PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 4rambal
04-09-2003, 10:24 AM
விகாஸ் எழுத முற்பட்ட கல்லறைப் பூக்கள் என்ற சரித்திர நாவலுக்கான குறிப்புகள்:

என்னதான் மணமும் அழகும்
இருந்தாலும்
பூஜைக்கு மறுக்கப்படும்
கல்லறைப் பூக்கள் போலவேதான்
காதல்..

சுமார் 1600களின் இறுதியில் போர்த்துகீசியர்களில் ஒருவரான வாஸ்கோடகாமா இந்தியா வந்திறங்கினார்.
கலை உலகின் பொன்னான கால கட்டம் Renaissance (மறு உயிர்ப்பு)ல் இருந்து ரம்பமானது.
1420 களில் இத்தாலியில் ரம்பமான இந்த மறு உயிர்ப்பு அடுத்த 80 ண்டுகளுக்குள்
ஐரோப்பா முழுமைக்கும் விரவி தனக்கென ஒரு இடம் பிடித்தது.
அவர்கள் (போர்த்துகீசியர்கள்) சாம்ராஜ்யம் கோவாவை க்ரமித்து அங்கிருந்த பழங்குடியினரை
கொன்று குவித்தது.
மத்திய காலம் முழுமையும் விரவிக்கிடந்த இருண்மையை போக்குவதற்குரிய
ஒளி மற்றும் புதிய சிந்தனைகள் இந்த கால கட்டத்தில்தான் விளைந்தது.
மேலும், அவர்களை வலுக்கட்டாயமாக கிறித்தவர்களாக மதமாற்றம் செய்தது.
இப்படி இருந்த காலத்தில் சுமார் 1700களின் இறுதியில் ஜெப்ரி எனும் கவர்னரின் தங்கை
டோனாபவுல் டச்சில் இருந்து கோவாவிற்கு வந்தாள்.
இந்த கால கட்டத்து சிந்தனைகள் எல்லாம் செவ்வியல் காலத்தின் (Classic period) மூலக்கருவைத் தழுவி
புதுப்பிக்கப்பட்டன. இதனால் இந்தக் கால கட்டத்து மக்களின் தேடுதல்கள் அறிவியல் சார்ந்ததாகவும்,
இயற்கை, தத்துவம், அரசியல் மற்றும் கலை போன்றவைகளை அறிவியல் பிண்ணனியில் ராய்ந்தும்
புதிய பரிணாமம் அடைந்தனர்.
அவளை அங்கிருந்த மீனவ இளைஞன் ரெமோ பெர்ணாண்டஸ்
காதலிக்க டோனாபவுலும் காதலின் வலையில் வீழ்ந்தாள். இந்த விஷயம் ஜெப்ரிக்கு தெரிய வர
அவன் இவர்களை கொன்று கடற்கரை ஓரமாக புதைத்தான்.
1600க்குப் பின் ஒரு தொய்வு.
வழக்கமான பாணியிலேயே எல்லாம் இருக்கவேண்டும். செவ்வியல் (classic) வடிவங்களைப் பின்பற்றியதுதான்
சிறந்தது என்று மக்கள் கூட்டம் அதன் பின்னால் சுற்றி இருந்தது.
இந்த சமயத்தில்தான் 19 நூற்றாண்டின் இறுதியில் ஒரு புதிய சிந்தனை. மாறுபட்ட கருத்து.
இயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரைந்தால் என்ன?
வெளிச்சத்தையும், நிழலையும், வண்ணங்களையும், கடற்கரையையும், மனித முகங்களை தத்ரூபமாக(போர்ட்ராய்ட்)
வரைவது பற்றிய சிந்தனைகள் எழுந்தன.
அந்த இடம் இன்னும் டோனாபவுல்
என்று அவளின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. மேலும், ரெமோவின் குடும்பம் அவனது சேரியையும்
ஜெப்ரி கொன்று குவித்தான். அந்த கொலைப் படியலில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 400க்கும் மேல்..
இப்படியாக காதலின் கல்லறையை ஜெப்ரி எழுப்ப இன்றும் அந்த இடம் தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக
கோவாவில் காதலின் நினைவுச்சின்னமாக இருக்கிறது..
னால், கலை எனும் தாகமெடுத்தவனுக்கு எத்தனை இடர் வந்தாலும் கவலை இல்லை எனும் விதமாக
இம்ப்ரசனிசத்திற்கு அடுத்து போஸ்ட் இம்ப்ரசனிசம் எனும் அடுத்த இசம் ரம்பமானது.
டோனா பவுலின் கதையை அடுத்து சமீபத்தில் நடந்த ஒரு காதலர்களின் தற்கொலைமுடிவைப்பற்றிய சம்பவத்தை
இந்த கல்லறைப்பூக்கள் நாவலோடு இணைக்கவேண்டும்..அது கொடைக்கானலில் பில்லர் ராக்கில் இருந்து உயிர் நீத்த
ரீட்டா மற்றும் ண்டோனியின் கதை.. இந்த கதையும் பரிதாபமானது.. இன்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா
வருபவர்களுக்கு பில்லர் ராக் என்பது ஒரு சுற்றுலா இடமாகத்தான் தெரியும்.. கோவாவில் இருக்கும் டோனாபவுல் போல்..
னால், அந்த பில்லர் ராக் சுமந்து கொண்டிருக்கும் அந்த இரு கல்லறைகளுக்குப் பின்னால் இருக்கும்
ரீட்டா ண்டோனியின் காதல் பற்றி இந்த உலகிற்கு தெரியாது..
இம்ப்ரசனிசத்தைத் தொடர்ந்து வந்தது போஸ்ட்- இம்ப்ரசனிசம்.
இவை இரண்டுமே பிரான்சின் ஏகபோக சொத்து, சிந்தனை என்று கொள்ளலாம்.
1880க்குப் பிறகு று ண்டுகளில் இந்த புரட்சிகரமான கலை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரீட்டா மதுரையில் மரக்கடை வைத்திருக்கும் மிகப்பெரிய முதலாளியின் ஒரே செல்லமகள்..
அவர்கள் மரக்கடையில் வேலை பார்க்கும் ஏழை பீட்டரின் மகன்தான் ண்டோனி..
இவர்களுக்கு காதல் என்பது மார்க்ஸின் மூலதனத்தை தாண்டி வளர்ந்தது..
இப்படி ஒரு சமயத்தில் இவர்களின் காதல் பற்றி ரீட்டாவின் தந்தைக்கு தெரிய வர
கடும் எதிர்ப்பைக் காட்டினார். அது, ண்டோனியையும் அவனது குடும்பத்தையும் கூலிப்படையை வைத்துக் கொள்வதென்று முடிவு
செய்தார். இது ரீட்டாவிற்கு தெரிய வர ண்டோனியை இழுத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு சென்று,
அங்கிருந்த பில்லர்ராக்கில் சிலுவைகளை ஊன்றி விட்டு அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பில்லர் ராக்கில் இருந்து தரை சுமார் 1800 அடிகள். அவர்களின் சடலம் கூட அவளது பணக்கார தந்தைக்குக் கிடைக்கவில்லை..
மிகப்பெரிய அளவில் ஓவியர்கள் குழுவாக இணைந்து புதிய வழிமுறைகளில்
பரிசோதனைகள் செய்து பார்த்தார்கள். இவர்கள் அனைவரும் பல வழிகளில்
பல பரிமாணங்களில் தேடுதலை தொடர்ந்தார்கள்.
இருந்த போதிலும் இவர்களின் அடிப்படை சாராம்சம் என்பது இயற்கையை
விஞ்ஞானப்பூர்வமாக ராய்வது என்பதாகத்தான் இருந்தது.
இந்த அறிவியல் சார்ந்த தேடுதலில் பாய்ண்டலிசம்(pointalism) அல்லது டிவிசனிசம் (divisionism) எனும்
ஒரு வகை உண்டு. இதை பின்பற்றி இவர்கள் தங்களது தேடுதலை தொடர்ந்தார்கள்.
ஓவியர்கள் கண்ணாடித்தன்மையுடைய வண்ணங்களைப்பற்றிய தங்களது அறிவை வளர்க்கத்தொடங்கியது
இந்தக் காலகட்டத்தில்தான்.
கோவாவில் கி.பி. 1700களின் இறுதியில் இறந்த டோனாபவுலின் கதைக்கும் கொடைக்கானலில் 1970களில் இறந்த
ரீட்டாவின் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
இருக்கிறது..
டோனாபவுல் இறந்த இடத்திலும் சிலுவை இருக்கிறது.. அதுவும் ஒரு மலையின் உச்சிதான்.. ரீட்டா இறந்த இடத்திலும்
சிலுவை இருக்கிறது.. இதுவும் மலை உச்சிதான்.. டோனாபவுலும், பில்லர்ராக்கும் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்பட்ட
சுற்றுலாதளங்கள்.. மக்கள் வழக்கம் போல் மண்ணில் புதைக்கப்பட்ட இந்தக் காதலை வேடிக்கை பொருளாக
வேடிக்கை மட்டுமே பார்த்து செல்கின்றனர்..
எந்த வண்ணத்தையும் முழுதும் ஓவியத்தில் கலக்காமல் வெறும் புள்ளி புள்ளியாக நெருக்கி வைப்பதன் மூலம் உருவம்
கிடைக்க வைத்தார்கள். இதுதான் பாய்ண்டலிசம்.
இந்த வகை ஓவியங்கள் வரைந்துமுடிக்க இவர்களுக்கு வருடக்கணக்கில் னது.
பால் செசன்னா (Paul cezanna) எனும் ஓவியரின் ஒவியங்கள் தனிச் சிறப்புடையவை.
இவருடைய முக்கிய வரை பொருளாக இருந்தவை மலைகள். இந்த மலைகளை தனது ஸ்டூடியோவில் இருக்கும் ஜன்னல் வழிபார்த்து வரைவது இவரது தனிப் பெருஞ்சிறப்பு.
இது போன்று வரைய ரம்பித்துதான் எதேச்சையாக இவர் கண்டுபிடித்தது
அடிப்படை வண்ணங்கள் (primary colors) மற்றும் கலப்பு வண்ணங்கள்(complementaery colors) மற்றும் வண்ணங்களுக்கான வரைமுறை (color theory) கியவை அடங்கும். வண்ணங்களின் தியரிக்கு இவர் தந்தை என்றால் மிகையாகாது.
னால், இதை மட்டும் இந்த நாவலில் ஒற்றுமையாக கருத முடியாது..
முந்தைய ஜென்மத்தில் இறந்த டோனாபவுலும் ரெமோவும்தான் அடுத்த பிறவியில் ரீட்டாவாகவும் ண்டோனியாகவும் பிறந்து
இந்தியா எனும் காதல் பூமியில் இரண்டு இடங்களில் அழியா நினைவுச்சின்னங்களை எழுப்பியிருக்கிறார்கள்...
இதை கதையின் யுக்தியாக மாற்றவேண்டும்..
இந்த போஸ்ட் இம்ப்ரசனிச ஓவியர்களில் மிகவும் முக்கியமானவர் என்று கருதப்படுபவர் வான் கோ.
இவர் டச்சில் இருந்த காலகட்டத்தில் அடர்த்தியான வண்ணங்களை உபயோகித்தார்.
இவரது சகோதரனை காண்பதற்காக பாரீஸ் வந்த பிறகுதான் இவருக்குள் பல சிந்தனைகள்.
பிரான்ஸில் நிலவிய போஸ்ட் இம்ப்ரசனிச உத்திகளைக் கடைப்பிடிக்க ரம்பித்து பின் தெற்கு பிரான்சிற்கு குடியேறினார்.
இவர் விவிட் வண்ணங்களை உபயோகிக்க ரம்பித்து பின் அதில் மூழ்கி ஒரு தாண்டவம் டினார் என்றால் மிகையாகாது.
இவர் அடர்த்தியான வண்ணங்களையும் இங்கு உபயோகப்படுத்திய மிதமான வண்ணங்களையும் கலந்து தனக்கென்று
தனி முத்திரை பதித்தார்.
இவரது இறுதி நாட்களில் இவர் உபயோகப்படுத்திய இந்த முறைதான் போஸ்ட் இம்ப்ரசனிசத்திற்குப் பின் வந்த
எக்ஸ்ப்ரசனிசத்திற்கு அடிகோலியது. அதனால் தான் எக்ஸ்பிரசனிசத்தின் தந்தை என்று வான் கோ அழைக்கப்படுகிறார்.
இப்படியாகத்தான் காதல் என்பது மலராக இருந்த போதிலும் கல்லறைக்கு அருகில் பூத்த ஒரே காரணத்திற்காக
பூஜைக்கு மறுதலிக்கப்படுகின்றன.. இன்னும் எத்தனையோ காதல்கள் வெறும் கல்லறப்பூக்களாக இருக்கின்றன...

சேரன்கயல்
04-09-2003, 04:12 PM
இளங்கலை படிக்கும்போது...இந்த இசங்களையெல்லாம் பாடமாக படித்த ஞாபகம்...
கலைகளிலான காலத்தின் சுழற்சியால் ஏற்பட்ட மாற்றங்கள்...மாறிய அனுகுமுறைகளை...அழகாக அடுக்கியிருக்கிறீர்கள்...டோனா பவுல் போனதுண்டு...பில்லர் ராக் இந்த முறை இந்தியாவுக்கு விடுமுறைக்கு வரும்போது சென்று பார்க்கிறேன்...
கதையின் களம் ஐரோப்பிய பக்கமாய் இருந்திருந்தால் அல்லது களம் வித்தியாசப்படிருந்தால்...பைசண்டைன், ரோமனஸ்க் என்று ஒரு கை பார்த்திருப்பீர் போல...
பாராட்டுக்கள் ராம்...உங்கள் அறிவின் விசாலம் கண்டு மகிழ்கிறோம்...