PDA

View Full Version : பதி பசு பாசம்



நாகரா
03-01-2009, 10:26 AM
ஆன் என்னும் உருவப் பசுவை
நான் என்னும் அருவப் பதியாய்ப்
பரிமாற்றவே
மெய்யுடம்பென்னும் திருக்கோயில்!
பதியின் வழியில் பசுவின் படுதலால்
பதியில் பசு கரைந்திடும் அதிசயம்!
வெளியே திரியும்
பசுவின் பாசம்
மெய்த்திருக்கோயிலின் உள்ளே
உயிராய்ப் பதிந்திருக்கும்
பதி மேல் திரும்ப
நிகழ்வதே மெய்யான வழிபாடு!
பசு எலாம் ஒரே குலம்!
பதி "நான்" ஒரே கடவுள்!
மெய்களும் ஒரே மூலம்!
பசு எலாம்
தம் மெய்களுள்
பதி சேரும்
பாகுபாடு அறவே இலா
மெய்யான வழிபாடு!
ஆன் இது
நான் இது
என்றே பகுத்தறிய இயலாக்
கரைதலால்
பொய்க்கும் மெய்கள்
மெய்யாகவே மெய்களாய்!
கற்பூரங் கரைந்த பின்
தீபமே மெய்யாய்
மணக்கும்!
வெட்டவெளியே கோயில்!
ஒரு பதியே கடவுள்!
பசுக்கள் எலாம் ஒரே கடவுளின் மூர்த்திகள்!
அர்த்தமுள்ள உருவ வழிபாடு!
பதிக்குத் தெரியும்
ஒவ்வொரு பசுவின் அருமை!
பதியின் அக்கண்ணோட்டத்தோடே
நேசி நீ ஒவ்வொரு பசுவையும்!
அதுவே நீ பதி மீது காட்டும்
மெய்யான பாசம்!
இப்பாசமன்றோ
உன் பாபநாசம்!
பாகுபாடு பாராத நேசமே மெய்க்குரு!
பாகுபாடு செய்யும் தரகனோ பொய்க்குரு!
ஆன் யார் என்று சொன்னேன்!
நான் யார் என்று சொன்னேன்!
இருக்கும் ஊர் சொன்னேன்!
ஊர் சேரும் வழி சொன்னேன்!
பொய்யுரித்து மெய்ம்மூலம் சொன்னேன்!
நேசமாய்க் குருவைச் சொன்னேன்!
மோசம் போகாது நீ உய்வாயே
சொன்னதெல்லாம்
உன்னுள் தெளிந்தே!

பி.கு. :
பதி = பரமான்மாவாம் ஒரே கடவுள்
பசு = ஜீவான்மாக்களாம் ஒரே குலம்
பாசம் = பசு பதியில் ஒன்றப் பாதகமாயிருக்கும் ஆசாபாசங்கள், தளைகள், இருள்சேர் இரு வினைகள்

இளசு
07-01-2009, 08:45 PM
தன்னைப்போல் பிறரை நேசி! + தான் என்பதே பரம்பொருளின் ஒரு விள்ளல்..=
எல்லா உயிர்களையும் இறையின் அம்சமாக, இறையாகவே மதித்தொழுகு!

இப்படி எல்லாரும் ஆகிவிட்டால் -?
மண்ணில் சொர்க்கம்!

பாராட்டுகள் நாகரா அவர்களே!

நாகரா
08-01-2009, 12:44 AM
உம் புரிந்துணர்வுகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி இளசு