PDA

View Full Version : பிரபஞ்சக் கவிதைகள்



prapanjan
17-02-2007, 02:55 AM
கண்கள் நான்கும் பேசியதால்
காதலித்தேன் நான் பேசாமலே
கஸ்ரங்கள் பல வந்தன
கலங்கவில்லை அதற்காக நான்
கடல் தாண்டி நான்
கனடா வந்தாலும்
காதலை சுமந்து கொண்டு வந்தேன்
காதலை நான் சுமந்ததினால்
களிப்புகள் சுகமாகின எனக்கு
காதலனை நான் பிரிந்ததினால்
கண்ணீர் எனக்கு சொந்தமாயிற்று...

prapanjan
17-02-2007, 02:55 AM
கணபதியே கண் திறவாய்.....

புங்கை நகரின்
இறப்பிட்டி பதியினிலே
குந்தியிருந்தருள் - எம்
தொந்தி வயிற்றோனே...
வெந்து வெந்து தினம்
நொந்து துடிக்கின்றோம்
வந்து அருள் தாவனப்பா
ஐந்து கரத்தானே
வந்த பகை துரத்தி - எங்கள்
வாசல் வர வழிவகுப்பாய்
சந்தியில் அவர் புரியும்
சன்னதம் தனை அழிக்க
ஏந்து உன் கரங்களிடை போர்வாளை
காக்கை வடிவெடுத்து
காவிரியை ஓடச்செய்தாய் - என்
தந்தம் தனையுடைத்து
சங்காரம் புரிந்து நின்றாய்- இன்று
எங்களுக்காய் என்ன செய்தாய்
கணபதியே கண்திறவாய்.

prapanjan
17-02-2007, 02:57 AM
பெண்ணெ
நீ என்னை கடந்து சென்ற பின்
ரயிலொன்று கடந்து சென்ற
தண்டவாளமாய் அதிர்கிறது
எனது இதயம்.

ஓவியன்
03-01-2009, 10:29 AM
நண்பரே பிரபஞ்சன், உங்களது முன்னைய கவிதைகள் மூன்றினை வேறு திரி ஒன்றிலிருந்து நகர்த்தி இங்கே ஒரு திரியாக்கியுள்ளேன்....

தொடரட்டும் உங்கள் மன்ற உலாவும், கவிதைத் திரு விழாவும்...

இளசு
08-01-2009, 05:08 AM
கருத்துச் செறிவும் சொல்வளமும் விரவிக் கிடக்கும் கவிதைகள்..

தொடர்ந்து படையுங்கள்..

பாராட்டுகள் பிரபஞ்சன் அவர்களே!

ஆதவா
08-01-2009, 05:26 AM
பெண்ணெ
நீ என்னை கடந்து சென்ற பின்
ரயிலொன்று கடந்து சென்ற
தண்டவாளமாய் அதிர்கிறது
எனது இதயம்.

உண்மையிலேயே அதுவும் ஒரு உணர்வுதான்.. ஆனால் அப்படி ஏற்படுத்தக் கூடிய உணர்வு புற அழகிலிருந்துதான் வரும்.

அவள் காதலியாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் சொல்வது சரியாக இருக்கும்.... அல்லது இது வெறும் ஈர்ப்பு.....

அழகு கவிதை படைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்..

umakarthick
16-01-2009, 09:55 AM
நீ என்னை கடந்து சென்ற பின்
ரயிலொன்று கடந்து சென்ற
தண்டவாளமாய் அதிர்கிறது
எனது இதயம்.//


ஏற்கனவே படித்த நியாபகம் ..வலைதளம் ஏதாவது வைத்திருக்கீர்களா நண்பா?

prapanjan
29-05-2009, 02:54 PM
கணபதியே கண் திறவாய்.....

புங்கை நகரின்
இறப்பிட்டி பதியினிலே
குந்தியிருந்தருள் - எம்
தொந்தி வயிற்றோனே...
வெந்து வெந்து தினம்
நொந்து துடிக்கின்றோம்
வந்து அருள் தாவனப்பா
ஐந்து கரத்தானே
வந்த பகை துரத்தி - எங்கள்
வாசல் வர வழிவகுப்பாய்
சந்தியில் அவர் புரியும்
சன்னதம் தனை அழிக்க
ஏந்து உன் கரங்களிடை போர்வாளை
காக்கை வடிவெடுத்து
காவிரியை ஓடச்செய்தாய் - என்
தந்தம் தனையுடைத்து
சங்காரம் புரிந்து நின்றாய்- இன்று
எங்களுக்காய் என்ன செய்தாய்