஆய்வில் சொல்லப்படும் ஊர்களின் அமைவிடங்களையும் வரைபடரீதியாக அறிந்திட ஆவல். உதவுங்கள் தோழர்களே.

இது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலுள்ள தொடுப்பு... தற்போதய கைப்பறறப்படும் நிலவரங்கள் இங்கே காட்டுகிறார்கள்.

சுட்டி (http://www.defence.lk/orbat/Default.asp)

இலங்கை வரைபடம் நீங்கள் கூகிள் உலகப்படத்தில் காணலாமே...

அய்யா
05-01-2009, 08:27 AM
இது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலுள்ள தொடுப்பு... தற்போதய கைப்பறறப்படும் நிலவரங்கள் இங்கே காட்டுகிறார்கள்.

சுட்டி (http://www.defence.lk/orbat/Default.asp)

இலங்கை வரைபடம் நீங்கள் கூகிள் உலகப்படத்தில் காணலாமே...


வணக்கம் அன்பண்ணா!

நான் கேட்டது, ஜேபெக் வகையிலான அச்சு வரைபடம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று. மேலும் தற்போது என்னிடமிருக்கும் இணையத்தொடர்பில், கூகிள் எர்த் போன்ற செறிவான பக்கங்கள் தரவிறங்காது. கிளிநொச்சி நகரின் வரைபடம் இருந்தால்கூட போதும்.

என் இணைய (இலங்கை) நண்பர்களிடமும் கேட்டிருக்கிறேன்.

நன்றி.

விக்ரம்
05-01-2009, 12:31 PM
இந்தா 30 வருட களத்தில் அவர்கள் ஈட்டிய வெற்றிகளின் பலன்கள் எதுவும் இதுவாரை சாதரண தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை, அந்த சமுதாயம் இன்று ஒரு நலிந்த நிலையில் இருப்பதக்கு புலிகள் தான் முக்கிய காரணம் ,முடிவுறத இந்தா யுத்தத்தை நடத்துவதை விட சமாதானமாக எதாவது ஒரு தீர்வுக்கு வருவது நல்லலது என நினைக்கிறேன்
டியர் sns,
விடுதலைப் புலிகள் தாமாக போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அந்த சூழலுக்கு உந்தப்பட்டனர். ஒரு காலத்தில் பிரபாகரன் எல்லோருக்கும் ரோல்மாடலாக தெரிந்தார். யாருக்கெல்லாம் ரோல்மாடலாக இருந்தாரோ, அவர்களுக்கெல்லாம் இன்றும் ரோல்மாடலாக இருக்கிறாரா... என்றால் இல்லை. இந்த மாற்றங்களை தீர்மானிப்பது காலம்.

ஒருகாலத்தில் ரோல்மாடலாக இருந்தவர், இன்று ஒரு இனத்தின் நன்மைக்கே (அ) அமைதியான வாழ்க்கைக்கே தடையாக இருக்கிறார் என்று நினைக்கிறோம். இம்மாதிரியான வேறுபட்ட இரு எண்ணங்கள் முற்றிலும் தவறு.

விடுதலைப் புலிகள் அன்று என்ன செய்தார்களோ, அதையே தான் இன்றும் செய்கிறார்கள். ஆனால் நாம் தான் மாறிவிட்டோம், அதாவது நமது எண்ணங்கள் மாறிவிட்டது.

ஒரு காலத்தில் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்றிருந்தோம். ஆனால் இன்று வேறுமாதிரி யோசிக்கிறோம் -> அதாவது கண்ணுக்கு கண் எடுக்கப் போய், எதிராளி நம்ம உயிரை எடுத்திட்டா என்ன பண்றதுனு யோசிக்கிறோம். அதனால் தான் எங்கும் சமாதானம், எதிலும் சமாதானம் என்றிருக்கிறோம்.

ஆனால் இன்று இலங்கை போராட்ட களத்தில் உள்ளவர்கள் அனைவரும் எதையாவது ஒன்றை இழந்தவர்கள், அதன் வலி அவர்களுக்குள் இன்றும் இருக்கிறது. இழந்ததை மீண்டும் அடைவோம் என்று போராடுகிறார்கள்.

போராட்டம் போகிற போக்கைப் பார்த்தால், இந்த தலைமுறையல்ல, அடுத்த தலைமுறை கூட நிம்மதியாக வாழ முடியாது போல் தோன்றுகிறது.

அதனால் இங்கே தமிழகத்தில் இருக்கும் நம் போன்ற மக்களுக்கு விடுதலைப் புலிகள் மேல் ஒரு வெறுப்பு. ஏதோ அவர்களால் தான் இத்தனை இழப்புகளும் ஏற்படுகிறதோ என்ற ஒரு எண்ணமும் கூட..

இந்திய சுரந்திரப் போராட்டத்தைப் பற்றி எனக்கொரு எண்ணம் இருக்கிறது. அதாவது பல உயிர்கள் கொடுத்து பெற்ற சுதந்திரத்தை, இன்று அரசியல் வாதியிடம் அடகுவைத்திருக்கிறோம்.

தனி ஈழம், தனி ஈழம் என்று கூவுகிறமே கடைசியில் எவனாவது பித்தலாட்டக்காரன் கிட்ட அடகுவைக்கத்தான் இத்தனை உயிரிழப்புகளா...??? அதற்கு போனதெல்லாம் போகட்டும், இனிமேல் உயிராவது எஞ்சியிருக்கிறதே என இருக்கும் மக்களை வைத்து, வாழக் கற்றுக் கொள்வோம்.. அடுத்த நம் தலைமுறையை உயர்த்த கற்றுக் கொடுப்போம்.

sns
06-01-2009, 05:09 AM
தனி ஈழம், தனி ஈழம் என்று கூவுகிறமே கடைசியில் எவனாவது பித்தலாட்டக்காரன் கிட்ட அடகுவைக்கத்தான் இத்தனை உயிரிழப்புகளா...??? அதற்கு போனதெல்லாம் போகட்டும், இனிமேல் உயிராவது எஞ்சியிருக்கிறதே என இருக்கும் மக்களை வைத்து, வாழக் கற்றுக் கொள்வோம்.. அடுத்த நம் தலைமுறையை உயர்த்த கற்றுக் கொடுப்போம்.

இதை தான் நானும் சொல்ல வந்தேன் நன்றி உங்கள் கருத்துகளுக்கு

அன்புரசிகன்
06-01-2009, 05:49 AM
தனி ஈழம், தனி ஈழம் என்று கூவுகிறமே கடைசியில் எவனாவது பித்தலாட்டக்காரன் கிட்ட அடகுவைக்கத்தான் இத்தனை உயிரிழப்புகளா...??? அதற்கு போனதெல்லாம் போகட்டும், இனிமேல் உயிராவது எஞ்சியிருக்கிறதே என இருக்கும் மக்களை வைத்து, வாழக் கற்றுக் கொள்வோம்.. அடுத்த நம் தலைமுறையை உயர்த்த கற்றுக் கொடுப்போம்.

இதை இன்னும் சொல்கிறீர்களே... இலங்கையில் தமிழனுக்கு நூறுவீத உயிர் உத்தரவாதம் தேவையில்லை. 10 வீதமாவது இருக்கிறதா??? ஆம் என்றால் நல்லது தான். ஆனால் அந்த உண்மையை அங்கு அனுபவித்தவர்கள் சொல்லவேண்டும். சவுடால் விடுபவர்கள் அல்ல...

இன்று வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் அரச பகுதியில் வந்தால்........... நீ மாவீரர் குடும்பம். நீ போராளி குடும்பம் என்று சொல்லி அனைவரையும் கொன்று குவித்துவிடுவர்.

யாழ் அரசபடையின் கையில் வந்து பின்னர் மக்கள் உள்ளே சென்றதும் அனைவருக்கும் சந்தோசமாக இருந்தது. பின்னர் சுற்றிவழைப்பு கைது என்று சொல்லி கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் செம்மணியில் புதைகுழியில் தான் கண்டுபிடிக்கப்பட்டனர். இது தான் சுதந்திரமா???

கணவன் முன்னால் மனைவியை கற்பழித்து கொ்லை செய்வது தான் சுதந்திரமா??? 1 வயது பெண்குழந்தையையே புணரும் அரசபடையின் செயல் வன்னியில் அகப்படும் மக்களுக்கு நிகழாது என்று எவர் உத்தரவாதம் தருவர்???

ஒரு வயது குழந்தை தான் தீவிரவாதியா???

அவனவன் மானம் போகிறது என்கிறான். நீங்கள் உயிர் பற்றி பேசுகிறீர்கள்.............

Ravian
06-01-2009, 06:02 AM
தனி ஈழம், தனி ஈழம் என்று கூவுகிறமே கடைசியில் எவனாவது பித்தலாட்டக்காரன் கிட்ட அடகுவைக்கத்தான் இத்தனை உயிரிழப்புகளா...??? அதற்கு போனதெல்லாம் போகட்டும், இனிமேல் உயிராவது எஞ்சியிருக்கிறதே என இருக்கும் மக்களை வைத்து, வாழக் கற்றுக் கொள்வோம்.. அடுத்த நம் தலைமுறையை உயர்த்த கற்றுக் கொடுப்போம்.

ஓவியன்
06-01-2009, 01:36 PM
காலத்துக்கேற்ற கவிதை (http://www.tamilkathir.com/news/803/75/04-01-2009/d,audio.aspx) , புதுவையின் கணீர் குரலில்....

sujan1234
07-01-2009, 03:16 PM
நல்ல கட்டுரை