PDA

View Full Version : புறக்கோட்டையில் மீண்டுமொரு குண்டுவெடிப்பு



shibly591
03-01-2009, 10:40 AM
இலங்கை நேரப்படி மாலை 04.30 மணியளவில் மீண்டும் ஒரு குண்டொன்று புறக்கோட்டை செம்மசூதிப்பகுதியில் வெடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..(2009/01/03)

இதேவேளை நேற்று மாலையும் புறக்கோட்டைப்பகுதியில் குண்டொன்று வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

வடக்கில் கிளிநொச்சி படையினர் வசமானதை அடுத்து அதன் எதிரொலி கொழும்பில் நிகழலாமென்று எதிர்வுகூறல்கள் தெரிவிக்கின்றன...

மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை

ஓவியன்
03-01-2009, 10:45 AM
இலங்கையின் புறக்கோட்டையின் பிரதான வீதியில் (மெயின் ஸ்றீட்) வெடிகுண்டொன்று வெடித்ததாகத் தெரிகிறது...

இன்னமும் சேத விபரங்கள் தெரிய வரவில்லை..

இந்தப் பகுதி தமிழர்களின் வாணிப நிலையங்கள் செறிவாக உள்ள பகுதியென்பது குறிப்பிடத்தக்கது...

நிரன்
03-01-2009, 11:03 AM
கோட்டை பாங்குசாலா வீதியில் குண்டு வெடிப்பு

வெளியான நேரம் -- 1/3/2009 4:56:53 PM

கோட்டை பாங்குசாலா வீதியில் உள்ள பள்ளிக்கு அருகில் வெடிப்பு
சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நன்றி வீரகேசரி


தற்பொழுது வீரகேசரியில் வெளியான செய்தியிது.

shibly591
03-01-2009, 11:09 AM
புறக்கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக..........

வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு புறக்கோட்டை செம்மசூதிக்கு அருகில் வெடித்ததில் மூவர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..வாகனங்களுக்கே பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் உயிர்ச்சேதம் அதிகம் இடம்பெறவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன...