PDA

View Full Version : நான் கண்ட கனவு

arun
03-01-2009, 11:02 AM
இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் நான் கண்ட கனவு இது

பொதுவாக நாம் காணும் கனவுகள் விழிப்பு வந்ததும் மறந்து விடும் ஆனால் இன்று நான் கண்ட கனவை மறக்க முடியவில்லை

பொதுவாக நாம் நினைக்கும் செயல்களே கனவு வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள் நானும் அதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன் ஆனால் நேற்று இரவு படுக்கும் போது எந்த வித சிந்தனைகளும் இல்லாமல் படுத்து உறங்க ஆரம்பித்தேன்

லாஜிக்கே இல்லாமல் சில படங்கள் வரும் அதை நாமும் பார்த்து இருப்போம் அது போல தான் எனது கனவும் நான் கண்ட கனவில் எந்த லாஜிக்கும் இல்லை

ஒரு அடர்ந்த காட்டுக்குள் நாங்கள் எல்லாம் தங்கி இருக்கிறோம் தினம் அங்கு சில வகுப்புகள் நடக்கிறது அதுவும் பகலில் அல்ல இரவில்

அப்போது தான் அங்கு இருக்கும் ஒரு வீட்டில் பேய்கள் இருப்பதாக கேள்விப்படுகிறோம் எங்கள் அனைவரையும் பயம் பற்றிக்கொள்கிறது

திடீரென ஒரு உருவத்தின் குரல் ஒலிக்க ஆரம்பிக்கிறது நாங்கள் அனைவரும் பயந்து நடுங்கியபடி நிற்கிறோம் சிறிது நேரத்தில் ஒரு குரல் எங்களை நோக்கி பேச ஆரம்பிக்கிறது நாங்கள் அனைவரும் மேலும் பயந்து நடுங்கியபடி நிற்கிறோம்

சிறிது நேரத்திற்கு பின் அந்த குரல் ஆட்டு ரத்தம் கேட்கிறது அய்யய்யோ ஆட்டு ரத்தத்துக்கு எங்கே போறது என நினைக்கும்போதே அருகில் ஆடு ஒன்று இருக்கிறது உடனே அந்த ஆட்டினை பிடித்து கொண்டு போய் அந்த குரல் வரும் இடத்தில் விட்டு விட்டு வருகிறோம்

பின்னர் ஒரு உருவம் வேகமாக வந்து ஆட்டை பிடிக்கிறது திடீரென நாங்கள் அனைவரும் அந்த உருவத்தை துரத்துகிறோம் கடைசியில் அது பேயும் அல்ல பிசாசும் அல்ல அந்த உருவமே நாங்கள் பேய் போல வேடம் போட்டு அனைவரையும் மிரட்டி வருகிறோம் என சொல்கிறது

அவ்வளவு தான் திடீரென நான் முழித்து விட்டேன் இப்போதும் அந்த பயங்கர கனவு நினைவில் இருக்கிறது யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது அதனால் இங்கு சொல்கிறேன்

இந்த கனவு நல்ல கனவா? கெட்ட கனவா ? யாரேனும் சொல்லுங்களேன் :fragend005: :fragend005:

தமிழ்தாசன்
03-01-2009, 11:09 AM
கனவு அழகானதுதான். ஆனால் இக்கனவு பற்றி எனக்கு சொல்லத்தெரியவில்லையே!

புதிய பக்கங்கள் உங்களை அழைக்கிறது.
அருன் அவர்களே!

புதிய பக்கங்கள்!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=400981#post400981)

நிரன்
03-01-2009, 11:12 AM
கவனம் அரும் அப்படியே பின்னால திரும்பிப்பாருங்க
நியமாவே ஒரு உருவம் நிற்கும் ரத்தம் கேட்டுக் கொண்டு
ஆட்டு ரத்தம் அல்ல உங்களுடைய ரத்தம்:D:D:D

சிலவேளை உன்மை ஆகலாம் எதற்கும் யாக்கிரதை ஆக இருங்க:D:D:D:D

(நல்லா ஒரு அளை பயப்படுத்தியாச்சு நாம் வந்த காரியம் வெற்றி):D:D

shibly591
03-01-2009, 11:13 AM
ஏதோ மனம் பயந்து போன நிலையில் தூங்கிப்போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது...

இதில் பயப்பட ஒன்றுமில்லை..

இன்றிரவு நல்ல கனவு வருவற்கு வாழ்த்துக்கள்

arun
04-01-2009, 04:14 PM
கவனம் அரும் அப்படியே பின்னால திரும்பிப்பாருங்க
நியமாவே ஒரு உருவம் நிற்கும் ரத்தம் கேட்டுக் கொண்டு
ஆட்டு ரத்தம் அல்ல உங்களுடைய ரத்தம்:D:D:D

சிலவேளை உன்மை ஆகலாம் எதற்கும் யாக்கிரதை ஆக இருங்க:D:D:D:D

(நல்லா ஒரு அளை பயப்படுத்தியாச்சு நாம் வந்த காரியம் வெற்றி):D:D

:lachen001: :lachen001: :lachen001:

arun
04-01-2009, 04:15 PM
ஏதோ மனம் பயந்து போன நிலையில் தூங்கிப்போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது...

இதில் பயப்பட ஒன்றுமில்லை..

இன்றிரவு நல்ல கனவு வருவற்கு வாழ்த்துக்கள்

அந்த அளவுக்கு பயம் இல்லை கனவில் தான் ரொம்ப பயம் விழித்ததும் சிறிது பயம் அவ்வளவே

இளசு
04-01-2009, 07:49 PM
அருண்,

திருமங்கலம் இடைத்தேர்தல் செய்திகள் அதிகம் பார்த்தீர்களோ??!!!

Ravian
05-01-2009, 04:42 AM
இது கனவா அல்லது பயத்தின் வெளிப்பாடா?
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்லுங்கள்
மனதை ஆசுவாசப்டுத்தி பின் உறங்குங்கள்
தினமும் வாய்விட்டு பல முறை சிரியுங்கள்
கனவு தொல்லை இருக்காது

கா.ரமேஷ்
05-01-2009, 05:23 AM
கனவுதானே விடுங்கள்....!
இன்று நல்ல கனவு வரட்டும்......!

விகடன்
05-01-2009, 06:36 AM
நானும் ஓர் கனவு கண்டேன். அதுவும், நீங்கள் கண்ட அதே நாளில்த்தான்.
ஆனால் ஒரு சிறிய வித்தியாசம். என்னுடன் சிலர் சேர்ந்து காட்டுக்குள் வரும் புதியவர்களை வெருட்டுவதாக...

கவலையை விடுங்க. அப்படி தாங்கள் கண்ட கனவு நடந்தால் அங்கே நிற்கும் பேயில் ஒன்றாக நானிருப்பேன். :D

arun
05-01-2009, 05:03 PM

:D :D :D

Narathar
05-01-2009, 05:16 PM
அருன்..............
உங்களுக்கு கார்ட்டூன் படங்கள் பார்க்கும் பழக்கமுண்டா?

ஸ்கூபி டூ கார்ட்டூன் ரசிகர நீங்கள்?

உங்கள் கனவு அதைப்போலத்தான் இருக்கின்றது

arun
06-01-2009, 04:21 PM
அருண்,

திருமங்கலம் இடைத்தேர்தல் செய்திகள் அதிகம் பார்த்தீர்களோ??!!!

அய்யோ அது எனது கனவை விட பயங்கரம் :icon_rollout:

arun
06-01-2009, 04:22 PM
அருன்..............
உங்களுக்கு கார்ட்டூன் படங்கள் பார்க்கும் பழக்கமுண்டா?

ஸ்கூபி டூ கார்ட்டூன் ரசிகர நீங்கள்?

உங்கள் கனவு அதைப்போலத்தான் இருக்கின்றது

அப்படியா? எனக்கு கார்ட்டூன் பார்க்கும் பழக்கம் எல்லாம் இல்லை நாரதரே